எல்லாம் ஜாக்கிரதை சர்க்கரை நோய் வருதாம்

Posted by Velicham Students - -

பழைய செய்தி
தமிழகத்தில் 100 பேரில் 10 பேருக்கு சர்க்கரை நோய் இருப்பது இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மொத்த மக்கள் தொகையில் 42 லட்சம் பேர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் ஆய்வு செய்யப்படவுள்ள இந்த திட்டம் முதல் கட்டமாக தமிழகத்தில் நடந்தது. தமிழகத்தில் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டோர் நகர்ப்புரங்களில் 13.5 சதவீதமாகவும், கிராமப்புரங்களில் 6.9 சதவீதமாகவும், மொத்தத்தில் 9.8 சதவீதம் பேர் சர்க்கரைநோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளதாக ஆய்வை நடத்திய குழு தலைவர் டாக்டர் ஆர் எம் அஞ்சனா கூறினார். மேலும் அவர் ஆண்களில் 51.4 சதவீதம் பேரும், பெண்களில் 48.6 சதவீதம் பேரும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமனால் ஆண்கள் 22.4 சதவீதம் பேர் அவதிபடுகின்றனர். பெண்களில் 35.3 சதவீதம் பேர் அவதி படுகின்றனர். அதாவது 5 மில்லியன் ஆண்களும், 7.6 மில்லியன் பெண்களும் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். இரத்த அழுத்தத்தினால் நகர்ப்புரங்களில் 32.6 சதவீதம் பேரும், 23. 8 சதவீதம் பேரும் அவதிப்படுவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் அஞ்சனா கூறினார்.


நன்றி:தினமலர் 14.12.10

Leave a Reply