ஜூனியர் சயிண்டிஸ்ட்…செந்தில்
அரியலூர்
மாவட்டம், பிழிச்சுகுழி கிராமம்தான் எனக்கு சொந்த ஊர். சின்ன வயசிலயே அப்பாவை இழந்த
என்னை தொடர்ந்து படிக்க வைக்க அம்மாவால் முடியவில்லை. வறுமையின் காரணமாக பத்தாம் வகுப்பு
முடித்து நல்ல மதிப்பெண் பெற்றிருந்த நான், தொடர்ந்து படிக்க முடியாத சூழலில், குடும்ப
வறுமையால், முந்திரிக்கொட்டை பொறுக்கும் கூலி வேலை சென்றுகொண்டிருந்தேன். என் சூழலை
தெரிந்துகொண்ட வெளிச்சம் இயக்குநர் செரின் அவர்கள், என் தாயிடம் வந்து, பேசி என்னை பதினென்றாம் வகுப்பு
சேர்த்து படிக்க வைத்தார்கள். 12ம் வகுப்பில் 1000த்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற நான், காரைக்குடி மத்தியஅரசின் வேதியல் ஆராய்ச்சி மையத்தில் (சிக்ரி)
கொமிக்கல் இஞ்ஜினியரிங் படித்த நான் , இப்போது
ஓமன் நாட்டில் ஜூனியர் சயிண்டிஸ்டாக பணிபுரிகிறேன். எனக்காக வெளிச்சம் பட்ட வலிகளை என்னால் வார்த்தைகளால் பதிவு செய்ய முடியவில்லை.
ஆனால் என் வாழ்வு வெளிச்சத்துக்கு வந்தது வெளிச்சத்தால் தான்…..
ஆசிரியர்
ஆண்டோ ,

நன்றியுடன்
- ஆண்டோ, பார்வையற்ற மாணவர்

நன்றியுடன்
- ராசாத்தி
என்னோட
பெயர் மாரி, திருவண்ணாமலை மாவட்டம், வடகரிம்பலூர் கிராமத்தில் பிறந்தவன். அப்பா குடிபழக்கத்தால்
பறிகொடுத்தேன். படிப்பறிவில்லாத என் அம்மாவிடம்,
இந்தகாலத்தில் படிப்புதான் வாழ்கை என எவ்வளவோ போராடியும் அம்மாவுக்கு புரியவே
இல்லை.. அதனால் பனிரெண்டாம் வகுப்பு முடித்த நான், பெயிண்டி அடிக்கும் வேலைக்கு சென்றுகொண்டிருந்தேன்.
அதோடு அம்மாவுக்கு தெரியாமல் சென்னை பல்கலைகழத்தில், தொலைதூரக்கல்வியில் யூஜி படித்தேன்.
அதன்பிறகு வெளிச்சத்தின் மூலம், பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைகழக கல்லூரியில் முதுகலை
சமூகப்பணி முடித்தேன். கடந்த காலங்களில் யாருக்கும் புண்ணியமில்லாத நிலையில் இருந்த
நான், இன்று பலருக்கு உதவிட, சென்னை வீதிகளில் என்னை போன்று காசில்லாமல் பாதிக்கப்படும்
மாணவர்களின் கல்விக்காக உண்டியல் ஏந்தி, தமிழக அரசு முதல்தலைமுறை மாணவர்களின்
உயர்கல்விக்கு உதவும் அரசாணை கொண்டு வர காரணமானவர்களில் நானும் ஒருவன்.. என்பது மகிழ்ச்சிதான்.
என்னை பலருக்கு உதவ வாய்ப்பளித்தது வெளிச்சம்தான்.
மு.மாரி,
திருவண்ணாமலை
நான்
கருப்பையா. பெரம்பலூரிலிருந்து 28 கிலோமீட்டர்
தூரத்தில் உள்ள சின்ன ஊரான சிறுநிலா என்னோட ஊர். பஸ் வராத எங்க ஊரிலிருந்து பள்ளி படிப்புக்காக பெரம்பலூர் போய்வரவே
ரொம்ப கஸ்டப்பட்டேன்.. பணிரெண்டாம் வகுப்பு முடித்த எனக்கு அரியலூர் அண்ணா யுனிவர்ஸ் சிட்டியில் கம்யூட்டர்
இஞ்சினியரிங் சீட் கிடைத்தது.. நான் எங்க தங்குவதென தெரியாமல் தவித்தேன்.. அதோடு ஆட்டோ
ஓட்டும், எனது அண்ணனால், என் கல்விக்கு உதவமுடியவில்லை. வங்கி கடன் போக மீதி கட்டணம்
செலுத்த முடியாமல் கஸ்டப்பட்டோம். இன்று வெளிச்சத்தின் மூலம் அரியலூர் அலுவலகத்தில்
தங்கி, தினமும் கல்லூரிக்கு 6 கிலோ மீட்டர் மூன்று சக்கரத்தில் போய்வருகிறேன்.. ரொம்ப
கஸ்ட்டப்பட்டு தான் படிக்கிறேன்.. ஆனால் வெளிச்சம் இருக்கும் நம்பிக்கையில் தன்னம்பிக்கையோடு
நிற்கிறேன்.
கருப்பையா…பொறியியல் கல்லூரி மாணவர்
என்னுடைய
பெயர் அஸ்வினி.. நான் பெரம்பலூர் மதன்கோபாலபுரம்தான் எனக்கு சொந்த ஊர். பன்னிரெண்டாம் வகுப்பில் 986 மதிப்பெண் பெற்ற எனக்கு திருச்சி பாரதிதாசன் இன்ஸ்டிடுயூட் ஆப் மேனேஜ்மென்ட்
கல்லூரியில் பி.டெக்
இடம் கிடைத்தது. ஆனால் பணம் கட்ட வசதியில்லை. அம்மாவின் மருத்துவ செலவுக்கே வழியில்லாத சூழலில் குடும்பம்
சிக்கிதவித்த நிலையில், வெளிச்சம் மாணவர்களிடம் உதவி கோரினோம். பலவிதமான ஆய்வுக்கு
பின் என்னை தேர்தெடுத்து கல்லூரியில் சேர்த்து
விட்டார்கள். கல்லூரி படிப்பை முடித்த நான், இன்று பெங்களூரில்
ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்
என்றால் வெளிச்சத்தின் மூலம் உதவிய உள்ளங்களையே சாரூம்
நன்றியுடன்
அஸ்வினி
Vaazhththukkal... Tamilakam engum iruttil ulla maanavarkal velichcham pera neenkal nadaththum ella thiyakathirkum thankalodu...
Nadpudan,
C.Rajendra Thilahar, ME,
9092642450.