பொதுத்
தேர்வை எழுதவுள்ள மாணவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு!
இந்தப் பதிவு குறிப்பாக அரசுப் பொதுத் தேர்வை எழுதவுள்ள மாணவர்களின்
பெற்றோர்களின் கவனத்திற்கு!
அரசுப் பொதுத் தேர்விற்கு இன்னும் ஓரிரு மாதங்கள் தான் உள்ளது.+2 மாணவர்களுக்கு மார்ச் 8 ஆம் தேதியும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 4
ஆம் தேதியும் தேர்வு ஆரம்பமாக உள்ளது.சரியாகப் படிக்காத மாணவர்களும்
இந்த தேர்விற்கு பல முயற்சிகளை செய்து படிப்பதற்கு ஆர்வத்துடன் தயாரகுவார்கள்.
இப்படி இருக்கையில் மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்களை படி,இன்னும் தேர்விற்கு 2 மாதம்
தான் உள்ளது என்று அறிவுரை என்ற பெயரில் நச்சரிக்க தொடங்கி அவர்களை
பயமுறுத்துகின்றனர். இதனால்
மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி பதட்டமடைகின்றனர்.
பொதுத் தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்கு பெற்றோர்கள் கொஞ்சமாவது சுதந்திரம்
கொடுக்க வேண்டும். ஏன்? என்றால் அப்பொழுது தான்
அவர்களின் தேர்வு பயம் நீங்கி இயல்பான மனநிலை கிடைக்கும். அதனால் அவர்களுக்கு
தானாகவே படிப்பதற்கு ஆர்வம் வரும். ஆனால் பெற்றோர்கள் இப்படி செய்யாமல்
மாணவர்களுக்கு சிறிது நேரம் கூட சுதந்திரம் அளிப்பதில்லை.
இந்த நேரங்களில் ஒரு மாணவன் தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டி
அல்லது செய்திகள் போன்றவற்றை பார்ப்பதற்கும் பெற்றோர்கள் தடை விதிக்கின்றனர்.
பள்ளி முடிந்து மாலை நேரத்தில் சோர்வாக வீடு திரும்பும் மாணவர்களை குறைந்த்து
2 மணி நேரம் கூட பெற்றோர்கள் விளையாட விடுவதில்லை. மாறாக
வீட்டிற்க்கு வந்ததும் புத்தகத்தை எடுத்து படி என கட்டாய படுத்துகின்றனர்.
8 மணி நேரம் பள்ளியில் படித்து விட்டு வீட்டிற்கு வந்ததும்
மீண்டும் புத்தகத்தை எடுத்துப் படி என்றால் அந்த மாணவர்களின் மனநிலை எப்படி
இருக்கும்? என்று பெற்றவர்களே யோசித்து பாருங்கள்!
அதற்காக மாணவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்க சொல்லவில்லை.அவர்கள் படிக்கும்
போது கொஞ்சமாவது அவர்களுக்கு பிடித்த நிலையில் சுதந்திரம் கொடுக்க வேண்டும்.
மாணவர்கள் பயன்படுத்தும் செல்போன்களையும் பெற்றோர்கள் பிடுங்கி வைத்துகொண்டு
படி படி என்று நச்சரிப்பதால் மாணவர்களின் கவனம் எல்லாம் அந்த செல்லின் பால்
இருக்குமே தவிர படிப்பில் இருக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .
செல்போன் பயன்படுத்தும் மாணவனாக இருந்தால் அவனிடம் அழகான முறையில் பேசி
படிப்பின்பால் பணிய வைக்க வேண்டுமே தவிர கடுகடுத்து காரியத்தை கெடுத்து விட கூடாது
.என்பதை கவனத்தில் கொண்டு பெற்றோர்கள் செயல்படவேண்டும்.
இணையம் வசதியில்லாத செல்போனாக இருந்தால் பள்ளிவிட்டு வரும் மாணவன் ஒரு மணி
நேரமாவது செல்போனை உபயோகப்படுத்த அனுமத்திக்லாம்.
பெற்றோர்கள் இப்படி கொஞ்சம்,கொஞ்சம் பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி வழிவகை செய்தால் தான் படிப்பில்
ஆர்வம் ஏற்படும்.
பெற்றோர்களே! உங்களுடைய பிள்ளைகள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி
பெற நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும்.அதற்க்கு பெற்றோர்களாகிய நீங்கள் ஓரளவாவது
உங்கள் பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுத்தால் வெற்றி நிச்சயம்!!