படிக்க வேண்டியது ஆசிரியரா..பிள்ளைகளா

Posted by Unknown - -

கோவில்பட்டி அருகே மாணவர்களை அவதூறு பேசியதாக புகார் கூறி, ஆசிரியரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.


கோவில்பட்டி அடுத்த காமநாயக்கன்பட்டியில், அரசு நிதி உதவி பெறும் "புனித அலாய்சியஸ்' நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு பணியாற்றிய ஆசிரியை தனத்தை நிர்வாகம், கசவன்குன்று கிராமப் பள்ளிக்கு இடம் மாற்றி உத்தரவிட்டது. ஆனால், அவர் அங்கு செல்லவில்லை. இந்நிலையில், தனத்திற்கு ஆதரவாக, அப்பள்ளி ஆசிரியர் தவமணி செயல்பட்டார். அவர் வகுப்பறையில் மாணவர்களையும், குறிப்பிட்ட சமூகத்தையும் அவதூறாக, இழிவாக பேசியதாக புகார் எழுந்தது. அதுகுறித்து மாணவர்கள், தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.


 இதையடுத்து, அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் 100க்கும் மேற்பட்டோõர் நேற்று காலை, பள்ளியை முற்றுகையிட்டனர். அவதூறு பேசிய ஆசிரியர் தவமணியை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும், ஆசிரியை தனத்தை ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்ட பள்ளிக்கு அனுப்ப வேண்டுமென வலியுறுத்தி கோஷமிட்டனர். அவர்களுடன், காமநாயக்கன்பட்டி ஆலய பங்குத் தந்தை அந்தோணிசாமி, போலீசார் பேசினர். அதன் முடிவில், ஆசிரியை தனம் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்ட கசவன்குன்று பள்ளிக்கு உடனடியாக அனுப்பப்பட்டார். பாளை மறை மாவட்ட ஆயரிடம் பேசி அவரது உத்தரவுப்படி, ஆசிரியர் தவமணியை உடனடியாக வேறு பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, 2 மணி நேரத்திற்குப் பின் முற்றுகை முடிவுக்கு வந்தது.
மாணவர்களின் அக்கறை கொண்டு நாம் வெளியிட்ட கட்டுரைகள்:



Leave a Reply