Showing posts with label தமிழக அரசு. Show all posts


திர்ச்சி தரும் பல ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டு வதற்கு பெரும் உதவிகளைச் செய்கிறது, தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்தச் சட்டத்தைப் பயன் படுத்தி, தமிழக இன்ஜினியரிங் கல்லூரி களில் நடந்திருக்கும் அநியாயத்தை அம்பலப்படுத்துகிறார், டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவர் சரவணகுமார். 

அவரைச் சந்தித்தோம். 'நான் பிளஸ் 2-வில் நல்ல மதிப்பெண் பெற்று கவுன்சிலிங் மூலம் சேலத்தில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்தேன். கவுன்சிலிங் மூலம் சேர்பவர்களுக்கு அரசு நிர்ணயித்திருக்கும் தொகை 32,500 ரூபாய். ஆனால், அந்தக் கல்லூரியில் 50,000 ரூபாய் வசூல் செய்தனர். காரணம் கேட்டதற்கு, 'இந்தத் தொகையை கட்டினால் படிக்கலாம் இல்லை என்றால் வேறு கல்லூரிக்குப் போய் விடுங்கள்’ என்று கறாராகச் சொல்லி விட்டார்கள். கவுன்சிலிங் முடிந்தபிறகு வேறு கல்லூரியில் போய்ச் சேரமுடியாது என்பதால், கூடுதல் பணத்தைக் கஷ்டப்பட்டு கட்டி படித்தேன்.
முதல் ஆண்டு ஒரு வழியாக முடித்து விட்டேன் என்றாலும் அடுத்த மூன்று வருடங்கள் படிப்பதற்கு பணம் புரட்ட முடியாது என்பது தெரிந்தது. அரசு சொன்ன தொகையை நம்பி இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்ததால், என் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விட்டது. அவ்வளவு பணம் கட்டமுடியாது என்பதால் அடுத்த வருடம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து விட்டேன். என்னைப் போல இன்னும் எத்தனை ஆயிரம் மாணவர்கள் பணம் கட்டமுடியாமல் தவிப்பார்களோ என்ற சிந்தனை என்னைப் பாடாய்ப்படுத்தியது. அதனால், குறிப்பிட்டதை விட அதிகக் கட்டணம் வசூலிக்கும் இன்ஜினியரிங் கல்லூரிகள் மீது, அரசு தக்க நடவடிக்கை எடுக்கிறதா என்பதை அறிந்து கொள்ள விரும்பி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலைப் பெற்றேன். நான் கேட்ட 20 கேள்விகளுக்கு 36 பக்கங்களில் பதில் கொடுத்தார்கள். பல கேள்விகளுக்குப் பதில் இல்லை என்றாலும் கிடைத்த பதில்களே அதிர வைத்து விட்டன.
2007-ம் ஆண்டு மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் புகாருக்கு உள்ளானவை, 39 இன்ஜினீயரிங் கல்லூரிகள். 2008-ம் ஆண்டு 46 கல்லூரிகள். 2009-ம் ஆண்டு 61 கல்லூரிகள். 2010-ம் ஆண்டு 24 கல்லூரிகள் என்று 170 கல்லூரிகள் மீது புகார் எழுந்துள்ளன. இதனை விசாரிப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. 2007-ம் ஆண்டு புகாருக்கு உள்ளான 39 கல்லூரிகளில் மூன்று கல்லூரிகளில் மட்டுமே அந்தக் குழு விசாரணை நடந்தியிருக்கிறது. அதில் இரண்டு கல்லூரிகள் மட்டும் அதிக வசூல் செய்வது கண்டறியப்பட்டது.
இதேபோன்று 2008-ம் ஆண்டு புகாருக்கு உள்ளான 61 கல்லூரிகளில், 7-ல் மட்டும் விசாரணை நடைபெற்றது. அதில் 5 கல்லூரிகளில் அதிகக் கட்டணம் வசூல் செய்வது கண்டறியப்பட்டது. ஒட்டுமொத்தமாக புகார் கூறப்பட்ட 170 கல்லூரிகளிலும் விசாரணை நடத்தாமல் சில கல்லூரிகளில் மட்டுமே நடந்துள்ளது. அதனால் 11 கல்லூரிகளில் மட்டுமே அதிகக் கட்டணம் வசூல் செய்வதுநிரூபணமானது.  இந்த 11 கல்லூரிகளும் தலா ஒரு மாணவருக்கு மட்டுமே, கூடுதலாக வசூல் செய்த பணத்தை திருப்பி அளித்துள்ளது. அதிகக் கட்டணம் வசூல் செய்த கல்லூரிகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்ற கேள்விக்குப் பதில் இல்லை.
'புகார் அளிக்கப்பட்ட அனைத்துக் கல்லூரி களிலும் ஏன் விசாரணை நடத்தவில்லை? இந்த விவகாரத்தில் உயர்கல்வித் துறை அதிகாரிகள் தங்களது கடமையை சரிவரச் செய்யாமல் சில கல்லூரிகளுக்குத் துணை போயிருக்கிறார்கள்’ என்று குற்றம் சாட்டி அரசு மீதும் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீதும் வழக்கு தொடுக்கப் போகிறேன்.  பல ஆயிரம் மாணவர்களின் வாழ்கையைப் பாழாக்கும் கூடுதல் கட்டண வசூல் விவகாரம் இனியாவது ஒழியட்டும்'' என்றார் ஆவேசமாக.
இதுகுறித்து, உயர்க்கல்வித் துறை அமைச் சர் பழனியப்பனிடம் கேட்டோம். ''இது முழுக்க முழுக்க கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள், ஊழல்கள். இப்போது, மானிட் டரிங் செய்வதற்காக மூன்று நபர்களைக் கொண்ட குழு அமைத்து உள்ளோம். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது விசாரணை நடத்தி வருகிறோம். கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரியின் உரிமத்தை  ரத்து செய்யவும் தயங்க மாட்டோம்'' என்றார். 

இன்றைய நடவடிக்கை இருக்கட்டும். நடந்த தவறுகளுக்குப் பொறுப்பு ஏற்கப்போவது யார்? பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குப் பதில் சொல்லப்போவது யார்?

நன்றி: ஜூனியர் விகடன். 4.2.12

பல லட்சம் மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற ஒரு போராட்டம் நடத்தி அந்த போராட்டம் வெற்றி பெற்றால் எவ்வளவு சந்தோசமிருக்குமோ அவ்வளவு சந்தோசத்தில் சிக்கித்தவிக்கிறது வெளிச்சம்உறவுகளே! எங்களின் சந்தோசங்களை உங்களுக்கும் சமர்ப்பிக்கிறோம்.



 வெளிச்சம்  அமைப்பின் 7 ஆண்டுகால ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கான களப்பணியில் வெளிச்சம் மாணவர்களின்  ஏராளமான  அவமானங்களை சந்தித்திருக்கிறது ஆனால் இந்த பணியை விட்டுவிடவில்லை..

 மூன்று வருடங்களுக்கு முன் வெளிச்சம்  மானவர்கள் உண்டியல்  ஏந்தியபோது அப்போதைய  திமுக அரசுக்கு வைத்த கோரிக்கையை பரிசீலனை செய்து முதல்தலைமுறை மாணவர்களின் கல்விகட்டணத்தை அரசே ஏற்றது.. அதோடு நமது வேலை முடிந்துவிட்டது என்று நாம் முடங்கிவிடாமல் இனியும் பணம் எந்த மாணவர்களின் கல்வியையும்  பாதிக்ககூடாது  என  கழுகு பார்வையோடு கண்காணித்த வெளிச்சம் ஏழைகளின் உயர்கல்விக்காக தொடர்ந்து போராடி வருகிறதுஇந்த தொடர்பயணத்தில்  1000 க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற  பல மாணவர்கள்  பணமில்லாமல் தவித்ததை வெளிச்சம் ஆய்வு செய்து கீழ்கண்ட விசயங்களை முன் வைத்து 21.07.11 அன்று சென்னை பத்திர்க்கையாளர்கள் மன்றத்தில்  1000 த்திற்கும் மேல் மதிப்பெண் பெற்று கல்லூரிக்கட்டணம் செலுத்த முடியாமல் இருந்த  25  மாணவர்களை   கொண்டு வெளிச்சம்  பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தியது வெளிச்சம்.. மேலும் இதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வர்  மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்கள்  கவனத்திற்கு எமது கோரிக்கையை கொண்டு சென்றோம். எமது கோரிக்கையை உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பழனியப்பன் அவர்களிடம் நேரடியாக எடுத்துரைத்தோம். எமது கோரிக்கையின் நியாயத்தை புரிந்துகொண்ட அமைச்சர் பரிரீலனை செய்வதாக  உறுதி அளித்தார்…( முதல்வருக்கும், உயர்கல்வி அமைச்சருக்கு வெளிச்சம் அனுப்பிய மனுவின் நகல்கள்… )

அமைச்சரின் சந்திப்பிற்கு  அவரின்  மேல்நடவடிக்கைகளுக்காக காத்திருந்தோம்ஒரு நல்ல விசயங்களுக்காக காத்திருந்தால் எல்லாம் நல்லதே நடக்கும் என்பது போல் நமக்கு நல்ல செய்து  உயர்கல்வித்துறையிலிருந்து கிடைத்தது அது என்ன வெனில் ஆகஸ்ட் 9 தேதியான நேற்று தமிழகத்தின் பல்கலைகழக துணை வேந்தர்கள்,கல்லூரி முதல்வர்கள்,வங்கி மேலாளர்கள், உட்பட்ட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டதாகவும் தமிழகத்தின் ஏழை மாணவர்களின் கல்விக்காக உத்தரவு பிறப்பிக்கப்படும் என வெளிச்சத்திற்கு தகவல் கிடைத்ததுஅதன் பின் நமக்கு கிடைத்த தகவல்கள் என்ன வெனில் வெளிச்சத்தின் அனைத்து  கோரிக்கைகளின் அம்சங்களும் அப்படியே விவாதிக்கப்பட்டதாகவும் அவை அனைத்தும் அமல்படுத்தப்படபோவதாகவும் தகவல் சொன்னார்கள்  இப்போ சொல்லுங்க உங்களுக்கும் சந்தோசம் தானேநமக்கு கிடைத்த செய்தியை உறுதி செய்தது  இன்றைய தினமல்ர் (9.8.11) செய்தி.. (அரசின் உத்தரவாக  தினமலர் செய்தி) தமிழகத்தின் பல்லாயிரங்கணக்கான ஏழை மாணவர்களின் வாழ்க்கையை காப்பாற்ற வெளிச்சம் முன்வைத்த வெளிச்சம் அமைப்பின்  கோரிக்கை ஏற்ற அமைச்சருக்கும், தமிழக முதல்வருக்கும் ஒட்டுமொத்த மாணவர்களின்  உறவுகளாக வெளிச்சம் நன்றியை முன் வைத்து இந்த அறிவிப்பை அரசு உத்தரவாக்கிட வேண்டுமென இன்னொரு கோரிக்கையை முன் வைக்கிறது வெளிச்சம்இது போன்ற நியாயமான கோரிக்கைகள் வெல்ல துணை நின்ற பத்திரிக்கையாளர்களின் போனாக்களின்  எழுத்துக்களை வெளிச்சம் வணங்குவதோடு…..  எம் நியாயமான கோரிக்கைகளுக்கு துணை நிற்கும் உறவுகளே உமக்கும்                நன்றி நன்றி நன்றி……


நன்றியுடன்
ஏழைகளின் கல்விக்கன களப்பணியில்
வெளிச்சம் மாணவர்கள்



                    
நமது கோரிக்கை மனு:
                                                            Demand  Petition..........................................Link 
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்  படங்கள்
                                                              Press Meet Photos ......................................Link
பத்திரிக்கை செய்திகள்
                                                        Press Meet Press Clippings ..............................Link