Showing posts with label Velicham sherin. Show all posts
இந்த பிரச்சனையை பற்றி நாங்கள் எதையும் எழுத போவதில்லை... இதை பாருங்கள் வலிகள் நிறைந்த வேதனை உங்களுக்கு தெரியும்.. உங்கள் வீட்டில் யாராவது ரகசியமாக போன் பேசுகிறார்களா......... உடனே கவனியுங்கள்...
சரி: வீடியோ, பத்திரிக்கை செய்திகளை பாருங்கள்..
நன்றி: புதிய தலைமுறை தொலைக்காட்சி
நன்றி: விஜய் டிவி நடந்தது என்ன
வெளிச்சம் மாணவர்களின் வணக்கங்கள்,
இன்று வெளியான குமுதம் சிநேகிதி இதழின் 12ம் ஆண்டு சிறப்பிதழில் வெளிச்சம் அமைப்பின் குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது.. இந்த கட்டுரையை படித்து பாருங்கள், எமது பணி குறித்து விமர்சியுங்கள்….
ஏனெனில் இது எங்களுக்கான பணியல்ல சமூகத்திற்கானது
விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது
எதிர்பார்ப்புடன்
வெளிச்சம் மாணவர்கள்
மற்றவர்களுக்கு நல்லது செய்ய நினைப்பவரா நீங்கள்!
ஜொஞ்சம் கிளிக் செய்யுங்கள் :.................................................................................
கோகுலம் கதிர்
மாத இதழ் மே மாத இதழில் வெளியான பாலியல் கல்வி கிடைக்காததால் பாழாகும் மாணவர்கள் எனும்
தலைப்பில் வெளியான கட்டுரையை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்..
தமிழகத்தில் உள்ள
மாணவர்கள் படும் பாட்டை விளக்கிய கட்டுரையில் பட்டணத்து மாணவர்களை விட கிராமத்து மாணவர்கள்
அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. குறிப்பாக பல மாணவிகளை ஆசிரியர்களும், பெற்றெடுத்த
அப்பாவுமே கற்பழித்த கொடுமை அரங்கேறியுள்ளது எனும் கொடுமையை வெளிக்கொண்டு வந்த கட்டுரையை
சமர்ப்பிக்கிறோம்..
நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்
இங்கே கிளிக் செய்யுங்கள்: ...........................................................................
Deterioration of sexual education for students
(Our President Velicham Sherin interview on GOKULAM KATHIR monthly magazine)
Gokulam Monthly Magazine, published in the May issue of sexual education for radiation because of the deterioration of the students are entitled to your view, published in the article ..
The deterioration of the students explained in this article, this problem than urban students, rural students is said to suffer the most. Spoiled, especially by teachers, students, dad raped daughter to uncover a great many have read the article ..
With thanks
Velicham Students
இன்று (12.5.12) வெளியான தினமலரின் பெண்கள் மலர் பத்திரிக்கையில் மாணவர்களுக்கு வழிகாட்டும் வெளிச்சம் எனும் தலைப்பில் வெளியான கட்டுரையை கல்விக்கான களப்பணியில் எமக்கு வழிகாட்டும் உங்களுக்கு எம் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டு உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்...
நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்
வெளிச்சத்தோடு இணைந்து
பலருக்கு உதவ நினைப்பவரா நீங்கள் இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்.. https://spreadsheets.google.com/viewform?formkey=dFR0MFJtbllsNUNrRk9CTG82ZlJxOWc6MQ

ஒரு காலத்தில் இந்தியாவின் சுமையாக கருதப்பட்ட மக்கள் தொகை இன்றைக்கு மனித வளமாக மாறியுள்ளது. ஆம். மனித ஆற்றல் நம்மிடம்தான் அதிகமாக உள்ளது. உலக அளவில் அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்த இளைஞர்களால் நாட்டின் வளர்ச்சி உச்சத்திற்கு செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உலக நாடுகள், இந்தியாவை மிரட்சியுடன் பார்க்கின்றன.
இந்த காலகட்டத்தில் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனையான ஒன்று. உலகளவில் மக்கள் தொகையில் மட்டுமல்ல, தற்கொலைகளின் எண்ணிக்கையிலும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2ம் இடத்தில் இருக்கிறது. இதில் 40 சதவீதம் பேர் இளைஞர்கள். உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கு மேற்பட்டவர்களும், இந்தியாவில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர். தமிழகத்தில் சுமார் 11 ஆயிரம் பேர், இதில் 5 ஆயிரம் பேர் மாணவர்கள். தமிழகம் மற்றும் தென்னிந்தியாவில் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகம்.
தேசிய குற்ற ஆவண காப்பக தகவல்படி, கடந்த 2010ம் ஆண்டு ஒரு லட்சத்து 35, 599 பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில், 50,755 பேர் 29 வயதுக்குட்பட்டவர்கள். 3,130 பேர் 14 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தற்கொலை செய்து கொள்வோரில் 51 சதவீதம் பேர் பட்டதாரிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அல்லது இளைஞர்கள்.
குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் ஏற்படும் மன அழுத்தத்தால் தற்கொலைகளின் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவர்களில் 20 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 2009ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தேர்வு தோல்வியினால் தமிழகத்தில் 223 பேர் உட்பட நாடு முழுவதும் 2010 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றெல்லாம் புள்ளி விவரங்கள் புளியைக் கரைக்கின்றன. இதன் சமீபத்திய உதாரணங்கள்தான் சென்னையில் பொறியியல் மாணவர்களின் தற்கொலைகள்.
உணவளிக்கும் விவசாயிகளில் தொடங்கி, எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மாணவர்கள் வரை தற்கொலை செய்து கொள்வதை தடுக்க வேண்டும். நம் மனித வளத்தை காக்க வேண்டும் என்று கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் குரல் கொடுக்கின்றனர்.
திருச்சி அண்ணா தொழில்நுட்பக் கழக பாடதிட்டக் குழு இயக்குநர் புரட்சிக்கொடி சொல்லும் கருத்து:
தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்து செயல்பட வேண்டும். சரியாக படிக்காத மாணவர்களை அதிகமாக கண்டிப்பதன் மூலம் அவர்களை அவமதிக்க கூடாது. அதிக மதிப்பெண் பெற வைக்க வேண்டும் என்பது மட்டும் நோக்கமாக இருக்க கூடாது. மாணவர்களின் தனித்திறனைக் கண்டறிந்து, அதை மேம்படுத்த வேண்டும். யாருடனும் ஒப்பிட்டு அவர்களை அவமதிக்க கூடாது. வகுப்பறையில் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க பள்ளி, கல்லூரிகளில் மாணவர் ஆலோசனை மையங்கள் (கவுன்சிலிங் சென்டர்) அமைக்கப்பட வேண்டும். நீதிபோதனை, விளையாட்டில் மாணவர்களை ஈடுபடச் செய்ய வேண்டும். இவ்வாறு புரட்சிக்கொடி கூறினார்.
வெளிச்சம் அமைப்பின் நிறுவனர் ஷெரின்:
வெளிச்சம் மாணவர்கள் ஆய்வுகளின்படி, 54 சதவீதம் பேர் காதல் தோல்வியாலும், 26 சதவீதம் பேர் மனதில் இனம்தெரியாத வேதனையாலும், 15 சதவீதம பேர் தாழ்வு மனப்பான்மை மற்றும் ஆங்கிலம் தெரியாமையாலும், 3 சதவீதம் பேர் சக மாணவர்களால் புறக்கணிக்கப்படுவதால், 3 சதவீதம் பேர் ராகிங்கால் தற்கொலை செய்து கொள்கின்றனர். �நான் பேசுவதைக் கேட்க யாருமில்லை. என்னை யாருமே புரிந்து கொள்ளவில்லை� என ஏங்கும் மாணவர்கள் அதிகம் உள்ளனர்.
தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையிடம் நாம் பேச வேண்டாம் என்று பெற்றோர்கள் ஒதுங்குவதாலும் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. பெருகி வரும் மாணவர்கள் தற்கொலையை தடுக்கும் வகையில் 2010ல் மாணவர் ஆலோசனை மையம் (ஹெல்ப் லன் & 96981 51515) தொடங்கப்பட்டுள்ளது. இதில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். இதில் கல்வி நிறுவனங்கள் கொடுக்கும் நெருக்கடியால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர். மேலும் 100 சதவீத தேர்ச்சி, நன்கொடையை மட்டுமே குறிக்கோளாக செயல்படும் கல்வி நிறுவனங்களும் தற்கொலைக்கு காரணமாகின்றன. எனவே மாணவர்கள் தற்கொலை என்பதை தேசத்தின் பிரச்னையாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனித வள ஆலோசகர் மற்றும் முன்னாள் எஸ்.பி கலியமூர்த்தி:
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மனித உயிர் மலிவானதல்ல. எத்தகை துன்பத்திற்கும் தற்கொலை தீர்வாக இருக்க முடியாது. இதைத் தடுக்க வேண்டியது பெற்றோர்கள், ஆசிரியர்களின் கடமை. மாணவர்கள் எதையும் எதிர்கொள்வோராக, எந்த பிரச்னைக்கும் தீர்வு காண்போராக உருவாக்கப்பட வேண்டும். நீதிநெறி, தன்னம்பிக்கை கதைகள் சொல்லித் தரப்பட வேண்டும். வெறும் மதிப்பெண் பெறுவது மட்டும் கல்வியல்ல. காரணம் மதிப்பெண்ணை விட ஒரு உயிர் உயர்வானது, உன்னதமானது என்பதை உணர வேண்டும். ஆங்கிலம் கற்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வது முட்டாள்தனம். ஆங்கிலம் என்பது ஒரு அந்நிய மொழி. அது தெரியவில்லை என்பதற்காக வெட்கப்படத் தேவையில்லை. ஒரு முறை தற்கொலைக்கு முயன்றால், அடிக்கடி அந்த எண்ணம் வரும். எனவே தற்கொலை எண்ணமே மனதில் இருக்க கூடாது.
�நம்பிக்கை� தற்கொலை தடுப்பு மைய இயக்குநர் ராமகிருஷ்ணன்:
குடும்ப பிரச்னை, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை எண்ணத்தை தூண்டும் மனச்சோர்வு நோய் ஏற்படுகிறது. 100ல் 12 பேருக்கு மனச்சோர்வு நோய் ஏற்பட்டுள்ளது. வரும் 2020ல் உலகளவில் அதிகளவில் இந்நோய் இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத் தவிர்க்க கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி, பிற அரசு நிறுவனங்களிலும் ஆலோசனை மையங்கள் அமைக்க வேண்டும். மற்ற நோய்களுக்கு சிகிச்சைக்கு செல்வது போல் மன அழுத்தம், மனச்சோர்வுக்கும் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். இதில் வீண் தயக்கம் தேவையில்லை. தேர்வு நேரத்தில் ஏற்படும் பயம் மற்றும் தற்கொலை எண்ணத்தை போக்க 98424 22121 என்ற தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு இலவச ஆலோசனை வழங்கப்படும்.
ஆவணப்படம் தயாரிப்பு:
பல்வேறு காரணங்களால் மாணவர்களின் தொடர் தற்கொலை வேதனையளிக்கிறது. எனவே, மாணவர்கள் தற்கொலையைத் தடுக்கவும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அன்பாலயம் நிறுவனம் சார்பில் ஆவணப்படம் தயாரிக்கிறோம். இதில் இளம் சாதனையாளர்களின் விபரம், தற்கொலைக்கான காரணங்கள், இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்த விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை வரும் கல்வியாண்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் ஒளிபரப்பி, விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று அன்பாலயம் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
- ஜோ.மகேஸ்வரன்
நன்றி: தினகரன் 6.5.12
ஐஏஎஸ்,
ஐபிஎஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கான மத்திய அரசுப் பணியாளர்
தேர்வாணையத் தேர்வில் (யு.பி.எஸ்.சி.) அதாவாது ஐ.ஏ.எஸ்.,
ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான
சிவில் சர்வீசஸ் தேர்வில் 910 மாணவர்கள் தேர்வு
பெற்றுள்ளனர். அதில் தமிழகத்திலிருந்து 68 பேர் வெற்றி பெற்றுள்ளனர் ..
2011-12 ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு
முடிவுகள் நேற்று (மே 4) வெளியிடப்பட்டன. நாடு முழுவதும்
தேர்வு எழுதிய 2 லட்சத்து 40 ஆயிரம்
பேரில் 910 மாணவ, மாணவியர் மட்டும்
வெற்றி பெற்றனர்.
இதில், தில்லியைச் சேர்ந்த
சேனா அகர்வால் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தில்லியிலுள்ள அகில
இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர்
இவர்.
மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப்
சோஷியல் சயின்ஸில் எம்.ஏ. பட்டம் பெற்ற ருக்மணி ரியார் 2-வது
இடத்தையும், தில்லி ஐ.ஐ.டி.யில் எம்.டெக். படித்த பிரின்ஸ்
தவாண் என்ற மாணவர் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
ராமாநாதபுரத்தைச் சேர்ந்த விவசாய விஞ்ஞானியான
எஸ்.கோபால் சுந்தரராஜ், அகில இந்திய அளவில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். போடி நாயக்கனூரைச் சேர்ந்த எம்.சுந்தரேஷ்
பாபு 38-வது இடத்தையும், புதுக்கோட்டையைச்
சேர்ந்த கே.செந்தில்ராஜ் 57-வது இடத்தையும், அழகுவார்சினி 77வது இடத்தையும்,
ஆர்த்தி 190வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
தமிழக மாணவர்கள் யு.பி.எஸ்.சி. தேர்வில் கடந்த
ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான எண்ணிக்கையிலேயே வெற்றி பெற்றுள்ளனர். மொத்தம் 910 மாணவர்களில் 68 பேர் தமிழக மாணவர்கள். கடந்த
ஆண்டு இந்தத் தேர்வில் 96 மாணவர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணியிடங்களுக்கான
முதல் நிலைத் தேர்வு கடந்த ஜுன் 12-ம் தேதி நடைபெற்றது. இந்தத்
தேர்வுக்கு 4.7 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில்
2.4 லட்சம் மாணவர்கள் மட்டுமே இந்தத் தேர்வில் பங்கேற்றனர்.
இவர்களில் 11,984 மாணவர்கள்
பிரதானத் தேர்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரதான தேர்வு எழுதியவர்களில் 2,417 மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வு 2012 மார்ச்,
ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்களில்
183 பேர் தமிழக மாணவர்கள். அதன்பிறகு, முடிவுகள்
இப்போது வெளியிடப்பட்டுள்ளன.
மொத்தம் 910 பேர் பணிக்கு தேர்வுசெய்யப்பட்டு
இருக்கிறார்கள். அவர்களில் 420 பேர் பொதுப்பிரிவினர், 255 பேர்
ஓ.பி.சி. வகுப்பைச் சேர்ந்தவர்கள், 157 பேர் எஸ்.சி. பிரிவையும்,
57 பேர் எஸ்.டி. வகுப்பையும் சேர்ந்தவர்கள்.
முதல் 25 இடங்களைப்
பிடித்தவர்களில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ்
உள்ளிட்ட புகழ்பெற்ற நிறுவனங்களில் படித்த மாணவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 910 பேரில்
195 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்பு என்பதே
காண அரிதான உலகில்
கொடூரம் அளப்பரியதாக உள்ளது! - ஆத்மாநாம்
கொடூரம் அளப்பரியதாக உள்ளது! - ஆத்மாநாம்
இன்று தற்கொலை, உதவி கேட்கும் ஓர் கூக்குரலாகவே மாறியிருக்கிறது. வரதட்சணைக் கொடுமை, பாலியல் தொந்தரவு, குடும்பத் தகராறு போன்ற காரணங்களையே பிரதானமாக வைத்து பெண்களை சூழ்ந்துவிடும் தற்கொலை, இன்றைக்கு வாழ்வின் முதல்பகுதியைக்கூட கடக்காத இளம் வயதினர்களின் பக்கம் சாய்ந்திருக்கிறது. அதிலும், அண்மை வாரங்களில் தமிழகத்தை ஆட்டிப் போட்டிருக்கிறது... பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் தற்கொலைகள்.
கடந்த ஆண்டில் மட்டும் இந்தியா முழுக்க 7,379 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகம். தென்னிந்தியாவில் மட்டும் 15 நிமிடங்களுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் இளம் வயதினரின் தற்கொலை நிகழ்வதாகவும் அறிக்கைகள் சொல்கின்றன.
இதில், சென்னையில் மட்டும் கடந்த 2011-ம் ஆண்டில் 84 மாணவ, மாணவிகள் உயிரை விட்டுள்ளனர். இவர்களில் 50 பேர் மாணவிகள். இதே சென்னைக்குள்... 2012 ஜனவரி ஆரம்பித்து மார்ச் முடிவதற்குள் 16 இளம் வயது தற்கொலைகள் அரங்கேறியுள்ளன.
'வீட்டில் கஷ்டமான சூழலில் என்னைப் படிக்க வைக்கிறார்கள். என்னால் சரிவர படிக்க முடியவில்லை. தேர்வில் தோல்வியைச் சந்திக்க நேரிடுவேனோ என்பதாலேயே பிரிந்து செல்கிறேன்...’
- கடந்த வாரத்தில் சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி தைரியலட்சுமியின் தற்கொலைக்கான காரணம், நம்மை வெகுவாகப் பாதிக்கிறது.

'என் உயிர்த் தோழி என்னிடம் பேசவில்லை’, 'வயிற்று வலியைப் பொறுக்க முடிய வில்லை’, 'பெற்றோர்கள் திட்டித் தீர்க்காத நாளே இல்லை’, 'காதலன் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறான்’, 'படிப்பு சரியாக வரவில்லை’
- இப்படி இளம் வயதுப் பெண்கள் அடுக்கிக்கொண்டே போகிற காரணங்களுக்குப் பின் இருக்கும் சமூக உண்மை, தவறுதான் என்ன?! அவற்றையெல்லாம் களைந்து, தற்கொலைகளில் இருந்து அவர்களைக் காப்பாற்றும் சூத்திரங்கள்தான் என்னென்ன?
மிகுந்த சமூக அக்கறையோடு அவற்றைஎல்லாம் இங்கே பகிர்ந்து கொள்கிறார்கள்... சமுதாயத்தின் பல தளங்களில் பல்வேறு பரிமாணங்களோடு பணியாற்றிவரும் சிலர்...
பலவீனப்படுத்தாதீர்... பயமுறுத்தாதீர் !
சங்கர் (சமூக ஆர்வலர்- சிநேகா தற்கொலைத் தடுப்பு மையம்): ''வாழ வேண்டும் என்பதற்குப் பத்துக் காரணங்கள் இருந்தாலும், சாக வேண்டும் என்று ஒரு முடிவு எடுத்துவிட்டால், மனம் அந்த ஒற்றை முடிவைத்தான் நோக்கும். இரட்டை மனநிலை, நொடிப்பொழுது முடிவு, வழி தேடாத குறுகிய பார்வை... இப்படியான சூழல்கள்தான் இந்த ஒற்றை முடிவைத் தீர்மானிக்கின்றன. இவற்றை இளம் பருவத்தினர் கடந்து போகக்கூடிய வாய்ப்பை, அவர்களைச் சார்ந்தவர்கள் விதைக்க வேண்டும்.
ஆண்களில் 30 - 45 வயதுக்குள்ளானவர்கள்தான் அதிகமாக தற்கொலைக்கு உட்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுக்கு வருமானம், வேலை மாற்றம், குடும்பம், கடன் என தற்கொலைத் தூண்டுதலுக்கான சில பொதுவான காரணங்கள் அமைகின்றன. அதுவே, பெண்களில் 15 - 29 வயது வரையிலானவர்களே அதிகம். பருவ மாற்றம், படிப்பு, காதல், திருமணம், உறவுமுறை, குடும்பப் பொறுப்பு, குழந்தை வளர்ப்பு என்று அந்த இடைப்பட்ட வயதுக்குள் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் பொறுப்புகள் ஏராளம். தொடர் பரிணாமங்களால் அந்தச் சூழலில் ஒரு பெண் பகிர்வையும், அதன் வழியே தன்னை பலப்படுத்திக் கொள்ளவுமே முயற்சிக்க வேண்டியிருக்கும். இத்தகைய சூழலில்... அவர்களைப் பலவீனப்படுத்துவது, பயத்துக்கு ஆளாக்குவது போன்ற செய்கைகளில் யாரும் ஈடுபடக் கூடாது.''
பெற்றோர் - ஆசிரியர் உறுதிமொழி ஏற்க வேண்டும் !
இந்திரா ஜெயச்சந்திரன், (தமிழாசிரியை, பழனியப்பா உயர்நிலை பள்ளி, சோழபுரம், விருதுநகர் மாவட்டம்): ''பெரும்பாலும் பள்ளி, கல்லூரி வயதினர் பெற்றோர்களை விடவும், ஆசிரியர்களை விடவும், ஏன், கடவுளை விடவும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது... உடன் படிக்கும், பழகும் நண்பர்களுக்குத்தான். நண்பர்களுக்கு முன் தனக்கு எந்த அவமானமும் நிகழ்ந்து விடக்கூடாது என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்படி ஒரு சூழலில் அந்த சிநேகிதர்களுக்கு முன்பாகவே பெற்றோர்களோ, ஆசிரியர்களோ... ஏதோ ஒன்று குறித்து கண்டிக்கும்போது, அது அவமானம் என்கிற உச்சத்தைத் தொடும்போது, அவர்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. இந்த விஷயத்தில் பெற்றோரும், ஆசிரியரும் மிக மிக கவனமாக இருந்தாலே, பெரும்பாலான தற்கொலைகளை தடுத்துவிடலாம். இதற்கான உறுதிமொழியை அவர்கள் ஏற்க வேண்டும்.
ஞான உபதேச படிப்பு முறைகள் கைவிடப்பட்டு, முழுவதுமே வேல்யூ படிப்பாக மாறிவிட்டதும் இத்தகைய நிலைக்கு ஒரு காரணம். இந்த விஷயத்தில் அவர்களுக்கான கவுன்சிலிங்கை பள்ளிகள் பரவலாக செய்யத் தொடங்கியாகிவிட்டது. இதன் பலனாக அவர்களிடம் மாறுதல்களைப் பார்க்க முடிகிறதா என்பதை, காலப்போக்கில்தான் கவனிக்க முடியும்.''
நரகமாக்கும் நகரமயம் !
நக்கீரன் (கவிஞர், சுற்றுச்சூழல் எழுத்தாளர்): ''உலகமயமாதலுக்கு நம்மை உட்படுத்திக்கொண்ட இந்த காலகட்டத்தில், முதலீடு செய்யும் நுகர்பொருளாகவே பிள்ளைகளை மாற்றிவிட்டோம். சிறு வயது முதல் பிள்ளைகளின் மீது செலுத்தப்படும் ஒவ்வொரு முதலீடும், பிற்காலத்தில் நமக்கு ஆதாயம் சேர்க்கும் என்கிற நம்பிக்கையே இதற்குப் பிரதான காரணம். அது படிப்பில் இருந்தே தொடங்குகிறது என்றும் சொல்லலாம்.
இப்படிப் பெற்றோர்களின் கனவுகளைச் சுமந்துகொண்டு கிராமங்களில் இருந்து பெரு நகரங்களுக்குப் பிழைப்புக்காக புறப்படும் இளைஞர்களில் 90 சதவிகிதத்தினர் தங்களை நகரமயமாதலுக்கு உட்படுத்திக்கொள்ளும் சூழலே நிலவுகிறது. 'குறைந்த ஊதியத்தை வாங்கிக்கொண்டு முதலாளிகளை திருப்திபடுத்தும் வேலையைத்தான் செய்கிறோம்' என்பதை கிராமம் சார்ந்த சூழலில் இருந்து நகரம் நோக்கி வருபவர்கள் உணர்வதில்லை. இதனால், முழு மனநிம்மதியையும் இழக்கிறார்கள். ஆகவே, தங்களின் எதிர்கால பயணத்தில் இருந்து விலகி நிற்கிற இந்த நிர்ப்பந்தம், ஒரு கட்டத்தில் தற்கொலை முடிவாகவும் மாறுகிறது.''
தேவை... நம்பிக்கை பயிற்சிகள் !
ஷெரின் (நிறுவனர் - 'வெளிச்சம்’ அமைப்பு): ''சமீபத்தில் ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்தபோது, கிராமத்தில் இருந்து வந்த ஒரு மாணவி... ஆடை மற்றும் தலைப்பின்னல் ஆகியவற்றை சக மாணவிகள் கேலி செய்ததால் தற்கொலைக்கு முயன்றதாக அறிந்து அதிர்ந்தேன். ரூரல் ஏரியா மாணவ, மாணவிகளுக்கு 10-ம் வகுப்பில் இருந்தே தன்னம்பிக்கை, தனித்துவம், ஆங்கிலம், பர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்று ஒவ்வொன்றிலும் நம்பிக்கை அளிக்கும் பயிற்சியை அளிக்க வேண்டும்.
ஒரு மாணவர் தனக்கான படிப்பை மதிப்பெண்களை மட்டுமே வைத்துத் தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைதான் இங்கு உள்ளது. அவரது ஆசை, விருப்பம், குறிப்பிட்ட துறையில் கொண்டுள்ள திறமை எல்லாம் புதைக்கப்படுகிறது. 1,085 மதிப்பெண்களோட தேர்ச்சி பெற்ற ஒரு பிளஸ் டூ மாணவிக்கு தமிழ்க் கவிதை புலமை அதிகமாக இருக்கிறது என்றால், அவரை தமிழ் சார்ந்த துறையில் சேர்த்து விடுவதுதானே நல்லது. 'இவ்ளோ மார்க் இருக்கே... இன்ஜினீயரிங் படி’ என்று நம் ஆசையை அவளிடம் திணிக்கிறோம்.
இன்னொரு பக்கம், குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவரையும் எப்படியாவது பணத்தைக் கட்டி பொறியியல் படிப்பில் சேர்த்துவிடும் பெற்றோர்கள் அறிவதில்லை... அவர்களின் விஷ§வல் மீடியா படிப்பு ஆசையை அவர்கள் கசக்கி எறிவதை! இதனால், ஆண்டொன்றில் வெளிவரும் சுமார் 2,50,000 பொறியியல் மாணவர்களில் ஒருவராக தானும் வெளிவந்து, வேலை தேடி நாளைக் கழிப்பவர்களில் ஒருவராக அவரும் இருக்கத்தானே செய்வார்?
'எனக்கு படிப்பு வேண்டாம். நான் ஒரு லேத் தொழிலாளியாக இருக்க விரும்புகிறேன்!’ என்று ஒரு பையனோ, தையல் தொழிலை பிரதானமாக்கிக் கொள்ள விரும்புகிற ஒரு பெண் பிள்ளையோ, வாழ்வில் ஜெயிக்கவே முடியாது என்கிற மனநிலையை அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு யார் கொடுத்தது?!''
தற்கொலைகளை தடுத்து நிறுத்தும் வகையில், பல தளங்களில் சேவையாற்றி வருவோர் தந்த கருத்துக்கள் மொத்தத்தையும் கேட்டுக் கொண்ட 'ஸ்கார்ஃப்’ மனநல மையத்தின், மனநல மருத்துவர் மங்களா, ''அனைவரும் மிக அற்புதமாக விஷயத்தை வலியுறுத்துயுள்ளனர். இனி தற்கொலைகள் இல்லை என்று சொல்வதற்கு இவையெல்லாம்தான் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய சூத்திரங்கள்'' என்று அழுத்தமாகக் குறிப்பிட்டவர்,
ப்ளீஸ், 30 நிமிடம் ஒதுக்குங்கள் !
''நாம் நம் தலைமுறைகளில் 5 வயதில் கற்றுக்கொண்ட படிப்பை, இப்போது குழந்தைகளிடம் இரண்டரை வயதிலேயே திணிக்கிறோம். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிற ரியாலிட்டி ஷோக்களின் தாக்கத்தால், குழந்தைகளுக்கு ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ... பாட்டு, டான்ஸ் கிளாஸ் என அவர்களின் பால்யத்தைப் பறிக்கிறோம். சக குழந்தைகளுடன் விளையாட அனுமதிக்காமல், சின்ன வயதிலிருந்து அவர்களை டி.வி-க்கு பலிகொடுத்துவிட்டு, பப்ளிக் எக்ஸாம் என திடீரென்று அவர்களை டி.வி-யில் இருந்து பிரிக்கிறோம். பிள்ளைகள் முன்பாக பேரிரைச்சலுடன் பெற்றோர் சண்டை போட்டுக் கொள்கிறோம்.
வாழ்வின் அறங்களை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய நாமே, சிக்னலில் நிற்காமல், பிளாக்கில் டிக்கெட் வாங்கி சினிமா பார்த்து, உறவினர்களைப் புறம் பேசி என தவறுகளையே செய்து காட்டுகிறோம். அதையே அவர்கள் நம்மிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள். 'என் ரோல் மாடல் என் பேரன்ட்ஸ்’ என்று நம் குழந்தைகள் சொல்லும்படியான வாழ்க்கையை இங்கே எத்தனை பேர் வாழ்கிறோம்?
தினசரிப் பொழுதுகளில் குழந்தைகளுக்காக குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது ஒதுக்குங்கள். அவர்களைப் பேச விட்டுக் கேளுங்கள். பள்ளி, படிப்பு, நண்பர்கள், காதல், ஃபேஸ்புக் என்று எங்காவது அவர்கள் பிரச்னையில் சிக்கியிருக்கிறார்களா என்பதை கவனித்து உணருங்கள். அதிலிருந்து பக்குவமாக மீட்டெடுங்கள். 'என்ன பிரச்னைனே தெரியலையே... இப்படிப் பண்ணிக்கிட்டாளே...’ என்று தன் பிள்ளை தற்கொலை எனும் மிகப்பெரிய முடிவெடுத்ததற்கான காரணம்கூட அறியமுடியாமல் அழும் பெற்றோரின் கதறல், நமக்கு எச்சரிக்கை ஒலியே'' என்று தானும் எச்சரிக்கை செய்தார் மருத்துவர் மங்களா!
இனியாவது, விழித்துக் கொள்வோம்!
மார்ச்
8 - மகளிர் தினம். அதுவும் ஒரு தினமாக, தேதியாகக் கடந்துபோய்விடுகிறது
சம்பிரதாயமாக. கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், தொழில் என்று பல தளங்களிலும்
இன்றைய பெண்கள் அடைந்திருக்கும் வெற்றிகள் அளப்பரியவை. இதற்கான நீண்ட நெடிய
போராட்டங் களும் மகத்தானவை. 'இன்றைய சூழலில் பெண் கள் இன்னும் தங்களைச்
சுதந்திரமாக உணர் வதற்கு எவை எல்லாம் தேவை?’ என்றகேள்வியை முன்வைத்தோம். பல
தளங்களில் சாதித்திருக்கும் பெண்கள் தங்கள் கருத்துக்களைப்
பகிர்ந்துகொள்கிறார்கள்.

அருள்மொழி, வழக்கறிஞர்: ''படித்த
பெண்கள்கூட செய்தித்தாள் வாசிக்கவும் தொலைக்காட்சிகளில் செய்திகள்
பார்க்கவும் நேரம் இல்லாமலும் ஆர்வம் இல்லாமலும் குடும்ப நிலவரங்கள்
குறித்துக் கவலைப்படுவதோடு முடங்கிவிடுகிறார்கள். மதம் சார்ந்த விஷயங்கள்,
புடவை, நகை போன்ற ஆடம்பரங்களில் இருந்து கவனத்தைத் தவிர்த்து, பொது
விஷயங்களில் அக்கறை காட்ட பெண்கள் தங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ள
வேண்டும். ஆண்கள் வெளியிடங்களுக்குப் போவதுபோல பெண்களும்
வெளியிடங்களுக்குச் சென்று பல விஷயங் களைக் கற்க வேண்டும்.
வெளியிடங்களுக்குப் போவது என்றால், கோயிலுக்குப் போவது அல்ல.
நூலகங்களுக்குச் செல்லுதல், இலக்கியம் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில்
கலந்துகொள்ளுதல், விழாக்களைத் தாங்களே நடத்துதல் என்று பொது வேலைகளில்
ஈடுபட பெண்கள் முன்வர வேண்டும்!''
தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர்:
''சாமியாரில் இருந்து சக நண்பன் வரை எளிதாக ஏமாந்துவிடும் அளவுக்குப்
பெண்கள் பலவீனமாக இருக்கிறார்கள். கல்பனா சாவ்லா, இந்திரா நூயி போன்ற
பெண்களை உதாரணப் பெண்களாக முன்னிறுத்துவதைத் தவிர்த்து, மலையின மக்கள்
உரிமைக்காகப் போராடும் பழங்குடிப் பெண் சி.கே.ஜானு, மானை வேட்டையாடிய
வழக்கில்சல்மான் கானுக்கு எதிராக யாரும் சாட்சி சொல்ல மறுத்தபோது தைரியமாக
உண்மையைப் போட்டு உடைத்த கிருஷ்ணா பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்கள்
மூவர், மணிப்பூரில் ராணுவத்தின் அத்துமீறலுக்கு எதிராக அறப்போராட்டம்
நடத்திவரும் இரோம் ஷர்மிளா போன்ற பெண்களை முன்னுதாரணப் பெண்களாக
முன்னிறுத்த வேண்டும்!''
ஷாலினி, மனநல மருத்துவர்: ''சாமரம்
வீசிய பெண்கள் முதல் சங்க காலப் புலவர்கள் வரை, பெண்கள் புத்திசாலியாக,
அறிவாளியாக, பணி செய்பவர்களாக இருந்து வந்திருக்கின்றனர். எனவே, பெண்கள்
முதலில் வரலாற்று அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு வகையில் பார்த்தால்,
படிக்காத பெண்கள்தான் உணர்வுகளை வெளிப்படுத்தப் போதுமான சுதந்திரம்
பெற்றிருக்கிறார்கள். கிராமத்தில் குடும்பச் சண்டையில் தாக்குதலுக்கு
உள்ளான பெண் தலையில் அடித்து ஒப்பாரிவைத்துஊரைக் கூட்டிவிடுவாள். ஆனால்,
நகரத்துப் பெண்களுக்கு அத்தகைய தைரியம் இல்லை. எனவே, நகரத்துப்
பெண்களுக்குத் தைரியமும், கிராமத்துப் பெண்களுக்குக் கல்வியும் பொருளாதாரச்
சுதந்திரமும் இன்றைய தேவை!''
நிர்மலா கொற்றவை, கவிஞர்:
''பாடத் திட்டத்தில் 'பெண்ணியக் கல்வி’ என்ற பாடப் பிரிவு சேர்க்கப்பட
வேண்டும். 'இந்தச் சமூகம் ஆரம்பத்தில் தாய் வழிச் சமூகமாகத்தான் இருந்தது.
பிறகுதான் அது தந்தை வழி ஆணாதிக்கச் சமூகமாக மாறியது’ என்கிற வரலாற்று
உண்மை களைப் புரிந்துகொள்வதற்கே நமக்கு 20 வயதுக்கு மேல் ஆகிறது. அதுவும்
அரசியல் உணர்வுடைய ஆண்களும் பெண்களும்தான் இதைப் பற்றி
அறிந்துகொள்கிறார்கள். இப்போது முனைவர் பட்டப்படிப்பு அளவில்தான் பெண்
ணியச் சிந்தனைகள் எடுத்துக்கொள்ளப்படு கின்றன. இதை மாற்றி
பதின்பருவத்திலேயே 'பெண் என்பவள் சக மனுஷி. அவள் ஆணுக்குச் சமமாக
மதிக்கப்பட வேண்டியவள்’ என்று கற்பிக்கும் பெண்ணியக் கல்வி
கற்பிக்கப்பட்டால், ஆண்களின் நிலையிலும் மாற்றம் ஏற்படும். இரண்டாவதாக,
சினிமா மாயையில் இருந்து பெண்கள் விடுபட வேண்டும். அரசியலுக்கு வந்த
சினிமாக்காரர்கள் பெண்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதை உணர்ந்து, இந்த
சினிமாக் காரர்களைப் புறக்கணிக்கப் பெண்கள் முன்வர வேண்டும்!''
மாலதி மைத்ரி, கவிஞர்: ''மனித
உரிமைப் போராளிகள் மற்றும் பெண்ணியவாதிகளின் நீண்ட நெடிய
போராட்டங்களுக்குப் பிறகு, பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக்கூடிய சில
சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளன. ஆனாலும் இவை, 'பெண் என்பவள் எனக்குக்
கீழேதான்’ என்ற எண்ணத்தை ஆண்களிடம் மாற்றுவதாக இல்லை. அரசு
வேலைவாய்ப்புகளில் இப்போது சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு இருக்கிறதே
தவிர, அது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானதாகத்தான் இருக்கிறது. அதை
மாற்றி சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிலும் பெண்களுக் கான உள்ஒதுக்கீடு
தேவை. விவசா யக் கூலி வேலை, கட்டட வேலை போன்ற அடித்தள வேலைகளில் தொடங்கி,
ஆண்களுக்கும் பெண் களுக்கும் பாரபட்சமான ஊதியம் இருக்கிறது. எந்த வேலையாக
இருந்தாலும் இருபாலருக்கும் பாரபட்சமற்ற ஊதியம் அளிக்கப்படும் நிலை உருவாக
வேண்டும்!''
சின்மயி, பின்னணிப் பாடகி: '''வீட்டு
வேலைகளை நீங்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும்’ என்று ஒவ்வொரு பெண்ணும்
ஆண்களை வலியுறுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் பாலியல் வன்முறை குறித்த
செய்திகள் வருகின்றன. காரணம், பெண்களைக் கட்டுப்பாடாக வளர்க்கும் சமூகம்,
ஆண்களைச் சரியாக வளர்ப்பதில்லை. எனவே, பெண்கள் சுதந்திரமாகவும் கண்ணி
யமாகவும் இருக்க, ஆண் குழந்தை களைக் கட்டுப்பாட்டோடு வளர்க்க வேண்டும்.
அதேபோல, இப்போது கலாய்ப்பது என்ற பெயரில் பெண்களை அவமானமாகப் பேசுவதும்
அதிகரித்துவருகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் இதற்குப்
பயன்படுவது வேதனை. எனவே, 'பெண்களும் தங்களைப் போலவே சக உயிர்கள்தான்’ என்று
வலியுறுத்தும் கல்வி ஆண்களுக்குத்தான் அவ சியம். 'ஒவ்வோர் ஆணின்
வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்’ என்று ஆண்கள் பெண்களைப்
பின்னுக்குத் தள்ளுவதும், பெண்கள் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வதுமான நிலை
மாற வேண்டும். பெண்கள் ஆண்களின் வெற்றிக்காக உழைப்பதை விட்டுவிட்டு,
தங்கள் வெற்றிக் காக உழைக்க வேண்டும்!''
கவிதா முரளிதரன், பத்திரிகையாளர்: ''பெண்களுக்கு
இப்போதைய அத்தியாவசியத் தேவை கல்வி. வெறுமனே வேலைவாய்ப்பை அளிக்கிற
கல்வியை மட்டுமே நாம் கணக் கில் எடுத்துக்கொள்கிறோம். அத்தகைய கல்வியில்
பெண்கள் போதுமான அளவுக் குத் தேர்ச்சி பெற்று முன்பைவிட அதிகம்
வேலைவாய்ப்பையும் பொருளாதாரச் சுதந்திரத்தையும் பெற்றிருக்கிறார்கள்.
ஆனால், அதைவிட அவர்களுக்கு அவசிய மானது, பெரியார் அடிக்கடி வலியுறுத்திய
'விடுதலைக் கல்வி’.அதேபோல, பெண் களுக்கான அரசியல் தலைமைகள் உருவாக
வேண்டும். இங்கேயும் ஒரு சிக்கல் இருக்கிறது. ஜெயலலிதா, மாயாவதி, சோனியா
காந்தி என்று உதாரணப் பெண் அரசியல்வாதிகள் காட்டப்படுவார்கள். ஆனால்,
பெண்களின் நலனில் உண்மையான அக்கறை செலுத்துகின்ற, பெண்கள் விடுதலையில்
நம்பிக்கைகொண்ட பெண் அரசியல் ஆளுமைகள் உருவாக வேண்டும். இல்லை என்றால்,
விழுப்புரத்தில் இருளர் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகும்போது,
ஜெயலலிதா அதைக் கண்டுகொள்ளாதது, உத்தரப்பிரதேசத்தில் ரயிலில் ஒரு பெண்
பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதை மம்தா பானர்ஜி 'அப்படி ஒன்று
நடக்கவேஇல்லை’ என்று மறுப்பது மாதிரியான அவலங்கள்தான் தொடரும்!''
தமிழிசை சௌந்தர்ராஜன், பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர்:
''மாமனார், மாமியார், குழந்தைகள் என்று பல பொறுப்புகள் இருந்தாலும், 'இது
என் வேலை. நான் நல்லா செய்வேன்’ என்று ஏற்றுக்கொண்டு செய்ய வேண்டும்.
மாமனார், மாமியாரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பிவிட்டு, சின்ன
குழந்தையை க்ரஷ்ஷில் விட்டுவிட்டு அலுவலகம் செல்வது சரியான போக்கு இல்லை.
அதே குழந்தையை மாமனார், மாமியாரைக் கவனித்துக்கொள்ளச் சொன் னால்,
குழந்தைக்கு நல்ல அரவணைப்பு கிடைப்பதோடு, 'நல்ல ஹோம் மேக்கர்’ என்ற பெயரும்
கிடைக்கும்.
நல்ல அன்னைதான் நல்ல அதிகாரியாக இருக்க முடியும். நல்ல மனைவிதான் நல்ல மந்திரியாக இருக்க முடியும்.
வீடோ, அலுவலகமோ திட்டமிட்டு காரியங்களைச் செயல்படுத்த வேண்டும். 'நான்
ஒரு பெண். எனக்கு சலுகை தந்தே ஆக வேண்டும்’ என்று அடம்பிடிக்காமல்,
தடைகளைத் தாண்டப் பழக வேண்டும்!''

ஓவியா, பெண்ணியச் செயற்பாட்டாளர்: ''பல
பெண்களே, 'என்னுடைய கணவர் எனக்கு நிறைய உரிமைகள் கொடுத்திருக்கிறார்,
வேலைகளைப் பகிர்ந்துகொள்கிறார்’என்று சொல்லி, 'இனியும் பெண்கள் உரிமை
அடைவதற்கு ஒன்றும் இல்லை’ என்கிற கருத்துக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால்,
எவ்வளவு படித்த பெண்ணாக இருந்தாலும், எவ்வளவு சம்பாதிக்கிற பெண்ணாக
இருந்தாலும், ஆண் தலைமையிலான குடும்பக் கட்டமைப்பை அப்படியே எந்தக் கேள்வி
யும் கேட்காமல் பெண்கள் ஏற்றுக்கொள்ளும் நிலை மாற வேண்டும். அடுத்தபடியாக,
பெண்கள் 'தாங்கள் தனி நபர்கள் இல்லை, ஓர் இனம்’ என்பதை உணர்ந்து அமைப்பாக
வேண்டும். அத்தகைய அரசியல் உணர்வும் அமைப்பாவதும் இன்றைய பெண்களுக்கு
அத்தியாவசியத் தேவை!''
'வெளிச்சம்’ ஷெரின், சுய முன்னேற்றப் பயிற்சியாளர்:
''அழகான உடை, நகை என்று தன்னை அழகுபடுத்துவதிலேயே கவனம் செலுத்தும்
பெண்ணாக இல்லாமல், மனதைத் திடமாக வைத்திருக்கும் பெண்கள்தான் இன்றைய தேவை.
தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தால் 26 வகை நோய்கள் தாக்காது
என்று மருத்துவம் சொல்கிறது. ஆனால், நகர்ப்புறப் பெண்கள் சிறுநீர் கழிக்க
வெட்கப்பட்டு தண்ணீர் அதிகம் குடிப்பது இல்லை. கிராமப்புறப் பெண்களோ
சிறுநீர் கழிக்க அடிக்கடி திறந்தவெளிக்குச் செல்ல முடிவதில்லை. நகர்ப்புறப்
பெண்களுக்கும் சரி, கிராமப்புறப் பெண்களுக்கும் சரி; தலைவலி, மார்பகப்
புற்றுநோய்களுக்கான காரணங்கள் குறித்த விழிப்பு உணர்வே இல்லை. உடல்நலம்
குறித்த அக்கறை அவர்களுக்கு ஊட்டப்படுவது அவசியம்!'
-ரீ.சிவக்குமார், க.நாகப்பன், படம்: வீ.நாகமணி
Thanks Ananada vikatan: 8.3.12
உலக மகளீர் தினத்தில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் வெளிச்சம் அமைப்பின் தலைவர் வெளிச்சம் செரின் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருதை இன்று மாலை பெறுகிறார்.. அதற்கான கடிதத்தை தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.
அவர் பணிசிறக்க, வாழ்த்துங்கள் எங்கள் தாயை...
எல்லா கஸ்டங்களிலும் எம்மோடு இணைந்திருக்கும் உங்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றி....
நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்
கடந்த 13 அன்று சரியாக 11 மணியளவில் வேலூர் வாலாஜா
நகராட்சி அரங்கத்தில் பெண்கள் சிசுவை
கொல்வதற்காக தன் மனைவியிடம் ஒருவர் தகறாறு செய்து கொண்டிக்க அவன் காலை பிடித்து குழந்தையை உயிரோடு இருந்து போகட்டும் என கெஞ்சி கதறி கொண்டிருந்தாள்
அவனின் மனைவி..
அப்போது அங்கே ஓடி வந்த பெண் எங்க
வீட்டு மாடு பசு கண்ணு போட்டிருக்கு, எங்க வீட்டுல ஆடு பொட்ட குட்டி
போட்டிருக்கண்ணு சொல்ல பக்கத்து வீட்டு ரஞ்சிதம்
பொம்பளை பெத்துட்டான்னு வெசன த்தோடு நின்றுகொண்டிருக்க அடுத்தடுத்த நிகழ்வுகள்
பெண்களுக்கு எதிரான எதார்த்தமான அடக்கு முறைகளில் விளக்க அந்த நிகழ்வு . என் தங்கம்
என்னுரிமை விளம்பரம் முதல் எல்லாவற்றையும் அம்பலபடுத்தியது..
தினம் தினம் அரங்கேற வரிசையாக உட்கார்ந்திருந்த பெண்கள் பொம்பளை சிரிச்சா
போச்சாம் புகையிலை விரிஞ்சா போச்சுன்னு பழமைமொழியை சொல்லி எங்க வாய கட்டிட்டாங்கன்னு
ஒரு பொண்ணு கத்த, படி தாண்டினா பத்தினியில்லைன்னு சொல்லி வீட்டுகுள்ளேயே போட்டிங்க
அதையும் மீறி வெளியில கிளம்பினா எங்கள
வேசின்னு சொல்லுறீங்க...
சாப்பாட்டுல கூட பெண்களுக்கு வித்தியாசம் காட்டுறீங்க உங்களையறியாமலே
பெண்பிள்ளைக்கு பாசம் வைப்பதில் கூட ஓரவஞ்சனை செய்றீங்க... பாசத்துக்கு ஏங்கும்
ஒரு பொண்ணு பேசனாகி போன காதலுக்கு மயங்கி ஐஞ்சி நிமிச பழக்கம் அடுத்து பத்தாவது
நிமிசத்துல தன்னை இழக்குற தொலைக்காட்சியும்,சினிமாவும் சொல்லுவதை நிஜமென நம்பி காதல்
போதையில் மயங்கி சீரழிவது தான் பெண்களுக்கான நாகரீகமா இதை உருவாக்கியது யார்?
வரதட்சனை கொடுத்து கல்யாணம் செய்து கொண்ட பெண்ணொருத்தி அதன் பின்னால்
அனுபவிக்கும் கொடுமைகளை அனுபவித்து அழுது நிற்க மெல்லிய ஒரு குரல்....
பூமுடிச்சி பொட்டு வச்சி பொன்னகையும்
போட்டுவச்சு கல்யாணம் முடிச்சி வச்ச அம்மா நான் கண்கலங்கி திரும்பு றேனே அம்மா
சீதனமா நீ எனக்கு நூறுவகை தந்தாலுமே பேராசை பிடிச்ச கூட்டம் அம்மா என்னை பிச்சு
புடிங்கி எரியுறாங்க அம்மா
எனும்
வரிகள் ஒலிக்க தங்க விலை தினம் தினம் ஏறுது கையல இருக்கு தங்கம் கவலை விடுடா
சிங்கம்னு விளக்கும் விளம்பரத்துல விஜயும்,விக்ரமுன்னு எல்லா நடிகர்களும் போட்டி
போட்டுகிட்டு நடிச்சி தங்கம்
வாங்கணும்கிறாங்க, இதுல ஒருபடி மேல போன பிரபு என் தங்கம் என்னுரிமைன்னு சொல்லி
முடிக்கும் விளம்பரத்துக்கு அடுத்ததாகவே அதே விளம்பரத்தில் அடகு வைப்பதற்கு வழி
சொல்லும் முத்தூட் பைனாஸ் விளம்பரம்.. தங்க புரட்சியை டாராக்கினார்கள் வெளிச்சம் மாணவர்கள்..
அந்த காலத்துல யார்ரா வரதட்சணை
கொடுத்து கல்யாணம் பண்ணுனா பொம்பளைங்க
எல்லாரும் வரதட்சனை கொடுத்து கல்யாணம் செய்யமாட்டோனா என்ன பண்ணுவாங்க இந்த
ஆம்பளைங்க புதிய விசயத்தை பற்றவைக்க நமக்கு பகீர்ன்னு தூக்கி வாரி போட்டது..
பொம்பளை பிள்ளைகிட்ட எந்த விசயத்துலயும் விருப்பமிருக்குதான்னு கேக்குறதும் முடிவெடுக்குற
உரிமை அவர்களுக்கு கொடுக்கறதே இல்லை அதுவும் வீட்டுல சின்ன பையன் தன்னோட அம்மாவை
உனக்கு ஒன்னு தெரியாதும்மா கம்முனு கிடன்னு சொல்லுறதும் எதார்த்தம் ஆனால்
பெண்களுக்கு தெரியாமலேயே நீ அடிமையாக கிடக்கிறாய் எனும் அடிமை விலங்கு பூட்டப்பட்டிருக்கிறது
இதை எதார்த்தமான விசயங்களில் கூட காணலாம் குறிப்பாக பெம்பளைபுள்ள பெறப்புல இருந்து
இறக்குற வரைக்கும் எங்களை ஒதுக்குறதும், அடிக்கறதும்,கொடுமை படுத்த படுறதும்,
தொடர்கதையாக கிடக்கிறது இந்த கொடுமைகள் இன்னைக்கு வன்கொடுமைகளாக மாறி நிற்கிறது,
இதை மாற்றிட பெண்ணினமே விழித்தெழு சரித்திரம் உன் காலடியில் என குழு பெண்கள்
ஒலிக்க ஒவ்வொரு பெண்ணாக
நான் தலைமைத்துவத்துடன் இருப்பேன்,
நான் சுய சிந்தனையுடன் இருப்பேன்
நான் பெண்ணான எனது வலியை ஆண்களுக்கு
உணர்த்துவேன்
நான் விழிப்புணர்வுடன் இருப்பேன்
நான் நாட்டை முழுமையாக ஆளுவேன்
நான் என் திறமைகளை வெளிப்படுத்துவேன்
நான் ஒழுக்கத்துடன் இருப்பேன்
என்ற சொல்ல பெண்கள்
விழித்தெழுந்தால் சரித்திரம் உண்டாகும்.... என
முடிவடைந்தது அந்த நிகழ்வு...
தொடர்ந்து பேசிய வெளிச்சம் செரின் அவர்கள் இந்தியா நம் தாய்
நாடுங்குறோம் நாம பெத்த தாயை மதிக்கறோமான்னு யோசிச்சு பாருங்க ஒவ்வொரு பெண்ணும்
இந்த சமூகத்தை உருவாக்குகிற மாபெரும் சக்தி அவர்களை பூஜை செய்ய சொல்ல குறைந்த
பட்சம் உணர்வுகளுக்கு அங்கிகாரம் கொடுங்கண்ணு சொல்லுறோம் என்று பேசி முடித்ததும்..
பார்வையாளர்கள் வரிசையிலிருந்து மேடைக்கு வந்த சுகந்தி என்கிற பெண் இது நாள்
வரை நாளு பேருக்கு முன்னால நான் பேசியது
கூட இல்லை இப்பதான் மைக்கே பிடிச்சி பார்க்கிறேன்னா பாருங்க கண் கலங்கிய படி தன்
வலிகளை பதிவு செய்ய ஆண்களும் உணர்ந்தார்கள்..
இறுதியாக பெண்களின் தலைமைதுவம் & பெண்கள் அனுபவிக்கும் வன்கொடுமைகள் என்ற
தலைப்பில் வெளிச்சம் மாணவர் அமைப்பின் விழிப்புணர்வு
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேலூர்
நகராட்சியின் 8 ஆண் கவுன்சிலர்கள் 4 நாளு பெண் கவுன்சிலர்களும், சேர்மென்,டி.எஸ்.பி,
உட்பட்ட பலரும் கலந்து கொண்டார்கள். அவர்கள் ஆண்கள் இது வரை எங்களை அறியாமல் நடந்து
கொண்டிருந்த தவறான புரிதலுக்கு நாங்கள் வருந்துகிறோம், இனி என் மகளை என் மனைவியின்
உணர்வுகளுக்கு நிச்சயம் மதிப்பளிப்பேன்னு வருந்தி சொல்ல மாற்றம் அங்கிருந்தே ஆரம்ப மானது...
நிகழ்ச்சி தொகுப்பு :
வெளிச்சம் நந்தினி..
இந்த பதிவை பற்றி உங்கள் விமர்சனம் வரவேற்கிறோம்..
ஏன்னா இது எங்களுக்கான பணியல்ல சமூகத்துக்கான பணி..
உங்கள் விமர்சனம் எம்மை பக்குவ படுத்தும்..
நாம் இணைவோம்: படிவம்
| பாராட்டு |
| முதன் முதலில் மைக் பிடித்து பேசும் பெண் |
| இசைப்பயணம் |
| பயணங்கள் முடிவதில்லை |
- ஏன் படிக்கும் வயதில் பிள்ளைகளுக்கு காதல் வருகிறது…
- பெற்றவர்களை ஏன் பிள்ளைகள் வெறுக்கிறார்கள்
- மாணவர்களுக்கு செக்ஸ் கல்வி அவசியமா?
நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்
Tomorrow (21.09.11) Velicham sherin interview telecast in Jaya tv - Kalai malar Program. this program discussed about psycho- social problems and sex affair of the students
புதிய தலைமுறைகல்வி இதழில் மாணவர்களுக்கு வழிகாட்டும் வெளிச்சம எனும் தலைப்பில் வெளியான கட்டுரையை உங்கள் பார்வைக்காக சமர்ப்பிக்கிறோம்....
நாளு பேருக்கு
நாமும் நல்லது செய்ய இணைவோம்..
பிச்சை எடுத்தாலும் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவாங்க என நம் தோழி மாத இதழில் வெளியான கட்டுரையை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்..
படித்த பிறகு யோசிங்க..
நாளு பேருக்கு நாமும் உதவுவோம்..(விண்ணப்ப படிவம்)
நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்
படித்த பிறகு யோசிங்க..
நாளு பேருக்கு நாமும் உதவுவோம்..(விண்ணப்ப படிவம்)
நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்































