Showing posts with label ஏழை மாணவர்கள். Show all posts

கோபி அருகே பள்ளி மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மீது பெற்றேர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கோபி அருகே உள்ள நம்பியூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் இப்பள்ளி தலைமையாசிரியராக சுப்பையன் என்பவரும், பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு மாணவர்கள் வந்தனர். பள்ளி வளாகத்தில் கிடந்த குப்பைகளை மாணவர்களை கொண்டு 2 ஆசிரியர்கள் மேற்பார்வையில் அகற்றினர்.

இதனையடுத்து மாணவர்கள் அப்பகுதியில் கிடந்த கல் மண், செடி இலைகளை அள்ளி சென்று வெளியில் கொட்டினர். கழிப்பறையையும் மாணவர்கள் சுத்தம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் சுப்பையனிடம் கேட்ட போது, பள்ளி விடுமுறை முடிந்து மீண்டும் தொடங்கும் போது பள்ளியை சுத்தமாக வைத்திருக்க கல்வித் துறை அலுவலகங்கள் உத்தரவிடுகின்றன. இதற்கு போதிய பணியாளர்கள் இல்லாததாலும் போதிய நிதி இல்லாததாலும் மாணவர்களை வைத்து சுத்தம் செய்ய வேண்டியுள்ளது என்றார்.

கடுமையான வெயில் நேரத்தில் மாணவர்களை வேலை வாங்கிய தலைமையாசிரியரின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவத்தை அறிந்த பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்தின் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

வெளிச்சம் மாணவர்கள் உதவி செய்யும் மாணவர்களின் பட்டியல் இதோ..உங்கள் முன் பதுவு செய்கிறோம்..

முடிந்தால் உதவி செயுங்கள்
தொடர்புகொள்ளுங்கள்: 9698151515