Showing posts with label School Fees. Show all posts


இலவசங்களை மட்டுமே நம்பி ஆட்சியை பிடிக்கும் திராவிட இயக்கங்கள் இரண்டும் கல்வியினை வியாபரமாக்கபடுவதை வேடிக்கை பார்க்கத்தான் செய்கிறது. 

மகனுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்த பணம் இல்லாமல் 
தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதால்  கோவை பகுதிகளில் பதற்றம் காணப்பட்டது.. (இது எல்லோருக்கும் சாதாரண செய்தி)

 கோவை பீளமேடு மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர் தர்மராஜ். பஞ்சு குடோன் கலாசி தொழிலாளி. மனைவி சங்கீதா(29). தனியார் நிறுவன தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு சமையலறையில் சங்கீதா, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரை தர்மராஜ் காப்பாற்ற முயன்றார். இருவரும் படுகாயமடைந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 


இதில் சங்கீதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். 

சங்கீதா சாவதற்கு முன்னதாக அவர் கோவை கிழக்கு போலீசாரிடம் அளித்த மரண வாக்குமூலம்: 

           நானும், கணவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்தோம். இருவரும் வேலைக்கு செல்கிறோம். கடின உழைப்பாளிகள்.

கணவர் எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவர். அவரது சம்பளத்தை அப்படியே என்னிடம் கொடுத்து விடுவார். இருவரின் வருமானத்தை கொண்டு மகன் தர்ஷனை உப்பிலிபாளையத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி, யுகேஜி படிக்க வைத்தோம். எங்கள் வருமானத்தின் பெரும்பகுதி பள்ளிக் கட்டணத்துக்கே சென்று விடுகிறது. 

இந்நிலையில் இந்த ஆண்டு அதே பள்ளியில் மகன் முதல் வகுப்பு செல்கிறான். ரூ.12 ஆயிரம் கட்டணம் செலுத்துமாறு கூறினர். 

சேமித்த பணத்தில் ரூ.5 ஆயிரம் செலுத்திவிட்டோம். மீதி தொகையை செலுத்த முடியவில்லை. பணத்தைக் கட்ட வழி தெரியவில்லை. இதனால் தீக்குளித்தேன்’’ என்று தெரிவித்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்

 நன்றி: நக்கீரன்

 உலக புரட்சிகள் பற்றி பேசுகின்ற நாம் ஏன் கண்முன்னே நடக்கின்ற 
"கல்வி கொள்ளையை" கண்டுக்காமல் இருக்கிறோம். நாம் உண்டு நம் வேலை உண்டுன்னு போலாம்னு நினைக்கிறீங்களா. ஜப்பான்ல வந்த சுனாமி  நம்மூர்ல வந்தாலும் நாளைக்கு நாமளும் பிணம் …என்ன செய்யலாம் யோசிங்க… நமது நாட்டில் குறைந்தபட்சம் இவற்றுக்கெதிராகவேனும் ஒருங்கிணைந்து உரக்கக்குரல் எழுப்ப நாம் முனையலாமே...


(புகைப்படம்: நன்றி தமிழச்சி)

 

சென்னையில் சமீபத்தில் சேகரித்த எல்.கே.ஜி சேர்க்கை நடவடிக்கைகள் குறித்த தகவல்கள்:

1 . எல்.கே.ஜி.க்கு இன்டர்வ்யூ நடத்தாத தனியார் பள்ளிகளே இல்லை என்கிற நிலை

2 . மிகக்கடினமான இன்டர்வ்யூ நடத்துகிற பள்ளிகளே 'நல்ல பள்ளிகள்' என்கிற பெயர்

3 . மிக அதிகமாக பள்ளிக்கட்டணம் வசூலிக்கிற பள்ளிகளே 'சிறந்த பள்ளிகள்' என்கிற பெயர்

4 . பல 'பெரிய பள்ளிகள்', 'ப்ரீ.கே.ஜி. மற்றும் ப்ளே ஸ்கூல்களையும்' நடத்துகின்றன. அவற்றில் படித்த மாணவர்களுக்கே அப்பள்ளியின் எல்.கே.ஜி.யில் இடம் கிடைக்கும் என்கிற நிலை.

5 . எல்.கே.ஜி. சேர்க்கை படிவத்தில் ஒரு இடத்தில் 'பள்ளி வளர்ச்சி நிதியாக எவ்வளவு பணம் தங்களால் தர முடியும்?' என்கிற கேள்விக்கு நீங்களே குத்து மதிப்பாக ஒரு எண்ணிக்கையை பூர்த்தி செய்ய வேண்டும். மிக அதிகமாக பூர்த்தி செய்தவர்களுக்கு மட்டும் பள்ளியில் இடம். (மற்றவர்கள் எவ்வளவு போட்டிருக்கிறார்கள் என்கிற விவரம் தெரியாததால், எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு அதிக எண்ணை அதில் பூர்த்தி செய்வார்கள். #ரமணா படம் பார்த்த பாதிப்பு)

6 . சில பள்ளிகள் நேரடியாகவே வளர்ச்சி நிதியை (?!?) கேட்டுப்பெறுகிறார்கள். (இரண்டாண்டுகளுக்கு முன்பு ஆற்காடு வீராசாமியால் துவங்கப்பட்டு நடத்தப்படுவதாக சொல்லப்படுகிற சென்னை பப்ளிக் பள்ளியில் ஒன்றரை லட்சமாம் எல்.கே.ஜி இடத்திற்கு)


எல்.கே.ஜி. நுழைத்தேர்வு எப்படி இருக்கும்:

1 . எல்.கே.ஜி இண்டர்வ்யூவிற்கு ஹால் டிக்கெட் எல்லாம் உண்டு. பெற்றோர் தேர்வறைக்கு வெளியில்தான் நிற்கவேண்டும்.

2 . எல்.கே.ஜி பாடத்திட்டமனைத்தையும் கரைத்துக்குடித்தவர்களுக்கே எல்.கே.ஜி. யில் இடம் (பள்ளியில் சேர்ந்த பிறகு இவங்க என்னத்த சொல்லித்தருவாங்கன்னு தெரியல)

3 . எல்.கே.ஜி. இன்டர்வ்யூ கேள்விகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே கேட்கப்படுகிறது.
ஒரு பள்ளியில் கேட்கப்பட்ட கேள்விகளை உதாரணத்திற்கு தருகிறேன்:
Can you identify this object?
Do you know any English rhymes?
what is your favorite food?
(3 வயது குழந்தை தன் தாய்மொழியையே தட்டுதடுமாறிதான் பேசும் என்பதுகூட அறியாத முட்டாள்களா அவர்கள்)

4 . ஒரு 'பெரிய பள்ளியில்' ஒரு குழந்தையிடம் ஆங்கில எழுத்துக்கள் அனைத்தையும் எழுதிக்காட்ட சொல்லியிருக்கிறார்கள். அந்தக்குழந்தையும் எழுதியிருக்கிறது. ஆனாலும் அக்குழந்தைக்கு இடம் மறுக்கப்பட்டிருக்கிறது. காரணம் - கையெழுத்து நேராக இல்லையாம். கோடு போட்ட நோட்டில் எழுதுகிற திறமை இருக்கவேண்டுமாம்.

5 . பல நடுத்தரப்பள்ளிகளில் எல்.கே.ஜி இன்டர்வ்யூவில் தேர்ச்சி பெறாத குழந்தைகளையும் சேர்த்துக்கொள்கிறார்கள். ஆனால் காலையும் மாலையும் அதே பள்ளியில் முதல் ஆறுமாதம் ட்யூசன் சேர வேண்டும். அதற்கு தனி கட்டணம். ஆறு மாதத்தில் தேறவில்லையெனில் பள்ளியை விட்டு துரத்திவிடுவதாக குழந்தைகளை மிரட்டல்.



உலக புரட்சி என்றெல்லாம் பேசுகின்ற நாம் ஏன் கண்முன்னே நடக்கின்ற கல்வி கொள்ளையை கண்டுக்காமல் இருக்கிறோம்.எவன்   நாம் உண்டு நம் வேலை உண்டுன்னு போலாம்னு நினைக்கிறீங்களா. ஜப்பான்ல வந்த சுனாமி  நம்மூர்ல வந்தாலும் நாளைக்கு நாமளும் பிணம் …என்ன செய்யலாம் யோசிங்க…

நன்றி:  இ.பா.சிந்தன் 


வெளிச்சம் மாணவர்கள் இதற்காக மேற்கொண்ட  பணிகள்: