Showing posts with label higher education. Show all posts


கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி சென்னை உயர்நீதி மன்றத்தில் இரு பொதுநல வழக்குகளை வெளிச்சம் பதிவு செய்த இரு வழக்குகளில் ஒரு வழக்கில் வெளிச்சம் வெற்றி பெற்றுள்ளது.. என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்வதோடு…. வழக்கில் வெற்றிக்கான நிமிடங்களையும், அனுபவங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியாக கருதுகிறோம்.
வழக்குகள் விபரம்:
முதல்தலைமுறை மாணவர்களின் கல்விக்கான வழக்கு ஒன்று,மற்றொன்று தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான உயர்கல்விக்கான வழக்கு. இந்த இரு வழக்குகளிலும் வழக்கறிஞரி வைக்காமல், எங்களின் கல்வித்தாய் வெளிச்சம் செரின் அவர்கள் வாதாடினார். இதை முதல் வெற்றி எனும் பதிவில் தங்களுக்கு தெரிவித்திருந்தோம்.. (படிக்க: முதல்வெற்றி).. மற்றும் (படிக்க: வழக்கு குறித்த முழு விபரத்தையும் )
திருப்பங்களை கொண்டு வந்த எமது வாதங்கள்;
இந்த வழக்குகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் எனும் அரசாணையை செயல்படுத்த கோரிய இரண்டாவது வழக்கில்..  ஆகஸ்ட் 28ம் தேதி தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை எதிர்வாதம் செய்தது. அப்போது  தமிழகத்திலுள்ள கல்லூரிகள் அரசாணை எண் 6ஐ ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும் எடுத்துரைத்தனர்.
இதை மறுத்த வெளிச்சம் செரின் அவர்கள், அரசாங்கத்தின் ஆணையை மக்களாட்சி நடக்கும் இந்த ஜனநாயக நாட்டில் அரசாணையை தனியார் நிறுவனங்கள் ஏற்க மறுக்கிறது என்பதை எந்த சாதாரண மனிதனும் ஏற்கமாட்டான். இது ஜனநாயத்திற்கான அச்சுறுத்தல் இந்த நிலை நீடித்தால் கல்வி வியாபாரமான இந்த சூழலில், அரசாங்கத்தை இந்த தனியார் நிறுவனங்கள் மிரட்ட்டக்கூடும் என வாதிட்டோம்.
இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி.இக்பால் அவர்கள், பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினார். நீதி மன்றத்தில் பதிலளிக்க தடுமாறிய அரசு தரப்பு சுற்றறிக்கையை அனைத்து தனியார் சுயநிதிகல்லூரிகளுக்கும் அனுப்பியது. இதையடுத்து நீதிமன்றத்தில் நடந்த வாத, பிரதிவாதங்களுக்கு இடையே எமது கோரிக்கையான தெளிவான அரசாணை வெளியிட வேண்டும் எனும் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதியரசர் தெளிவான அரசு அரசாணை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன்படி 1.09.2012 அன்று அரசாணை எண்: 92 ஐ அரசு வெளியிட்டுள்ளது அதில், வெளிச்சம் மனுவில் குறிப்பிட்டது போல, 11வது அறிவுறுத்தலில், நீதிபதி என்.வி. பாலசுப்பிரமனியன் கமிட்டி வரையறுத்த, கல்லூரிக்கட்டணங்களை எந்த கல்லூரியும், வசூலிக்கக்கூடாது, மேலும் முதல்தலைமுறை மாணவர்ளுக்கு கல்விக்கட்டணத்தை அரசிடமிருந்து பெறுவதை போன்று தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே வழங்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுதான்.. எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்கிறது..
அந்த மகிழ்ச்சியை தங்களிடம் பகிர்ந்து கொள்வதோடு…. இந்த அரசாணையையும் தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.. இந்த ஆணையை பல மாணவர்களின் கல்விகாக பரவலாக்குங்கள்..உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..
இந்த வழக்கின் வெற்றிக்காக நீங்கள் கொடுத்த வழிகாட்டுதலும், ஊக்கமும் தான் எங்களை இன்னும் பலமடங்கு பயணப்பட வைக்கிறது…  அதே நம்பிக்கையில் தான்… முதல்தலை முறை மாணவர்களின் உயர்கல்விக்கான பொதுநல வழக்கில் வெற்றி பெற உழைக்க்கிறோம்.. அந்த வெற்றிச்செய்தியை உங்களுடன் விரைவில் பகிர்ந்து கொள்வோம்..

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்
(கல்வி என்பது கடைச் சரக்கல்ல… அது ஒரு சமூக மாற்றத்திற்கான ஆயுதம் )

SUMMARY :

Won Poor Students Higher education Public Litigation Case…
Velicham is a movement which helps the first generation poor students or their higher education. We helped more than 700 students for making them as an engineer, doctor, teacher etc., During this year, more than 300 application came us for asking help for their higher education.
As per the Tamilnadu government ordered on April 16, 2010. That order for the government will reimburse the education costs of a college student if he comes from a family which has never had a graduate.
According to GO No.6, the govt will pay the fees on behalf of the students to the institutions from 2012 onwards. Students who got admission through management quota and govt quota in private colleges are also eligible for this scholarship.
But the colleges insist on the full payment of the fee at the time of admission. Due to their family economical status, most of the students are not able to pay full fee at the time of admission. This results in several students are not able to use this scholarship to pursue in their higher education.
We spoke to the colleges and requested to admit the students in their respective courses without demanding the fees mentioned in fee structure list fixed by the government appointed “fee fixing committee for self-financing institutions and mentioned about the said GO. But they are informed that they have not received any such Govt orders.
So we have filed two Public Litigation cases in the Chennai High court on August 16, 2012. We wanted the court to direct the institutions to admit students without insisting on full payment initially. On August 28, 2012 counter party said that the Tamilnadu Adi Dravidar and Tribal welfare Department didn’t send any circular to the colleges. But that department sent a circular mentioned that not to collect fee from SC/ST/Converted Christians on August 24, 2012. We brought this news to the court’s notice.
Finally we won one of our cases is for SC/ST/Converted Christian students. High court gave a direction stated that the Government and other authorities not to insist on payment of fees at the time of admission and to know about the government orders to the students, a copy of the same has to be displayed in the notice board.  Our another case is for first generation student is going on. We will win this case too for helping them for their higher studies.

With regards
Velicham


 What change of medium means to these students  
Special measures on to orient Tamil medium students to the atmosphere in engineering colleges


New campus, new friends, new faculty members and most importantly a new language for students from Tamil medium schools who have secured admission to engineering colleges.
Around 46 per cent of the students admitted to various streams in the Tamil Nadu Engineering Admissions (TNEA) 2011 are from Tamil medium schools.

Rate of integration
How well are these students integrated into courses conducted primarily in Tamil?
Having studied in a Tamil medium school, K. Balaji, a first-year student of College of Engineering, Guindy, initially found it extremely difficult to grasp the concepts taught in class. “It has been two weeks now. Though it is a little difficult to understand lectures and comprehend the textbooks, I am managing better,” he says.

There are some coaching classes in the college conducted in English to help students understand classes better. “I plan to attend these classes so that I can get doubts cleared ,” he says.
In many instances students who are unable to adjust to the course and the urban culture tend to get disheartened, note professors.

D. Shireen, coordinator, Velicham, an NGO that works with students, says that there are many students who score above 1,100 in the class XII examinations, but once they join an English medium course, some of them drop out. “It is more common in professional courses, since such students form a minority in these institutions,” she says.

Communication skills
As part of the one-week induction programme for students, the Anna University of Technology (AUT), Chennai, trains students in communication skills.
“A large section of the students comprises first-generation learners who come from the Tamil-medium schools. But since students in our institutions are academically bright, it is easy for them to pick up the language quickly,” says C. Thangaraj, Vice- Chancellor, AUT. At the Anna University, the faculty members help out the students from Tamil-medium schools when they have a difficulty.
“There are no bridge classes, but we expect the students to pick up the language from the English classes conducted during the first two years. The language teachers guide the students,” says M. Sekar, Dean, College of Engineering, Anna University.
Special coaching classes to help students understand the subject better are conducted in colleges. “The classes are conducted in English but the faculty members clear our doubts there,” he says.

Preparatory material
It is not just English language bridge course that institutions focus on.
The AUT-Chennai also has preparatory material in mathematics which will be distributed to the constituent colleges.
“This material has been prepared by faculty member of Anna University and IIT-M. It will help students understand the application of basic maths in the engineering course. Self-financing colleges can also procure them from the university,” says Mr. Thangaraj.


  • “Students who are unable to adjust to the course and urban culture often get disheartened”



  • Induction classes and special coaching classes help students adjust to medium




  • Thanks : The Hindu 

    பொறியியல் பட்டப்படிப்புகளாக கீழ்க்கண்ட 
    பாடப்பிரிவுகள் உள்ளன


    1. வானூர்திப் பொறியியல் (Aeronautical  Engineering)   

    2. வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன பொறியியல்
     (Agriculture and Irrigation Engineering)

    3. தானியங்கிப் பொறியியல் (Automobile  Engineering)
    4. பயோ- இன்பர்மேட்டிக்ஸ் (Bio –informatics)
    5. பி.ஆர்க் - கட்டடக்கலை மற்றும் உள்வடிவமைப்பு
     (B. Arch, - Interior Design.)

    6. உயிரிமருத்துவ பொறியியல் (Bio-Medical Engineering)
    7. உயிரித் தொழில்நுட்பம் (Bio-Technology)
    8. வேதியியல் மற்றும் மின் வேதிப் பொறியியல்
     (Chemical and Electro Chemical Engineering) 
    9. கட்டடப் பொறியியல் (Civil Engineering)  
    10. வேதிப் பொறியியல் (Chemical  Engineering)
    11. மண் பொருள் தொழில்நுட்பம் (Ceramic Technology)
    12. கணினி அறிவியல் மற்றும் பொறியியல் 
    (Computer  Science  and  Engineering)
    13. மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்
     (Electronics  andCommunication  Engineering.)
    14. மின்னியல் மற்றும் மின்னணுப் பொறியியல். 
    (Electrical  and  Electronics Engineering)
    15. மின்னியல் மற்றும் கருவியியல் 
    (Electronics  and  instrumentation  Engineering)
    16. உணவுத் தொழில்நுட்பம் (Food  Technology)
    17. பேஷன் டெக்னாலஜி (Fashion Technology)
    18. ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் (Geo – informatics)
    19. கருவி மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் ( Instrumentation  and  Control)
    20. தொழிற் பொறியியல் (Industrial  Engineering)
    21. தகவல் தொழில்நுட்பம் (Information Technology)
    22. இண்டஸ்டிரியல் பயோ டெக்னாலஜி (Industrial Bio-Technology)
    23. தோல் தொழில்நுட்பம் (Leather   Technology)
    24. உற்பத்திப் பொறியியல் (Manufacturing Engineering)
    25. மரெய்ன் பொறியியல் (Marine Engineering)
    26. மெட்டிரியல் என்ஜினியரிங் (Material Science and Engineering)
    27. எந்திரவியல் பொறியியல் (Mechanical  Engineering)
    28. எந்திர மின்னணு பொறியியல் (Mechatronics)
    29. மருத்துவ மின்னணுவியல் (Medical Electronics)
    30. உலோகப் பொறியியல் (Metallurgical  Engineering)
    31. சுரங்கப் பொறியியல் (Mining Engineering)
    32. பெட்ரோவேதிப் பொறியியல் (Petro  Chemical  Technology)
    33. பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய 
    வேதிப்பொருள் தொழில்நுட்பம்(Petroleum Refining and Petrochemical Technology)
    34. பெட்ரோலியம் பொறியியல் (Petroleum Engineering)
    35. பாலிமர் தொழில்நுட்பம் (Polymer  Technology)
    36. மருத்துவ தொழில்நுட்பம் (Pharimaceutical Technology)  
    37. ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்பம். (Rubber and Plastic Technology)
    38. நெசவுத்தொழில் வேதியியல் (Textile  Chemistry)
    39. நெசவுத்தொழில்நுட்பம் (Textile  Technology)
    40. அச்சுத் தொழில்நுட்பம் (Printing Technology)
    41. உற்பத்திப் பொறியியல் (Manufacturing Engineering)


    பிற பொறியியல் படிப்புகள்
    1. தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு பொறியியல் ( Fire and Safety Engineering)
    2. சர்க்கரைத் தொழில்நுட்பம் (Sugar Technology)
    3. நேவல் ஆர்க்கிடெக்ட்சர் மற்றும் ஓசன் என்ஜினியரிங் 
    (Naval Architecture and Ocean Engineering.)
    4. விண்வெளி தொழில்நுட்பம்

    5. நானோ டெக்னாலஜி (Nano Technology)
    6. ஏரோஸ்பேஸ் (Aerospace)
    7. அகௌஸ்டிக்ஸ் (Acoustics)
    8. அணுப் பொறியியல் (Nuclear Engineering)
    9. டெய்ரி டெக்னாலஜி (Dairy Technology)
    10. எனர்ஜி என்ஜினியரிங் (Energy Engineering)
    11. எண்ணை மற்றும் தாள் தொழில்நுட்பம் (Oil & Paper Technology)
    12. பல்ப்ஸ் மற்றும் பேப்பர் டெக்னாலஜி (Pulps & Paper Technology)
    13. போக்குவரத்து தொழில்நுட்பம் (Transportation Technology)

    பொறியியல் பாடப்பிரிவுகள் விளக்கம்.

    1.     பி.இ.பொதுப்பொறியியல் (கட்டிடப்பொறியியல்)
     (B.E.Civill  Engineering)

    சிவில் என்ஜினியரிங் என அழைக்கப்படும் பொதுப் பொறியியல் பிரிவில் கட்டிடம் கட்டுதலை உள்ளடக்கிய கட்டுமானப் பணிகள் கற்றுத்தரப்படுகின்றன. பி.இ.பொதுப்பொறியியல் (கட்டிடம் பொறியியல்) படித்தவர்கள் எம்.இ.எனப்படும் (மாஸ்டர் ஆ.ப் என்ஜினியாஜீங); மாஸ்டர் ஆப் டெக்னாலஜி எனப்படும். எம்.டெக் படிப்பிலும் சேர்ந்து மேற்படிப்பு படிக்கலாம்.


    2. பி.இ எந்திரவியல் பொறியியல் (Mechanical  Engineering)
    பி.இ எந்திரவியல் என அழைக்கப்படும் மெக்கானிக்ல்
    என்ஜினியரிங் படிப்பு தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான 
    பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படுகிறது. இந்த 
    படிப்பு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும்
    உபகரணங்கள் எந்திரங்கள், கொதிகலன்கள் மற்றும் 
    மின் உற்பத்தி சாதனங்கள் ஆகியவற்றைப்பற்றி
    அறிந்து கொள்ள உதவுகிறது. தற்போது கம்ப்யூட்டர் பற்றி
    கல்வியும், அதன் பயன்பாடும் இந்தக்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளது. வடிகால் வாரியங்கள் மத்திய மாநில அரசு வழங்கும்வேலை வாய்ப்புகள் போன்றவைகளும் இப்படிப்பை முடித்தவர்களுக்கு உள்ளன.

    3. பி.இ மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல
     (Electrical and Electronics Engineering)

    இந்தப்படிப்பில் மின்சாரம் சம்பந்தப்பட்ட இந்திரங்கள்
    மின் உபகரணங்கள், மின்உற்பத்தி ஆகியவற்றைப்பற்றி கற்றுத்தரப்படுகிறது. இந்தப் படிப்பை முடித்தவர்களுக்கு சிமெண்ட் ஆலைகள்ராணுவ தளவாட நிறுவனம், தேசிய வெப்ப மின் ஆற்றல் நிறுவனம்பாரத் கனரக மின் சாதன நிறுவனம் போன்றவற்றில் வேலைவாய்ப்பு உள்ளது. கம்ப்ïட்டர் நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும்.

    4. பி.டெக் வேதிப் பொறியியல் (Chemical  Engineering)
    பி.டெக் கெமிக்கல் என்ஜினீயரிங் என்பது பெட்ரோலியம், உரம்,
    சர்க்கரை, மருந்துகள், சாயம், சிமெண்ட் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புகள் உள்ள படிப்பாகும். கண்ணாடி தயாரிக்கும் 
    நிறுவனத்திலும் வேலைவாய்ப்பு உள்ளது.

    5. பி.இ.பொதுப் பொறியியல் புவித் தகவல் வரைவு (B.E.Geo Informatics)

    புவித்தகவல் வரைவு இயல் என்னும் பிரிவு பொதுப் பொறியியல்
    துணையோடு இணைந்த பிரிவு ஆகும். இந்தியாவில் சில 
    கல்வி நிலையங்களில் மட்டும் இப்பிரிவு உள்ளது. இப்படிப்பில்
    தேர்ச்சி பெற்றவர்களுக்கு வான்வெளித்துறை, நேஸனல்
    ரிமோட் சென்சிங் ஏஜென்சி சர்வே ஆஃப் இந்தியா 
    ஆகிய அமைப்புகளில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது.

    6. பி.இ உற்பத்தி பொறியியல் (Production  Engineering)

    உற்பத்திப் பொறியியல் துறை என்பது இயந்திரவியல் துறையைப்
    போன்றதே ஆகும். இருப்பினும் தொழிற்சாலைகளில் உருவாகும் 
    பொருட்களின் உற்பத்தி முறைகள், பொருட்களின் உற்பத்திக்குப்
    பயன்படும் சாதனங்கள், உற்பத்தி சாதனங்களை ஆராய்ந்து 
    தெளிவு செய்யும் வழிகள், மேலாண்மை நெறிகள் போன்றவற்றை
    இப்படிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். இப்படிப்பை முடித்தவார்ளுக்குத் தனியார் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன.

    7.பி.இ சுரங்கவியல் பொறியியல் ( Mining Engineering) 
    பி.இ.மைனிங் என்ஜினியரிங் படிப்பில் வெற்றி பெற்றவர்களுக்கு 
    அரசுத்துறை சுரங்க நிறுவனங்களிலும் தனியார் சுரங்க நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு உள்ளது. சுரங்க சட்டத்தின்படி பெண்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்பதால் பெண்கள் இத்துறைப்படிப்பில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள்.

    8. பி.டெக் தோல் தொழில் நுட்பம் ( Leather  Technology)
    இத்துறையில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் தோல் வேதிப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், தோல் பதனிடும் தொழிற்கூடங்கள்தோல் ஆராய்சசி நிறுவனங்கள் ஆகியவற்றில் 
    வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள்.

    9. பிடெக் நெசவுத் தொழில் நுட்பம் (Textile  Technology)
    பி.டெக்டெக்ஸ்டைல் டெக்னாலஜி என்னும் நெசவுத் தொழில் நுட்பப் பட்டம் பெற்றவர்கள் தேசிய ஜவுளி நிறுவனம் மற்றும் 
    தனியார் அரசு நெசவுத் தொழிற்சாலைகளிலும் வேலை பெற வாய்ப்பு அதிகம் உள்ளது.

    10. பி.டெக் ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் (Aeronautical  Engineering)
    இந்த பி.டெக் ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் படிப்பு முடித்தவர்களுக்கு இந்திய விமானப்படை, விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல், ஐ.எஸ்.ஆர்.ஓ.விமான தொழில் நிறுவனங்கள், தேசிய ஆய்வகங்கள் போன்ற பல்வேறு அமைப்புகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன.

    11.பி.இ. மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் 
    Electronics  and  Communication  Engineering)

    இந்தப் படிப்பை தமிழகத்திலுள்ள பெரும்பாலான பொயிறியல் 
    கல்லூரிகள் நடத்துகின்றன. இந்தப் படிப்பில் சிறப்பிடம் பெற்றவர்கள் தேசிய விமானவியல் கூடம், தேசிய மின்னணுவியல் தொழிலகம்,பாரத அணுக்கதிர்; ஆராய்ச்சி நிலையம், பாரத மின்னணு தொழிற்சாலை போன்ற பல அமைப்புகளில் வேலை பெற வாய்ப்பு உள்ளது. இவை தவிர பல தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு ஏராளம் உள்ளன.
    12. பி.இ.கணிப்பொறிஅறிவியல்மற்றும்பொறியியல்
    (Computer Science andEngineering)

    இப்படிப்பை முடித்தவர்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு 
    வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்தப் படிப்பு தமிழகத்திலுள்ள 
    பெரும்பாலான பொறியில் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரிகளில் உள்ளன. விப்ரோ, எச்.சி.எல. போன்ற அமைப்புகளும் இப்படிப்பை முடித்தவர்களுக்கு வேலை வழங்குகின்றன.

    13. தொழிலியல் பொறியியல் (Industrial  Engineering)
    தொழிற்சாலையில் பணிபுரியத் தேவையான
     பணியாளர்களையும், இயந்திரங்களையும் எந்தெந்த 
    வகையில் சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதைஅறிந்து 
    கொள்ளவும் இந்தப் படிப்பு உதவியாக அமைந்துள்ளது.

    14.அச்சுத் தொழில் நுட்பம் (Printing  Technology
    பி.இ.பிரிண்டிங் டெக்னாலஜி படிப்பில் அறிவியல், கணிதம்,
    பேக்கேஜிங் (Packaging)Ùமட்டீரியல்; சயின்ஸ் (Material  Science)
    இயந்திரவியல், மின்சாரவியல் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன.
    இந்தப் படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு பெரிய அச்சகங்கள்பத்திரிக்கைகள், விளம்பர நிறுவனங்கள் அச்சு இயந்திர உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்பு உள்ளது.

    15. பி.ஆர்க் படிப்பு (B.Arch)

    கட்டிடக்கலை பொறியியல் படிப்பை (Architecture Engineering) கல்லூரி
    மூலம் கொடுப்பதே பி.ஆர்க் படிப்பின் நோக்கமாகும். இந்தப் படிப்பில் நவீன அறிவியல் கூடம், உடல் ஊனமுற்றோர் நிலையம் அமைத்தல்,
    தேசிய விமானம் நிலையம், கலாச்சார நிலையங்கள், தொழிற்பயிற்சி
    மையங்கள், மருத்துவ நிலையங்கள் முதலிய முக்கியமான 
    கட்டிடங்களை உருவாக்கத் தேவையான பயிற்சிகள் 
    வழங்கப்படுகின்றன. இப்படிப்பை முடித்தவர்களுக்குப்
    பொதுப்பணித்துறை, ரயில்வே, வீட்டு வசதி வாரியம்,
    தபால் தந்தி இலாக்காக்கள் போன்றவற்றில் வேலை வாய்ப்புகள் உள்ளன.

    16. பி.இ.மின்னணு மற்றும் கருவிநுட்பவியல் 
    (Electronics  and  Instrumentation)


    பி.இ.எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்டுருமென்டேசன் என்னும் 
    மின்னணு மற்றும் கருவி நுட்பவியல் படிப்பில் பொருளாதாரம் 
    மற்றும் மேலாண்மை, பொருள் தயாரித்தல் சுற்றுப்புற மாசு கட்டுப்பாடு (Pollution Control) ஆகிய பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன.


    17.தகவல் தொழில்நுட்பம் (Information  Technology)

    இன்றைய உலகில் மிகவும் அதிகவேக வளர்ச்சியடைந்து 
    வருவது தொழில்நுட்பத் துறையாகும் . கம்ப்ïட்டர் 
    உதவியுடன் தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்கு அனுப்பும் முறை தகவல் சேகரிப்பு மற்றும் சேமிப்பு பற்றியும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இண்டர்நெட் மூலம் தகவல் பரிமாற்றம் செய்தல் போன்றவையும் இப்படிப்பில் இடம் பெறும்.


      நன்றி: தினத்தந்தியில் வெளியானதை மின்னஞ்சல் 
    அனுப்பிய திரு. ஆகாஷ் அவர்களுக்கு,


    இன்று பிளஸ் டு தேர்வு எழுதி தேர்வு முடிவுக்குக் காத்திருக்கும் மாணவர்களிடையே என்ன படிக்கலாம்? எந்தக் கல்லூரியில் சேரலாம்? என்கிற கவலை ஏராளமாகத் தொற்றிக் கொண்டிருக்கிறது. அவர்களின் பெற்றோர்களுக்கும் இந்த கவலை ஒட்டிக் கொண்டு விட்டது. 

    மருத்துவம் படிக்கலாமா? பொறியியல் படிக்கலாமா? வேளாண்மை படிக்கலாமா? அல்லது சமையல் கலையைப் படிக்கலாமா? எதைப் படித்தால் கை நிறையச் சம்பாதிக்கலாம்? எதைப் படித்தால் வெளிநாட்டில் வேலைக்குச் செல்லலாம்? என்று அவர்களுக்குள் ஆயிரம் கேள்விகள்...

    இந்த கேள்விகளுக்கெல்லாம் விடைகளைத் தேடி சிலர் ஏற்கனவே படிப்பை முடித்து தற்போது நல்ல வேலையிலிருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், அவர்களது பெற்றோர்கள் என்று தெரிந்தவர்களை எல்லாம் தேடிப் போகிறார்கள். 

    தமிழ்நாட்டில் இன்று இருக்கும் கல்லூரிகளில் எந்தப் படிப்புக்கு கிராக்கி அதிகமாக இருக்கிறது? அந்தப் படிப்பு எந்தக் கல்லூரிகளில் எல்லாம் இருக்கிறது? என்று கடந்த ஆண்டு பிள்ளைகளின் படிப்புகளுக்காக அலைந்த பெற்றோர்களிடம் அவர்களுக்குத் தெரிந்த கல்லூரிகளின் பட்டியலையும் அங்கிருக்கும் படிப்புகளையும் விசாரணை செய்து தெரிந்து வைத்துக் கொள்ளும் சிலரும் உண்டு.

    தங்கள் பிள்ளைகளை அடுத்து என்ன படிக்க வைக்கலாம் என்கிற விபரமே தெரியாமலும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    பொதுவாகப் பெற்றோர்கள் ஒரு விஷயத்தை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். அது தங்கள் பிள்ளைக்கு எந்தப் படிப்பின் மீது அதிக ஆர்வமுள்ளது என்பதுதான். அந்த ஆர்வம் உண்மையானதா அல்லது அவனுடன் படித்த நண்பர்கள் அந்தப் படிப்பின் மீது ஆர்வமாய்ச் செல்வதால் இவனும் அவனுடன் சேர்ந்து சொல்கிறானா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு விருப்பப்பட்ட படிப்பைத் தேர்ந்தெடுப்பதுடன் அதில் சிறப்பாகத் தேர்ச்சி அடையவும் முடியும்.

    இப்படி உண்மையிலேயே உங்கள் பிள்ளைக்கு ஆர்வமான படிப்பு என்று தெரிந்தால் அந்தப் படிப்பைப் பற்றித் தெரிந்தவர்களிடம் அந்தப் படிப்பு பற்றி முழுமையாக விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, அந்தப் படிப்பு படித்தால் கிடைக்கும் வேலைவாய்ப்பு, அதற்கான இடங்கள், சம்பளம் மற்றும் சுயதொழில் வாய்ப்பு போன்றவைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். 

    இதன் பிறகு, அந்த படிப்பு தமிழ்நாட்டில் எந்தெந்த கல்லூரிகளில் இருக்கிறது? அந்தக் கல்லூரி அரசுக் கல்லூரியா? அரசு உதவி பெறும் கல்லூரியா? அல்லது சுய நிதிக் கல்லூரியா? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி என்றால் தங்கள் தேர்வு முதலாவதாக இருக்கலாம். ஏனென்றால் அங்கு தேவையான கட்டிடங்கள், ஆய்வுக்கூடங்கள், நூலகம், இணைய வசதிகள் மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கும். 

    சுயநிதிக் கல்லூரிகளென்றால் முன்பே அந்தக் கல்லூரிக்குச் சென்று, கல்லூரியில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கிறதா? கல்லூரிக்கு மத்திய / மாநில அரசின் தொடர் அங்கீகாரம் (Continuing Approval / Recognition), பல்கலைக் கழகத்தின் தொடர் இணைப்பு (Continuing Affiliation) பெறப்பட்டிருக்கிறதா? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் கடந்த கல்வி ஆண்டில் அங்கீகாரம் பெற்றிருக்கும் சில கல்லூரிகளில் அரசு நிர்ணயித்துள்ள போதுமான வசதிகளில்லாமல், வசதி குறைவு காரணமாக அந்தக் கல்வி ஆண்டிற்கான அங்கீகாரம் ரத்து செய்யப் பட்டிருக்கலாம்.

    பல சுயநிதிக் கல்லூரிகள் கட்டிடங்களை அழகாகக் கட்டி வைத்திருப்பார்கள். அங்கு தகுதியான பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இல்லாத நிலை இருக்கும். இதை எப்படி தெரிந்து கொள்வது? என்பது என்கிற உங்கள் சந்தேகம் நியாயமானதுதான். அங்கு பயிலும் மாணவர்களிடம் விசாரித்துப் பாருங்கள். தாங்கள் தேர்வு செய்துள்ள கல்லூரியின் முதல்வராக இருப்பவர் முன்பு எங்கு பணியிலிருந்தார்? தகுதியானவர்தானா? அவர் இந்தக் கல்லூரியில் சிறப்பாகச் செயல்படுகிறாரா? தேவையான பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்களா? அவர்கள் எத்தனை ஆண்டுகளாக இந்தக் கல்லூரியில் தொடர்ந்து பணியில் இருக்கிறார்கள்? என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் அந்தக் கல்லூரியின் நிர்வாகம் சரியில்லாத நிலையில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் அடிக்கடி மாற்றமாகிக் கொண்டேயிருப்பார்கள். இப்படி அடிக்கடி மாற்றமாகிக் கொண்டேயிருக்கும் கல்லூரியில் கல்வியின் தரம் மிகவும் தாழ்ந்துதான் இருக்கும். 

    சில கல்லூரிகளில் ஆய்வுக் கூடங்கள் பெயருக்குத்தான் இருக்கும். பாடத் திட்டத்திற்கு ஏற்ற கருவிகளோ, பொருட்களோ அங்கு இல்லாத நிலையிருக்கும். இதை அங்கு படித்து வரும் அல்லது படித்து முடித்த மாணவர்களிடமோ கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இந்த கல்லூரிகளில் படிப்பதால் படித்து முடித்த படிப்புகளுக்குரிய செயல்முறைப் பயிற்சியில்லாமல் நிறுவனங்களில் நேர்முகத் தேர்வின் போது தவிக்க நேரிடும்.

    இதே போல் வளாகத் தேர்வுகளுக்கு கல்லூரி நிர்வாகம் கடந்த ஆண்டு எடுத்த முயற்சிகள் மற்றும் அதில் எந்தெந்த நிறுவனங்கள் பங்கு பெற்றன? எத்தனை மாணவர்கள் பணிக்கான வாய்ப்புகள் பெற்றனர்? போன்ற விபரங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால் சில கல்லூரிகளில் பெயருக்கு நாம் கேள்விப் படாத சிறு நிறுவனங்களின் பெயரில் வளாகத் தேர்வு நடத்தப்படுகின்றன. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு போதிய சம்பளம் அளிக்கப்படாமல் சேர்ந்த சில மாதங்களுக்குள்ளேயே அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டிய நிலையிருக்கும். 

    இதுபோல் சில கல்லூரிகளில் மாணவர்களிடம் தேவையில்லாமல் அடிக்கடி அபராதம் விதிக்கப்பட்டு உடனடியாகச் செலுத்தச் சொல்லும் நிலையும் உள்ளது. இங்கு கைபட்டாலும் குற்றம் கால்பட்டாலும் குற்றம்தான். நிர்வாகத்தின் பணத் தேவைகளுக்கு ஏற்ப அடிக்கடி அபராதம் விதிக்கும் கல்லூரிகளும் இருக்கின்றன. இந்த கல்லூரிகளையும் நாம் விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இது போன்ற கல்லூரிகளில்  நம் பிள்ளைகளின் படிப்பு போய்விடக் கூடாதே என்கிற நிலையில் அவர்கள் விதிக்கும் அதிக அளவிலான அபராதத் தொகையை  எந்தவித ரசீதுகளுமில்லாமல் அடிக்கடி நாம்செலுத்த வேண்டியிருக்கும். 

    கல்லூரி துவங்கப்பட்ட ஆண்டு மற்றும் அதை நிர்வகிக்கும் நிர்வாகிகள் யாரென்பதையும் கூடத் தெரிந்து கொள்ளுங்கள். சில நிர்வாகங்கள் அந்த கல்லூரியில் எந்த வசதியும் செய்து கொடுக்காமல் வேறு புதிய கல்லூரி அல்லது புதிய நிறுவனத்தினை உருவாக்கும் நோக்கத்துடன் கல்லூரிக்கு வரும் பணம் அனைத்தையும் மாற்றி விட்டு கல்லூரியில் பணியிலிருப்பவர்களுக்கு கூட மாதந்தோறும் சம்பளத்தைத் தராமல் இழுத்தடிப்பதுண்டு. இதனால் பணியிலிருப்பவர்களுக்கு பணியில் ஈடுபாடில்லாமல் அந்தக் கல்லூரியில் கல்வியின் தரம் மிகவும் குறைவாக இருக்கும்.

    இப்படி சுயநிதிக் கல்லூரிகளில் சில தரம் குறைந்திருந்தாலும் பல சுயநிதிக் கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளைக் காட்டிலும் அதிகமான வசதிகளுடன் இருக்கின்றன. படித்த அனைவருக்கும் வேலை வாய்ப்புகளையும் பெற்றுத் தந்திருக்கின்றன. இது போன்ற நல்ல சுயநிதிக் கல்லூரிகளைத் தேடித் தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் பிள்ளைகளின் கல்வி சிறப்பாக அமையும். கூடவே அவர்களது வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.

    -தாமரைச் செல்வி