Showing posts with label முதல்தலை முறை மாணவர்கள். Show all posts



சக மனிதனை மனிதனாக நேசிக்க கல்வி கொடுக்கும் வெளிச்சம்.



"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம்பதி னாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்"  

என்கிற வரிகளுகக்கு இணங்க ஏழை மாணவர்களுக்கு இலவசமாக உயர்கல்வி கொடுக்கவும், சாதி, மதம் இனம், பால்ரீதியாக ஒடுக்கப்படுகின்றவர்களுக்கு உதவிடும் நோக்கில்,  வெளிச்சம் செரின்  என்கிற சமூக ஆர்வலரின் முயற்சியில் துவங்கப்பட்டதுதான் வெளிச்சம் அமைப்பு.


வெளிச்சம் ஆரமிக்கப்பட்டபோது எமது பணியை யாரும் பாராட்டிவிடவில்லை, மாறாக அவமானங்களே வெகுமதியாக கிடைத்த நிலையில் வெளிச்சம், எடுத்த பணியை கைவிடாமல் உழைத்துக்கொண்டிருந்த பொழுதுதான், முதன்முதலாக அரியலூர் மாவட்டத்திலுள்ள பிழிச்சிகுழி  கிராமத்தை சேர்ந்த செந்தில் என்கிற மாணவன், பத்தாம் வகுப்பில் நிறைய மார்க் எடுத்த நிலை, வறுமை காரணமாக, மேற்கொண்டு படிக்க முடியாமல்  முந்திரிகொட்டை பறித்து கொண்டிருந்தான். அவனை விசாரித்த பிறகு, எமது அமைப்பின் சார்பாக உயர்கல்வி குறித்த ஒரு ஆய்வை மேற்கொண்டபோது, தமிழகத்தின் பின் தங்கிய மாவட்டங்களான பெரம்பலூர், அரியலூர்,  தர்மபுரி போன்ற மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் வறுமையின் காரணமாக  படிப்பை நிறுத்திவிட்டு, முந்திரிகாடுகளிலும், கோயம்பேடு மார்கெட்டுகளிலும் கூலி வேலை செய்வதை கண்டறிந்தோம். அப்படி கூலிகளாகி போனவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியனதை கண்டு  துடித்தார் எமது அமைப்பாளர் வெளிச்சம்  செரின்.   இந்த அவலத்தை தடுத்தே ஆகவேண்டும் என்று நினைத்து அதற்கான திட்டத்தை வகுத்து களப்பணியில் ஈடுபட்டார்.
முதல் மாணவனான செந்திலை மேல்படிப்பு படிக்க வைப்பதில் ஆரமித்த "வெளிச்சத்தின்" பயணம் இன்றுவரை தொடர்கிறது..

காரைக்குடி சென்ட்ரல் கெமிஸ்டி ரிசர்ச் இன்ஸ்ட்டியூடில் (சிக்ரி) கெமிக்கல் இஞ்சினியரிங்க் முடித்த செந்தில் இப்போது ஓமன் நாட்டில் ஜுனியர் சயிண்டிஸ்ட் பணியில் இருக்கிறார் என்பது வெளிச்சத்தின் முதல் வெற்றி.  அதன் பிறகு 718 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வெளிச்சம் உயர்கல்விக்கு உதவி இருப்பதையும், அதன் வலிகளையும் உங்களுக்கு தெரிவிப்பதற்கு முன்…

எமது நோக்கம்.

சக மனிதனைக்காக துடிதுடித்து போகும் இயல்பான மனித குணத்தை, தக்கவைத்து கொள்ளவும், சகமனிதனை அவனும் மனிதன்தான் என நினைத்து நேசிக்கவேண்டும் அதையும் எம்மால் முடிந்த வரை உருவாக்க வேண்டும். கூடவே  பணம் இல்லை என்கிற ஒற்றை காரணத்தால், எந்த ஒரு மாணவனும், அவர்களுடைய கல்வியை இழந்துவிடாமல் அவர்களுக்கு உயர்கல்விகிடைக்க வைப்பதுதான் வெளிச்சத்தில் நேக்கமானது..

718 முதல் தலைமுறை மாணவர்கள் வாழ்வை மாற்றிய வெளிச்சம்..  

நாங்கள் படிக்க வைக்கிற மாணவர்கள் யாரென்றால், இந்தியா சுதந்திரமடைந்து இவ்வளவு காலமாகியும், இவர்கள் குடும்பங்களிலிருந்து, யாரும் ஸ்கூல்பக்கம் கூட போகாதவர்கள். ஆம் பள்ளிக்கூடம் பக்கம் மழைக்காகவும் ஒதுங்காத அப்பா-அம்மாக்களுக்கு பிறந்த முதல் தலைமுறை மாணவர்கள்.
வெளிச்சம் மாணவர்களுக்கு கல்விக்கு உதவுவதோடு மட்டுமில்லாமல், கூடவே சமூக கடமைகளையும் போதிக்கிறோம். ஏனெனில் இந்த மாணவர்கள் படித்து,  அவர்கள் வளர்ந்த  கிராமத்திற்கும் – இந்த சமூகத்திற்கும் திரும்பி செய்யவேண்டும். (Pay Back to the society).  வெளிச்சத்தின் மூலம் படிக்கும், படித்த மாணவர்கள், தங்களைபோல் கஸ்டப்படும் மற்ற மாணவர்களுக்கு கட்டாயம்  உதவ வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.


"செந்தில்" என்கிற மாணவனில் ஆரமிக்கப்பட வெளிச்சத்தின் பயணம் இன்று 718  மாணவர்களை பட்டதாரிகளாக்கி அவர்களின் தலை எழுத்தை மாற்றி எழுதியிருக்கிறோம். அதில்  96 மாணவர்கள் பொறியியல் பயிலும் மாணவர்கள், 11 மருத்துவ மாணவர்கள் என மற்ற மாணவர்கள், தமிழகம் முழுக்க பல்வேறு கல்லூரிகளில், பல்வேறு துறைகளில் படித்துக்கொண்டிருக்கிறார்கள்..
எல்லா மாணவர்கள் அனைவரும் நன்றாக படித்து வருகிறார்கள் என்பதுதான் மகிழ்ச்சியான செய்தி..

வெளிச்சம் நிதி சேகரிக்கும் வழிமுறை: 

இன்றுவரை வெளிச்சம் சுமார் ஒன்றை கோடி ரூபாய் வரை, நன்கொடையாளர்களிடமிருந்து நிதி திரட்டி, சம்மந்தப்பட்ட மாணவர்களின் கல்லூரியின் பெயரில்    "காசோலை"  (Demand Draft ) ஆக கல்லூரிக்கு  அனுப்புகிறோம்.. மேலும்  வெளிச்சம் எந்த வகையிலும் பணத்தினை கையில் வாங்கியதில்லை. அதன்காரணமாகவே வெளிச்சத்தின் கஸ்டங்களையே சுமந்தாலும் இன்றுவரை பணி தொடர முடிகிறது.





 ஒரு கட்டத்தில் நன்கொடையாளர்கள் யாரும் முன்வராத நிலையில், கடந்த 2009ம் ஆண்டு சென்னை நகரங்களின் பல்வேறு இடங்களில் வெளிச்சத்தின் மூலம் படித்த முன்னால் மாணவர்கள்  40 பேர், தற்போது படித்துக்கொண்டிருக்கிற மாணவர்களுக்காக உண்டியல் ஏந்தினார்கள். அதில் கிடைத்த பணத்தை கொண்டு  38 மாணவர்களுக்கு கல்லூரிக்கட்டணம் கட்டினார்கள் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

இந்த தகவலை “தமிழக அரசியல்”,”டெக்கான் குரேனிக்கல்”,”என்.டி,டிவி” போன்ற ஊடங்கங்களிலும் வெளியிட்ட பின்னர்தான், தமிழக அரசால் முதல் தலைமுறை ஏழை மாணவர்களுக்கான இலவச உயர்கல்விக்கான அரசாணை வெளியிடப்பட்டது என்பதை மகிழ்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.


மேலும் மாணவர்களின் கல்விக்காக உதவும் உள்ளங்களை தேடி அழையும் வெளிச்சம் தனது அன்றாட நகர்வு என்பது சில நெருங்கிய நண்பர்கள் செய்யும் உதவியிலும், வெளிச்சத்தின் முன்னால் மாணவிகள் சிலர் எம்ராயிடரிங்க்,  சுடிதார் தைக்கின்றார்கள். அதில்கிடைக்கும் வருவாயில்தான் வெளிச்சத்தின் அன்றாட பணிகள் தொய்வில்லாமல் நடைபெருகிறது...

வெளிச்சத்தின் நீண்ட கால திட்டம்: 

ஒரு மாணவனில் இருந்து துவங்கிய வெளிச்சத்தின் கல்வி பயணம் இன்று 718 ஐ கடந்து நிற்கிறது.. நிச்சயம் இந்தப்பட்டியல்  நீளுமே தவிர நின்று விடக்கூடாது.. உயர்கல்வி என்பது ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்தால் அது இந்த தேசத்தின் சாபம் என்கிற  நோக்கில் செயல்படும் எமக்கு ஏழைகளின் உயர்கல்விக்காக உதவுங்கள். எங்கள் சமூகப்பணியில் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.  (Form) 
                                                                                          நன்றியுடன்,
வெளிச்சம் மாணவர்கள்..
எமது வங்கி கணக்கு விபரம்: 
ACCOUNT NAME:   " VELICHAM STUDENTS EDUCATIONAL AND WELFARE TRUST "
ACCOUNT NO:                   31654850476,
Branch Name:                     STATE BANK OF IINDIA, PERAMBUR, CHENNAI,
IFSC Code:                          SBIN 0002256
SWIFT Code:                       SBININBB458
Phone: STUDENTS HELP LINE -9698151515
Web;  www.velicham.org