பள்ளி மாணவர்கள் நடத்திய 'மன்மதலீலை’யால் பலியான திலகவதி - பெற்றோர்களே! உஷார்

Posted by Velicham Students - -


வெளிச்சம் மாணவர்கள் வலைபூ வாசகர்களே!

நாங்கள் கடந்த 7 வருடமாக ஏழைகளுக்கான கல்விப்பணியோடு தமிழகத்தின் பல்வேறு பள்ளி- கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கான பாலியல் மற்றும் உளவியல் தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்தி மாற்றத்தை ஏற்படுத்தி வருவதை வலைபூ வழியாக தாங்கள் அறிவீர்கள் ஆனால் கீழே நீங்கள் படிக்க போகும்  சம்பவம் எமது 7 ஆண்டு வேலைக்கு சவால் இந்த மண்ணில் சீரழிந்து போகும் மாணவனையும் எமக்கான அவமானம்...

இந்த சம்பவம் எம் தூக்கத்தை கலைத்தது, வலியால் துடித்து போனோம், பெற்றோர்கள் ஆசிரியர்கள் எப்படி இருக்க்கூடாது என்பதற்கு இந்த சம்பவம் 
ஒரு பாடம்..


    வயசுக் கோளாறு, பெற்றோர் - ஆசிரியர்கள் கவனிப்பு இன்மை காரணமாக டீன் ஏஜ் மாணவ, மாணவிகள் நடத்திய 'மன்மதலீலை’யால் ஓர் உயிர் பலியாக, பலரது வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டியை அடுத்த பாதிரிவேடு கிராமத்தில் அரசினர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் ப்ளஸ் டூ மாணவர்கள் ஐந்து பேரும், ப்ளஸ் ஒன் மாணவிகள் இருவரும் நட்போடு பழகி இருக்கிறார்கள். இந்த நட்பு அளவுக்கு மீறி, 'விபரீத’ எல்லைக்குள் நுழைந்திருக்கிறது. கடந்த 17-ம் தேதி சனிக்கிழமை பள்ளி விடுமுறை. ஸ்பெஷல் கிளாஸ் என்று பொய் சொல்லிவிட்டு பள்ளிக்கு வந்த ஏழு பேரும், எசகுபிசகான பாடம் படித்திருக்கிறார்கள். அதனை அவர்களில் ஒரு மாணவன் செல் போனில் படம் பிடித்தும் வைத்துள்ளான். பேச்சுவாக்கில், அந்தப் படங்களை சில மாணவர்களிடம் காட்டி இருக்கிறான். அது மற்றவர்களுக்கும் பரவிப் பரவி, இன்டர்நெட் வரை படம் போயேவிட்டது.


உடனே, தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவி கள் அத்தனை பேரையும் பள்ளியை விட்டு நீக்கியுள்ளார். இந்த விவகாரத்தில் சிக்கியவர்களில் செதில்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திலகவதியும் ஒருவர். அவர், 21-ம் தேதியன்று தனது வீட்டில் பிணமாக தொங்கினார். 'ஆபாசப் பட விவகாரத்தால்தான் மனமுடைந்து திலகவதி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணமாக ஐந்து மாணவர்களையும் கைது செய்ய வேண்டும்’ என்று, மாணவியின் பெற்றோரோடு சேர்ந்துகொண்டு, ஏரியாவாசிகளும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அதனால், தற்கொலைக்குத்தூண்டியதாக ஐந்து மாணவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்த பாதிரிவேடு போலீஸார், கங்கா, சுமன், கார்த்திக் என்ற மூன்று மாண வர்களைக் கைது செய்தார்கள். தங்கராசு மற்றும் செல்வகுமார் ஆகிய இருவரும்  தலைமறைவாகி விட்டார்கள். இந்த நிலையில், வடக்கு மண்டல ஐ.ஜி-யான சைலேந்திரபாபு ஸ்பாட்டுக்கே வந்து விசாரணை நடத்த, திலகவதி மரணத்தில் திகில் திருப்பம்.

'திலகவதியை அவரது சித்தப்பா ஹரி கொலை செய்து விட்டார்’ என்று அறிவித்திருக்கும் பாதிரிவேடு போலீஸாரிடம் விசாரித்தோம். ''திலகவதியின் மரணம் பற்றி தகவல் அறிந்து நாங்கள் ஸ்பாட்டுக்குச் சென்றபோது, அவரது பிணம் கீழே இறக்கி வைக்கப்பட்டு இருந்தது. அப்போதே எங்களுக்கு சந்தேகம். ஸ்பாட்டுக்கு வந்து விசாரணை நடத்திய ஐ.ஜி. சைலேந்திரபாபு, 'இது தற்கொலையாகத் தெரியவில்லை. நன்றாக விசாரியுங்கள்’ என்று அறிவுறுத்திவிட்டுச் சென்றார். அதனையடுத்து திலகவதியின் உறவினர்களிடம் கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. குமார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த.... உண்மை வெளிவந்தது.

'குடும்பத்துக்கே பெரிய அவ மானத்தை ஏற்படுத்தி விட்டார் திலகவதி என்று, அண்ணி பத்மாவதி அழுதார். அதனால், இந்தக் களங்கத்தைத் துடைக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை. சம்பவத்தன்று அண்ணன் வீட்டுக்குச் சென்று திலகவதியிடம் விசாரித்தேன். ஏதேதோ சொல்லி மழுப்பினார். ஆத்திரத்தில் ஓங்கி அடித்தேன். மயங்கி விழுந்து விட்டார். வீட்டில் இருந்த புடவையால், கழுத்தை இறுக்கிக் கொலை செய்தேன். பின்னர், மின் விசிறியில் பிணத்தை தொங்கவிட்டுவிட்டு கிளம்பி வந்துவிட்டேன்’ என்று வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார் ஹரி. இந்தக்
கொலைக்கு உடந்தையாக இருந்த காரணத்தால் திலகவதியின் அம்மா பத்மாவதியையும் கைது செய்திருக்கிறோம்'' என்று சொன்னார்கள்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜி டம் பேசினோம். ''இந்த ஐந்து மாணவர்களும் செய்த அடாவடி  அதிகம். நான் இந்தப் பள்ளிக்கு வந்தே நான்கு மாதங்கள்தான் ஆகிறது. இந்த ஐந்து மாணவர்களையும் பலமுறை பள்ளியை விட்டு துரத்தி இருக்கிறேன். பின்னர், மன்னிப்புக் கடிதம் கொடுத்து சேர்ந்து விடுவார்கள். சரி... இன்னும் நாலு மாசத்துல ப்ளஸ் டூ முடிச்சுட்டுப் போயிடுவாங்க... வாழ்க்கையைக் கெடுக்க வேண்டாம் என்று நினைத்துதான் விட்டு வைத்தேன். ஆனால், அதற்குள் இப்படி நடந்து விட்டது'' என்றார் வருத்தமாக.

முதன்மைக் கல்வி அலுவலர் மோகன் குமாரை சந்தித்தோம். ''குறிப்பிட்ட ஐந்து மாணவர்களும் கடந்த ஆண்டும் இதேபோன்று ஒரு பாலியல் புகாரில் சிக்கினார்கள். அப்போதே டி.சி. கொடுத்தோம். பின்னர், மாணவர்களின் பெற்றோர் மன்னிப்புக் கேட்டதால் மீண்டும் பள்ளியில் சேர்த்தோம். திருந்தி விடுவார்கள் என்று நினைத்தோம், ஆனால், இந்த அளவுக்குக் கெட்டுப் போய், தீராத அவமானத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். மாணவர்கள் செய்யும் தவறுகளை ஆசிரியர்கள் சுட்டிக் காட்டிய பிறகும், பெற்றோர் பொறுப்பு இல்லாமல் இருந்திருக்கிறார்கள். இனி, பள்ளிகளில்  கண் காணிப்பை தீவிரப்படுத்துவோம்'' என்றார்.

இந்த விவகாரம், பருவ வயதில் குழந்தைகளை வைத்திருக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் பாடம்!நன்றி: ஜூனியர் விகடன் - 28.12.11
_____________________________________________________________________________________________
Summary :


Thiruvallur District, Taluka kummitippunti,patirivetu to the government secondary schoolstudents in five, girls are getting together with friends. This friendship is overloaded, sex goes up, a few days ago, a special class that parents lied to me, the school hall to go where the students at ease sexually,The scenes recorded on mobile phone by students and that sex videos publishing on the Internet, the problem was issue leakage on parents, in this matter knowing  the student  THILAGAVATHI.S Uncle Hari, Harry killed her in rage,So he and other students were arrested by police

Leave a Reply