Showing posts with label பத்தாம் வகுப்பு. Show all posts


ள்ளிக் கூடத்தில் குழந்தைகளை அடிக்கக் கூடாது’ என்று அரசு உத்தரவு போட்டு பல வருடங்கள் ஆன பிறகும், சில பள்ளிகளில் அந்தக் கொடுமை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் சென்னை வேளச்சேரியில் இருக்கும் சிவசக்தி மெட்ரிகுலேசன் பள்ளி. இந்தப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் களை பள்ளியின் துணை முதல்வரான ஜான்சி, பிரம்பு கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட அடி கொடுத்திருக்கிறார் என்பதுதான் பிரச்னை.

தங்கள் அடையாளங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு நம்மிடம் பேசிய மாண வர்கள், ''சயின்ஸ் சப்ஜெக்ட் சம்பந்தமா எல்லோரும் பிராக்டிகல் அப்சர்வேஷன் எழுதணும். பப்ளிக் எக்ஸாம் வர்றதால, எல்லோரையும் அப்சர்வேஷன் முடிச்சு வைக்கச் சொன்னாங்க. அப்சர்வேஷன் நோட்ல ஒரு வார்த்தை தப்பா இருந்தாக்கூட, புதுசா எழுதணும்னு சொன்னாங்க.
அதனால ஒவ்வொருத்தரும் நான்கு முறையாவது அப்சர்வேஷன் எழுத வேண்டியதாயிடுச்சு. நல்லாத் தான் எழுதி இருந்தோம். அதிலும் தப்பு கண்டுபிடிச்சு திரும்பவும் எழுதச் சொன்னாங்க. தினமும் ரிவிஷன் டெஸ்ட் நடக்குது. ஸ்கூல் முடிச்சு வீட்டுக்குப் போகவே இரவு 7.30 மணி ஆயிடுது. அதனால இரவெல்லாம் உட்கார்ந்து எழுதினாக்கூட முடிக்க முடியலை. அதுக்குத்தான் ஜான்ஸி மிஸ் பிரம்பால, ரத்தம் வர்ற வரைக்கும் அடி பின்னிட்ட்டாங்க.

வீட்டுக்குப் போனதும் காய்ச்சல் வந்துடுச்சி. டாக்டர் உடம்புல இருக்குற காயத்தைப் பார்த்துட்டு வீட்டுல சொல்லிட்டார். சில பசங்களுக்கு எலும்பு வீங்கிடுச்சி. பலருக்கு உடம்பு முழுக்க ரத்தக் கட்டு. எங்க பெயரையோ போட்டோவையோ போட்டீங் கன்னா நாங்க மறுபடியும் ஸ்கூலுக்குப் போகவே முடியாது'' என்று மிரண்டபடி சொன்னார்கள்.

குற்றம் சாட்டப்படும் பள்ளியின் துணை முதல்வர் ஜான்சியிடம் பேசினோம். ''நாங்களும் மனுஷங்கதானே.. குழந்தைகளை ரத்தம் வரும் அளவுக்கு அடிப்போமோ? தேவை இல்லாம இந்தப் பிரச்னையை பெருசாக்கிட்டாங்க. நாங்க பதில் சொல்ல வேண்டியது பெற்றோருக்குத்தான்! அவர் களிடம் சொல்லிட்டோம். வேற யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை'' என்று முடித்துக்கொண்டார்.

'அன்பினால் சாதிக்க முடியாததை அடியினால் சாதிக்க முடியும்...’ என்று ஆசிரியர்களே நம்புவது எத்தனை அறிவீனம். இவர்களுக்குப் பாடம் நடத்தப் போவது யார்..


நன்றி.ஜூனியர் விகடன்


 தமிழக சட்டசபை தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், பொதுத் தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கும் என, பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


பொது தேர்வெழுதும் மாணவர்கள்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நேற்று துவங்கி, வரும் 25ம் தேதி முடிகிறது. மெட்ரிக் தேர்வு, 22ம் தேதி துவங்கி, ஏப்ரல் 11ம் தேதி முடிகிறது. எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு, மார்ச் 28ம் தேதி துவங்கி, ஏப்ரல் 11ம் தேதி முடிகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் உயர்கல்விக்குச் செல்லவும், மாணவ, மாணவியரின் எதிர்காலம் மற்றும் தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடியதாகும்.இதனால், பெற்றோர் தங்கள் பிள்ளைகள் கவனத்துடன் படிக்கவும், அதிக மார்க்குகள் வாங்கவும் பல்வேறு தியாகங்களை செய்து வருகின்றனர்.

உதாரணமாக வீட்டில் கேபிள், "டிவி' கட் செய்வது. பல்வேறு சுப காரியங்களை செல்வதைத் தள்ளிப்போடுவது என, மாணவர்களின் கவனம் சிதறாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றனர்.ஆனால், தற்போது தேர்வு நெருங்கும் வேளையில், சட்டசபை பொதுத் தேர்தல், ஏப்ரல் 13ம் தேதி நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அரசியல் கட்சிகள், வாக்காளர்களை தம் பக்கம் இழுக்க ஏற்கனவே பிரசாரத்தைத் துவக்கியுள்ளன. வரும் 15ம் தேதி முதல், ஒலிப்பெருக்கி மூலம் பிரசாரம் செய்வது தவிர்க்க முடியாததாகி விடும். ஒலிப்பெருக்கி சத்தம், ஓட்டு சேகரிப்பு என, மாணவர்கள் படிப்பிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது .



சமூக அக்கறை உள்ளவரா நீங்கள்
ஏழை மாணவர்களின் கல்விக்காக இணைவோம் வாரீர்…