Showing posts with label Motivation. Show all posts

          பொழுது போக்கிற்காக பலருக்கு  இணையதளங்கள் பயன்படலாம். ஆனால் வெளிச்சம் மாணவர்களின்  கல்விக்கு  உதவிடும் பலரை அறிமுகம் செய்வது இந்த இணையம் தான். அதன் வகையில்  இணையதளத்தில்  நம்  கல்விப்பணியினை தொடர்ந்து கவனித்து வந்த SJSRY    திட்டத்தின் மண்டல திட்ட அலுவலர்,  திரு.செல்வராசு அவர்கள், எங்களுடைய பணி இன்னும் பல கிராமபுற மாணவர்களுக்கு போக வேண்டும் என நம்மிடம் கேட்டுகொண்டார். அவரின் அலோசனைப்படி திருவண்ணாமலை,வேலூர். விழுப்புரம் மாவட்டங்களில் அந்தந்த பேரூராட்சிகள் மற்றும் வெளிச்சம் இணைந்து பள்ளிகள் மற்றும் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு நாம் தன்னம்பிக்கை வாழ்வியல் பயிற்சி கொடுக்க   நினைத்தோம்..
               அதன் முதல் முயற்சியாக 31.1.11 அன்று காலை 10 மணியளவில் வந்தவாசி - அரசு பெண்கள்  மேல்நிலைப் பள்ளியில் இன்றைய மாணவர்களின் உளவியல் எதை நோக்கி? என்கிற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியினை வந்தவாசி  நகராட்சி சமூக கல்வி அலுவலர் திரு முனைவர். கணேசன் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார்..

     நிகழ்ச்சியில் பங்குபெற்ற சிறப்பு விருந்தினர்கள்:
                      
                                   திரு.க.சீனிவாசன், நகர் மன்ற தலைவர், 
                                                          திருமதி. இரா.வாசுகி பாபு, நகர் மன்ற துணைத் தலைவர்,
                                                    திரு. N.உசேன் பாரூக் மன்னர், Bsc, B.L, M.B.A,   ஆணையாளர்,   நகராட்சி உறுப்பினர்கள் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.
திரு.செல்வராசு அவர்கள். மண்டல திட்ட அலுவலர்,

 நாம் விசயத்திற்கு வருவோம்!

நாடகம் 

  

கைகளை தூக்கும் மாணவிகள்

             வெளிச்சம் மாணவர்களின் கலை நிகழ்ச்சியாக துவங்கியது, வெளிச்சம் தீபா அவர்களின் பாடலை தொடர்ந்து, நமது குழுவின் சிறு நாடகத்தின் மூலம்  மாணவர்களுக்குள் எழும்பும் கேள்விகளை விளக்கும் வகையிலும், அவர்களின் எதிர்காலம் தீர்மானிப்பது கல்விதான் என்பதையும்  பெற்றோர்களை நேசிப்பது அவர்களின் கடமை எனவும் விளக்கிய போது மாணவர்களின் கண்களில் சிரிப்பின் வழியில் சிந்தனை தூண்டியதை நீங்கள் புகைப்படங்களை பார்க்கலாம்.. மேலும் இன்றைய மாணவர்களின் உளவியல் எதை நோக்கி....” என்ற தலைப்பிலான மாணவிகளுடனான  கலந்துரையாடலை  வெளிச்சம் அமைப்பின்  நிறுவனர் வெளிச்சம் செரீன் அவர்கள் பேசிய போது மாணவர்கள் சிரித்தனர்.  மேலும் எவ்வளவு பேர் அம்மா அப்பாவை பிடிக்காது திட்டீருக்கீங்கன்னு கேட்க சிலர் கைகளை உயர்த்தினர் ஆனால் பெண்ணாய் ஏண்டா பிறந்தோம்னு  எவ்வளவு பேர் கஸ்ட்டபடுறீங்கண்ணு மீண்டும் ஒரு கேள்வியை முன்வைக்க எதிர்பாரா வண்ணம் எல்லா மாணவிகளும் கைகளை உயர்த்தினர். அக்கா தினம் தினம் எல்லா இடத்திலயும் அவமானப்படுறோம் என செல்வி என்கிற மாணவி சொன்ன போது சின்னவயதில் அவர்கள் படும் அனுபங்களின் வலியை நம்மால் உணர முடிந்தது.
சந்தோசமாக


கடைசியாக பயிற்சி எந்த அளவுக்கு இருந்தது என  நாம் மாணவிகளிடம் கேட்க இந்த பயிற்சி  எங்கள் வாழ்க்கைக்கு உதவும்னு நம்புறேன். சினிமா காரங்களைதான் நான் பெருமையா நினைச்சிருந்தேன். இன்றிலிருந்து எனக்காக கஸ்ட்டபடுற எங்கப்ப்பா அம்மாவை தான்   நினைப்பேன்னு சொல்ல..  அவர்களின் கண்கள் கலங்கியதை வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை..  அவரை வெளிச்சம் மாணவர்கள் குழு ஆறுதல் சொல்லி விடைபெற்றோம்... பள்ளி தலைமை ஆசிரியர் மீண்டும் எங்கள் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க வரவேண்டும் என நம்மிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார் நாம் ஏற்று கொண்டோம்  தினம் கிடக்கும் அனுபவங்களை இளைய தலைமுறைக்கு சொல்வதில் படித்து கொண்டிருக்கும் உங்களை போலவே வெளிச்சம் மாணவர்களுக்கும் ஆர்வம் அதிகம்..

இணையம் மூலம் கிடைத்த செல்வராசு அய்யா அவர்களுக்கும், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த முனைவர்.கணேசன் அவர்களுக்கும் நன்றிகள்..