Showing posts with label வெளிச்சம் மாணவர்கள். Show all posts


புத்தாண்டுக்கு முதல் நாளோடு நமக்குள் அவசர அவரமாக போடப்பட்ட எத்தனையோ தீர்மானங்கள்  தோற்று போயிருக்கலாம். ஆனால் தனிப்பட்ட வாழ்வில் ஒவ்வொரு நாளும் புதிய அனும்பவங்களிலிருந்துதான்  புதிய விசயங்களை கற்றுக்கொள்கிறோம்.

அன்னையின்  மடியில் தவழ்ந்த நிமிடங்கள் முதல் இப்போதுவரை ஒவ்வொரு நிமிடத்திலும் சில தவறுகளும், சறுக்கல்களும், தோல்விகளும் இல்லாமல் இல்லை இவற்றுக்கு பெயர்தான்  அனுபவம்.

இப்படியான பல அனுபவங்களில் தான் பயணமானது நம் பயணம்.
வெளிச்சம்  எத்தனையோ தோல்விகளையும், சறுக்கல்களையும் கண்டுள்ளது ஆனாலும் இந்த பொறுப்பு நமக்கு மட்டும்  என்று யோசிக்கும் போது நாம் பட்ட கஸ்டங்களை தவிர பலரின் கண்ணீரை துடைத்த  போது  அவர்கள் முகத்தில் காணப்படும் ஆயிரம் வாட்ஸ் சந்தோசத்திற்கு ஈடேதுமில்லை. அந்த நிமிடங்கள் தான் பல நேரங்களில் நொந்து கிடக்கும் நம்மை இன்னும் வேகமாக உழைக்க வைக்கிறது..

இப்படியான அனுபவங்களில் தான் ஒரு குழந்தையை போல பிறக்கிறது 2012 வருடம், பல புத்தாண்டு சந்தோசத்தில் அவரவர் விருப்பம் போல்  பட்டாசு கொளுத்தியோ, கேளிக்கை விடுதியிலோ, கொண்டாடக்கூடும் ஆனால் நாம்  நம்மை பரிசீலனை செய்து கொண்டு இன்னும் வேகமாக  இயங்குவதற்கு ஏதுவாக இந்த புத்தாண்டை கொண்டாடினோம்..

உயிரோடு நாம் இருக்கிறோம் என்பதற்கு அடையாளம் நாம் செயல்பட்டு கொண்டிருக்கிறோம் என்றே அர்த்தம்.

தொடர்ந்து செயல்பட்டு கொண்டே இருப்போம்..



புத்தாண்டும் மாணவியின் பிறந்த நாளும்


வெளிச்சம் செரின்

வெளிச்சம் கொடு


மகிழ்ச்சி பரிமாறல்







நாங்கள் படிப்பிருந்தும்,சீட் கிடைத்தும் தகுதியிழக்கயிருந்தவர்கள்.
குடிசை வீட்டில் எரிந்த சிமிலி விளக்குகளில் படித்து,
படிப்பையே கேள்வி குறியாக்கியவர்கள் ...
இன்று வெளிச்சம் அமைப்பால் வாழ்கை வெளிச்சம் பெற்றவர்கள்.
சகமனிதனை மனிதனாக நேசிக்கிற மனிதர்கள் உருவாக்குகிற
வெளிச்சத்தின் வழிகாட்டுதலில் உதயமாகிறது எங்கள் வாழ்கை பயணம்...

உறவுகளே!

சமூகத்தின் அவலங்களை கண்டுகொதிக்கும் நீங்களும் நானும் தோழர்கள் தான்..

நீங்கள் பாக்கெட்டில் பணமில்லாமல் என்றைக்காவது சாப்பிட போகாமல் பச்ச தண்ணியில் வயிறை நிப்பி வாழ்கையை நடத்தியதுண்டா

பர்சை தவறவிட்டுவிட்டு பணமில்லாமல் பஸ்ஸில் பயணம் பண்ணியிருக்கிறீர்களா

ஊர் திருவிழாவில் உறவுகளை தொலைத்துவிட்டு விழிகளை நம்பி அழுது நின்றிருக்கிறீர்களா

இந்த அவலங்களை அனுபவித்த நீங்கள்..

காலேஜி பீஸை இன்சால்மெண்ட்ல கட்டுவதற்கு டைம் கேட்டதுண்டா..அதையும்
கட்டமுடியாமல் காலேஜி பீஸ்கட்ட முடியாத உனக்கெல்லாம் எதுக்குடா படிப்புண்ணு அசிங்கப்பட்டதுண்டா.
ஹால்டிக்கட் கொடுக்காமல் ஆப்சண்ட் போட்ட கல்லூரியை
நியாயம் கேட்ட போது கல்லூரி நிர்வாக உங்களைப் பார்த்து நா கூசாமல் அவன் லீவு போட்டுட்டான் ,அவன் பரிச்சை எழுத வரவில்லைன்னு சொன்னதுண்டா

சுதந்திரம் வாங்கி 63வருடம் கடந்த போதும் வீட்டுல அப்பா-ஆத்தா யாரும்
பள்ளிகூடம் பக்கம் கூட போகாத கூலிகளாய் கிடக்க..நீங்கள் கரணட் இல்லாத
வீட்டில் படித்து கல்லூரி கனவு கண்டதுண்டா..வலிகளும் வேதனைகளும்
அனுதினமும் ரணமாய் வலிக்க..

இவை அனைத்தையுமோ சிலவற்றையோ அனுபவித்த எங்களை போன்ற ஏழைகள் படிக்க நினைப்பது தப்பா தோழர்களே

எங்களை போன்ற 515 மாணவர்களை படிக்க வைக்க பிச்சை எடுக்கும் நிலை வந்தபோதும் பிச்சை எடுத்தும் வெளிச்சம் படிக்க வைக்கிறது

நீங்கள் உங்களது பெற்றவர்களின் உதவியின் உழைப்பில்
படித்திருப்பீர்கள்(உங்கள் DD கள் எங்கள் தலையெழுத்தை மாற்றி எழுதும்)
உங்கள் உதவியில் மற்றவர்களை படிக்க வழி செய்யுங்கள்…                                     ( வெளிச்சம் மாணவர்களின் களப்பணியை மேலும் விரிவாக படிக்க)

உங்களை உயிருள்ளவரை மறக்க மாட்டோம்..

நாம் பெற்ற கல்வி இச்சமூகத்திற்கு கல்விகொடுக்க பயன்படவில்லையெனில் நீ இருப்பதை விட இறப்பதே மேல் -என்கிறது வெளிச்சம்

கல்விகொடுக்க உறவாகிடுவோம் உதவிடுவோம்.
வெளிச்சம் மாணவர்கள்




வெளிச்சம் மாணவர்களின் வங்கி கணக்கு விபரம்: 


ACCOUNT NAME:               " VELICHAM STUDENTS EDUCATIONAL AND WELFARE TRUST "
ACCOUNT NO:                   31654850476,
Branch Name:                     STATE BANK OF IINDIA, PERAMBUR, CHENNAI,
IFSC Code:                          SBIN 0002256
SWIFT Code:                       SBININBB458



Contact Address :  
39/2  Foxen St, Perambur,Chennai-11
Email: velicham.students@gmail.com, 
Phone: STUDENTS HELP LINE -9698151515
Web;  www.velicham.org
          http://velichamstudents.blogspot.com


இந்த வார கல்கி இதழில் வெளிச்சம் மாணவர்களின் வாழ்க்கை இருட்டைத் துடைக்கும் வெளிச்சம்! தலைப்பில் பிரசுரமாகியிருக்கிறது..  எம்மை பக்குவபடுத்த முழுவதும் படியுங்கள்... எம் வளர்ச்சிக்கு வழிகாட்டுங்கள்..



இருட்டைத் துடைக்கும் வெளிச்சம்! 

பத்தாம் வகுப்பில் 382 மார்க்குகள் வாங்கிவிட்டு, குடும்பச் சூழ்நிலையால் மேலே படிக்க முடியாமல் ஒரு ஹோட்டலில் க்ளீனராகப் பணியாற்றிக் கொண்டிருந்த என்னை, இதோ இன்று உங்கள் கண் முன்னே ஒரு பி.எல். மற்றும் எம்.ஏ. (சோஷியல் ஒர்க்) படித்த மாணவனாக மாற்றிக் காட்டியிருக்கிறது வெளிச்சம்என கண்களில் வெளிச்சம் பொங்கப் பேசுகிறார் வெளிச்சம் மாணவர் அமைப்பின், மாணவர் மாநில ஒருங்கிணைப்பாளரான ஆனந்த குமார். என்னைப்போலவே இதுவரை வெளிச்சத்தின்வாயிலாக பயன் அடைந்தவர்கள் 515 மாணவ,மாணவிகள்.
எப்படி ஏன் எதற்காக வெளிச்சம்தோற்றுவிக்கப்பட்டது?’ என்ற கேள்வியை அவரிடம் எழுப்பியபோது, ‘2004 ஆம் ஆண்டு அரியலூர், பெரம்பலூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்கள்ல ஷெரீன் ஆய்வு மேற்கொண்டாங்க. அந்த ஆய்வின்படி பார்த்தீங்கன்னா, கிராமப்புறத்துல இருக்குற மாணவர்களால, அவங்க குடும்ப வறுமையின் காரணமாக பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்புக்கு மேல படிக்க முடியாத அவல நிலை இருப்பதையும், இதனால அவங்க கோயம்பேடு மற்றும் பெங்களூரு பகுதியில கூலித் தொழில் செய்ய, மூட்டை தூக்கன்னு போய் விட்டதையும் அவங்க கண்டுபிடிச்சாங்க.
மாணவர்கள் பாடு இப்படின்னா, மாணவிகள் சுமங்கலி திட்டம்ங்கற பேர்ல பஞ்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு, அங்க மூன்று அல்லது அஞ்சு வருஷம் வேலை செஞ்சிட்டு கைல மொத்தமா 30,000 அல்லது 40,000 ரூபாயோட திரும்பி வர்ற நிலை இருக்குன்னு கண்டுபிடிச்சாங்க. வறுமையைக் காரணம் காட்டி ஒருவருக்கு கல்வி மறுக்கப்படக் கூடாது என்ற உயரிய நோக்கோடதான் 2004ஆம் ஆண்டு வெளிச்சம்தொடங்கப்பட்டது.
வெளிச்சம்அமைப்பின் மூலம் மேற் கல்விக்கான உதவி பெற்று, நல்லபடியாகத் தாங்கள் விரும்பிய கல்வியைப் படித்து, தேறி, நல்ல வேலையில் அமர்ந்துள்ளவர்கள் வெளிச்சத்துக்கான நிதி உதவியை அளித்துக் கொண்டிருக்கிறார்கள். செந்தில் என்ற ஒருவரை அப்படி உதாரணத்துக்குச் சொல்லலாம். பன்னிரண்டாம் வகுப்பில் ஆயிரத்துக்கு மேல் மதிப்பெண் எடுத்து மேலே படிக்க முடியாமல் இருந்தவரை வெளிச்சம்காரைக்குடியில் உள்ள CECRIயில் சேர்த்துப் படிக்க வைத்தது. இன்று செந்தில், ஓமனில் ஜூனியர் ரிசர்ச் ஆபிஸராகப் பணியாற்றி வருகிறார். மாதா மாதம் தாம் சம்பாதிக்கும் பணத்திலிருந்து ஒரு பகுதியை வெளிச்சத்துக்குகொடுத்து வருகிறார்.
உண்மையான, கல்வி தாகம் கொண்ட, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களை எப்படிக் கண்டுகொள்வீர்கள்? அல்லது அப்படிப்பட்ட மாணவர்கள் உங்களை எப்படித் தேடி வருவார்கள்?’
வெளிச்சத்தின் வழியாக இன்று தங்கள் வாழ்க்கையில் வெளிச்சம் பெற்றவர்களின் துணைகொண்டு கிராமங்களுக்குச் சென்று எங்கள் தேடுதல் பணியைச் செய்வோம். கிராமங்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு, மற்றும் அங்குள்ள பெரியவர்களிடம் தீவிர விசாரணை செய்த பிறகே தான் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களது கல்வி தடையின்றித் தொடர வெளிச்சத்தின் வழி உதவி புரிவோம்.
தேர்ந்தெடுக்கப்படும் மாணவ / மாணவிகளிடம் நாங்கள் எதிர்பார்ப்பது, அவர்கள் அதிகமான மதிப்பெண் எடுத்தவர்களாக இருக்க வேண்டும், கல்வியின் மீது ஆர்வம் உடையவர்களாக இருக்க வேண்டும், ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் மதிக்கத்தக்கவர்களாக இருக்க வேண்டும், தாம் சார்ந்த கிராமத்தை, தான் கற்ற கல்வியால் முன்னேற்றம் அடையச் செய்பவர்களாக இருக்க வேண்டும். பணம் என்பது எதை வேண்டுமானாலும் தீர்மானிக்கலாம். ஆனால் கல்வியைத் தீர்மானிக்கக் கூடாது. போதுமான பண வசதி இல்லை என்ற ஒரே காரணத்துக்காக ஒருவருக்கு, கல்வியில் தடை ஏற்பட்டு விடக் கூடாது என்ற ஒரே நோக்குதான் வெளிச்சத்தின் நோக்கமேஎன்கிறார் ஆனந்த குமார் தொடர்ந்து உதவி பெற விரும்பும் மாணவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு இருட்டைத் தின்னும் வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்படுத்திக் கொள்ளலாம்என்கிறார்.
- நளினி சம்பத்குமார்


 ஈவினிங் காலேஜில் சேர்ந்து படிக்கும்  மாணவர்களுக்கும் கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கலை, அறிவியல் மற்றும் தொழிற்படிப்பு அதாவது பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.இ., எம்.பி.பி.எஸ்., பி.வி.எஸ்சி., பி.டி.எஸ்., பி.எச்.எஸ்சி., படிப்புகள், ஐ.சி.டபிள்யூ., ஏ.சி.எஸ்., சி.ஏ., படிப்புகள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.எப்.டி.,யால் அங்கீகரிக்கப்பட்ட பாடங்களை தேர்ந்தெடுத்தால் கல்விக் கடன் உண்டு. அங்கீகரிக்கப்பட்ட பி.எட்., படிப்பு, ஆசிரியப் பயிற்சி படிப்புக்கும் உண்டு. சான்றிதழ் படிப்பு, தொலைநிலைக் கல்வி மற்றும் வெளிநாடுகளில் முதுநிலை டிப்ளமோ பயில்பவர்களுக்கு கடன் கிடையாது.


கடன் வழங்க விமுறைகள்:
டியூசன் கட்டணம், புத்தகம், தேர்வு கட்டணம், விடுதி, லேப்-டாப், போக்குவரத்து கட்டணம், வேலைவாய்ப்பு பயிற்சிக்கான கட்டணம் அனைத்திற்கும் கடன் உண்டு. உள்நாட்டில் படிக்க 10 லட்சம் வரையும், வெளிநாட்டில் படிக்க 20 லட்ச ரூபாய் வரை கடன் பெறலாம். தொழிற்படிப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 4.5 லட்ச ரூபாய்க்குள் இருந்தால், வட்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

பின்பற்ற வேண்டியவை:  

பிளஸ் 2 வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தந்தை அல்லது தாய் இணை விண்ணப்பதாரராக, கடன் படிவத்தில் கையெழுத்திட வேண்டும். பெற்றோர் வெளிநாட்டில் இருந்தால் தாத்தா அல்லது சட்ட ரீதியான உறவினர் கையெழுத்திட வேண்டும். விண்ணப்பதாரர், இணை விண்ணப்பதாரரின் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், குடியிருப்புச் சான்று, கல்லூரி சேர்க்கை அடையாளச் சான்று, "கவுன்சிலிங்' கடிதம் அல்லது நிர்வாக இடஒதுக்கீட்டில் அனுமதித்தற்கான கடிதம், இந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்துள்ளார் என்பதற்கான கல்லூரி முதல்வரின் கடிதம், மூன்று அல்லது நான்காண்டுக்கு ஆகும் மொத்த கல்விக் கட்டண ரசீது ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். குடியிருப்புக்கு அருகில் உள்ள வங்கியில் தான் கடன் பெறலாம்.


முதல் தலைமுறை மாணவர்ளுக்கு:
முதல் தலைமுறையாக பி.இ., பி.டெக்., தொழிற்படிப்பு பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணத்தில் 20 ஆயிரம் ரூபாய் சலுகை வழங்கப்படுகிறது. கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு இச்சலுகை இல்லை. படித்து முடித்த இரண்டாண்டு அல்லது வேலை கிடைத்த ஆறாவது மாதத்தில் இருந்து கடனை திருப்பி செலுத்த வேண்டும். வட்டி சுமையை குறைக்கும் வகையில், திருப்பி செலுத்தும் காலம் பத்தாண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  வங்கியில் ஏற்கனவே வேறு கடன் பெற்று, முறையாக திருப்பி செலுத்தாவிட்டால் கல்விக்கடன் வழங்கப்படாது. அனைத்து வங்கிகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

நான்கு லட்ச ரூபாய் வரையான கடனுக்கு, விண்ணப்பதாரர் பங்களிப்பு இல்லை. நான்கு முதல் பத்து லட்ச ரூபாய்க்கு ஐந்து சதவீத பங்களிப்பு. ஜாமீன், சொத்து பிணையம் தேவையில்லை. 7.5 லட்ச ரூபாய் வரை மூன்றாம் நபர் ஜாமீன் உண்டு. 10 லட்ச ரூபாய் வரை, சொத்து பிணையத்துடன். வெளிநாட்டு படிப்புக்கு 15 சதவீத பங்களிப்பு. மாணவியருக்கு வட்டியில் அரை சதவீத சலுகை உண்டு. பாரத ஸ்டேட் வங்கியில் நான்கு லட்ச ரூபாய் வரை, வட்டி 12.25 சதவீதம். 4 முதல் 7.5 லட்சம் வரை 13.75 சதவீதம், 10 லட்ச ரூபாய் வரை 12.25 சதவீத வட்டி. கனரா வங்கியில் நான்கு லட்சம் வரையான கடனுக்கு 13 சதவீதம், அதற்கு மேல் 14 சதவீத வட்டி.

  நன்றி: தினமலர்