Showing posts with label வெளிச்சம். Show all posts


இன்று (12.5.12) வெளியான தினமலரின் பெண்கள் மலர் பத்திரிக்கையில்  மாணவர்களுக்கு வழிகாட்டும் வெளிச்சம் எனும் தலைப்பில் வெளியான கட்டுரையை கல்விக்கான களப்பணியில் எமக்கு வழிகாட்டும் உங்களுக்கு எம் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டு உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்...

நன்றியுடன்

வெளிச்சம் மாணவர்கள்




வெளிச்சத்தோடு இணைந்து 
பலருக்கு உதவ நினைப்பவரா நீங்கள் இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்.. https://spreadsheets.google.com/viewform?formkey=dFR0MFJtbllsNUNrRk9CTG82ZlJxOWc6MQ

உலக மகளீர் தினத்தில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் வெளிச்சம் அமைப்பின் தலைவர் வெளிச்சம் செரின் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருதை இன்று மாலை பெறுகிறார்.. அதற்கான கடிதத்தை தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.
அவர் பணிசிறக்க, வாழ்த்துங்கள் எங்கள் தாயை...

எல்லா கஸ்டங்களிலும் எம்மோடு இணைந்திருக்கும் உங்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றி....

நன்றியுடன் 
வெளிச்சம் மாணவர்கள்
  


உறவுகளே! இன்றைய (26.2.12) தினமணி நாளிதழின் இணைப்பான தினமணி கதிர் புத்தகத்தில் தேவையில்லாத தேர்வு பயம் ? எனும் தலைப்பில் வெளியான கட்டுரையை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்...

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்




இன்று தினத்தந்தி நாளிதழின் முத்துச்சரம் பகுதியில்
தன்னம்பிக்கை வளர்க்கும் வெளிச்சம் எனும் தலைப்பில் வெளியான கட்டுரை உங்கள் பார்வைக்கு….



Dear Friends,
         Our  interview  Published on Daily Thanthi-MUTHUCHARAM magazine kindly read it..


பெற்றால்தான் பிள்ளையா? என்கிற கேள்வி வழக்கமாக சமூகத்தில் நிலவும் கேள்விகளோடு தொடர்புள்ள மற்றொரு கேள்வி “ பெற்றால் மட்டும் அன்னையா? அல்லது பெற்றோரா?”


    நல்லதொரு மாணவர் சமூகத்தை, இன்னும் சில பத்தாண்டுகளில் சமூகத்தை தாங்கி பிடிக்க போகிற, வழிநடத்த போகிற மாணவர்களின் பெற்றோர்களாக நாம் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறோமா? கதைகள் கேட்டு பழகிய நம் முந்தைய குழந்தைச் சமூகம், அதாவது இன்றைய பெற்றோர் சமூகம், இன்று தொலைக்காட்சி நெடுந்தொடர், குறுந்தொடர்களின் இறைச்சல்களுக்கு நடுவே தம் பொன்னான நேரத்தை குழந்தைகளிடம் செலவிடாமல் தொலைக்காட்சி பெட்டிகளோடு செலவிடுகிறது. தொடர்ச்சியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரை நாம் சந்தித்த பொழுது மேலே சொன்ன குற்றச்சாட்டுகள் மேலோட்டமானவை அல்ல என்பதை மாணவர்களின் உரையாடல்களும் உறுதி செய்தது. தாய், தந்தையரிடமும் பொறுப்புள்ள, திறன்படைத்த இளைய தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு குறித்து பேச ஆவலமாய் இருந்தோம். அதற்கு ஏற்றார் போல்  ஆரணி நகராட்சிக்கு உட்பட்ட மகளிர் சுய-உதவி குழுவை சார்ந்த பெண்களோடு உரையாடும் வாய்ப்பும் நமக்கு கிட்டியது.

நிகழ்ச்சியை நகராட்சியின் ஆணையர் சசிகலா அவர்கள் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக வெளிச்சம் மாணவர்கள் உறவுகள் அறுந்துபோன வீட்டுச் சூழலை மெய்யாகவே குறும் நாடகத்தில் கண்முன் நிறுத்திக் காட்டினர். குழந்தைகளின் மனநிலையை கருத்தில் கொள்ளாமல் குழாயடியில் கொச்சையான சொற்களில் சண்டைப் போடும் பெண்கள், பிள்ளைகளை கவனியாமல் தொடர்களுக்காக கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் பெண்கள், சுற்றத்தார்களின் தேவையற்ற வெறும் வாயை மெல்லும் குழப்ப பேச்சுக்களால் குழந்தைகள் மீது அழுத்தம் செலுத்தும் பெற்றோர்… என மெய்நிகர் நாடகத்தை மேடையில் நிகழ்த்திக் காட்டினர். நாடகத்திற்கு பின் வெளிச்சம் மாணவர் அமைப்பின் நிறுவனர் திரு.செரின் அவர்கள் பேசத் தொடங்கினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் குறைவாக இருந்த மகளிர் திரள் செரின் அவர்களின் உரையாடல் நீள, நீள கூட்டம் கூடிக் கொண்டே போனது. 





செரீன் அவர்கள் பெற்றோர்கள்  சந்திக்கும் அத்தனை பிரச்சினைகளை கணக்கிலெடுத்து குழந்தைகளிடம் அவர்கள் அணுக வேண்டிய முறைகளை பற்றி விரிவாக பேசினார். குழந்தைகளிடம் அதை செய்யாதே, இதை செய்யாதே என்று கண்டிப்பு காட்டும் பெற்றோர்களில் எத்தனை பேர் தன் வாழ்க்கையில் குழந்தைகள் தம்மை பின்பற்றும்படி வாழ்ந்து காட்டுகின்றனர். நாள் முழுக்க தொலைக்காட்சி பெட்டிக்கு அருகில் அமர்ந்து கொண்டு குழந்தைகளை தொலைக்காட்சி பக்கம் வராமல் இருக்கச் சொல்ல பெற்றோர்களுக்கு எப்படி தகுதி வரும்? நாம் தொடர்களில் மூழ்கி கிடந்தால், குழந்தைகள் சினிமா பாடல்களில் மூழ்கித்தான் கிடப்பார்கள். குழந்தைகளுக்கு பொது அறிவு வர செய்திகள், இயற்கை சுற்றுச்சூழல் தொடர்பான செய்திகளை, அறிவியல் செய்திகளை தாங்கி வரும் டிஸ்கவரி போன்ற தொலைக்காட்சிகளை பார்த்தால்தானே நாமும் சிலவற்றை தெரிந்து கொள்ள முடியும், குழந்தைகளின் அறிவு ஊற்றுக் கண்ணும் திறக்கும்.



கணவன் மனைவி பேசிக் கொள்ளும் போதோ, குழாயடியில் பெண்களோடு சண்டை போட்டுக் கொள்ளும் போதோ, நாம் கொச்சையான சொற்களை சரளமாக பயன்படுத்திவிட்டு, குழந்தைகள் அதுபோன்ற சொற்களை பயன்படுத்தக் கூடாது என்ற எதிர்ப்பார்ப்பு எந்தளவு சரியானதாக, நேர்மையானதாக இருக்கும்.

வீட்டோடு, இல்லறத்தை கவனித்துக் கொண்டு வீட்டிலிருக்கும் பெண்களானாலும் சரி, பணிக்கு செல்லும் பெண்களானாலும் சரி, ‘நான் இன்று அல்லது தினமும் என் குழந்தையோடு அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ ஒரு தோழியைப் போல, தோழனைப் போல பேசுவேன்’ என்று நினைத்திருப்பீர்கள், கண்டிப்பாக பெரும்பாலும் இருக்காது.  வீட்டில் தோழமை கிடைக்காத போது, வெளியே பதின் வயது உள்ளம் தேடத்தானே செய்யும், இதில் நம் வீட்டுக்குள்ளேயே வந்து ஆபாச குப்பைகளை வேறு தொலைக்காட்சிகள் கொட்டிச் செல்கின்றன. நாம் கவனமாக செயல்பட வேண்டாமா? தாய்மை என்றால் என்ன? தன் குழந்தைக்கு தேவையான உணவை சமைப்பதும், பரிமாறுவதும் மட்டும்தானா? தன் குழந்தைக்கு தேவையான உணர்வு ரீதியான ஆறுதல், அரவணைப்பு இரண்டையும் வழங்குவதுதானே…?

அதோடு, பெற்றோர்களாகிய நம் மக்கள் பெரும்பாலும் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதைவிட உறவினர்கள், சுற்றத்தார்கள் என்ன நினைப்பார்கள்? என்ற சிந்தனையிலேயே தம் குழந்தையின் இயல்பை மாற்றுவதோடு மட்டுமில்லாமல், தமது இயல்பையும் இழந்து நின்கின்றனர்.. அடிக்கடி நமது சமூகத்தில் பயன்படுத்தப்படும் சொற்கள், ‘அந்த நாலு  பேரு என்ன நினைப்பாங்க’எந்த நாலு பேர்? எவன்/எவள் தன் குடும்பத்தோடு மகிழ்ச்சியோடு இருக்கும் நேரம் போக ஓய்வு நேரத்தில் ஊரார் வீட்டை பற்றி வம்படிப்பதை பிழைப்பாய் வைத்திருக்கின்றனரோ, எவனுக்கு உங்கள் குழந்தைகள் படிப்பை நிறுத்துவதால் எந்த நட்டமும் இல்லையோ, எவனுக்கு உங்கள் குழந்தை மற்றொரு நபருடன் தேவையற்ற உறவை வளர்த்துக் கொள்வதில் துளியளவு வருத்தமே இல்லையோ, எவன் உங்கள் பிள்ளையின் கல்விக்கு 50 காசளவில் உதவ முடியாதோ? அவனிடம் நமது குழந்தைகள் நற்சான்றிதழ் பெற வேண்டுமென்று மெனக்கெடும் பெற்றோரை என்ன சொல்வது. இனியாவது இன்றைய பெற்றோர்களாகிய  என் சகோதர, சகோதரிகள் தத்தமது குழந்தையின் நலனை முதன்மையாக கொண்டு சிந்திக்குமாறு மிகத்தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் குழந்தையின் மேற்கல்விக்கு உதவிட , குழந்தைகளின் உளவியல் சிக்கலை  தவிர்த்திட மாணவர்கள் உதவி  எண் 9698151515 என்ற எண்ணுக்கு நீங்களோ, குழந்தைகளோ தொடர்பு கொள்ளலாம். அதோடு, கேள்விகள்  ஏதுமிருப்பின் சகோதரிகள்  கேள்வி எழுப்பலாம்.” என்று செரீன் பேசி முடித்தார்.


இதன் பிறகு, தனது கருத்தை பதிவிட்ட பெண், பெண்களை மட்டுமே குற்றம் சுமத்திக் கொண்டிருக்காமல், கொஞ்சம் எங்கள் வலிகளையும் கேளுங்கள், கணவர்கள் யாரும் பெண்களை சக மனுசியாக பார்ப்பதில்லை, சம்பளமில்லா வேலைக்காரியாகவே பார்க்கின்றனர். கணவன் துணியை இடுப்பு வலிக்க துவைத்துக் கொடுத்தாலும், கொஞ்சம் கூட பரிவு காட்டுவது, துணிகளை உலர்த்துவதற்கு கூட உதவுவது கிடையாது, நாங்கள் தொலைக்காட்சி தொடர்களில் மூழ்கி கிடப்பதாக எம்மீது குற்றம் சுமத்தப்படுகிறது, எத்தனை கணவர்கள் எம்மை நம்பி வேலைக்கு அனுமதிக்க தயாராக இருக்கிறார்கள். வீட்டுக்குள்ளே அடைத்து வைத்தால், வீடே உலகமென்றிருக்கும் சூழலில் தொலைக்காட்சி பெட்டிதான் எங்களுக்கு பொழுது போக்கு கருவியாக இருக்கிறது. மாற்று உருவாக்கி தர இதே போன்று கணவர்களிடமும் பேசுங்கள்.

   நாமும் கண்டிப்பாக ஆண்களிடமும் பேசுவோம், பெண்களிடமும் பேசுவோம், குழந்தைகளிடமும் பேசுவோம் உரையாடல் வழி ஒரு  ஆரோக்கியமான சமூகத்தை உண்டாக்குவோம் என்று வாக்குறுதி அளித்து வந்தோம்.

                
            "ஏழைகளின் கல்விக்கு உதவியவன் இறைவனாவான்" என்பது  வெளிச்சம் மாணவர்களுக்குள்   எப்போதும் தாரக மந்திரமாக சொல்லி கொள்வதுண்டு...  கடந்த ஆண்டு கல்லுரிக்கட்டணம் செலுத்த முடியாமல் கல்லூரியை விட்டு வெளியே வந்த 36 கல்லூரி மாணவர்களுக்காக நாற்பது வெளிச்சம் மாணவர்கள் சென்னை நகரமெங்கும் உண்டியல் ஏந்தி கல்லூரிக்கட்டணம் செலுத்தியதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். ஆனால் அப்போது பிச்சையெடுக்குறீங்களே,  உங்களுக்கு வெக்கமா இல்லையா? என்றனர் நம்மை நோக்கி. கல்லூரியை விட்டு வெளியே வந்த மாணவர்களின் வலியை யார் அறிவர்.. நாம் உண்டியல் ஏந்தியதன் விளைவாக முதல் தலைமுறை மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தினை அரசே ஏற்கும் என்கிற அரசாணையினை தமிழக அரசு வெளியிட்டதை  தாங்களும் அறிவீர்கள்…

இந்த ஆண்டும் அதே பிரச்சனையில் கல்லூரியில் இருந்து துரத்தப்பட்ட மாணவர்களை அழைத்து கொண்டு பல்வேறு இடங்களுக்கு வெளிச்சம் மாணவர்கள் அலைந்தோம்.. அதில் 38 நாட்களாக கல்லூரிக்கு போகாத  நிலையில் படிப்பை இழக்கும் சூழலில் இணையத்தின் வாயிலாகவும் கோரிக்கை வைத்தோம்... ஒரு சில மாணவிகளுக்கு இணைய நண்பர்கள் உதவி செய்தார்கள்.. மேலும் இக்கட்டான சூழலில் மாணவர்களிடம் உதவும் எண்ணத்திணை உருவாக்க வேண்டும்..  உயர்கல்வி என்பது ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்தால் அது இந்த தேசத்தின் சாபம் எல்லோருக்கும் கிடைக்க செய்வோம் என்ற எண்ணத்தின்படி  சென்னையில் உள்ள பாரதி மகளீர் கல்லூரி, தியாகராயர் கல்லூரி போன்ற கல்லூரிகளில் மாணவர்களிடம், சக ஏழை மாணவர்களின் சூழலை சொல்லி வெளிச்சம் மாணவர்கள் உண்டியல் ஏந்தினார்கள்.  கல்லூரியை விட்டு வெளியே அனுப்பட்ட  மாணவர்களின்  பெரும்பாலான மாணவர்கள் உதவினார்கள், அதில் கிடைத்த பணத்தை St.Pal’s Nursing College ஐ சார்ந்த ஐந்து கல்லூரி மாணவிகளுக்கு அந்த பணத்தினையும் வழங்கியதோடில்லாமல் மேற்கொண்டு அந்த மாணவிகளின் கட்டண தேவை கருதி நிலைமையினை திரைப்பட தயாரிப்பாளர் ராஜன் அவர்களிடம் வெளிச்சம் செரின் அவர்கள் விளக்கி
 நன்றி: தினத் தந்தி
கூறியதன் விளைவாக ராஜன் அவர்கள் தலா ஐந்தாயிரம்  ஒவ்வொரு மாணவிகளுக்கும் என ஐந்து பேருக்கு அவர்கள் கல்லூரியின் பெயரில் டி.டி எடுத்து கொடுக்கப்பட்டது. கையிருப்பில் இருந்த பணத்தோடு வெளிச்சம் மாணவர் வேல்முருகன் சகிதம் அந்த மாணவிகளை கல்லூரிக்கு அனுப்பினோம், கல்லூரியில் நிர்வாகிகள் மாணவிகளை தற்காலிகமாக அனுமதித்தனர், அதோடு மீத பணத்தினை கட்டினால் தான் கல்லூரி தேர்வுக்கு அனுப்படுவார்கள் என நம்மை எச்சரித்து அனுப்பினார்கள். மீதம் கட்ட வேண்டிய பணத்தை கல்வியாண்டின் முடிவிற்குள் ஏற்பாடு செய்ய வேண்டிய பொறுப்போடு, உதவிக்காக காத்திருக்கும் மீதமுள்ள மாணவர்களுக்கு பொருளாதார உதவி செய்ய வேண்டியதன் தேவையை உணர்ந்த நாம் மீண்டும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தோம்.
    
    
ஆனந்த் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்  சார்



    திருச்சி எம்.ஏ.எம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியர் படிக்கும் சிவா என்கிற மாணவனை  93% எடுத்திருந்த போதும் கல்லூரிக்கட்டணம் செலுத்தாததால் வெளியே அனுப்பப்பட்டார். நிலைமையை கேட்ட சந்திராயன் மயில்சாமி அண்ணாதுரை அவர்களிடம் பதறினார். சென்னை செட்டிநாடு கல்லூரிக்கு ஒரு விழாவுக்கு வந்தவர், அங்கிருந்த  மாணவர்களிடம் சிவாவின் நிலையை கூறினார். அவர்கள் உதவினார்கள் அது மட்டுமில்லாது கடந்த 4.2.11. அன்று ஆனந்த்  இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியரிங் கல்லூரில் நடைபெற்ற ஏழாம் ஆண்டு விழாவில்
சிவா , வெளிச்சம் செரின் அவர்கள்
சிவாவின் நிலையினை, “மாணவர்களே!  நீங்கள் படித்து பட்டம் பெறும் இந்த சூழலில் 
நிறைய மதிப்பெண்கள் எடுத்தபோதும் கல்வியை கனவாக கொண்டு மேற்கொண்டு தொடர முடியாமல் காத்து நிற்கும் சிவாவுக்கு உதவுங்கள்” என கோரிக்கை வைத்தார். உண்மையாகவே  மாணவர்கள் மனிதாபமுள்ளவர்கள் தான் என்பதை நிரூபித்தார்கள். மொத்தமாக உண்டியல் மூலம் கிடைத்த தொகை ரூ 12074.  அந்த பணத்தை சிவாவிடம் வெளிச்சம் மாணவர்கள் கொடுப்பதை விட ஒரு கல்லூரி மாணவர்களே கொடுக்க வேண்டும் என எண்ணினோம்.. அதற்கு ஏற்றார் போல் தஞ்சாவூர் பான் செக்காஸ் மகளிர் கல்லூரி விடுதியில் இளைஞர்கள் விழாவில் வெளிச்சம் மாணவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக சென்றிருந்தோம்.
தகுதியுள்ள பாண் செகுயர்ஸ் கல்லூரி மாணவிகள்
(இந்த விழாவின் சிறப்பை பின்னர் இணைக்கிறோம்) கல்லூரி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சிவாவிற்கு, “ மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் உதவியோடு திரட்டப்பட்ட நிதியினை தருவதற்கு யாருக்கு தகுதியுள்ளது என எண்ணுகிறீர்கள்” என நாம் கேட்டோம்…ஒரு பெண் வந்தார் உங்களை பற்றி சொல்லுங்கள் என்ற போது நான் இந்த கல்லூரியில்  நண்பர்கள் மூலம் காசு சேர்த்து ஒரு பொண்ணை படிக்க வைக்கிறேன்.” என சொல்ல சிவாவின் கண்களீல் கண்ணீர் வடிய அந்த தொகையை பெற்றுக்கொண்டான்... கல்லூரிக்கு வெளியே அனுபப்பட்ட சிவாவின் வலியை நிகழ்ச்சியின்  ஊடே தொலைப்பேசி வழியாக கேட்டுகொண்டார் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்.  கல்லூரியில் இந்த தொகையை கட்டிவிட்டு  இப்போதைக்கு கல்லூரிக்குள் அனுப்பிவிட்டோம்..   மாணவர்களிடமிருந்து மாணவர்களால் சேர்க்கப்பட்ட நிதியை மாணவர்களால் கொடுத்து ஒரு மாணவனின் உயர்கல்வியை மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் நல்ல உள்ளத்தின் உதவியோடு இப்போதைக்கு காப்பாற்றியிருக்கிறோம்.. தொடர்கிறது மீண்டும் நம் பயணம்.
எவ்வளவு காலம் இப்படி உண்டியல் ஏந்த போகிறீர்கள் எனலாம்.. பேசுவதை விட முயற்சி செய்தோம் பிறர் வாழ்வில் கல்வி வெளிச்சம் கொடுக்க  நம்பிக்கையோடு பயணமாகிறோம் மீதமிருக்கும் மாணவர்களின் வாழ்க்கைகாக…
கேள்வி கேட்கும்  அன்பர்கள், ஐயமுள்ள அன்பர்கள், அக்கறையுள்ள தோழர்கள் ஆலோசனைகளை கூட்டு செயல்திட்டத்தை  முன்வைக்குமாறு தாழ்மையோடு வெளிச்சம் மாணவர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள் 

 உண்டியல் ஏந்தும் வெளிச்சம் மாணவி





சமூக அக்கறை உள்ளவரா நீங்கள்
ஏழை மாணவர்களின் கல்விக்காக இணைவோம் வாரீர்…


கல்விக்கு உதவிட : 


ACCOUNT NAME:               " VELICHAM STUDENTS EDUCATIONAL AND WELFARE TRUST "

ACCOUNT NO:                   31654850476,
Branch Name:                     STATE BANK OF IINDIA, PERAMBUR, CHENNAI,

IFSC Code:                          SBIN 0002256

SWIFT Code:                       SBININBB458


வணக்கம்,  2004 ம் ஆண்டு முதல் வெளிச்சம் அமைப்பானது சென்னையை மையமாக கொண்டு, ஏழை மாணவர்கள் பணமில்லை என்கிற ஒரே காரணத்திற்காக தங்கள் வாழ்கையையும், படிப்பையும் இழந்து விடக்கூடாது என்கிற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு, உதவும் உள்ளங்களின் உதவியால் வெளிச்சம் இன்றுவரை  தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில்  இருந்து கண்டறியப்பட்ட 515 முதல்தலைமுறை ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெற உதவி செய்ததால், வெளிச்சத்தின் மாணவர்கள் பல்வேறு துறைகளில், பல்வேறு கல்லூரிகளில் படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.. இந்த வருடம் மட்டும்  51 மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்துள்ளனர்.  வெளிச்சத்தின் முதல் மாணவர்  செந்தில் என்பவர் இப்போது ஜூனியர் சயிண்டிஸ்டாக பணிபுரிகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்..

பிரச்சாரத்திற்கான காரணங்களும் சிறு நம்பிக்கையும்:
                                       முகம் தெரியாத நபர்களின் உதவியில் படித்தோம். பணமில்லாமல் கல்லூரிக்கட்டணம் செலுத்த முடியாமல் ‘சீட்’ கிடைத்த போதும், பணம் செலுத்த முடியாமல், வீதியில் நாதியற்று நின்ற பொழுதுதான் எங்களுக்கு வெளிச்சம் தெரிந்தது, வெளிச்சம் எங்களை கல்லூரிகளில் படிக்க வைத்ததோடு,  பெற்றோரையும் சமூகத்தையும் நேசிக்க சொல்லிகொடுத்ததன் விளைவாக,  எங்களை போன்ற மாணவர்கள் படிப்பதற்கு சிரமபடக்கூடாது  என கல்விக்கான பணியை செய்து கொண்டிருந்தபோது,   உலகம் முழுவதிலும் வருடந்தோறும் 10 லட்சம் பேர்தற்கொலை செய்துகொள்கின்றனர்.  1 லட்சம் பேர் இந்தியாவில் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.   ஒவ்வொரு 15  நிமித்திற்க்கு ஒரு முறை 15-29 வயதிற்குட்பட்ட ஒருவர் இறக்கிறார் என்பதும், இந்தியாவில் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் 5வதுஇடத்தில் உள்ளதாகவும் ஆண்டுதோறும் தமிழகத்தில் 11,000 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் . இவர்களில் 5,000 பேர் மாணவர்கள். சென்னையில் மட்டும் 1,100 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பது அச்சுறுத்தும் உண்மையை படித்து போது  பதறிப்போனோம்.
 இந்தியன் எக்ஸ்பிரசஸில் நமது ஆய்வு

அது மட்டுமில்லாது பள்ளிக்கு போகும் குழந்தைகளின் எண்ணிக்கையே படிப்படியாக குறைவதால்  பிளஸ் 2விற்குப் பிறகு, 18 வயதில் இருந்து 24 வயது வரை உடையவர்களில் உயர்கல்வி பயில்பவர்கள் எண்ணிக்கை, தேசிய அளவில் 11 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.  1 வகுப்பில் 100 பேர் சேர்ந்தால் கடைசியில் இடையில் நின்றவர்கள், கடைசியாக 7 பேர் மட்டுமே கல்லூரிக்கு செல்வதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சம் சொல்கிறது. மேலும்” மும்பை ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த ரங்கன் பானர்ஜி, வினாயக் புருஷோத்தம் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் இந்தியாவில்  பத்து லட்சம் பேரில், 214 பேர் இன்ஜினியரிங் படித்தவர்களாக உள்ளனர்.இந்த எண்ணிக்கை தென் கொரியாவில் தான் அதிகம். அங்கு பத்து லட்சம் பேரில், 1,435 பேர் இன்ஜினியரிங் படித்தவர்கள்.  ஆனாலும், இது தொடர்பான இன்னும் உறுதியான புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை.

                           அப்படியானால் தமிழகத்தின் நிலையை பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக முதல் தலைமுறை மாணவர்களின் வாழ்வின் அவலங்களையும் , வேதனைகளையும் நம்மால் நினைத்து கூட பார்க்க முடிவதில்லை, சுதந்திரம் அடந்த இவ்வளவு காலங்களில் கல்லூரி பக்கம் தலைவைத்து பார்க்காத மக்கள் இருக்கிறார்கள் என்பது எவ்வளவு கொடூரமானது என்பதை  தடுத்தாக வேண்டும் என்று உணர்ந்தோம். குறிப்பாக மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க மாணவர்களே முன்வரவேண்டும் என எண்ணினோம், மானவர்களான நாங்கள் எங்களை  போன்று  எந்த மாணவர்களும் எந்த காரணத்திற்காகவும்  படிப்பை இழக்கும் சூழலுக்கு ஆளாகி விடக்கூடாது. பெருகி வரும் மாணவர்களின் தற்கொலைகளை தடுப்பதற்காக மாணவர்கள் ஆலோசனை மையம் (Students  Help Line) 9698151515 ஆரமித்து. தமிழகம் முழுவதும் மாநில அளவிலான பிரச்சாரப் பயணத்தினை கடந்த 15.07.2010 முதல் 8.09.2010  வரை ’55′ நாட்களாக மேற்கொண்டு, தெரு நாடகம், நோட்டீஸ், போஸ்டர் போன்றவற்றின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்..  இதுநாள் வரை 21000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளை மாணவர்களாகிய நாங்கள் சந்தித்து இருக்கிறோம். அதில் மாணவர்களின் கல்வியையும், அவர்களின் மனதையும் பாதிக்க கூடிய விசயங்களை  அவர்கள் Students  Help Line தொடர்பு கொண்டு சொல்லும் போது இதுநாள் வரை அவர்களின் மனவேதனைக்கு ஆறுதல் சொல்ல ஆட்கள் இல்லை என்பதுதான் எதார்த்த உண்மை..

கல்விக்கான திட்டங்கள் கிடைக்காமல் அவதிப்படும் மாணவர்கள்:
                    கல்விக்கடன் கொடுப்பது  “லோன் மேளா”க்களாக அரசியலாளர்களால் ஆக்கப்பட்டாலும்,ஏழை மாணவர்களுக்கு கல்வி கடனுதவி,  மாணவர்களுக்கு 35 ஆயிரத்து 946 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் வங்கிக்கடனுக்கான அடைப்படை தகவல்கள் மற்றும் விதிகள் ஏழை மக்களுக்கு தெரியாததால் இங்கே பேங்குக்கும் வீட்டுக்கும் நடக்கின்ற பெற்றவர்கள் அதிகமாகத்தான் இருக்கிறார்கள். கல்விக்கடனுக்கான வட்டி ரத்து என்கிற அறிவிப்புகள் வந்து 8 மாதங்களில் அந்த ஆணைகள் வங்கிகளுக்கு வரவில்லை என்றும்,  வட்டிக்கட்டினால் தான்  அடுத்த வருட லோன் கொடுப்போம் என அலைக்கழிக்கபடுகிறார்கள்.  வங்கிக்கடன் கொடுக்கும் அதிகாரத்தினை கிளை மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டதால் அவர்கள் ஈவிரக்கமில்லாமல் நடக்கிறார்கள், .வட்டிகட்ட சொல்லுவதோடு மட்டுமல்லாமல் இப்போது புதுசா இன்சூரன்ஸ் எடுத்தால் தான் என தட்டிக்கழிக்க படுகிறார்கள். மேலும் ஏழை மாணவர்களுக்கு மட்டும் ரிசர்வு பேங்க் ஆப் இண்டியா கொடுத்துள்ள எந்த வரையரையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்பதுதான் உண்மை. மேலும் வங்கிக்கடன் மட்டுமில்லாமல் முதல்தலைமுறை பட்டதாரிகளின் இலவச உயர்கல்வி திட்டத்தின் குலறுபடிகளாலும் மாணவர்கள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். பி.இ. படிப்புகளில் சேருவதற்கு ஆண்டுதோறும் விண்ணப்பிக்கும் மாணவர்களில் சுமார்  5,000 பேர்தான் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் ஆனால் பி.இ. உள்ளிட்ட தொழில் படிப்புகளில் 2010-11-ம் கல்வி ஆண்டு முதல் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது இதைத் தொடர்ந்தே 2010-11-ம் ஆண்டில் முதல் தலைமுறையைச் சேர்ந்த 78,086 மாணவர்கள் பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர் என்று அரசு பெருமையுடன் கூறியது  ஆனால் ராணி மேரிகல்லூரி விழாவில் துணை முதல்வர் இத்திட்டதின்கீழ் சுமார் 48000 மாணவர்கள் மட்டும் தான் கல்லூரிகளில் சேர்ந்துள்ளார்கள் என்பது கவனிக்க பட வேண்டிய விசயம்..
மாணவர்கள் சந்திக்கும் உளவியல் மற்றும் பிற பிரச்சனைகள்:
                      வெளிச்சம் மாணவர்கள் ஆய்வில் கண்டறிந்தபடி பெறும்பான்மையான மாணவர்கள் 54% காதல் தோல்வி,3%சக மாணவர்களால் புறக்கணிக்கப் படுவது, 15%ஆங்கிலம் தெரியாமல் தாழ்வு மனப்பான்மை,26%மனதுக்குள் இனம் தெரியாத வேதனை, மற்றும் 2% ரேகிங்  உட்பட்ட பிரச்சனைகளால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்..  குறிப்பாக நான் பேசுவதை கவனிக்க கூட ஆள் இல்லை,என்னை புரிந்து கொள்ள ஆள் இல்லையே என ஏங்கித்தவிக்கும் மாணவர்கள் அதிகமாக காணப்படுகிறார்கள்.தோளுக்கு உயர்ந்த பிள்ளைக்கிட்ட நாம் என்ன பேசுவதுன்னு பெற்றவர்கள் நினைப்பதாலும் இங்கே தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நமது மானவர்கள் ஆலோசனை எண்ணில் வந்த அழைப்புகளில் நான் காதலால் கல்வி இழக்க போகிறேன் என்று புலம்பிய மாணவர்கள் அதிகம்.மேலும் வெளிச்சம் மாணவர்கள் பிரச்சாரப்பயண 55 நாட்களில் பல்வேறு காரணங்களுக்காக 12 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என எண்ணும் போது வேதனையாக இருக்கிறது..கடைசியாக  தற்கொலை செய்து கொண்டவர் வரிசையில். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்,முள்ளுக்குறிச்சி சென்னை அண்ணா பல்கலைகழக முதலாமாண்டு மாணவி ஜோதி …கல்லூரிகளுக்கு செல்லப்படும் மாணவர்கள் விகிதம் குறைவாக இருந்தாலும் கல்லூரிக்கு போகிற மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தமுடியாத பல காரணங்கள்  மாணவர்களின் படிப்பையும்,உயிரையும் பறிபோகிறது என்பது தான் உண்மை.
  • கல்விக்கடன் வட்டி விகிதம் ரத்து ஆணை மக்களுக்கும்-வங்கிகளுக்கும் கிடைக்க செய்ய வேண்டும்!
  • கல்விக்கடனுக்கான தனி பிரிவுகள் வங்கிகளில் துவங்க வேண்டும்.!
  • வங்கிக்கடன் குறித்த அனைத்து விதிகள் மற்றும்.நடை முறைகளை பனிரெண்டாம் வகுப்பிலேயே தெரியப்படுத்த வேண்டும் அல்லது வங்கி  கடன் பெறுவதற்க்கான நடை முறையை பாடதிட்டமாக்க பட வேண்டும்..!
  • செக்ஸ் கல்வியை பள்ளி கல்லூரிகளில் முறையாக அமல்படுத்த வேண்டும்..!
  • கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களை கால அவகாசமே கொடுக்காமல் கல்லூரியை விட்டு வெளியேற்றும்,கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..!
  • கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்த போதும் அவர்களுக்கு அவர்களின் சான்றிதல்களை கொடுக்காத கல்லூரிகள் மீதும். கட்டவேண்டிய பணத்திற்க்கு பிணை கூலிகளாக்கப்படும் அவலத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்!
  • மாணவர்களின் தற்கொலைகளை தடுப்பதற்கு,மாணவர்களின் உளவியல் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முறையான ஆற்றுபடுத்துபவர்களை (Counselor) நியமிக்க வேண்டும்!
இவைகள் மாணவர்களின் பிரச்சனைகளை இந்திய தேசத்தின் பிரச்சனையாக கொண்டு உடனடியான நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என மாணவர்களின் பிரச்சனையை  உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்..


வெளிச்சம் மாணவர்கள்

புதிய தலைமுறைகல்வி இதழில் மாணவர்களுக்கு வழிகாட்டும் வெளிச்சம எனும் தலைப்பில் வெளியான கட்டுரையை உங்கள் பார்வைக்காக சமர்ப்பிக்கிறோம்....

நாளு பேருக்கு
நாமும் நல்லது செய்ய இணைவோம்..




உறவுகளே!
       குமுதம் பத்திரிக்கையில் வெளிச்சம் மாணவர்கள் பற்றிய கட்டுரை முடிந்தால் படிச்சி பாருங்க:
நாளு பேருக்கு நல்லது செய்ய இணைவோம்..
வெளிச்சம் விண்ணப்ப படிவம்




"கல்வி இல்லை என்பது ஊனம்தான்!"
                               -நன்றி: அவள் விகடன். 16.1.09


''அன்ன சத்திரங்கள் ஆயிரம் வைப்பதை விடவும் பத்தாயிரம் கோயில் கட்டுவதை விடவும் ஓர் ஏழைக்குக் கல்வி தருவதுதான் உயர்ந்தது'' என்று சொன்னார் மகாகவி பாரதியார்.
அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார் அரியலூரைச் சேர்ந்த செரீன்.
எந்த பள்ளிக் குழந்தையாவது தனது தலைமுறையிலேயே முதன்முதலாகப் பள்ளிக்கு வந்து, நல்ல மதிப்பெண்ணும் எடுத்து, வறுமையால் அந்தப் படிப்பை விட்டுவிடும் நிலையில் இருக்கிறதா? ஆபத்பாந்தவன் போல் அந்தக் குழந்தையின் அத்தனை படிப்புச் செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறது செரீன் நடத்திவரும் 'வெளிச்சம்' அறக்கட்டளை!
கருத்த தேகம்.. தோற்றத்தின் மீது அக்கறையே இன்றி அணியப்பட்ட ஷார்ட் குர்தா.. பேதங்களை உடைத்தெறியும் 'பாய் கட்'.. தாராளமான பேச்சு.. சரளமான ஆங்கிலம்.. இதுதான் செரீன்.
தனது அறக்கட்டளை அலுவலகத்தில் மாணவர்களோடு சேர்ந்து நம்மை கோரஸாக வரவேற்று உபசரித்தவர், மெள்ள தன்னைப் பற்றிப் பேசத் தொடங்கினார்..
''பல தலைமுறையா நாங்க கேரளாவுல செட்டில் ஆன தமிழ்க் குடும்பம். 40 ஏக்கர் டீ எஸ்டேட், பிரமாண்டமான வீடுனு சொத்துக்குக் குறையில்லை. அம்மா ஸ்கூல் டீச்சர். சொத்துக்களை கவனிச்சுக்குறதுலயே அப்பா பிஸியா இருப்பார். அதனால நாலு வயசுல இருந்தே மதுரையில உள்ள ஹாஸ்டல்ல தங்கி ஸ்கூல் படிக்க வேண்டிய நிலைமை. அப்போ அது கஷ்டமாத்தான் இருந்துச்சு. ஆனா, அந்த ஹாஸ்டல் வாழ்க்கைதான் எனக்கு உலகத்தையே கத்துக் கொடுத்தது.


பணக்கார பசங்க படிக்கிற ஸ்கூல் அது. கறுப்பான பொண்ணுனு அப்பவே எல்லாரும் என்னை ஒதுக்கித் தள்ளுவாங்க. மனசுக்குள்ள ஒரு தாழ்வு மனப்பான்மையோட குறுகிப் போய்த்தான் ப்ளஸ் டூ வரைக்கும் அங்க படிச்சேன். அதுக்கப்புறம் காலேஜ் போகக் கூட மனசில்ல. கரஸ்பாண்டன்ஸ்ல பி.ஏ போட்டேன். ஆனாலும் வீட்டுக்குப் போய் சும்மா உக்காரப் பிடிக்கல. மதுரையில ரெண்டு வருஷமா மார்க்கெட்டிங் வேலை பார்த்தேன். வெயில்ல அலைஞ்சு திரிஞ்சு கஷ்டப்படும்போது, 'இதனால சமூகத்துக்கு நாம என்ன செய்யப் போறோம்..'னு தோணும். அதனால மெதுவா மார்க்கெட்டிங் துறையில இருந்து விலகி, சமூக சேவை செய்யிற தொண்டு நிறுவனங்கள்ல வேலை பார்க்க ஆரம்பிச்சேன்.
அப்படி ஒரு தொண்டு நிறுவனத்துல வேலை பார்த்தப்போதான், தமிழ்நாட்டுல உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளைப் பத்தி ஆராய்ச்சி பண்ற வாய்ப்பு கிடைச்சுது. தீண்டாமை, வறுமைனு பல பிரச்னைகள்ல சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்குற ஆயிரக்கணக்கான குழந்தைகளை அப்போ நான் சந்திச்சேன். சக மனுஷனை மனுஷனா பார்க்காத கலாசாரத்தை நேர்ல பார்த்து மிரண்டு போனேன். ஒரு பள்ளிக்கூட ஆசிரியரே தன்கிட்ட படிக்கிற தாழ்த்தப்பட்ட மாணவியைத் தப்பான வார்த்தையில கூப்பிட்டதை காதால கேட்டேன். அதையும் கேட்டுக்கிட்டு இயலாமையோட நின்ன அந்தப் பொண்ணைப் பார்த்தேன். நெஞ்சு கொதிச்சுது.

இதைக் கூட எதிர்க்க துணிச்சல் இல்லாமப் போறதுக்கு படிப்பறிவில்லாததுதான் காரணம்னு தோணிச்சு. 'ஊமை என்றால் ஒருவகை அமைதி.. ஏழை என்றால் அதிலொரு அமைதி'னு பாட்டு வருமே.. அப்படிதாங்க படிப்பில்லைன்னாலும் ஊமை மாதிரிதான். அதுவும் ஊனம்தான். அந்த ஊனத்தைப் போக்கணும்னா படிப்பு வேணும். காசு இல்லைங்கற காரணத்துக்காக கிராமத்துப் பிள்ளைங்க படிப்பை இழந்துடக் கூடாது.. அப்படி இழக்க நான் விடக்கூடாதுனு அன்னிக்கு முடிவெடுத்தேன்'' என்கிற செரீன், இதற்காக தன் சொந்த வீட்டை ஒதுக்கிவிட்டு, தமிழகத்திலேயே தங்கிவிட்டிருக்கிறார்.
''என் உணர்வுகளைப் புரிஞ்சுக்குற ஒருத்தர்.. என்னை மாதிரியே சமூக சேவை நிறுவனங்கள்ல ஆர்வத்தோட பங்கெடுத்துக்குற ஒருத்தரைப் பார்த்தேன். நேசிச்சேன். அவரும் என்னை நேசிச்சார். அம்மாவோட ஆசீர்வாதத்தோட கல்யாணம் பண்ணிக்கிட்டு அவரோட சொந்த ஊரான அரியலூருக்கு வந்தேன். இங்க பருக்கல்ங்கற கிராமம்தான் அவருக்குப் பூர்வீகம். அடிப்படை வசதிகள் கூட இல்லாத அந்த எட்டுக்குப் பத்து வீட்டுல சந்தோஷமா குடித்தனம் நடத்தினேன். ஒரு மகனும் பிறந்தான். இன்னும் சந்தோஷமானேன். ஆனா, கிராமத்துக் குழந்தைகளோட கல்விக்காக ஏதாவது பண்ணணும்ங்கற என்னோட ஏக்கம் குறையல. அதுக்காக ரொம்ப முயற்சிகள் எடுத்து, நான் உருவாக்கின அமைப்புதான் வெளிச்சம்.
என் அமைப்புக்கு ஜாதி கிடையாது.. மதம் கிடையாது.. தன் குடும்பத்துல இருந்து முதன் முறையா படிக்க வர்ற குழந்தைகள் படிக்கணும்.. தங்களால படிக்க முடியிற வரை படிக்கணும். அதுக்கு காசு ஒரு தடையா இருக்கக் கூடாது. இதுதான் என் லட்சியம்னு நினைச்சேன். அதுக்காக எத்தனையோ பேர் கால்ல விழுந்து நன்கொடைகள் வாங்கியிருக்கேன். கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளின அவமானங்களையும் தாங்கியிருக்கேன். அதெல்லாம் எனக்கு வருத்தமே தரலை.
அப்பாவை இழந்து பதினோராம் வகுப்போட படிப்பை நிறுத்திட்டு, முந்திரிக்கொட்டை பொறுக்கிக்கிட்டு இருந்த செந்தில்ங்கற மாணவனுக்கும் எங்க அமைப்பு முதன் முதலா உதவி செஞ்சுது. இன்னிக்கு அவன் கெமிக்கல் இன்ஜினீயரிங் ஃபைனல் இயர் படிச்சிக்கிட்டு இருக்கான். இந்த சந்தோஷமே எனக்குப் போதும்'' என்கிறவர், இந்த சுகத்துக்காக தன் தனிப்பட்ட வாழ்க்கையையே தியாகம் செய்திருக்கிறார்.

''என் கணவர் ஆரம்பத்துல என்னோட எல்லா செய்கைகளையும் ஆதரிச்சார்தான். ஆனா, போகப் போக சமூக சேவையில நான் காட்டின தீவிரம் அவருக்குப் பிடிக்கலை. அதுகூட எனக்குப் பெருசா தெரியலை. சொந்தப் பிள்ளையே அவங்க அப்பாவோட சேர்ந்து என்மேல குறை சொல்ல ஆரம்பிச்சான். ஒரு கட்டத்துல 'வீடா.. சமூகசேவையா?'னு ஒரு கேள்வி வந்திச்சு. 'ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும்'னு ஒரு பழமொழி சொல்லுவாங்கள்ல.. அதை நம்பி மனசைக் கல்லாக்கிக்கிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தேன். இதுவரைக்கும் 'வெளிச்சம்' மூலமா 150 பிள்ளைங்க பயனடைஞ்சிருக்காங்க. அவங்களாவது என்னைப் புரிஞ்சுக்குறாங்களேனு ஆறுதல்பட்டுக்கறேன். என்னிக்காவது என் மகனும் என்னைப் புரிஞ்சுக்குவான். எனக்கப்புறம் என் கனவுகளை சுமப்பான்னு நம்புறேன்'' - மனசைத் தொட்டு முடிக்கிறார் செரீன்.
அந்த வார்த்தைகளின் வெளிச்சம் கண்ணைப் பறிக்கிறது!

-சி.ஆனந்த குமார்



இந்த கட்டுரை அவள் விகடனில் வெளியான கட்டுரை உங்கள் மனக்கதவை திறக்கும் என்கிற நம்பிக்கையில் உங்கள் பார்வைக்காக சமர்ப்பித்தோம்..


 இணைவோம் ..
 விண்ணப்ப படிவம்

கடந்த வாரம் வெளியான புதிய தலை முறை கல்வி இதழில் மாணவர்களுக்கு வழிகாட்டும் வெளிச்சம் என்கிற கட்டுரை வெளியானது.சமூகத்தின் மீது  அக்கறை கொண்ட  அனைவரும் அந்த கட்டுரையை பாராட்டினர். மேலும் அதன் தொடர்ச்சியாக யாருமே எதிர்பார்க்காத வண்ணம் வெளிச்சம் மாணவியான ஆனந்தி அவர்கள் பனிரெண்டாம் வகுப்பு முடித்த பள்ளியில் இருந்து மாணவர் உதவி எண்ணை அழைத்து எங்களின் சந்தோசத்தையும், எங்கள் மாணவி மற்றவர்களுக்கு உதவுவதை நாங்கள் பாராட்டியாக வேண்டும் என்றார் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய மேரி அவர்கள்.

வெளிச்சம் மாணவர்களும் ஆனந்தி மற்றும் ஆனந்தி அவர்களுடன் அவரின் தாய் சுகந்தி அவர்களும் மாணவர்களாலும், அவர் படித்த பள்ளி இப்போதைய ஆசிரியர்களாலும் மனித நேய விருது வழங்கப்பட்டது. பாத்திமா பெண்கள் மேல் நிலை பள்ளி இதுவரை எத்தனையே சாதனையாளர்களுக்கும்,அறிவாளிகளுக்கும் மரியாதை செலுத்தியிருக்கிறது.ஆனால் சமூகத்துக்கு பணியாற்றும் தங்களது மாணவிக்கு பாராட்டி விருதளித்தது இதுவே முதல் முறையாம்..

ஆயிரம் விருதுகள் வாங்கலாம் ஆனால் தாயின் கையால் ஊட்டப்ப்படும் ஒரு பிடி சோறும்..படித்த பள்ளியில் கிடைத்த பாராட்டுக்களும் வார்த்தையால் சொல்லமுடியாத வசந்தம்..

நன்றி: புதிய தலைமுறை கல்வி.... 


School Entrance



velicham Anandhi


Humanity Award




Award received by Anandhi Mother Mrs.Suganthi












Anandhi with Teachers






Anandhi with Teachers


Anandhi with Teachers



Velicaham Anandhi received Humanity award  her old school.

Dear friends

On October 4th 2010 an article published in Puthiya Thalaimurai Kalvi magazine about velicham. After reading the article we have received one invitation from Fatima Higher secondary School Jayankondam that they want to invite Ananthi since she is the old student from that same school 2006 Batch. Now she is working as a volunteer in Velicham. They want to honor her since they have given award to many Educationalist from the same school and officials but this is the first time  they are inviting a social worker.. She and her mother were honored by the principal of that school and she received Humanity Award since she is working for the betterment of poor students. Velicaham Anandh also delivered motivating speech to those students.

புதிய தலைமுறை கல்வி கட்டுரை. உங்கள் பார்வைக்காக: