முடிந்ததை செய்யுங்கள்-எங்கள் ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு

Posted by Velicham Students - -


நிதியளிப்பீர்
உறவுகளே!

                          வெளிச்சம் மாணவர்களின் வணக்கங்கள்,  2004 ஆண்டு முதல் வெளிச்சம் அமைப்பானது சென்னையை மையமாக கொண்டு, ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு உழைத்து வருகிறது. ஏனெனில் ஏழை மாணவர்கள் பணமில்லை என்கிற  ஒரே காரணத்திற்காக தங்கள் வாழ்க்கையையும், படிப்பையும் இழக்கக் கூடாது என்பது மட்டும் தான் வெளிச்சத்தின் நோக்கம்.  உங்களை போன்ற உதவும் உள்ளங்களின் உதவியால் வெளிச்சம் இன்றுவரை  தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கண்டறியப்பட்ட 515 முதல்தலைமுறை ஏழை மாணவர்களில் 6 மாணவர்கள் பொறியாளராகவும்,  36 மாணவர்கள் ஆசிரியராகவும், 22 மாணவர்கள் வழக்கறிஞராகவும் படிப்பை முடித்து இருக்கிறார்கள் மேலும் 86 மாணவர்கள் பொறியியல் துறையிலும், 11 மாணவர்கள் மருத்துவத்துறையிலும் மற்ற மாணவர்கள் பல்வேறு துறைகளில், பல்வேறு கல்லூரிகளில் படித்துக்கொண்டு இருக்கிறார்கள்..   வெளிச்சத்தின் முதல் மாணவர்  செந்தில் என்பவர் இப்போது ஜூனியர் சயிண்டிஸ்டாக பணிபுரிகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்..
இது ஒருபுறமிருக்க அவசர உலகில் பெருகிவரும் மாணவர்களின் தற்கொலைகளை தடுத்திடவும், இது போன்ற மாணவர்களுக்கு உதவிட மாணவர்களே முன்வரவேண்டும் என்று  முடிவெடுத்து  எங்களுக்கு கிடைத்த வெளிச்சம் மற்ற மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக,  எந்த மாணவர்களும் எந்த காரணத்திற்காகவும்  படிப்பை இழக்கும் சூழலுக்கு ஆளாகி விடக்கூடாது. என்பதற்காக மாணவர்கள் ஆலோசனை மையம் (Students  Help Line) 9698151515 ஆரமித்து.  தமிழகம் முழுவதும் கடந்த 15.07.2010 முதல் 5.09.2010 வரை    55 நாட்களாக பிரச்சாரப்பயணமாக மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறோம். அதன்மூலம் இது நாள் வரை 26000 க்கும் மேற்பட்ட தொலைப்பேசி அழைப்புகளை சந்தித்து மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்கைக்கு ஆலோசனைகளும் உதவிகளும் செய்து வருகிறோம். Students Help Line ல் தொடர்பு கொண்டவர்களில் 156  மாணவர்கள் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத சூழலில் அவர்களின் படிப்பை இழக்கும் சூழலில் இருக்கிறார்கள். கல்லூரிக்கட்டணம் செலுத்தாததால் அவர்கள் பல்வேறுவிதமான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அவர்களின் கல்விக்கு உதவிட உங்கள் முன் நிற்கிறோம்.. உங்கள் பங்களிப்பு எங்களை போன்ற மாணவர்களின்  தலையெழுத்தை மாற்றும் என்கிற நம்பிக்கையில்…
வெளிச்சம் மாணவர்கள்
http://velichamedu.wordpress.com/
http://velicham.org/
+919698151515
+919500162127
வங்கி கணக்கு எண்:
Thaai Neri Educational Trust
Account no. 007701019408
Branch . ICICI Bank ,Ashok nagar Branch
City. Chennai
உதவி செய்பவர்கள் velicham.students@gmail.com இந்த மெயிலுக்கு தகவல் அனுப்பவும்..அல்லது கல்லூரிக்கே டி.டி. கொடுக்கலாம்..
நன்கொடைகளுக்கு இந்திய வருமான வரிச்சட்டத்தின் கீழ் வருமானவரி தள்ளுபடி 80G பெறப்பட்டுள்ளது .


ஒரு நிமிடம் எம் வாழ்கையை தொலைக்காட்சியை பார்க்க

One Response so far.

  1. இந்தப் பதிவை வாசித்த பொழுது இதயம் கனத்துப் போனது இயலாதவர்களின் கைகளில் ஆயிரம் ஷீட்டுகள் இயலும் என்ற நம்பிக்கை மட்டுமே எனது சகோதர, சகோதரிகளிடம் நானும் இதைப் பற்றி ஒரு பதிவை எனது தளத்தில் வெளியிடுகிறேன் . என்னால் இயன்றப் பண உதவியையும் கீழே குறிப்பிட்டு இருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்கிறேன் . தொடர்ந்து முயற்ச்சிப்போம் ஒருநாள் உடைபடமலா போகப்போகிறது ஏழைகளால் இயலாது என்ற மூடர்களின் நம்பிக்கையின் கதவுகள் .

Leave a Reply