பெண்களின் முன்னேற்றத்தில் சமூக இயக்கங்களின் பங்கு - வெளிச்சம் செரின் பேச்சு

Posted by Unknown - -


உறவுகளே! மகளிர் தின வாழ்த்துக்களோடு   முதல்தலைமுறை ஏழை மாணவர்களின் கல்வியின் மீது அக்கறை கொண்டிருக்கும் வெளிச்சம் மாணவர்கள் , பெண்களின் முன்னேற்றத்தில்தான் இச்சமூகம் சீர்படும் என உண்மையாக நம்புகிறோம் ,

 தற்போதைய சூழலில் இந்தியாவில் பெண்கள் தலைமைத்துவத்தை குறித்த தேசிய அளவிளான கருத்தரங்கம் (National Conference on Emerging Trends in Women Leadership in India ) திருச்சி ஹோலிகிராஸ் பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது. கருத்தரங்கத்தில் சிறப்பு பேச்சாரளராக வெளிச்சம் செரின் அவர்களை பெண்களின் முன்னேற்றத்தில் சமூக இயக்கங்களின் பங்கு என்கிற தலைப்பில் பேசிட அழைத்திருந்தார்கள்..

500க்கும் மேற்ப்பட்ட மாணவ- மாணாவியர் மத்தியில் பேச வெளிச்சம் செரின் அழைக்கப்பட்டார்..  மேற்க்கண்ட தலைப்பில் பேச அழைத்தமைக்கு பொறுத்தமான ஆள்தான்  அவர்..

(கண்டிப்பாக பெண் முன்னேறத்தை பேசுபர்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை தான் பேச்சின் சாரம்)

மகளீர் தினம் கொண்டாடுவதன் வரலாற்று பின்னனி:

 அமெரிக்கா சிக்காகோவில் உலகத் தொழிலாளர் தினமான மே தினம் பிறந்தது போல உலக மகளிர் தினமும் அமெரிக்காவில் தான் பிறந்தது. படுமோசமான பணி சுமைகளுக்கு ஆளாகிய பெண்கள், குழந்தைகளுக்கு நல்ல பராமரிப்பு தேவை ஆண்களுக்குச் சமமான வேலை உரிமையும், வாக்களிக்க உரிமையும் வேண்டும் என முழங்கிப் பல்லாயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் நியூயார்க் நகரத் தெருக்களில் 1857ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று வலம் வந்து தங்கள் மீதான  சுரண்டலை எதிர்த்து  போராடியதுதான் உழைக்கும் பெண்களின் முதல் போராட்டம். ஆனால் 1910 ஆம் ஆண்டு உலக சோஷலிச பெண்கள் மாநாடு நடைபெற்ற போது உலகப் பெண்களை ஒன்று திரட்டவும்,  உரிமைகளுக்காகப் போராடவும், ஒரு நாள் குறிக்கப்பட வேண்டும்.  அந்நாள் மார்ச் 8 ஆக இருத்தல் வேண்டும் என்று முடிவு செய்து.பிற்காலத்தில் அந்நாளே உலக மகளிர் தினமாக ஏற்கப்பட்டது. நாய்களைவிட மோசமாக  உழைத்தனர் பணியிடங்களில் உழைத்த பெண்கள். குடிசைகளிலும், சதுப்பு நிலங்களிலும் சாலைகளின் ஓரங்களில் உழன்று பணி செய்தும் உறங்கியும் குடும்பம் நடத்தியும் வாழ்ந்தனர். இதே 1857 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாள் ஜெர்மனியில் சாக்சனியில் கிளாரா ஜெட்கின் பிறந்தார். தொழிலாளி வர்க்க மக்களிடைக் கல்விப் பணி செய்த முதல் ஜெர்மனியப் பெண்மணி இவரே. 

பிரடெரிக் ஏங்கெல்சின் நெருங்கிய, நம்பிக்கைக்குரிய நண்பராகவும். ஆர்வம், துணிச்சல், அர்ப்பணிப்பு மனப்பான்மை மிக்கவராகவும், சிறந்த மார்க்சிய பெண்ணியவாதியாக  அனைவராலும் பாராட்டப் பெற்றவர், சர்வதேச சோஷலிஸ்ட் மகளிர் இயக்கத்தில் சேர்ந்து அந்த மாநாட்டில் நியூயார்க் மகளிர் எழுச்சி நினைவாக மார்ச் 8 உலக மகளிர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை எதிர்ப்பின்றி இயக்கத்தில் 5 இலட்சம் உறுப்பினர்கள் முன்னிலையில்  ஏகமனதாக கொண்டு வந்து.. ஈடிணையற்ற மாதர் தலைவியாக விளங்கியிருக்கிறார். 

1893 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் முதன் முதலில் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பெண்களுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பும், முதலாம் உலகப் போருக்குப் பிறகுதான் பெண்களுக்குத் தேர்தலில் வாக்களிக்க உரிமையும் வழங்கவும், பாராளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவைகள் தான் கிளாரா ஜெட்கின் கண்ட இயக்கத்தின் பலன்கள்.

பெண், மனைவியாகவோ, தாயாகவோ பிறரைச் சார்ந்து வாழ்க்கை நடத்துபவள் என்னும் இழி நிலைமை மாறவேண்டும் என்றார் கிளாரா. ஆண்களுக்குச் சரிநிகராக வேலை செய்து கூலிபெறும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தனித்து நின்று எல்லா வழிகளிலும் சிறப்பாக வாழ வேண்டும் என்றார், பெண்கள் பொருளாதாரச் சுதந்திரம் பெற்று யாரையும் சாராது தனித்து நின்று வாழ முடியும்  பொருளாதார நிலை உறுதியாக அமைய வேண்டுமென்றார். எந்தக் காரணத்தைக் கொண்டும் மேல்தட்டு பெண்களுடன் அவரது இயக்கம் தொடர்பு கொள்ளாது கிளாரா  அவர்களின் கருத்து. குழந்தை வளர்ப்பும், குடும்பப் பராமரிப்பும் சமுதாயக் கடமைகளாக ஆக்கப்படவேண்டும். தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு ஆள்பட்டவையாக இருக்ககூடாது எனவும். அவர் காலத்திலேயே அவரோடு சேர்ந்து பணியாற்றியவர்கள் பெண்கள் உழைப்பில் ஈடுபட்டால் ஆண் தொழிலாளர்கள் உரிமைகளும், ஊதியமும் பறிக்கப்படும் அல்லது பாதிக்கப்படும் என்று இவரோடு வாதாடினார்கள் அதில் வென்றார் ஜெட்கின்.   லெனின் நினைவுக்குறிப்புகள்என்னும் தம் நூலில் ஜெட்கின் லெனினைச் சந்தித்த போது அவர், “கலை மக்களுக்குச் சொந்தமானது என்கிறார் கிளாரா. அதன்பின்  ஹிட்லர் ஜெர்மனியில் ஆட்சிக்கு வருவதற்கு முன் ஜெர்மனியில் பாசிசம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. உழைப்பாளி வர்க்கம் கொடிய அடக்குமுறைக்கு ஆளாகும் நிலை ஏற்படும் என்று எச்சரித்த கிளாரா ஜெட்கின், எச்சரித்த சில நாட்களிலேயே 1933 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 20 ஆம் நாளன்று மாஸ்கோவில் காலமானார். கிளாரா ஜெட்கின் நினைவாக உலக மகளிர் தினம் எல்லா நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. மே தினம் தொழிலாளர்களுக்கு எவ்வாறு புனிதமானதோ அவ்வாறு மார்ச் 8 மாதர்களுக்குப் புனித நாள். வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்.

இந்திய சூழலில் பெண்கள் :

 பெண்கள் ஒரு உயிரினமாக மதிக்காத சமூகம்  இந்திய சமூகம், படிப்பதற்க்கு, பிடிப்பவரை திருமனம் செய்துகொள்வதற்கு, என  வரிசையாக பெண்ணுரிமைகள் இன்று இருப்பதற்க்கு எத்தனையோ பெண்கள் தியாகம் செய்தார்கள் என்பதுஎத்தனை பேருக்கு தெரியும் என்றார்.. பெண்கள் ஜாக்கெட் போடகூடாதுன்னு சட்டமிருந்ததும், மார்புக்கு வரிக்கட்டியதை எதிர்த்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தனது  மார்பை அறுத்து வீசிய  பெண்கள் வாழ்ந்த மண் இது.. ஆனால் இப்படி பெற்ற உரிமை எப்படி இருக்கிறது.... என தனது வழக்கமான பாதைக்கு திரும்பினார் செரின்..

பெண்களின் இன்றைய நிலை:

மார்புக்கு  வரிக்கட்டனும் என்பதை எதிர்த்து  மார்பை அறுத்து வீசிய  பெண்கள் வாழ்ந்த பூமியில ஜன்னல் வச்ச ஜாக்கெட், முதுகு முழுக்க தெரியுர மாதிரி ஜாக்கெட்டு, என்ன இதுவா முன்னேற்றம், இப்படி போனாம் ஆம்பலைங்கள் என்ன பண்ணமாட்டாங்க, நாம எல்லாத்தையும் தெரியுர மாதிரி உடை போட்டா  அவங்க பார்பாங்கதான் பார்த்தா, பார்த்துட்டு போன்னு விட்டுட்டு வேலையை பாருங்க, கொடுத்துட்டா போடான்னூட்டு போ! எப்ப மாடர்னா மாறனும்னு முடிவு பண்ணிட்டியோ, மனசையும் மாடர்னா மாத்திக்கோ, நீ படிக்க வந்திருக்கீங்க, பெத்தவங்க கண்ணீருல காலேஜிக்கு வந்திருக்கீங்க... நீ தப்பு பண்ணி பாலாய் போன்னா உனக்கு பின்னாடி வர்ற பெம்பளை பிள்லைகளுக்கு யார் வழிகாட்டுவா !  ஜன்னல் வைச்ச ஜாக்கெட் நம்மளை காப்பாது, நாம் தான் நம்மை காப்பாத்திக்கனும், அழகு உன்னை வளர்க்காது அறிவுதான் உன்னை வளர்க்கும், அறிவை நம்புங்கள் என சொல்லும் போது கூட்டம் அமைதியாக கவனித்து, இதவிடுங்க  உழைக்கும்  பெண்கள் போராடி வாங்குன  தினமாக இன்னைக்கு எப்படியிருக்கு  பான்ஸ் மகளீர் தினம், பேரன் லவ் லி பெண்கள் தினம், இன்னும் இருக்கு என சொல்ல பயங்கர கைதட்டல், மேலும் பெண்களே தைரியம் வேண்டும், திமிர் வேண்டாம் என மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் வெளிச்சம் மாணவிகள் மகளீர் தினத்திற்கு  நாங்கள் ஒரு உறுதி மொழி எடுக்க போறோம் என  சொன்னாங்க...  ஏன்னு கேட்ட்துக்கு எல்லாம் எங்கம்மா எங்கப்பாவை பண்ணுற டார்ச்சர் தான் என்றார்கள்.. ஆக ஆணுக்கு சம்ம் பெண் என்பது ஆண் சிகரெட் அடிச்சா நானும் சிகரெட் அடிப்பேன் நீயென்ன செய்வேன்னு சொல்லுறதில் இல்லை.. தைரியமாக, அறிவாளியாக, யாரையும் ஏமாற்றாமல், யாரிடமும் ஏமாராமல்,   நாளு பேருக்கு நல்லது பண்ணி அதில் கிடைக்கிற சந்தோசத்துல வாழ்ந்தால் பெண்கள் தலைமை பெற்றவர்களாக விளங்குவார்கள் என்றார் இறுதியாக.....





Women need to enter politics in large numbers to clean the system, asserted speakers at the national conference on ‘Emerging trends in women leadership in India' jointly organised by the Women Studies Centres of Holy Cross and Cauvery College for Women on March 1-2011
 நன்றி: தி இந்து



சமூக அக்கறை உள்ளவரா நீங்கள்

ஏழை மாணவர்களின் கல்விக்காக இணைவோம் வாரீர்…
பதிவு செய்ய:

3 Responses so far.

  1. Anonymous says:

    மிகவும் அற்புதமான கட்டுரை.. தமிழ் மாணவியருக்கு வெளிச்சம் காட்டும் வெளிச்சத்துக்கு எனது வாழுத்துக்கள் அய்யா !!!

  2. // மார்புக்கு வரிக்கட்டனும் என்பதை எதிர்த்து மார்பை அறுத்து வீசிய பெண்கள் வாழ்ந்த பூமியில ஜன்னல் வச்ச ஜாக்கெட், முதுகு முழுக்க தெரியுர மாதிரி ஜாக்கெட்டு, என்ன இதுவா முன்னேற்றம், இப்படி போனாம் ஆம்பலைங்கள் என்ன பண்ணமாட்டாங்க, நாம எல்லாத்தையும் தெரியுர மாதிரி உடை போட்டா அவங்க பார்பாங்கதான்..... //

    இந்த வரிகள் ரொம்ப யோசிக்க வைக்குது. அவசியம் எல்லோரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய கட்டுரை!!

  3. Unknown says:

    thelirntha nirodai pontra pennai pennakkum katturai.

    vazhuthukkal ennum velicham piragam adaiya

Leave a Reply