Showing posts with label பள்ளி மாணவிகள். Show all posts


ள்ளிக் கூடத்தில் குழந்தைகளை அடிக்கக் கூடாது’ என்று அரசு உத்தரவு போட்டு பல வருடங்கள் ஆன பிறகும், சில பள்ளிகளில் அந்தக் கொடுமை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் சென்னை வேளச்சேரியில் இருக்கும் சிவசக்தி மெட்ரிகுலேசன் பள்ளி. இந்தப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் களை பள்ளியின் துணை முதல்வரான ஜான்சி, பிரம்பு கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட அடி கொடுத்திருக்கிறார் என்பதுதான் பிரச்னை.

தங்கள் அடையாளங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு நம்மிடம் பேசிய மாண வர்கள், ''சயின்ஸ் சப்ஜெக்ட் சம்பந்தமா எல்லோரும் பிராக்டிகல் அப்சர்வேஷன் எழுதணும். பப்ளிக் எக்ஸாம் வர்றதால, எல்லோரையும் அப்சர்வேஷன் முடிச்சு வைக்கச் சொன்னாங்க. அப்சர்வேஷன் நோட்ல ஒரு வார்த்தை தப்பா இருந்தாக்கூட, புதுசா எழுதணும்னு சொன்னாங்க.
அதனால ஒவ்வொருத்தரும் நான்கு முறையாவது அப்சர்வேஷன் எழுத வேண்டியதாயிடுச்சு. நல்லாத் தான் எழுதி இருந்தோம். அதிலும் தப்பு கண்டுபிடிச்சு திரும்பவும் எழுதச் சொன்னாங்க. தினமும் ரிவிஷன் டெஸ்ட் நடக்குது. ஸ்கூல் முடிச்சு வீட்டுக்குப் போகவே இரவு 7.30 மணி ஆயிடுது. அதனால இரவெல்லாம் உட்கார்ந்து எழுதினாக்கூட முடிக்க முடியலை. அதுக்குத்தான் ஜான்ஸி மிஸ் பிரம்பால, ரத்தம் வர்ற வரைக்கும் அடி பின்னிட்ட்டாங்க.

வீட்டுக்குப் போனதும் காய்ச்சல் வந்துடுச்சி. டாக்டர் உடம்புல இருக்குற காயத்தைப் பார்த்துட்டு வீட்டுல சொல்லிட்டார். சில பசங்களுக்கு எலும்பு வீங்கிடுச்சி. பலருக்கு உடம்பு முழுக்க ரத்தக் கட்டு. எங்க பெயரையோ போட்டோவையோ போட்டீங் கன்னா நாங்க மறுபடியும் ஸ்கூலுக்குப் போகவே முடியாது'' என்று மிரண்டபடி சொன்னார்கள்.

குற்றம் சாட்டப்படும் பள்ளியின் துணை முதல்வர் ஜான்சியிடம் பேசினோம். ''நாங்களும் மனுஷங்கதானே.. குழந்தைகளை ரத்தம் வரும் அளவுக்கு அடிப்போமோ? தேவை இல்லாம இந்தப் பிரச்னையை பெருசாக்கிட்டாங்க. நாங்க பதில் சொல்ல வேண்டியது பெற்றோருக்குத்தான்! அவர் களிடம் சொல்லிட்டோம். வேற யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை'' என்று முடித்துக்கொண்டார்.

'அன்பினால் சாதிக்க முடியாததை அடியினால் சாதிக்க முடியும்...’ என்று ஆசிரியர்களே நம்புவது எத்தனை அறிவீனம். இவர்களுக்குப் பாடம் நடத்தப் போவது யார்..


நன்றி.ஜூனியர் விகடன்


வெளிச்சம் மாணவர்கள் வலைபூ வாசகர்களே!

நாங்கள் கடந்த 7 வருடமாக ஏழைகளுக்கான கல்விப்பணியோடு தமிழகத்தின் பல்வேறு பள்ளி- கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கான பாலியல் மற்றும் உளவியல் தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்தி மாற்றத்தை ஏற்படுத்தி வருவதை வலைபூ வழியாக தாங்கள் அறிவீர்கள் ஆனால் கீழே நீங்கள் படிக்க போகும்  சம்பவம் எமது 7 ஆண்டு வேலைக்கு சவால் இந்த மண்ணில் சீரழிந்து போகும் மாணவனையும் எமக்கான அவமானம்...

இந்த சம்பவம் எம் தூக்கத்தை கலைத்தது, வலியால் துடித்து போனோம், பெற்றோர்கள் ஆசிரியர்கள் எப்படி இருக்க்கூடாது என்பதற்கு இந்த சம்பவம் 
ஒரு பாடம்..


    வயசுக் கோளாறு, பெற்றோர் - ஆசிரியர்கள் கவனிப்பு இன்மை காரணமாக டீன் ஏஜ் மாணவ, மாணவிகள் நடத்திய 'மன்மதலீலை’யால் ஓர் உயிர் பலியாக, பலரது வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டியை அடுத்த பாதிரிவேடு கிராமத்தில் அரசினர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் ப்ளஸ் டூ மாணவர்கள் ஐந்து பேரும், ப்ளஸ் ஒன் மாணவிகள் இருவரும் நட்போடு பழகி இருக்கிறார்கள். இந்த நட்பு அளவுக்கு மீறி, 'விபரீத’ எல்லைக்குள் நுழைந்திருக்கிறது. கடந்த 17-ம் தேதி சனிக்கிழமை பள்ளி விடுமுறை. ஸ்பெஷல் கிளாஸ் என்று பொய் சொல்லிவிட்டு பள்ளிக்கு வந்த ஏழு பேரும், எசகுபிசகான பாடம் படித்திருக்கிறார்கள். அதனை அவர்களில் ஒரு மாணவன் செல் போனில் படம் பிடித்தும் வைத்துள்ளான். பேச்சுவாக்கில், அந்தப் படங்களை சில மாணவர்களிடம் காட்டி இருக்கிறான். அது மற்றவர்களுக்கும் பரவிப் பரவி, இன்டர்நெட் வரை படம் போயேவிட்டது.


உடனே, தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவி கள் அத்தனை பேரையும் பள்ளியை விட்டு நீக்கியுள்ளார். இந்த விவகாரத்தில் சிக்கியவர்களில் செதில்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திலகவதியும் ஒருவர். அவர், 21-ம் தேதியன்று தனது வீட்டில் பிணமாக தொங்கினார். 'ஆபாசப் பட விவகாரத்தால்தான் மனமுடைந்து திலகவதி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணமாக ஐந்து மாணவர்களையும் கைது செய்ய வேண்டும்’ என்று, மாணவியின் பெற்றோரோடு சேர்ந்துகொண்டு, ஏரியாவாசிகளும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அதனால், தற்கொலைக்குத்தூண்டியதாக ஐந்து மாணவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்த பாதிரிவேடு போலீஸார், கங்கா, சுமன், கார்த்திக் என்ற மூன்று மாண வர்களைக் கைது செய்தார்கள். தங்கராசு மற்றும் செல்வகுமார் ஆகிய இருவரும்  தலைமறைவாகி விட்டார்கள். இந்த நிலையில், வடக்கு மண்டல ஐ.ஜி-யான சைலேந்திரபாபு ஸ்பாட்டுக்கே வந்து விசாரணை நடத்த, திலகவதி மரணத்தில் திகில் திருப்பம்.

'திலகவதியை அவரது சித்தப்பா ஹரி கொலை செய்து விட்டார்’ என்று அறிவித்திருக்கும் பாதிரிவேடு போலீஸாரிடம் விசாரித்தோம். ''திலகவதியின் மரணம் பற்றி தகவல் அறிந்து நாங்கள் ஸ்பாட்டுக்குச் சென்றபோது, அவரது பிணம் கீழே இறக்கி வைக்கப்பட்டு இருந்தது. அப்போதே எங்களுக்கு சந்தேகம். ஸ்பாட்டுக்கு வந்து விசாரணை நடத்திய ஐ.ஜி. சைலேந்திரபாபு, 'இது தற்கொலையாகத் தெரியவில்லை. நன்றாக விசாரியுங்கள்’ என்று அறிவுறுத்திவிட்டுச் சென்றார். அதனையடுத்து திலகவதியின் உறவினர்களிடம் கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. குமார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த.... உண்மை வெளிவந்தது.

'குடும்பத்துக்கே பெரிய அவ மானத்தை ஏற்படுத்தி விட்டார் திலகவதி என்று, அண்ணி பத்மாவதி அழுதார். அதனால், இந்தக் களங்கத்தைத் துடைக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை. சம்பவத்தன்று அண்ணன் வீட்டுக்குச் சென்று திலகவதியிடம் விசாரித்தேன். ஏதேதோ சொல்லி மழுப்பினார். ஆத்திரத்தில் ஓங்கி அடித்தேன். மயங்கி விழுந்து விட்டார். வீட்டில் இருந்த புடவையால், கழுத்தை இறுக்கிக் கொலை செய்தேன். பின்னர், மின் விசிறியில் பிணத்தை தொங்கவிட்டுவிட்டு கிளம்பி வந்துவிட்டேன்’ என்று வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார் ஹரி. இந்தக்
கொலைக்கு உடந்தையாக இருந்த காரணத்தால் திலகவதியின் அம்மா பத்மாவதியையும் கைது செய்திருக்கிறோம்'' என்று சொன்னார்கள்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜி டம் பேசினோம். ''இந்த ஐந்து மாணவர்களும் செய்த அடாவடி  அதிகம். நான் இந்தப் பள்ளிக்கு வந்தே நான்கு மாதங்கள்தான் ஆகிறது. இந்த ஐந்து மாணவர்களையும் பலமுறை பள்ளியை விட்டு துரத்தி இருக்கிறேன். பின்னர், மன்னிப்புக் கடிதம் கொடுத்து சேர்ந்து விடுவார்கள். சரி... இன்னும் நாலு மாசத்துல ப்ளஸ் டூ முடிச்சுட்டுப் போயிடுவாங்க... வாழ்க்கையைக் கெடுக்க வேண்டாம் என்று நினைத்துதான் விட்டு வைத்தேன். ஆனால், அதற்குள் இப்படி நடந்து விட்டது'' என்றார் வருத்தமாக.

முதன்மைக் கல்வி அலுவலர் மோகன் குமாரை சந்தித்தோம். ''குறிப்பிட்ட ஐந்து மாணவர்களும் கடந்த ஆண்டும் இதேபோன்று ஒரு பாலியல் புகாரில் சிக்கினார்கள். அப்போதே டி.சி. கொடுத்தோம். பின்னர், மாணவர்களின் பெற்றோர் மன்னிப்புக் கேட்டதால் மீண்டும் பள்ளியில் சேர்த்தோம். திருந்தி விடுவார்கள் என்று நினைத்தோம், ஆனால், இந்த அளவுக்குக் கெட்டுப் போய், தீராத அவமானத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். மாணவர்கள் செய்யும் தவறுகளை ஆசிரியர்கள் சுட்டிக் காட்டிய பிறகும், பெற்றோர் பொறுப்பு இல்லாமல் இருந்திருக்கிறார்கள். இனி, பள்ளிகளில்  கண் காணிப்பை தீவிரப்படுத்துவோம்'' என்றார்.

இந்த விவகாரம், பருவ வயதில் குழந்தைகளை வைத்திருக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் பாடம்!



நன்றி: ஜூனியர் விகடன் - 28.12.11
_____________________________________________________________________________________________
Summary :


Thiruvallur District, Taluka kummitippunti,patirivetu to the government secondary schoolstudents in five, girls are getting together with friends. This friendship is overloaded, sex goes up, a few days ago, a special class that parents lied to me, the school hall to go where the students at ease sexually,The scenes recorded on mobile phone by students and that sex videos publishing on the Internet, the problem was issue leakage on parents, in this matter knowing  the student  THILAGAVATHI.S Uncle Hari, Harry killed her in rage,So he and other students were arrested by police



 சமூகத்தை பக்குவப்படுத்துகிற பொறுப்பும் கடமையும் உள்ளவர்கள் தானே ஆசிரியர்கள், அந்த ஆசிரியர்களுக்காக தத்துவார்த்தமான புனிதத்தை  தற்போதைய ஆசிரியர்கள் மறந்து போனதற்கான காரணங்களை தேடினால் விடை தெரியா கணக்காகி கிடைக்கிறது...

ஒரு பக்கம் கல்வி காசாகிப்போன சூழல் இன்னொரு பக்கம் சமச்சீர்கல்விக்கு காத்து கிடந்தது போக காயங்களுக்கு ஒட்டு போடலாம் ஆனால் புத்தகங்களுக்கு பேண்டேஞ்  போட்ட அவலமும் இங்குதான் நடக்கிறது..

எந்தவிதமான லாப நோக்கமில்லாமல் சொல்லி கொடுத்த எங்கள் ஆசிரியர்களே எங்களுக்கு கடவுளாக காட்சியளித்தாகள்... அவர்கள் எங்களுக்கு ஒழுக்கத்தை ஒழுக்கமாய் சொல்லி கொடுத்ததார்கள் அதனால் எங்களை  பலருக்கு ஆசிரியர்களே ரோல் மாடலாக இருந்தார்கள் அது ஒரு கனாக்காலம்...


இப்ப எங்க உண்மையான ஆசிரியர்கள் இருக்கா...

இந்த கேள்வி எல்லோருடைய மனதிலும் எழவே செய்கிறது அதற்கு சில காரணங்கள் இருக்கச்  செய்கிறது...

கும்பகோணம் பள்ளி  தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகியபோது எத்தனை ஆசிரியர்கள் காயம் பட்டார்கள்... என  சொல்ல முடியுமா?  நீங்க சொல்லலாம் வேதாரண்யம் பள்ளி வேன் விபத்தில் 11 குழந்தைகளை மீட்ட பின்னர் உயிரிழந்த ஆசிரியை சுகந்தி யை இத்தனை வருடங்களாக சுகந்தி மட்டும் தான் விதிவிலக்கு  அதன்பிறகு எத்தனை வேன் விபத்துக்கள் எத்தனை பலிகள் தமிழகம் முழுக்க இவை யெல்லாம் கல்வி பிசினஸ் ஆனதன் அடையாளம்  ...

பள்ளிக்கூட பொண்ணுங்களை சில்மிசம் செய்த ஆசிரியர்கள், பிராக்டிக்கள் மார்க் போட முத்தம் கேட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் பிவிசி பைப்பால் அடிச்சதால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவனென படிக்க அனுப்பிய பிள்ளைகளை பாடையில் அனுப்பிய கொடுமைகள் இங்கேதான் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.....

 இதுமட்டுமல்லாமல்  ஆசிரியர்கள் அழககழகான விதவிதமான காஸ்டியூம்களில் புடவைகளில் காட்டும் அக்கறையை ஒரு மாணவனின் உண்மையான வளர்ச்சியில் காட்டியதுண்டா? அப்படி காட்டியிருந்தால் இளம்குற்றவாளிகள் குறைந்திருக்க கூடும்..ஆனால் இவர்கள் பாடத்தை மட்டுமே எடுக்கிறார்கள் நமக்கொன்ன ஒரு கேள்வி என்றால் வெறும் படிப்பாளிக்ள் இந்த நாட்டுக்கு தேவையா? அப்படி வெறும் படிப்பாளிகளை உருவாக்க இவங்க பள்ளிக்கூடம் நடத்துறாங்களா இல்லை தொழிற்சாலையா நடத்துறாங்களா......

மீண்டும் சொல்லுகிறோம் சமூகத்திற்கு நல்ல படிப்பாளிகளை அல்லாமல் படைப்பாளிகளை உருவாக்கிய ஆசிரியர்கள் இருந்ததால் தான் இந்த தேசம் இன்னும் இருக்கிறது...

நாம் விரும்புவது ஆரோக்கியமான தேசத்தை நல்ல எதிர்காலத்தை கட்டமைக்கிற ஆசிரியர்களைத்தான் .....

ஒவ்வொரு  நாளும் கிடைக்கும் படிப்பினைகளில்  நீங்களும்  எமக்கு ஆசிரியர்களே..

எம்மை வளர்த்தெடுக்க .
உழைக்கும் நீங்களும் எமக்கு ஆசிரியர்களே!
உங்களுக்கு 
எம் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்








படிக்க அனுப்பப்படும் பிள்ளைகளை ஆசிரியர்கள் தங்களது சுய வேலைக்கு பயன்படுத்தப்படும் கொடுமை தமிழகத்தின் பல்வேறு கல்விக்கூடங்களில்  இன்னமும் சத்தமில்லாமல் நடந்துகொண்டே இருக்கிறது...

உதாரணமாக  தான் பயன்படுத்திய டாய்லெட்டை கழுவசொல்லுவது, கல் தூக்க சொல்லுவது, கிரவுண்ட் சுத்தம் செய்வது, டீச்சர்ஸ் சாப்பிட்ட பாத்திரங்களை கழுவ சொல்லுவது, காய்கரிகளை வாங்கிவரச்சொல்லுவது போன்ற வேலைகளை செய்ய சொல்லுவதும் மாணவர்களோ! டீச்சர்ருக்கு பிடித்த பையனாக இருக்க வேண்டும் என்பதற்காக நம்மை செய்ய சொல்லமாட்டாங்களா என அறியாமையில் கிடப்பதும் இங்குதான் நடக்கிறத்கு.... அந்தவகையில்  ஆசிரியர் சொன்ன வேலையை செய்து கொண்டிருந்த மாணவன் இறந்து போன கொடுமையும் பட்டியலில் சேர்ந்துள்ளது....

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர் பேட்டைக்கு அடுத்துள்ள  அருகே உள்ள சேப்பாக்கம் கிராமத்து  பள்ளி மாணவர்கள் எல்லாம் பள்ளிக்கு போகாமல் தேசிய நெடுஞ்சாலையை மறியலில் ஈடுபட  சுமார்  நான்கு மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது..
போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட நாம் நிலைமை விசாரிக்க போனோம்.. மாணவர் பிரச்சனை என்றதும் விசாரித்தோம்…

நம்மிடம் பேசிய மாணவர்கள்
எங்க ஊர்  வெல்பர் ஸ்கூல்ல (ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப் பள்ளி ஆனாலும் எல்லா சமூகத்து மாணவர்களும் படிக்கிறார்கள் ), பிளஸ் 2 படிக்கிற ராஜதுரைக்கு நேற்று கொமிஸ்ட்ரி லேப், லேப் முடிச்சிட்டு போன ராஜ துரையை கூப்பிட்ட டீச்சர் பாண்டியன் லேப் முழவதையும்  கிளீன்பண்ணிட்டு  பூட்டிட்டு வந்துவிடு என சொல்லிவிட்டு போனார்,  அவர் போன கொஞ்ச நேரத்துல  ராஜதுரை அலறுகிற சத்தம் கேட்டுச்சு நாங்க ஓடி போய் பார்த்தோம்  அறுந்து கிடந்த ஒயரை அப்புற படுத்தும் போது காரண்ட்  பிடிச்சி உயிருக்கு போராடினான் கொஞ்ச நேரத்துல மெல்ல மெல்ல லேசா உயிர் போறத நாங்க பார்த்தோம்  என சொல்லும் போது உயிரின் வழியை பார்க்க முடிந்தது...

சாலையில் மகனின் சாவுக்காக போராடும் பிள்ளைகளை  பார்த்து கதறிக்கொண்டிருந்தார் ராஜதுரையின் தாயும் தந்தை முருகேசனும்..

நாம் ராஜதுரையின் தந்தையான முருகேசனிடம் பேசினோம்... படிக்க அனுப்பினேன் சாமி இவங்க பாடையில அனுப்பியிருக்காங்களே இனி நான் என்ன செய்வேன் என தொடர்ந்து  பேசமுடியாதவராய் மூச்சிரைத்து போனார்..

உறவுக்காரரான கட்டிமுத்துவிடம் பேசினோம்
உடலை போஸ்மாடம் செய்ய பெற்றவர்களிடம் தகவல் சொல்லாமலே விருத்தாசலம் கொண்டு போனாங்க.. ரோட்டை மறிக்கவே விருத்தாசலம் ஆர்.டி.ஓ., ஆனந்தகுமார், தாசில்தார் (பொறுப்பு) காமராஜ், டி.எஸ்.பி.,க்கள் விருத்தாசலம் அறிவழகன், திட்டக்குடி வனிதா  ஆகியோர் பேச்சு நடத்தினர். மாணவன் ராஜதுரை குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்; மாணவன் சாவுக்கு காரணமான தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை கைது செய்து, பணி நீக்கம் செய்ய வேண்டும்; நிர்வாகத்தை முற்றிலுமாக மாற்றி அமைக்க வேண்டும்; இதுகுறித்து உறுதி அளிக்க கலெக்டர் மற்றும் எஸ்.பி., நேரில் வர வேண்டும் என்று கூறினோம் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், தலைமை ஆசிரியர் ராஜராஜன், ஆசிரியர் பாண்டியன் ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பதாகவும், மற்ற ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாகவும், இறந்த மாணவர் ராஜதுரை குடும்பத்திற்கு அரசின் நிவாரண உதவித்தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதி அளிச்சாங்க..என்றார் கட்டிமுத்து...

நிவாரணங்கள்  மட்டும்  போன உயிரை திருப்பிகொடுக்காது...
லட்சங்களை கொட்டி கொடுக்கலாம், கோடிகளில் கொட்டி கொடுக்கலாம்  பிள்ளையோடு இருந்த ஒரு பொழுதை இவர்களால் மீண்டும் கொடுக்க முடியுமா?

நீதி உங்கள் கைகளில் இணைவோம்.....Velicham Application 

.
வெளிச்சம் தீபா..



 கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் வடகராம்பூண்டி கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலிருந்து எங்க பள்ளிகூட ஆசிரியர்கள் இன்னும் யாரும் வரவில்லை நீங்களாவது வாங்க என  வெளிச்சத்திற்கு அந்த கிராம இளைஞர்களிடமிருந்து அழைப்பு வந்தது என வெளிச்சம் மாணவர்களின் சார்பாக நாமும் சென்றோம். சுமார் 55 பிள்ளைகள் படிக்கும் அந்த பள்ளியில் வழக்கம்போலவே சார் வரவில்லை என்றார்கள் மாணவர்கள்...  நமக்கு பெயரளவில் மிட்டாய்க்காக மட்டும் சுதந்திர தினம் கொண்டாடுவதில் துளியளவும் விருப்பமில்லை ஆனாலும்  மாணவர்களின் ஆர்வத்தை புரிந்து கொண்டு நாம் இவர்களை வழிகாட்டதவறினால் யார் வழிகாட்டுவது என எண்ணினோம்.... நிகழ்ச்சியினை வெளிச்சம் மாணவர்கள் கொஞ்சம் மாற்றி தேசிய கொடியேற்றினோம் அந்த்  மாற்றம் என்ன வெனில் தேசிய கொடியை ஏற்றுவதை வேடிக்கை மட்டுமே பார்த்திருந்த எழுத படிக்க தெரியாத சட்டைப்போடாத பொதுஜனங்கள் தான் ..... விழாவில் ஏன் இன்னும் இந்த தேசத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது அதிலும் குறிப்பாக ஏழைகளுக்கு கல்வி கனவாக இருக்கிறது என வெளிச்சம் மாணவர்களின் மாநில அமைப்பாளர் பேசினார்..

மாற்றம் நம்மிலுருந்துதான் ஆரம்பம் ஆகவேண்டும் என்பது வெளிச்சத்தின் கொள்கைகளில் ஒன்று.. ஆம் இந்த சுதந்திர தினவிழாவில் சட்டை போடாதவர்கள் தேசிய கொடியேற்றியதும் மாற்றம் தானே...

களப்பணியில்
வெளிச்ச்ம் மாணவர்கள்






""டாக்டர்! நாங்க நாலு பேரும், கொஞ்ச நாளைக்கு முன்னால, கேரளா போய் "ஜாலியா' இருந்துட்டு வந்தோம்; இப்போ, எங்களுக்குப் பயமா இருக்கு சார், எங்களுக்கு எச்.ஐ.வி., டெஸ்ட் பண்ணணும்...'' வார்த்தையை முடிப்பதற்குள் சொன்னவனை ஓங்கி அறைந்தார் அந்த டாக்டர்; மற்ற மூன்று பேரும் ஓரடி பின் வாங்கினர். காரணம், அவர்கள் நால்வரும் கோவையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். நகரின் முக்கிய மருத்துவமனையில் பணியாற்றும் பாலியல் மருத்துவரின் அறையில் நடந்தது இந்த நிகழ்வு. இதற்கு மேல்தான் காத்திருக்கிறது அதிர்ச்சி.

மாணவர்கள் ஏதோ பயத்தில் வந்திருக்கின்றனர் என்று நினைத்து, அவர்களை பரிசோதித்துப் பார்த்த போது, அவர்களில் ஒரு மாணவனுக்கு எச்.ஐ.வி., பாசிட்டிவ் என்று தெரியவந்தது." "எத்தனையோ எச்.ஐ.வி., பேஷன்ட்களுக்கு நான் "ட்ரீட்மென்ட்' கொடுத்திருக்கேன்.  இந்த வயசுல, இப்பிடி வந்து நின்ன பசங்க இவங்க மட்டும்தான். நம்ம கலாச்சாரமும், வாழ்க்கை முறையும் எங்கே போகுதுன்னு நினைச்சப்ப, எனக்கு நாலு நாளா தூக்கமே வரலை,'' என்று முடித்தார் அந்த டாக்டர்.


கோவையிலுள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மேல் தட்டு மாணவர்கள் பலரிடம், அதி நவீன மொபைல் போன்கள் சர்வ சாதாரணமாகப் புழங்குகின்றன. அவற்றில், அதிவேக இன்டர்நெட் இணைப்பும் கிடைக்கிறது. இல்லாவிட்டால், இன்டர்நெட்டில் இருந்து அவர்களே, இறக்கி வைத்துக்கொள்கின்றனர். காசைக் கொட்டுவதற்கு, இவர்களின் பெற்றோர் தயங்குவதே இல்லை.இந்த வாழ்க்கை முறைதான், இந்த மாணவர்களை மரணத்தின் விளிம்பு வரைக்கும் கொண்டு சென்றிருக்கிறது.


கலாசாரத்தின் ஆணிவேர்களில் அமிலத்தை ஊற்றும் இந்த தகவல் தொடர்பு சாதனங்கள், தேசத்தின் வளர்ச்சிக்கு உதவுவதற்குப் பதிலாக, இந்த தேசத்தின் நாளைய மன்னர்களுக்கு சவக்குழிகளை வெட்டிக் கொண்டிருக்கின்றன. பல மாதங்களாக ஆபாச படங்களை காட்சிகளாகப் பார்த்துப் பழகி, அதற்கு அடிமையாகி விட்ட நிலையில்தான், இந்த மாணவர்கள் அடுத்த கட்ட முயற்சிக்குப் போயிருக்கின்றனர். இவர்களைப் போலவே, இன்றைக்கு ஏராளமான மாணவர்கள் பிரவுசிங் சென்டர்களுக்குள் புகுந்து, வாழ்வுக்கான அழிவைத் தேடிக் கொள்கின்றனர்.


விளையாட்டாக "வீடியோ கேம்ஸ்'களை மட்டுமே ரசித்த பள்ளி மாணவர்கள், ஆபாச வலைதளங்களையும் அடிக்கடி நலம் விசாரிக்கின்றனர். சர்வதேச அளவில் மென்பொருள் உருவாக்கத்தில் சாதனை படைத்து இந்திய இளைய சமுதாயம்தான், மற்றொரு புறத்தில் இப்படி ஆபாசங்களில் அழிந்து போவது வேதனைக்குரிய விஷயம்.மும்பை, டில்லி, சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள மாணவர்களுடன், கல்வி, விளையாட்டு, பொது அறிவு போன்ற விஷயங்களில் போட்டி போட வேண்டிய மாணவ சமுதாயம், இத்தகைய விஷயங்களில் பெருநகரத்து மாணவர்களுக்குப் போட்டியாக வளர்வதற்கு முழு முதற்காரணம், பெற்றோர்கள்; அடுத்ததாக, பள்ளி வளாகம்; இறுதியாக வெளிச்சூழல்.பெற்றோர் தரும் அதீத சுதந்திரம், பள்ளி நிர்வாகங்களின் பண வேட்டை, "டிவி' போன்ற ஊடகங்களின் தாக்கம் ஆகியவற்றுடன், சமுதாய ரீதியான கட்டுப்பாடுகளும் தளர்ந்து போயிருப்பதும் ஒரு காரணம்.


குறிப்பாக, பிரவுசிங் சென்டர்களுக்கு எந்தவித கண்காணிப்பும் இல்லை. விபசாரத்தில் பள்ளி மாணவர்கள் கூட பாதிக்கப்படும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை.
ஆபாசமான வலைதளங்களுக்குள் ஒரு சிறுவன், சிறுமி கூட உள்ளே புகுந்து விட முடியும் என்பது சர்வதேசத்துக்குமான சவால் என்றாலும், நம்முடைய இந்திய கலாசாரத்துக்கு எதிராக நடத்தப்படும் மாபெரும் யுத்தம் என்பதை மறுக்கவே முடியாது.ஆபாச படங்களை அடிக்கடி பார்க்கும்போது, அதற்கு அடிமையாவதுடன் ஆண், பெண் நட்புக்கு இடையே எல்லை மீறவும், தூண்டுதலாக இருக்கும்.


இந்நிலையில், இலவச லேப்-டாப்களை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. அப்போது, நிலைமை இன்னமும் விபரீதமாகிவிடும். எனவே, மாணவர்கள் தேவையில்லாத வலைத்தளங்களுக்குள் நுழையும்போது, இணைப்பு கிடைக்காதவாறு செய்ய வேண்டும்; மெமரி கார்டு, பென்டிரைவ் கூடாது. வளர் இளம் பருவத்திலுள்ள குழந்தைகள் லேப்-டாப், மொபைல் போனுடன் அதிக நேரம் செலவிடுகிறார்களா என கண்காணித்து மாற்றம் கொண்டு வர பெற்றோர் முயற்சிக்க வேண்டும்.ஆபாச படங்களை மெமரி கார்டுகளில் டவுன்லோடு செய்து தர தடை விதிக்க வேண்டும். அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும். குறிப்பிட்ட வலைத்தளங்களையும் கண்காணித்து தடை விதிக்க வேண்டும் என்பது உளவியல் நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.


பிஞ்சிலே பழுக்கும் அவலம் :பெயர் வெளியிடவிரும்பாத பால்வினை நோய் சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறுகையில், "தற்போது 12 வயது நிரம்பாத மாணவர்கள் கூட, ஆபாச படங்களை பார்ப்பது மட்டுமின்றி செயல்ரீதியாகவும் முயற்சிக்கும் அவலம் உள்ளது. பலரும் ஆபாசபடங்களுக்கு அடிமையாகிவிட்டு தவறு செய்வது அதிகரித்து வருகிறது; பயம் மற்றும் சந்தேகம் காரணமாக எச்.ஐ.வி., பாதிப்பு உள்ளதா என பரிசோதிக்க வருகின்றனர். மாதந்தோறும் 30 வயதுக்குள் உள்ள இளைஞர்கள் குறைந்தபட்சமாக 15 பேராவது என்னிடம் பரிசோதனைக்கு வருகின்றனர். இதேநிலை நீடித்தால், ஆரோக்கியமான இளைஞர்களை பார்க்கவே முடியாது' என்றார்.


கோவையை சேர்ந்த மனநல டாக்டர் சீனிவாசன் கூறுகையில், ""முன்பு குறிப்பிட்ட காட்சிகள் எழுத்து, போட்டோ வடிவில் மட்டுமே பார்க்க முடிந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நேரிடையாக பார்க்கும் நிலை தற்போதுள்ளது. ஊடகங்களால் ஆபாச காட்சிகள் சாதாரணமாகி விட்டன; இது தவறானது, கூடாது என்ற மனநிலை மாறிவிட்டது. படிக்கும் வயதிலேயே ஆண் - பெண் உறவு எல்லை தாண்டி, கலாசார சீர்கேடு தலைதூக்குகிறது. கிரைம் சம்பவங்களுக்கும் வழிவகுக்கிறது. தொழில்நுட்பம் என்பது கத்தி போன்றது. ஆபரேஷனுக்கும் உதவும்; உயிரை கொல்லவும் உதவும். ஆபாச படங்களுக்கு அடிமையான பலரும், பிரச்னை நம்மை கை மீறி போய்விட்டது; ஆபத்தான நிலையில் உள்ளோம் என்பதை புரிந்து கொள்வதில்லை. ஒரு சிலர் மட்டுமே பிரச்னையை கூறி தீர்வு காண முன்வருகின்றனர்,'' என்றார்..


 நன்றி: தினமலர்






உங்கள் வீடுகளில் பிள்ளைகள் இருக்கலாம். அவர்கள் உங்கள் பேட்சை கேட்பதில்லையா, படிக்கிற வயசுல பெத்தவங்க பேச்சை கேட்க மாட்டங்குறாங்கண்ணு, அது அது பட்டா திருந்தும்ணும், வயசு கோளாறுண்ணு சொல்லிட்டு போகபோறீங்களா, இல்லைஎன்ன பண்ணனும்னு தோணலையா, உங்கள் மகன் மகள் தானே நீங்கள் சொல்லி கேட்கலைண்ணா யாரு சொல்லி கேட்க போறாங்க..


அவங்களுக்கு மன்னிக்கனும் உங்க பையனோ பொண்ணோ பெத்தவங்களை யாருக்கும் பிடிக்காதாம்,  உங்கள் பிள்ளைகளுக்கு, கேட்டதும்  அதிர்ந்து போனோம்..

இதுவரை நாம் பல்லாயிரகணக்கான மாணவர்களை சந்தித்திருக்கிறோம் அவர்கள் சொன்ன வரிகள் தான் நீங்கள் மேலே படித்தவை…. இதை போக்க நாம் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு உளவியல் பயிற்சி கொடுத்து வருகிறோம்.. கடந்த மாதம் வந்தவாசி பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு போயிருந்தோம் இந்தமுறை 800 க்கும் மேற்ப்பட்ட மாணவிகள் பங்குபெற்றார்கள், உச்சி வெயிலில் 2.35 மணி துளிகள் நம்மை அசர வைத்தனர் மாணவியர்… போன முறை நாம் பயிற்சியில் மாணவர்கள் பேசியதை பெண்ணாய் ஏண்டா பிறந்தோம்னு எத்தனையோ நாள் அழுததுண்டு என்கிற தலைப்பில் வெளியிட்டிருந்தோம். இன்று சில மாணவிகள் அம்மா அப்பான்னு சொன்னாலே பிடிக்க மாட்டங்கது, எங்க மேல பாசமா இருக்கிற அவங்களை விட்டுட்டு ஏன் காதலிக்க தோணுது என்றெல்லாம் கேட்க எல்லாவற்றிற்கும் பதிலளித்தோம் தாய்மையோடு. இது உங்கள் வீட்டு மகாலட்சுமியான உங்கள் வலியாக கூட இருக்கலாம்… இந்த மாணவியர் வலியை அப்படியே பதிவு செய்கிறோம் காட்சியாக கூர்ந்து பாருங்கள்..


(இக்கட்டுரை மாணவர்களின் நலன் கருதி பதிவு செய்கிறோம்…. மாணவர்களை குறை சொல்ல அல்ல..)



சமூக அக்கறை உள்ளவரா நீங்கள்
ஏழை மாணவர்களின் கல்விக்காக இணைவோம் வாரீர்…