Showing posts with label காதல். Show all posts



உங்கள் வீட்டில் யாராவது யாருக்கும் தெரியாமல் போனில் திருட்டுதனமாக பேசுகிறார்களா?... இல்லை அவர்களின் நடவடிக்கைகளில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறதா? இந்த கட்டுரையை தவறாமல் படிங்க:

ஒரு வருடத்திற்கு முன்னால் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை சேர்ந்த 17 வயது அனுவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

தன்னுடைய போனுக்கு வந்த  ராங்க் காலை நீங்க யாருங்க என பேச்சி விட்டு ராங்க் கால் என சொல்லிவிட்டு போனை துண்டித்து விட்டார். அதற்கு அடுத்த நாளும் அந்த கால் இவர் துண்டித்து விடுகிறார்.. ஒரு கட்டத்தில் எதிர் முனையில் பேசிய நபர் நைசாக பேசி… அந்த பெண்ணை காதலிப்பதாக சொல்லியிருக்கிறார். காதல் கண்ணை மறக்கும் என்பதுபோல் பெற்றவர்களின் கண்ணீரை மறைந்து விட்டு ராஜுடன் போனில் பேசினார்.

ஒரு கட்டத்தில் உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை எனும் நிலைக்கு தள்ளப்பட்ட அனு, வீட்டில் இருப்பது கஸ்டமாக இருக்கிறது நீ வந்து என்னை பொண்ணு கேளு என சொல்ல, எங்க வீட்டில் ஒரே கொஞ்சம் பிரச்சனையா இருக்கு, வேணா நீ வந்துடு நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு காப்பாத்துறேன் என்னை நம்பி வா என அழைக்க, காதலன் பேச்சில் மயங்கிய அனு வீட்டை விட்டு வந்து விடுகிறார்…..
  1. ·         காதலியாக இருந்து விபச்சாரியாக மாற்றப்பட்ட  அனு அனுபவித்த கொடுமை……..
  2. ·     இப்படியே பல பெண்களை சீரழித்த 9 பேரை கைது செய்ததன் பின்னனியில் வெளிச்சம் ….
  3. ·         செல்போனால் சீரழியும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை காப்பாற்ற என்ன செய்ய போகிறோம்


தொடர்ந்து பார்க்க: புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளியான பதிவை..


நன்றி; புதிய தலைமுறை மற்றும், ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் நடந்தது என்ன குழுவினருக்கும்

                                                    -வெளிச்சம் நந்தினி


''தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டு இருக்கும் ஆய்வு அறிக்கை ஒன்று, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 'இந்திய அளவில் கடந்த ஆண்டில் மட்டும் 7,379 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகவும், சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் மனஉளைச்ச லால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும்’ சொல்கிறது அந்த அறிக்கை. 

2011-ம் ஆண்டு இணையதளப் பயன்பாடு குறித்துச் செய்யப்பட்ட ஆய்வில், உலக அளவில் இந்தியாவும் மாநில அளவில் தமிழகமும் முதலிடத்தில் உள்ளன. மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் மாணவர்களால் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை செக்ஸ் என்பது தான்'' இதுபோன்ற அதிர்ச்சிகளை அடுக்கிக் கொண்டே போகிறார்  'வெளிச்சம்’ என்ற அமைப்பை நடத்திவரும் ஷெரின். 'மாணவர்களே காதலியுங்கள்’ என்ற வித்தியாசமான புத்தகம் மூலம் இளைய தலைமுறையினரின் கவனத்தை ஈர்த்திருக்கும் அவரிடம் பேசினோம்.
''படிப்பைவிட, பாலியல் பிரச்னைதான் பெரும்பாலான மாணவர்களுக்குச் சிக்கலாக இருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழகத்தின் பல பள்ளிக்கூடங்களில் நடந்த மருத்துவப் பரிசோதனையில், 320 மாணவிகள் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. முகமே தெரியாத ஒருவரை விரும்பும் காதல், புத்தகத்தோடு கர்ப்பத்தையும் சுமக்கும் மாணவிகள், காதல் என்றால் என்னவென்று புரியாமல், அதில் தோல்வி கண்டு தற்கொலைக்கு ஆளாகும் மாணவிகள் என்று தினமும் பல சம்பவங்கள் நம்மைச் சுற்றி நடந்துகொண்டே இருக்கின்றன.

புரிதல் இல்லாத குழந்தைகளுக்கு உதவி செய்வதற்காகவும் வசதி இல்லாத குழந்தைகளைப் படிக்க வைக்கவும் ஹெல்ப் லைன் ஆரம்பித்தோம். அதில் 90 சதவிகிதம் மாணவர்கள் காதல் சந்தேகங்களைத்தான் தயங்கித் தயங்கிக் கேட்கிறார்கள். 'எனக்கும் என் காதலிக்கும் சண்டை. நான் ஐ-பாட் கேட்டும் தரவில்லை என்றதால் காதலியைக் கைகழுவி விட்டேன்’ என்று கேஷ§வலாகச் சொல்கிறார்கள்.

ஒரு மாணவி தன் மாமாவுடன் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத சென்னைக்குச் சென்றாள். ரூம் எடுத்துத் தங்கி தேர்வுக்குப் புறப்பட்டாள். தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவி டி.வி. பார்க்க உட்கார, அதில் ஆபாசப் படம் ஓடுகிறது. 'என்ன மாமா அசிங்கமா இருக்கு’ என்று வாயைத் திறக்கும்முன் இழுத்து அணைத்த மாமா, பாலியல் தொந்தரவு செய்கிறார். தப்பித்து வீடு வருகிறார் மாணவி. அம்மாவிடம் நடந்ததைச் சொல்ல நினைப்பதற்குள், 'இப்போதான் மாமா போன் செஞ்சார். பஸ் ஏத்திவிட்டேன். பத்திரமா வந்தாளான்னு அக்கறையா விசாரிச்சார். உன்மேல மாமாவுக்குத்தான் எத்தனை அக்கறை’ என்று தன் அண்ணனை மெச்சுகிறாள் அந்தத் தாய். தனக்கு நேர்ந்த கொடுமையை அம்மாவிடம் சொல்ல முடியாமல்... அப்பா விடமும் பேச முடியாமல் தனக்குள் புழுங்கித் தவிக்கிறாள். இது ஒரு சாம்பிள்தான்... இப்படி நிறையவே நடக்கின்றன.
காதல், செக்ஸ் பற்றிப் பேசக்கூடாது என்று பெற்றோர் நினைக்கின்றனர். அதைப்பற்றி விவாதிக்கவே கூடாது என்று கல்விநிறுவனங்கள் கருதுகின்றன. பாலியல் கல்வி தரமறுக்கும் சமூகத்தில்தான் அந்தரங்க ரகசியங்களைச் சொல்லும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பகிரங்கமாக ஒளிபரப் பாகின்றன. அப்பாவும் அம்மாவும் கற்றுத்தராத சாட்டிங், காதல் பாடங்களை மாணவர்கள் ஊடகங்கள் மூலமாக தாங்களாகவே கற்றுக்கொள்கிறார்கள். 'அவன் நல்லவன் என்று நம்பி ஏமாந்துவிட்டேன். நான் சாகப்போகிறேன்’ என்று, தற்கொலைக்கு முயற்சி செய்த ஏராளமான மாண விகளை எனக்குத் தெரியும்.
இந்தச் சூழலில் சிக்கிய மாணவிகள், தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். தானாகவோ, நண்பர்கள் மூலமோ பெற்றோரிடம் நடந்ததைச் சொல்லவேண்டும். பாலியல் தொந்தரவை நினை த்து வலிகளோடு, மனஅழுத் தத்தில் வாழ்வதைவிட அநீதியை எடுத்துச் சொல் வதில் தவறில்லை. அத னால் மாணவ-மாண விகளுக்கு பாலியல் குறி த்த புரிதல் தேவையாக இரு க்கிறது. பிரச்னைகளை எப்படிக் கையாள்வது என்பதையும் அவர்களுக்குச் சொல்லித்தரவேண்டும்.

பள்ளிகளில் நீதிவகுப்புகள் எடுத்தால் மட்டும் போதாது. பிரச்னைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்ற சுயஆராய்ச்சியை வளர்த்தெடுக்கவேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சினிமா போன்றவற்றில் சித்தி ரிக்கப்படும் பாலியல் தூண்டல்களையும், பழிக்குப்பழி வாங்கும் உணர்வுகள் பற்றியும் விவாதத்துக்கு உட்படுத்தினால் அதைப் பின்பற்ற மாட்டார்கள். மாணவர்களுக்கு பாலின ஈர்ப்பு, ஹார்மோன்கள் செயல்பாடு, தொடுதல், நட்பு, காதல் பற்றி புரிகிற மாதிரி பக்குவமாக விளக்கவேண்டும். காதல் என்பது ஒரு ஆண், பெண்ணைக் காதலிப்பது மட்டுமல்ல. தேசம், மொழி மீது செலுத்தும் அன்பும் காதல்தான் என் பதை மாணவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

'உன்னை நீயே காதலி, உன் திறமை களைக் கண்டுகொள்வாய். அறிவைக் காதலி, புத்தகங்களில் இடம் பெறுவாய். பெற்றோரைக் காதலி, பாசத்தைக் உணர்வாய் இயற்கையைக் காதலி, தலைமுறை உன்னை வணங்கும். தேசத்தைக் காதலி, வரலாறு உன்னைப் போற்றும்... என்று சொல்லிக் கொடுக்கவேண்டும். பெற்றோரும் ஆசிரி யர்களும் கல்வியைத்தாண்டி கவனம் செலு த்தினால் பிள்ளைகள் வாழ்வு பாழாகாது'' என்கிறார் அக்கறையுடன்.

பெற்றோர்களும், ஆசிரியர்களும் முதலில் இதைக் கற்றுக்கொள்ள வேண்டும்!

-க.நாகப்பன் படம்: வீ.நாகமணி 

நன்றி: ஜூனியர் விகடன்.17.3.12





உறவுகளே!

உலக காதலர்தினத்தன்று  வெளிச்சம் ஷெரின் அவர்கள் எழுதிய
 "மாணவர்களே காதலியுங்கள்" எனும் புத்தகத்தை கல்லூரி மாணவர்களும், பெற்றோர்களும் வெளியிடுகிறார்கள்....

மாணவர்களுக்குள் எழும் கேள்விகளுக்கு இந்த புத்தகத்தின் ஏதாவதொரு பக்கத்தில் தீர்வு இருக்கக்கூடும்,  அது போல் இந்த புத்தகத்தால் கிடைக்கும் பணம் எங்களைப்போன்ற ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவக்கூடும்...

ஆகையால் நீங்கள் நிச்சயம் விழாவில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்... அதைப்போல் இந்த தகவலை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்....

ஏனெனில் இது நமக்கான விழா..

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்..

இடம்: சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றம்,
நேரம்: காலை 11 மணியளவில். 14.02.11



 21.09.11  அன்று ஜெயா தொலைக்காட்சியின்  காலைமலர் நிகழ்ச்சியில்  வெளிச்சம் அமைப்பின் இயக்குனர்   வெளிச்சம் செரின் அவர்களின் நேர்காணல் ஒளிபரப்பானது.. நிகழ்ச்சியில்  பேசிய செரின் அவர்கள்  மாணவர்கள் உளவியல் மற்றும் செக்ஸ் சார்ந்த     பிரச்சனைகளை பற்றி  பேசினார்.. குறிப்பாக 
  • ஏன் படிக்கும் வயதில் பிள்ளைகளுக்கு  காதல் வருகிறது
  • பெற்றவர்களை ஏன் பிள்ளைகள் வெறுக்கிறார்கள்    
  • மாணவர்களுக்கு செக்ஸ் கல்வி அவசியமா?   

 1போன்ற மாணவர்கள் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியை  பார்த்த  நிறைய நண்பர்கள் நம்மை தொடர்பு கொண்டு வாழ்த்தினர்.  நிறைய பேர் பார்க்க முடியவில்லை என்று வருத்தப்பட்டார்கள்.  ஒரு நண்பர் பதிவேற்றியிருக்கிறார் என  தகவல் கிடைத்தது அவருக்கு நன்றி சொல்லி கொள்கிறோம்..

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்





Tomorrow (21.09.11) Velicham sherin interview telecast in Jaya tv - Kalai malar Program. this program discussed about psycho- social problems and sex affair of the students




              ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக மட்டும் பாடுபடுவதுதான் வெளிச்சம் மாணவர்களின்   நோக்கம் மட்டுமல்ல. குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என  பல பகுதிகளான சமூகத்தின் உறவுகளோடு இணைந்து சமூக மாற்றத்திற்கு பாடுபடவேண்டும் என்பதுதான்  நமது  லட்சியம். விழுப்புரம் மாவட்டத்தில்  வெளிச்சம் மாணவர்கள்  பல்வேறு கல்லூரி மாணவர்களை சந்திக்கும்  வாய்ப்பு விழுப்புரம் நகராட்சி வாயிலாக கிடைத்து  50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட நிகழ்வி கலந்துரையாடல் 


பெயர்களை மாணவர்கள் நலன் கருதி குறிப்பிடாமல் பதிவு செய்கிறோம்…


           மணவர்களை நோக்கி,  நீங்க உங்க வாழ்க்கை லட்சியமென்ன என வெளிச்சம் செரின் அவர்கள் கேட்க: அழகான பொண்ணை  பார்க்கனும் காதலிக்கணும், சந்தோசமா இருக்கணும் வாழ்க்கை பூரா என்ஜாய் பண்ணனும் அவ்வளவுதான் வாழ்க்கை என்றனர் மாணவர்கள்..

மீண்டும் செரின் அவர்கள் நீ கல்யாணம் பண்ணிக்க போற பெண்ணு எப்படி இருக்கனும் என்ற கேள்வியை முன்வைத்தார்,

                              கண்ணு அழகா இருக்கணும், அவளை பார்த்துக்கிட்டே இருக்கணும், சும்மா கலரா நச்சுன்னு இருக்கணும் என்றார் ஒரு மாணவர். அவனை மடக்கி  நீங்க  காதலிக்கிறீங்களா என்றார் செரின் விடாது. ஆமாம் அக்கா  நான் 8 ம் வகுப்பு படிக்கும் போதுதான் காதலிக்கணும்னு தோணுச்சி, அப்ப ஒரு பிகரை பார்த்தேன் பிடிச்சிருந்துச்சி காதல சொன்னேன், காதலிச்சோம் வீட்டுல பிரச்சனையாச்சி அவ பெத்தவங்க பேச்சை கேட்டுட்டு என்னை மறந்துட்டு போயிட்டா, கொஞ்ச நாள் அவளோட நினைப்பா சுத்திக்கிட்டு திரிஞ்சேன், இதை பார்த்துட்டு  வேற ஒரு பொண்ணு என்னை காதலிக்கிறன்னு, அவளா! வந்து சொன்னா, நானும் முதல்ல  வேணாம்னு சொன்னேன் பிறகு ஒரு  பொம்பல புள்ளையே நம்மல பிடிக்கும் சொல்லும் போது நாம வேணாம்னு சொன்னா நம்மல அந்த பொண்ணு என்ன நினைக்கும் சரி விடு,விட்டுடு போனவள விட்டுத்தள்ளு, வர்றது வரவுன்னு நானும் ஒத்துக்கிட்டேன்.. காதலிச்சோம் சந்தோசமா இருந்தோம்.  நாம கல்யாணம் பண்ணிக்கிலாமான்னு கேட்டேன், அவ என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது நான் உன்னை காதலிச்சேன் அவ்வளவு தான்னு சொல்லிட்டாள்  அப்புறமென்னக்கா இப்போ இன்னொரு பொண்ணுக்கு ரூட் போடுறேன் பிக்கப் ஆக மாட்டங்குது.. எத்தனை முறை தோற்றாலும் காதல் ஒரு வகையான சுகம் அதனால தான் காடஹ்லிச்சி கல்யாணம் பண்ணனும்  விரும்புறேன்… பிகரோட கண்ணப்பாத்து பேசுற சுகமிருக்கே அது தனி சுகம் அதுக்காக தான்என்ன மாதிரி  எல்லா பசங்களும் ஏங்குறாணுங்க என்றான்..


அடுத்ததாக பேசிய மாணவர்கள் தனக்கு வர்ற மனைவி அல்லது காதலி எப்படி இருக்கனும் என்கிற கேள்விக்கு  மீனா மாதிரி கண்ணு இருக்கணும், அழகா இருக்கனும்.  நச்சினு இருக்கனும்,  நாட்டு கட்டையா இருக்கணும் என்றார்கள் வாலிப வயசு கனவுகளோடு….  
                                                                          
இதே கேள்வியை  மாணவிகளிடம் (தங்களுக்கு வரபோகிற  கணவர் அல்லது காதலன் எப்படி இருக்கனும்) கேள்விக்கு கேட்டோம்…
                        நல்லவரா இருக்கணும், நல்ல கேரக்டரா இருக்கணும், சந்தோசமா வச்சிருக்கரவரா இருக்கணும் என்றார்கள் மிக பொறுப்புடன், மைக்கை வாங்கிய அந்த பொண்ணு, அக்கா நாளுனாள் நம்ம பின்னாடி சுத்துறாங்க   நாங்க பிடிக்களைன்னா அவ நல்லவ இல்லைண்ணு சொல்லுறது எந்த விதத்துல நியாயம் அக்கா?, பொண்ணுங்க நாளுபசங்கள்கிட்ட பேசினா பல் இழிக்கிறாங்கண்ண்னு சொல்லுறதும் ஏன்னு தெரியல, நாளு நாள்  நல்லா பேசினா அஞ்சாவது நாள் ஐ லவ் யூ சொல்லுறீங்களே ஏன்..எங்களுக்கு பிடிச்சா பிடிச்சிருக்குண்ணு சொல்லுவோம் இல்லைன்னா பிடிக்கலைண்ணு தானே சொல்ல முடியும்,கம்பல் பண்ணுனா காதல் வராது...வெறுப்புதான் வரும் என்றார் தன்னை கம்பல்பண்ணியவர் கூட்டத்தில் இருந்தவருக்கு பதிலளித்தவராக…

இதற்கு பதிலளித்த வெளிச்சம் செரின்:
காதலிக்ககூடாதுண்ணு சொல்லலை அப்பா, அம்மா காசுல காதலிக்ககூடாதுண்ணுதான் சொல்லுறேன். பிள்ளை படிக்கிதுண்ணு  கனவுகாணுகிற அம்மா, அப்பாவுக்கு என்ன தர போறீங்க… கண்ணீரையா?  தெரியாம கேட்குறேன் கண்ணு பிடிச்சிருக்கு வாய்பிடிச்சிருக்கு,அது பெருசா இருக்குன்னு சொல்லுறீங்களே.. கொஞ்சம்  கண்ணமூடி மீனா மாதிரி கண்ணை இன்னும் உற்று பாருங்க.. வெறும் சதையா,ரத்தமா இருக்கும். நீங்க சதைக்க்கு ஆசை படுறீங்களா...இல்ல?  என்று பேசி முடித்தார்..

இறுதியாக:



அனைவரின் பேச்சை உன்னிப்பாக கவனித்த ஒரு மாணவன் நிகழ்ச்சி எப்படி இருந்து என பேசுவதற்காக மைக்கை வாங்கினான், வார்த்தைகளை மீறி கண்ணீர்   தழும்பி வெளியேறியது..  அனைவரும் கூர்மையாக கவனிக்க ஆரமித்தனர் கூட படித்தவரின் குரலை கேட்க, நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதிருந்தே ஒரு பொண்ணை காதலிச்சேன், நான் தொட்டது கூட இல்லை, நான் பன்னிரெண்டாம் வகுப்புல கம்மியான மார்க்கு எடுத்தேன், அவ பாண்டிச்சேரியில காலேஜ் படிக்கிறா, அவ என்னை பாக்குறதில்லை, அப்ப தான் என்னோட பிரண்ட்ஸ் சொன்னாங்க,  நான் இத்தனை வருசமா காதலிச்சும் அவளை ஒரு முறை கூட தொடலையாம் அதனால நான் ஆம்பளையே இல்லைன்னு சொன்னாளாம்.. பிரட்ண்ஸ் காதலிக்கும் போது தொட்டு பேசரது பேசனா இருக்கலாம், ஆனா அது நாகரீகமில்ல பிரண்ட்ஸ், அவளுக்காக நான் வீணடிச்ச காலத்த நினைச்சாதான் தானா அழுகைவருது, நான் சந்திச்ச சம்பவத்தை நான் சொல்லனுமுனு தோணுது பிரண்ட்ஸ்.. நாளுவருசத்துக்கு முன்ன வளவனூர்க்கு போர வழியிலயே இருக்குற சவுக்கு காட்டுல இருந்து என்னோட பிரண்ட் போன்பண்ணி அவரசரமா சொன்னான்.. பதறிபோய்  பைக்ல போனேன்.. அங்க போனதும் தான் தெரிஞ்சது அவன் அவன் லவ்பண்ணுற பொண்ணோட அங்க போயிருக்கான், அவங்க  இரு ந்த இடத்துக்கு  வந்த  ஆறு பேர் அவனையும், உதவிக்கு போன என்னையும் பிடிச்சிக்கிட்டாங்க, அந்த பொண்னையும் எங்களோட கண்ணுமுன்னாலயே கெடுத்தாங்க,எவ்வளவே கதறினோம் விடலை, இப்ப அவங்க எங்க இருக்காங்கண்ணே தெரியல ஆனா நிச்சயமா உயிரோட இருக்கமாட்டாங்க, ஏன்னா சம்பவத்தை நேர்ல பாத்ததுனால  சொல்லுறேன்.. காதலிக்கும் போது தெரிஞ்சோ தெரியாமலோ தப்புமட்டும் பண்ணிடாதீங்க என கையெடுத்து கும்பிட்டான் அந்த  மாணவன்..

ஒரு பையன் எத்தனை பொண்னை காதலிச்சோம் என்பதும், ஒரு பொண்ணு எத்தனை பையன்கள தன் பின்னால சுத்தவிட்டிருக்கு என்பதும் பந்தாவா இருக்கலாம்.. ஆனால் உருப்படியா பெற்றோரின் கண்ணீரை துடைக்க என்ன செய்தோம்  என்பது தான் மாணவர்களின் தலையாய கடமை…