Showing posts with label love. Show all posts
இந்த பிரச்சனையை பற்றி நாங்கள் எதையும் எழுத போவதில்லை... இதை பாருங்கள் வலிகள் நிறைந்த வேதனை உங்களுக்கு தெரியும்.. உங்கள் வீட்டில் யாராவது ரகசியமாக போன் பேசுகிறார்களா......... உடனே கவனியுங்கள்...
சரி: வீடியோ, பத்திரிக்கை செய்திகளை பாருங்கள்..
நன்றி: புதிய தலைமுறை தொலைக்காட்சி
நன்றி: விஜய் டிவி நடந்தது என்ன
உங்கள் வீடுகளில் பிள்ளைகள் இருக்கலாம். அவர்கள் உங்கள் பேட்சை கேட்பதில்லையா, படிக்கிற வயசுல பெத்தவங்க பேச்சை கேட்க மாட்டங்குறாங்கண்ணு, அது அது பட்டா திருந்தும்ணும், வயசு கோளாறுண்ணு சொல்லிட்டு போகபோறீங்களா, இல்லைஎன்ன பண்ணனும்னு தோணலையா, உங்கள் மகன் மகள் தானே நீங்கள் சொல்லி கேட்கலைண்ணா யாரு சொல்லி கேட்க போறாங்க..
அவங்களுக்கு மன்னிக்கனும் உங்க பையனோ பொண்ணோ பெத்தவங்களை யாருக்கும் பிடிக்காதாம், உங்கள் பிள்ளைகளுக்கு, கேட்டதும் அதிர்ந்து போனோம்..
இதுவரை நாம் பல்லாயிரகணக்கான மாணவர்களை சந்தித்திருக்கிறோம் அவர்கள் சொன்ன வரிகள் தான் நீங்கள் மேலே படித்தவை…. இதை போக்க நாம் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு உளவியல் பயிற்சி கொடுத்து வருகிறோம்.. கடந்த மாதம் வந்தவாசி பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு போயிருந்தோம் இந்தமுறை 800 க்கும் மேற்ப்பட்ட மாணவிகள் பங்குபெற்றார்கள், உச்சி வெயிலில் 2.35 மணி துளிகள் நம்மை அசர வைத்தனர் மாணவியர்… போன முறை நாம் பயிற்சியில் மாணவர்கள் பேசியதை பெண்ணாய் ஏண்டா பிறந்தோம்னு எத்தனையோ நாள் அழுததுண்டு என்கிற தலைப்பில் வெளியிட்டிருந்தோம். இன்று சில மாணவிகள் அம்மா அப்பான்னு சொன்னாலே பிடிக்க மாட்டங்கது, எங்க மேல பாசமா இருக்கிற அவங்களை விட்டுட்டு ஏன் காதலிக்க தோணுது என்றெல்லாம் கேட்க எல்லாவற்றிற்கும் பதிலளித்தோம் தாய்மையோடு. இது உங்கள் வீட்டு மகாலட்சுமியான உங்கள் வலியாக கூட இருக்கலாம்… இந்த மாணவியர் வலியை அப்படியே பதிவு செய்கிறோம் காட்சியாக கூர்ந்து பாருங்கள்..
(இக்கட்டுரை மாணவர்களின் நலன் கருதி பதிவு செய்கிறோம்…. மாணவர்களை குறை சொல்ல அல்ல..)
சமூக அக்கறை உள்ளவரா நீங்கள்
ஏழை மாணவர்களின் கல்விக்காக இணைவோம் வாரீர்…
காதலர் தினத்தினை உலகமே கொண்டாடிய வேலையில் கலைஞர் தொலைக்காட்சி கருத்து யுத்தம் நிகழ்ச்சியில் இன்றைய மாணவர்கள் அதிகம் முக்கியத்துவம் தருவது நட்பிற்காகவா, காதலுக்காகவா என்கிற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் கலந்துகொண்ட 25 வெளிச்சம் மாணவர்கள் கருத்துக்களால் அதிரவைத்தனர். தலைப்புகள் நம்மை யேசிக்க வைத்தாலும் வாய்ப்பினை மாணவர்களுக்கு தந்தோம். மைக்கை பார்த்தாலே பயப்படும் கிராமபுற மாணவர்களான நமது மாணவர்கள் பேச்சினை கண்டு பாராட்டிய உங்களுக்கும் நன்றி…
.படங்களை உங்கள் பார்வைக்காக சமர்ப்பிக்கிறோம்…
நட்பிற்க்காக |
நட்பிற்க்காக |
நட்பிற்க்காக |
நட்பிற்க்காக |
நட்பிற்க்காக |
நட்பிற்க்காக |
நட்பிற்க்காக |
காதல் சார்பாக |
நட்பிற்க்காக |
காதல் சார்பாக |
காதல் சார்பாக |
நட்பிற்க்காக |
காதல் சார்பாக |
காதல் சார்பாக |
காதல் சார்பாக |
நட்பிற்க்காக |
நட்பிற்க்காக |

பள்ளிக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தியேட்டருக்குள் ஒளிந்திருந்த மாணவ-மாணவிகளை ஊழியர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இப்போது பயங்கரமான கலி காலம் நடந்து கொண்டுக்கிறது என்பதை நாள் தோறும் நடக்கும் சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன. அதிலும் காதல் விவகாரத்தில் நடக்கும் சம்பவங்கள் கொடுமையிலும் கொடுமை?
காதலுக்காக 25 வருடம் கஷ்டப்பட்டு வளர்த்த பெற்றோரை உதறிவிட்டு ஓடும்மகள், மகனை போலீஸ் நிலையத்தில் வைத்து அழுது அடம் பிடிக்குது மீட்க போராட்டத்தில் ஈடுபடும் பெற்றோருக்கு தோல்விதான் மிஞ்சுகிறது.
சமீபத்தில் மதுரையை சேர்ந்த போலீஸ் ஏட்டு மகள் காதலனுடன் திருச்சி கண்டோன்மெண்ட் போலீசில் தஞ்சம் அடைந்து விட்டார். விஷயம் தெரிந்து ஏட்டு வந்து மகளை கண்ணீர் மல்க அழைத்தார்.
ஆனால் இறுதியில் காதல்தான் ஜெயித்தது. மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து, திருமணம் செய்து வைக்க கனவு கண்ட ஏட்டுவின் கனவு எட்டாமல் போய்விட்டது. அழுது கொண்டே மதுரைக்கு ஏறினார்.
இன்னொரு சம்பவம் அது கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவி ஒரு வாலிபருடன் போலீசில் தஞ்சம் அடைந்தார். போலீசார் விஷயம் கேள்விபட்டு 2 தரப்பு பெற்றோரையும் அழைத்து பேசினர்.
பெண்ணின் பெற்றோர் மகளை தங்களோடு வா... உன்னை பெத்து வளர்த்து படிக்க வைத்தோமே... கல்யாணமும் நாங்கள் செய்து வைக்க மாட்டோமோ...! என “ஓ”வென்று அழ... ம்கூம்... காதலனே... எனக்கு என அந்தமாணவி கம்பி நீட்டினாள். 25 வருட பெற்றோரை தூக்கி உதற காரணமான காதல்... எங்கு முளைத்தது. பள்ளிகள்தான் என்று பகிர் குண்டை தூக்கி போடுகிறார்கள் விஷயத்தை நன்கு உணர்ந்தவர்கள்.
காதல் பள்ளிகளில்தான் உதிக்கிறது என்பதை திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தியேட்டர் வளாகத்தில் நடந்த சம்பவம் அதை நிரூபித்தது. மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தியேட்டரில் உள்ளே காலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. அப்போது 1மணிக்கு மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் ஒரு அழகான மாணவனும் அழகான மாணவியும் (8அல்லது 9ம் வகுப்பு) , சீருடை, பேக்குடன் வந்தனர். தியேட்டரில் ஓரமாக போய் அமர்ந்து கொண்டனர்.
நெருக்கமாக உட்கார்நது கொண்ட அவர்கள் குழைந்து குழைந்து பேசுவதும் தொட்டு தொட்டு சிரிப்பதும் அங்கு நின்றவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் 4 பேர் நம்மை பார்க்கிறார்கள் என்ற கவலை அந்த காதல்ஜோடிக்கு இல்லை.
இதற்கிடையே அந்த பள்ளி நிர்வாகத்துக்கு மாணவ- மாணவி ஒரே நாளில் வராததை விசாரித்த போது ஜோடி தியேட்டர் பக்கமாக சென்றதை சக மாணவர்கள் “போட்டு” கொடுத்தனர். பெற்றொர்களும் தகவல் தெரிந்து வந்தனர்.
உடனே தியேட்டருக்கு பள்ளி ஊழியர்கள் பெற்றோருடன் தேடி வந்தனர். தியேட்டருக்குள் ஜோடி இருக்கிறதா என பார்க்க வேண்டும் என கூறினர். உடனே சென்ற போது ஜோடி சிக்கவில்லை. அதற்குள் சிலர்...பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தெரிந்து ஜோடி கையில் சிக்கினால்... அம்பிகாபதி-அனார்க்கலி “ரோமியோ ஜுலியட் ” கதை போல... விபரீதத்தில் முடிந்துவிடும் என பயந்தனர்.
எனவே பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கும் தெரியாமல் ஜோடியை எச்சரித்து ஆலோசனை கூறி, பள்ளி பாடம் படியுங்கள் காதல் பாடத்தை தள்ளி வையுங்கள் என கூறி அனுப்பி வைத்தனர். நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு... என்று சின்னக்கவுன்டர் விஜயகாந்திக்கு நன்றி கூறுவது போல... கண்ணீருடன் கைகூப்பி நன்றி, கூறிய ஜோடி அந்த தியேட்டர் வளாகத்தை விட்டு... ஓடி எஸ்கேப் ஆனது.
அதன்பிறகு... வீட்டில் என்ன நடந்ததோ?... கிளைமேக்ஸ் தெரியாமல்.. போக்கிரி வடிவேலு கணக்காக வடைபோச்சே... என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் புலம்பியது தான் “ஹைலைட்
நன்றி: மாலைமலர் 11.12.10