Showing posts with label tamil eelam. Show all posts


என்னுடைய பெயர் .இந்திராணி, ஈழத்திலுள்ள கிளிநொச்சி ஜெயபுரம்தான் எனக்கு சொந்த ஊர். 1990ம் ஆண்டு போரின் காரணமாக அகதிகளாய் தமிழகத்திற்கு வந்தோம். தமிழகம் வந்த எங்களுக்கு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள லேனா விளக்கு முகாமில் இடம் ஒதுக்கினார்கள். ஈழத்தில் சொந்த நிலத்தில் தலைநிமிர்ந்து வாழ்ந்த நாங்கள்  முகாம்களில் அடைக்கப்பட்டோம். எங்கள் முகாமில் மொத்தம் 315 குடும்பங்கள் வசிக்கிறார்கள்.

வாழ்வதற்ககே கஸ்டப்படும் நாங்கள் படிப்பதற்காக  பட்ட துயரங்களை சொல்ல வார்த்தையில்லை. எல்லோரும் பெயின்ட் அடிக்கும் வேலைக்கும் சென்று அதில் சம்பாதிக்கும் பணத்தில் குடும்பம் நடத்தவே முடியாத நிலை தொடர்ந்தது.
2ம் உலகத்தமிழ் அமைப்பு மாநாட்டில் பேசும்  இந்திராணி


அந்த சமயத்தில் ஈழத்தின் இறுதிகட்ட போரில், என்ன நடக்கிறது என்று தெரியாமல் தவித்த நிலையில் எனது சித்தப்பா,மாமா,அக்கா ஆகிய மூவரையும் இழந்தோம். ஒரு பக்கம் உயிரிழப்புகள் இன்னொரு பக்கம் படிப்பு என கஸ்டத்தை உணர்ந்து படித்த நான் ,  கடியாப்பட்டியில் உள்ள உலகப்பர் மேல்நிலைப் பள்ளியில் படித்து 12ம் வகுப்பில் 1200க்கு 802 மதிப்பெண் பெற்றேன்.

வறுமையின் காரணமாக குடும்பத்தில் யாரும் படிக்கவில்லை என்பதால் . நான் கல்லூரி படிப்பதற்கு ஏகப்பட்ட நெருக்கடிகள். ஒரு வழியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அற்புதா கலை & அறிவியல் கல்லூரியில் இளநிலை வணிகவியல்(B.com) சேர்ந்து படித்தேன். தினசரி கல்லூரிக்கு போய்வருவதற்கு கூட வசதியில்லாமல் படித்தும், கல்லூரியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்.

படித்து தணிக்கையாளர் (Auditor) ஆகவேண்டும் என்பதுதான் என் ஆசை.

என் ஆசையை பெற்றோர்களிடம் சொன்னபோது உன்னை படிக்க வைக்க முடியாது வீட்டோடு இரு என்று என்னை திட்டினார்கள். அப்போதுதான் எனக்கு வெளிச்சம் அமைப்பை பற்றி கேள்விப்பட்டேன்.  அவர்களோடு தொடர்பு கொண்டு என் கனவை சொல்லி அழுதேன்.

நான் இப்போது சென்னை எழும்பூரில் உள்ள ICWAI – SOUTHERN INDIA REGIONAL COUNCIL ICW  படித்து வருகிறேன்.  

நன்றியுடன்
.இந்திராணி


இந்த ஈழ மாணவியின் கல்விக்கு உதவுங்கள்

நீங்கள் உதவ நினைத்தால் இந்த மின்னஞ்சலில் velicham.students@gmail.com தொடர்பு கொள்ளுங்கள்..

இது போன்ற ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவிட : https://spreadsheets.google.com/viewform?formkey=dFR0MFJtbllsNUNrRk9CTG82ZlJxOWc6MQ