Archive for January 2011

காலதாமதமாக  இந்த பதிவினை செய்வதற்கு வருந்துகிறோம்.  நீண்ட  நாட்களாக   நண்பர்கள் புகைப்படம் அனுப்பாமையால்  உங்களிடம்  இந்த நிகழ்வுகள் குறித்து பதிவு தாமதமானது வெளிச்சம் மாணவர்களின் பயிற்சிக்கு பிறகு எல்லா  மாணவர்களின் மனதில்  ஆழமாக பதிவாகியிருந்தது.. திருநெல்வேலி கார்மேல் மேல்நிலைப்பள்ளியில் வெளிச்சம் மாணவர்   நடத்திய  நாடகத்தினை கண்ட மாணவர்கள்  எமன் வேடத்தினை  பார்த்துஎல்லாரும்எமன் உயிரைஎடுக்கறதை பற்றிதான்  இதுவரை சொன்னாங்க… ஆனால் இந்த வேடமணிந்து எங்களை  நல்லா வாழ  வழி சொல்லுறாங்க வெளிச்சம் மாணவர்கள்.. நம்ம  வாழ்க்கை நல்லா இருக்கணும்ணா   நாம முதல்ல அறியாமை  இருளை   நமக்குள்ளிருந்து போக்கனும்டான்னு  மாணவர்கள்  அவர்களுக்குள் பேசிக்கொண்டவை நம் காதுகளூக்குள் விழுந்தது…

எந்த வேடமணிந்தாலும் மாணாவர்கள் வாழ்க்கை சிறக்கணும் என்பது  மட்டுமே நமது நோக்கம்…

கல்விப்பணியில்
வெளிச்சம் மாணவர்கள்

























பொங்கல் திருநாளில் முதல் மூன்று நாட்களை  பழங்குடியின மக்களோடு பயணித்தை ஏற்கனவே http://velichamstudents.blogspot.com/2011/01/blog-post_24.html ல் பதிவு செய்திருந்தோம்.. இவை ஒரு புறமிருக்க மற்ற  இரண்டு நாட்கள் பொங்கல் அன்று பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் கிராமத்தின் பாரதியார் தெருவில் நடைப்பெற்ற விளையாட்டு போட்டியில் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வெளிச்சம் மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்விற்கு வெளிச்சம் மாணவர்கள் மாநில அமைப்பாளர் வெளிச்சம் ஆனந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டார்..  விழாவில் முன்னால் ஒன்றிய கவுன்சிலரும் ஆசிரியருமான சுந்தர்ராஜன் அவர்கள் தலைமையில் விழா அருமையாக ஒருங்கிணைத்திருந்தார்கள் இளைஞர்கள்.. விழாவில் பேசிய ஆனந்தகுமார் அவர்கள் வருடத்திற்கு ஒரு நாள் ஒன்று கூடி விளையாடுவதும், விழா எடுப்பதும் கலை ந்து செல்லுதல் கூடாது.. மாறாக பெற்றவர்கள் பிள்ளைகளோடு பேசவேண்டும் ஏனெனில் பிள்ளைகளுக்காகவே பாடுபடுகிற பெற்றவர்கள் பிள்ளைகளோடு பேசுவதில்லை அதனாலேயே பிள்ளைகள் பெற்றவர்களை பிள்ளைகள் மதிப்பதில்லை.. ஒரு காலத்தில் பெற்றவர்கள் பிள்ளைகளுடன் மட்டுமே பேசுவது சுகமாய் கருதப்பட்டது ஆனால் இப்போது அந்த நிலமை தொடர்கிறதா என்ற கேள்வியை மக்களிடம் எழுப்பியபோது பெற்றவர்கள் தவறை உணர்ந்தபடி நின்றனர்…. மேலும் பிள்ளைகளே! உலக வரலாற்றை படித்து பாருங்கள்.. பெற்றவர்களை மதிக்காத  யாரும் சாதித்ததில்லைநீங்கள் சாதிக்க பிறந்தவரா இல்லை வெறுமனே சாக பிறந்தவாரா என பிள்ளைகளை கேட்க அண்ணா! இனி எங்கப்பா ம்மாவை மதிப்போம்ண்ணா என எல்லோரும் மொத்தமாக எழுத்து சொன்னபோது நம் பயணத்தின் முயற்சிக்கு உந்து சக்தியாக இருந்தது…. மக்களின் மகிழ்ச்சி திருவிழாவாக அமைந்தது பொங்கல் விழா.. மொத்தத்தில் விழா ஒருங்கிணைத இளைஞர்களுக்கு நன்றியை உரிதாக்குகிறோம்..

 இரண்டு கிராம விளையாட்டு விழா படங்கள்…….
 உங்கள் பார்வைக்காக

திருவாளந்துறை கிராமத்தில் 



















 வ.களத்தூர் கிராமத்தின் பாரதியார் தெருவில் நடைப்பெற்ற விளையாட்டு போட்டியில் பரிசளிப்பு விழாவில்


 








 




சுதந்திர தினம் குடியரசு தினங்கள் வந்தால் கொடியை ஏற்றி மிட்டாய் கொடுத்துவிட்டு, கொஞ்சம் காசு அதிகமிருந்தால் நோட்டு புத்தகங்களை வாங்கி கொடுத்துவிட்டு தன் கடமை முடிந்து விட்டதாக ஒதுங்கி ஓரமாய்  நின்றுகொண்டு.. இது என் தாய் நாடு  இந்தியா… நாமெல்லாம்  இந்தியர்கள் ஒரு தாய் பிள்ளைகள் என சொல்லி கொள்ளவது தவறு… சக மனிதன் பாதிக்கப்பட்டால்  நமக்கு ஏன் வம்புன்னு நிற்காமல் நாமும் துடிக்க வேண்டும்… ஒரு “பய” திருந்த மாட்டான்னு நாமும் வேதாந்தம் பேசாமல், நமக்கான பணியை தொடங்கிய  வெளிச்சம் மாணவர்களின் கல்வி பயணத்தில் எந்த நிகழ்ச்சியையும் பெயருக்காக நடத்துவது கூடாது என்றும் மாறாக அதில் மக்களுக்கு கல்வி சார்ந்த நிகழ்வுகள் இருக்க வேண்டும் என்பதே நம் இலக்கு.. அந்த வகையில் குடியரசு தினத்தினை இன்று காலை 9.30 மணிக்கு சென்னை கொரட்டூரில்  சீமான் தங்கராஜ் அறக்கட்டளை அவர்கள் ஒருங்கிணைத்த குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வெளிச்சம் மாணவர்களின் கல்வித்தாய் வெளிச்சம் செரின் அவர்கள் கலந்து கொண்டார்…. அரசு பள்ளி மாணவர்களுக்கு  நோட்டு புத்தகங்களை வழங்கி பேசிய செரின் அவர்கள்… கல்வி என்பது தான் ஒரு மனிதனின் தலையெழுத்தை மாற்றக்கூடிய சக்தி படைத்தது.அதனால் நாம் படித்தோம், வேலைக்கு போனோம் குடும்பத்தை பார்த்தோம் என்றில்லாமல், சமூகத்திற்க்கும் என்ன செய்தோம் என நாம் தான் பார்க்க வேண்டும் ஏனெனில் உயர்கல்வி என்பது தகுதியுள்ளவனுக்கு கிடைக்காமல் சிலருக்கு மட்டும் கிடைப்பது இந்த நாட்டின் சாபமே! என்று செரின் அவர்கள் 
பேசினார்..

படங்கள் உங்கள் பார்வைக்காக..