பிள்ளை பெற்ற பள்ளிகூட மாணவி...

Posted by Velicham Students - -


பாத் ரூமில் பிறந்த பாலகன்
பள்ளிகூடத்துக்கு போனால் படிப்பு வரும் என அனுப்புவைப்பார்கள்.. ஆனால் பிள்ளைபெற்ற மாணவியை பற்றிய சம்பவம் நம் காதில் படும்போது என்னவெல்லாம் தோணுகிறது..... சம்பவத்தை படியுங்கள்... உங்கள் மனதில் எழும் கேள்விகளை பதியுங்கள்... நமது கல்வி பணியில் மாணவர்களுக்கு வழிகாட்ட உதவும்
 மாணவர்கள் ஆசிரியர் மன நிலையை பற்றியதாக இருக்க வேண்டும்....                                                                                          

உளுந்தூர்பேட்டையை அடுத்த சேந்தமங்கலம் காலனியை சேர்ந்தவர் உதயகுமார், விடுதி சமையல்காரர். இவரது மகள் பரணி (வயது 17). உளுந்தூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியின் பிளஸ்-2 மாணவி.
இவர் வழக்கம்போல் காலையில் பள்ளிக்கு சென்றார். சிறிது நேரத்தில் உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்தார். பயந்துவிட்ட ஆசிரியர்கள், பரணிக்கு மயக்கம் தெளிவித்து சில மாணவிகள் துணையுடன் ஒரு ஆட்டோவில் அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் பரணி வீட்டுக்கு செல்லாமல் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். புறநோயாளிகள் பிரிவில் உள்ள கழிவறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டார்.
சிறிது நேரத்தில் அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் கழிவறை கதவை திறந்து பார்த்தபோது பரணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருந்தது தெரிய வந்தது. உடனடியாக தாய்க்கும்-சேய்க்கும் சிகிச்சையளிக்கப்பட்டது. 2 பேருடைய உடல் நிலையையும் டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்த தகவலின் பேரில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் பரணிக்கும், அந்த பகுதி வாலிபர் பாலமுருகனுக்கும் ஏற்பட்ட காதலில் பரணி கர்ப்பமடைந்ததாக தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து பாலமுருகன், பரணியின் குடும்பத்தினரும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பால முருகனுக்கும்,பரணிக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆஸ்பத்திரியில் இருந்து பரணி “டிஸ்சார்ஜ்” ஆகி வந்ததும் திருமணம் நடைபெறும் என்று தெரிகிறது.


நன்றி: மாலைமலர்

Leave a Reply