இரக்கமில்லாதவர்களா நாம்

Posted by Unknown undefined - 201 - undefined



அதிர்ந்து போகிறவர்கள் இதை படிக்க வேண்டாம் என்கிற ஒற்றைச் வார்தைகளோடு நம் மாணவர் உதவி எண்ணில் நம் மனதை பிழிந்த இந்த பெரியவரின் வலிகளை பதிவு செய்கிறோம்..

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த கன்னியாகுமாரி மாவட்டத்தை குலஞ்சம்புலை கிராமத்தை சேர்ந்த சாமுவேல் என்பவரை அந்த பகுதியில் இருந்த ஆட்டோ டிரைவர்கள் சிலர் வெளிச்சம் மாணவர் உதவி எண் 9698151515 ணை குறித்து கொடுத்து, வெளிச்சத்துக்கு போங்க என்று சொல்லி மனிதநேயத்தோடு, அவர்களே ஆட்டோவில் அழைத்து வந்து   நமது அலுவலம் அருகிலேயே வந்து விட்டு வெளிச்சம் அலுவலகத்திற்க்கு போங்க என வழிகாட்டிய எழுத படிக்க தெரியாத அந்த ஆட்டோகாரர்களை நாம் தலைவணங்குகிறோம்.

கஸ்டங்களை கேட்கும் வெளிச்சம்
நமது அலுவலகத்தின் வாசலைத்தாண்டி அந்த முடியாத அவரால் மேலும் ஒரு அடிகூட நகரமுடியாத சூழலில் நிலைகுழைந்தவராய் அமர்ந்தார்.. இடது கால் பச்சை துண்டால் மூடப்பட்டு இருந்தது. வெளிச்சம் மாணவர்கள் வழக்கமான கல்வி உதவிட கோரி வந்தவர் என்று நினைத்தபடி விசாரிக்க அவரோ, வெளிச்சம் செரின் மற்றும் தீபா அவர்களின் பெயரை குறிப்பிட்டு சொல்லி அனுப்பியிருக்கிறார்கள் ஆட்டோகாரர்கள்.

கலைப்பான அவரிடம் மெல்ல பேசினோம். டெய்லர் வேலை செய்தேன் மக்களே,  எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கு அதுகளை எல்லாம் கல்யாணம் கட்டி கொடுத்தேன்..பின்னால  திருமணத்திற்க்கு வாங்கிய கடனுக்கு நான் துணி தைத்தோம், என்  மனைவி மீன் விற்றும் கடன்கட்டி வந்தோம் மக்களே.. நான் கடனடைக்கனும்னு ரொம்ப கஸ்டப்பட்டு உழைச்சப்போ கொஞ்ச காலத்திற்க்கு முன்ன என்னோட பாதத்தில் சின்ன காயம் மாதிரி வந்தது, நான் அதை அப்படியே விட்டுவிட்டு மெடிக்கலில் மருந்து வாங்கி சாப்பிட்டுவிட்டு வந்த அவருக்கு ஐந்து வருடத்திற்க்கு முன் சர்க்கரை நோயும் சேர்ந்துடுச்சு..சில நேரம் வலிகளின் வேதனை தாளாமல் துடிப்பேன்..எனக்கு இப்படியாச்சேன்னு கஸ்ட்டப்பட்டுடே மனைவிக்கும் சுவாதினமில்லாம போச்சு..கொஞ்சகாலம் சொந்தங்க பார்த்தாங்க..சரி சென்னை போனால் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில காட்டலாமுன்னு அவளும்  நானும் சென்னை வந்தோம்.. ஸ்டான்லி ஹாஸ்பிட்டல்ல சேர்ந்தேன்..கையில வச்சிருந்த எல்லா காசும் தீர்ந்து போக. என்னோட  நிறம் மாறிடிச்சினு சொல்ல, மாணவர்கள் வலிகளை உணர்ந்தவர்களால் நின்றோம்..

அந்த பச்சை துண்டால் மூடப்பட்ட காலினை வலிதாங்கமுடியாமல் கால் மேல் கால்தூக்கி வைத்தார் பெரியவர்.. அந்த காயத்தின் ரணங்களில் வழிந்த ரத்ததில் கசிந்தது நம் ஈரக்குலை..
ரத்தம் வழிந்தோடும் ரணம்
மேலும் அவரிடம் பேசமுடியாத்தவர்களால்...பசியில் இருந்த அவருக்கு பிஸ்கட் பாக்கெட் வாங்கி கொடுத்து அங்கேயே இருக்க சொல்லி விட்டுட்டு  நம் மாணவர்களை நான் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினோம்..


நம்மிடம் பேசிய மருத்துவமனை ஊழியர், 
            வலி தாங்க முடியாமல் துடிச்சிக்கிட்டு இருந்தார் கூடவே அவரோட மனைவி இருந்துச்சி சாப்பாட்டுக்கே காசில்லாம தவிச்சாங்க இங்கயிருக்கிற முனியாண்டிவிலாஸ்ல ஒருவேளை சாப்பாடு வாங்கி மூணுவேளை சாப்பிடுவாங்க..அந்தம்மா ரொம்ப முடியாம போக வைச்சிருந்த சூட்கேசை வித்து இருநூறுவாயும், இங்க இங்கிருந்தவங்க சிலரும் அந்தம்மாவை ஊருக்கு அனுப்பி வைச்சாங்க..அவருக்கு பத்து வருசத்துக்கு முன்னால கால்ல ஆணி குத்தியிருக்கு கவனிக்காம விட்டுட்டாங்க போல இப்ப துடிக்கிறாங்க..ரெண்டு வாரமா அவரு பாத்ரூமுகிட்டயே போட்டுட்டாங்க அவரால நடக்க முடியல இங்கிருந்தவங்க கொண்டுவர்ற சாப்பாட்டை கொடுப்போம் சாப்பிட்டு இருந்தார்..இங்க இருக்கிற நர்சுங்க எல்லாம் இரக்கப்பட்டு மாத்திரைங்க மட்டும் கொஞ்சம் அதிகமா கொடுத்தாங்க, ஊருக்கு போறதா சொல்லிட்டு காலையில போயிட்டாருங்க.. நீங்க என நம்மை கேட்ட அந்த அம்மாவிடமிருந்து நகர்ந்தோம்... ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக  மட்டும் உழைத்துவரும் வெளிச்சம் மாணவர்கள் இது போன்ற விசயங்களில் பெரும்பாலும் கவனம் இயலவில்லை என இருந்த மன நிலையை  உலுக்கி எடுத்தது..இந்த கொடூர ரணங்கள்..


மனித நேயமிக்கவர்கள் கொடுத்த உதவி
அந்த ஸ்டாண்ட் ஆட்டோகாரர்கள் சிலரிடம் பேசினோம்.. நிலமையை சொன்னோம். அவரவர்கள்  பைகளில் இருந்த காசினை கொடுக்க பத்து ரூபாய் இருபது என கொடுக்கப்ப அந்த 426 ரூபாயில் இரக்கம் ஒட்டியிருந்தது.. நண்பர்கள் மற்றும்  நம் மாணவர்கள் மற்றும் நம்மிடமிருந்த  சிறு சிறு தொகையாக ரூபாயை 1437 சேர்த்து.. அவருக்கு கூட ஆள் யாருமில்லாமல், அந்த காலை மருத்துவர்களால் வெட்டி எடுக்க முடியாது என்கிற நிலையை உணர்ந்தவர்களாய்.. என்ன செய்வதென அறியாமல் நின்றோம்.. மக்களே நான் செத்து போகலாம் நினைச்சிதான் அவளை பொட்டிய வித்து ஊருக்கு அனுப்பினேன்.. செத்து போக நினைச்சி போனப்பதான் என்னால நடக்க முடியாம ரோட்டுலயே உக்காந்துட்டேன்..அப்பதான் அந்த ஆட்டோ காரங்க உங்கள பத்தி சொன்னாங்க மக்களே....இனி சாகமாட்டேன் மக்களே! நான் நாட்டுக்கே போறேன்..அங்க போயி கால வெட்டிட்டா இறக்கப்பட்டாவது கடன் கொடுத்தவன் எங்கள தொந்தரவு பண்ணமாட்டாங்க..என்னை ஏத்தி மட்டுவிட்டுருங்க மக்கள என்றார் கால் எடுத்தாலும் கட்டகால் வைச்சிக்கிட்டாவது துணி தைச்சி வாழ்வேன் என்றார் கையெடுத்து கும்பிட்டவராக...
 நம்பினோம் நல்லது செய்தோம்
நாம் அந்தபுரி எக்ஸ்பிரசில் ஊனமுற்றோர் பிரிவில் அவரை அமரவைத்து அனுப்பினோம்..மக்களே என்று சொன்ன அந்த குரலில் வலிகள் பதிந்த ரணத்தோடு திரும்பினோம்...

 நம்மை நம்பிய அந்த ஆட்டோகாரர்களின் மனிதாபிமானம் நம்மை இயக்கியது....இன்னும் மிச்சமிருக்கிறது....ஏழைகளிடம் மனித நேயம்....

எங்கள் வார்த்தைகளின் வலிமையை உணர்ந்து உதவியவர்கள்.. நம் பயணத்தில் நம்மை ஏளனபடுத்தியவர்களூக்கும் நன்றி...

வெளிச்சம் மாணவர்கள்



3 Responses so far.

  1. Bhuvanesh says:

    "வெளிச்சம்" காட்டும் உங்களுக்கு என் வணக்கங்கள் ...
    நாட்டில் இன்னும் எத்தனையோ விஷயங்கள் பார்க்க வேண்டி உள்ளது ..
    இதில் இந்த தோழரும் ஒருவர் ...
    கவலை வேண்டாம் எல்லாவற்றிற்கும் விரைவில் தீர்வு காண்போம் ....

  2. கடவுள் நம்மைப் போன்றவர்களை அதிக பொருளாதார வசதி

    உள்ளவர்களாக படைக்கவிலையே!

  3. Unknown says:

    வெளிச்சத்திற்கு மானசீக வணக்கங்கள்!

Leave a Reply