Showing posts with label Social. Show all posts


 21.09.11  அன்று ஜெயா தொலைக்காட்சியின்  காலைமலர் நிகழ்ச்சியில்  வெளிச்சம் அமைப்பின் இயக்குனர்   வெளிச்சம் செரின் அவர்களின் நேர்காணல் ஒளிபரப்பானது.. நிகழ்ச்சியில்  பேசிய செரின் அவர்கள்  மாணவர்கள் உளவியல் மற்றும் செக்ஸ் சார்ந்த     பிரச்சனைகளை பற்றி  பேசினார்.. குறிப்பாக 
  • ஏன் படிக்கும் வயதில் பிள்ளைகளுக்கு  காதல் வருகிறது
  • பெற்றவர்களை ஏன் பிள்ளைகள் வெறுக்கிறார்கள்    
  • மாணவர்களுக்கு செக்ஸ் கல்வி அவசியமா?   

 1போன்ற மாணவர்கள் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியை  பார்த்த  நிறைய நண்பர்கள் நம்மை தொடர்பு கொண்டு வாழ்த்தினர்.  நிறைய பேர் பார்க்க முடியவில்லை என்று வருத்தப்பட்டார்கள்.  ஒரு நண்பர் பதிவேற்றியிருக்கிறார் என  தகவல் கிடைத்தது அவருக்கு நன்றி சொல்லி கொள்கிறோம்..

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்





Tomorrow (21.09.11) Velicham sherin interview telecast in Jaya tv - Kalai malar Program. this program discussed about psycho- social problems and sex affair of the students



 சமூகத்தை பக்குவப்படுத்துகிற பொறுப்பும் கடமையும் உள்ளவர்கள் தானே ஆசிரியர்கள், அந்த ஆசிரியர்களுக்காக தத்துவார்த்தமான புனிதத்தை  தற்போதைய ஆசிரியர்கள் மறந்து போனதற்கான காரணங்களை தேடினால் விடை தெரியா கணக்காகி கிடைக்கிறது...

ஒரு பக்கம் கல்வி காசாகிப்போன சூழல் இன்னொரு பக்கம் சமச்சீர்கல்விக்கு காத்து கிடந்தது போக காயங்களுக்கு ஒட்டு போடலாம் ஆனால் புத்தகங்களுக்கு பேண்டேஞ்  போட்ட அவலமும் இங்குதான் நடக்கிறது..

எந்தவிதமான லாப நோக்கமில்லாமல் சொல்லி கொடுத்த எங்கள் ஆசிரியர்களே எங்களுக்கு கடவுளாக காட்சியளித்தாகள்... அவர்கள் எங்களுக்கு ஒழுக்கத்தை ஒழுக்கமாய் சொல்லி கொடுத்ததார்கள் அதனால் எங்களை  பலருக்கு ஆசிரியர்களே ரோல் மாடலாக இருந்தார்கள் அது ஒரு கனாக்காலம்...


இப்ப எங்க உண்மையான ஆசிரியர்கள் இருக்கா...

இந்த கேள்வி எல்லோருடைய மனதிலும் எழவே செய்கிறது அதற்கு சில காரணங்கள் இருக்கச்  செய்கிறது...

கும்பகோணம் பள்ளி  தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகியபோது எத்தனை ஆசிரியர்கள் காயம் பட்டார்கள்... என  சொல்ல முடியுமா?  நீங்க சொல்லலாம் வேதாரண்யம் பள்ளி வேன் விபத்தில் 11 குழந்தைகளை மீட்ட பின்னர் உயிரிழந்த ஆசிரியை சுகந்தி யை இத்தனை வருடங்களாக சுகந்தி மட்டும் தான் விதிவிலக்கு  அதன்பிறகு எத்தனை வேன் விபத்துக்கள் எத்தனை பலிகள் தமிழகம் முழுக்க இவை யெல்லாம் கல்வி பிசினஸ் ஆனதன் அடையாளம்  ...

பள்ளிக்கூட பொண்ணுங்களை சில்மிசம் செய்த ஆசிரியர்கள், பிராக்டிக்கள் மார்க் போட முத்தம் கேட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் பிவிசி பைப்பால் அடிச்சதால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவனென படிக்க அனுப்பிய பிள்ளைகளை பாடையில் அனுப்பிய கொடுமைகள் இங்கேதான் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.....

 இதுமட்டுமல்லாமல்  ஆசிரியர்கள் அழககழகான விதவிதமான காஸ்டியூம்களில் புடவைகளில் காட்டும் அக்கறையை ஒரு மாணவனின் உண்மையான வளர்ச்சியில் காட்டியதுண்டா? அப்படி காட்டியிருந்தால் இளம்குற்றவாளிகள் குறைந்திருக்க கூடும்..ஆனால் இவர்கள் பாடத்தை மட்டுமே எடுக்கிறார்கள் நமக்கொன்ன ஒரு கேள்வி என்றால் வெறும் படிப்பாளிக்ள் இந்த நாட்டுக்கு தேவையா? அப்படி வெறும் படிப்பாளிகளை உருவாக்க இவங்க பள்ளிக்கூடம் நடத்துறாங்களா இல்லை தொழிற்சாலையா நடத்துறாங்களா......

மீண்டும் சொல்லுகிறோம் சமூகத்திற்கு நல்ல படிப்பாளிகளை அல்லாமல் படைப்பாளிகளை உருவாக்கிய ஆசிரியர்கள் இருந்ததால் தான் இந்த தேசம் இன்னும் இருக்கிறது...

நாம் விரும்புவது ஆரோக்கியமான தேசத்தை நல்ல எதிர்காலத்தை கட்டமைக்கிற ஆசிரியர்களைத்தான் .....

ஒவ்வொரு  நாளும் கிடைக்கும் படிப்பினைகளில்  நீங்களும்  எமக்கு ஆசிரியர்களே..

எம்மை வளர்த்தெடுக்க .
உழைக்கும் நீங்களும் எமக்கு ஆசிரியர்களே!
உங்களுக்கு 
எம் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்








கிராமங்களில் ஒரு பையனை பற்றி விசாரித்தால் அந்த பையனா ரொம்ப நல்லவர்.. ஊர்ல நல்லது கெட்டதுண்ணா அந்த தம்பி கலந்துக்குவான் என்பார்கள் அப்போது… ஆனால் இன்று, மாறிப்போன “மாடர்னஸ்டு” உலகில் அவனா அவனுண்டு அவன் வேலையுண்டு இருப்பாண்னு சொகிறோமே இதுவா சமூக மாற்றத்திற்கு உதவ போகிறது…என நாம் யோசிக்கும் தருங்களில் இதை மாணவர்களிடம் சொல்லவேண்டும் என எண்ணிய வேலையில் கோவை பிஎஸ்.ஜி தொழில் நுட்பக்கல்லூரியில் மாணவர்கள் யூனியன் (STUDENTS UNION ) நடத்திய கிரியா 2011 நிகழ்ச்சியில் வெளிச்சம் மாணவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டார்கள்..
பரிசு வழங்கும் வெளிச்சம் செரின்


தமிழகத்தில் 85  வருடமாக  நடந்துவரும் கல்லூரியில் பேச வாய்ப்பு ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் வறுமை வாசனையே தெரியாத அ ந்த கல்லூரி மாணவர்களுக்கு என்ன சொல்ல போகிறோம்.. நம் கவலைகள் பணக்கார வாழ் நிலையில் வாழும் இவர்களின் காதுகளில் விழுமா என்றெல்லாம்  நமக்குள் படபடப்பு…..
நாம் எண்ணியவை எல்லாம் அப்படியே  நேர் எதிராக…  மாணவர் தலைவர் வெளிச்சம் செரின் அவர்களை வரவேற்று  பேசினார்.. நிகழ்ச்சியை மாணவர்கள் நடத்தியதால் மாணவர்கள் கூட்டதிற்கு பஞ்சமில்லை… பல விஞ்ஞானிகளை உருவாக்கிய கல்லூரி (விஞ்ஞான தமிழர் சந்திராய மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பயின்ற கல்லூரி) வெளிச்சம் செரின் பேசுகையில்….
                மாணவர்கள் தான் மாற்றத்திற்கு அடிதளமிட முடியும்.. மாணவர்கள்  பங்கெடுப்புகள் இல்லாத பொழுது சமூகத்தில் மாற்றங்கள் சாத்தியகில்லை என பேசிய போது மாணவர்கள் கர ஓசயோடு விசில்  சத்தமிட்டார்கள்..
  நிகழ்ச்சியின் படங்களை பார்வைக்கு வைக்கிறோம்

எங்கள் வளர்ச்சிக்கு உங்கள் வழிகாட்டுதலே காரணம்.... நன்றி

Kriya 2011 in PSG Tech Coiambatore


சமூக அக்கறை உள்ளவரா நீங்கள்
ஏழை மாணவர்களின் கல்விக்காக இணைவோம் வாரீர்…