Showing posts with label Psychological approach. Show all posts


பொதுத் தேர்வை எழுதவுள்ள மாணவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு!

இந்தப் பதிவு குறிப்பாக அரசுப் பொதுத் தேர்வை எழுதவுள்ள மாணவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு!

அரசுப் பொதுத் தேர்விற்கு இன்னும் ஓரிரு மாதங்கள் தான் உள்ளது.+2 மாணவர்களுக்கு மார்ச் 8 ஆம் தேதியும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 4 ஆம் தேதியும் தேர்வு ஆரம்பமாக உள்ளது.சரியாகப் படிக்காத மாணவர்களும் இந்த தேர்விற்கு பல முயற்சிகளை செய்து படிப்பதற்கு ஆர்வத்துடன் தயாரகுவார்கள்.

இப்படி இருக்கையில் மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்களை படி,இன்னும் தேர்விற்கு 2 மாதம் தான் உள்ளது என்று அறிவுரை என்ற பெயரில் நச்சரிக்க தொடங்கி அவர்களை பயமுறுத்துகின்றனர். இதனால்
மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி பதட்டமடைகின்றனர்.

பொதுத் தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்கு பெற்றோர்கள் கொஞ்சமாவது சுதந்திரம் கொடுக்க வேண்டும். ஏன்? என்றால் அப்பொழுது தான் அவர்களின் தேர்வு பயம் நீங்கி இயல்பான மனநிலை கிடைக்கும். அதனால் அவர்களுக்கு தானாகவே படிப்பதற்கு ஆர்வம் வரும். ஆனால் பெற்றோர்கள் இப்படி செய்யாமல்
மாணவர்களுக்கு சிறிது நேரம் கூட சுதந்திரம் அளிப்பதில்லை.

இந்த நேரங்களில் ஒரு மாணவன் தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டி அல்லது செய்திகள் போன்றவற்றை பார்ப்பதற்கும் பெற்றோர்கள் தடை விதிக்கின்றனர்.

பள்ளி முடிந்து மாலை நேரத்தில் சோர்வாக வீடு திரும்பும் மாணவர்களை குறைந்த்து 2 மணி நேரம் கூட பெற்றோர்கள் விளையாட விடுவதில்லை. மாறாக வீட்டிற்க்கு வந்ததும் புத்தகத்தை எடுத்து படி என கட்டாய படுத்துகின்றனர்.

8 மணி நேரம் பள்ளியில் படித்து விட்டு வீட்டிற்கு வந்ததும் மீண்டும் புத்தகத்தை எடுத்துப் படி என்றால் அந்த மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? என்று பெற்றவர்களே யோசித்து பாருங்கள்!

அதற்காக மாணவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்க சொல்லவில்லை.அவர்கள் படிக்கும் போது கொஞ்சமாவது அவர்களுக்கு பிடித்த நிலையில் சுதந்திரம் கொடுக்க வேண்டும்.

மாணவர்கள் பயன்படுத்தும் செல்போன்களையும் பெற்றோர்கள் பிடுங்கி வைத்துகொண்டு படி படி என்று நச்சரிப்பதால் மாணவர்களின் கவனம் எல்லாம் அந்த செல்லின் பால் இருக்குமே தவிர படிப்பில் இருக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .

செல்போன் பயன்படுத்தும் மாணவனாக இருந்தால் அவனிடம் அழகான முறையில் பேசி படிப்பின்பால் பணிய வைக்க வேண்டுமே தவிர கடுகடுத்து காரியத்தை கெடுத்து விட கூடாது .என்பதை கவனத்தில் கொண்டு பெற்றோர்கள் செயல்படவேண்டும்.

இணையம் வசதியில்லாத செல்போனாக இருந்தால் பள்ளிவிட்டு வரும் மாணவன் ஒரு மணி நேரமாவது செல்போனை உபயோகப்படுத்த அனுமத்திக்லாம்.

பெற்றோர்கள் இப்படி கொஞ்சம்,கொஞ்சம் பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி வழிவகை செய்தால் தான் படிப்பில் ஆர்வம் ஏற்படும்.

பெற்றோர்களே! உங்களுடைய பிள்ளைகள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும்.அதற்க்கு பெற்றோர்களாகிய நீங்கள் ஓரளவாவது உங்கள் பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுத்தால் வெற்றி நிச்சயம்!!


பொங்கல் திருநாளில் முதல் மூன்று நாட்களை  பழங்குடியின மக்களோடு பயணித்தை ஏற்கனவே http://velichamstudents.blogspot.com/2011/01/blog-post_24.html ல் பதிவு செய்திருந்தோம்.. இவை ஒரு புறமிருக்க மற்ற  இரண்டு நாட்கள் பொங்கல் அன்று பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் கிராமத்தின் பாரதியார் தெருவில் நடைப்பெற்ற விளையாட்டு போட்டியில் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வெளிச்சம் மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்விற்கு வெளிச்சம் மாணவர்கள் மாநில அமைப்பாளர் வெளிச்சம் ஆனந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டார்..  விழாவில் முன்னால் ஒன்றிய கவுன்சிலரும் ஆசிரியருமான சுந்தர்ராஜன் அவர்கள் தலைமையில் விழா அருமையாக ஒருங்கிணைத்திருந்தார்கள் இளைஞர்கள்.. விழாவில் பேசிய ஆனந்தகுமார் அவர்கள் வருடத்திற்கு ஒரு நாள் ஒன்று கூடி விளையாடுவதும், விழா எடுப்பதும் கலை ந்து செல்லுதல் கூடாது.. மாறாக பெற்றவர்கள் பிள்ளைகளோடு பேசவேண்டும் ஏனெனில் பிள்ளைகளுக்காகவே பாடுபடுகிற பெற்றவர்கள் பிள்ளைகளோடு பேசுவதில்லை அதனாலேயே பிள்ளைகள் பெற்றவர்களை பிள்ளைகள் மதிப்பதில்லை.. ஒரு காலத்தில் பெற்றவர்கள் பிள்ளைகளுடன் மட்டுமே பேசுவது சுகமாய் கருதப்பட்டது ஆனால் இப்போது அந்த நிலமை தொடர்கிறதா என்ற கேள்வியை மக்களிடம் எழுப்பியபோது பெற்றவர்கள் தவறை உணர்ந்தபடி நின்றனர்…. மேலும் பிள்ளைகளே! உலக வரலாற்றை படித்து பாருங்கள்.. பெற்றவர்களை மதிக்காத  யாரும் சாதித்ததில்லைநீங்கள் சாதிக்க பிறந்தவரா இல்லை வெறுமனே சாக பிறந்தவாரா என பிள்ளைகளை கேட்க அண்ணா! இனி எங்கப்பா ம்மாவை மதிப்போம்ண்ணா என எல்லோரும் மொத்தமாக எழுத்து சொன்னபோது நம் பயணத்தின் முயற்சிக்கு உந்து சக்தியாக இருந்தது…. மக்களின் மகிழ்ச்சி திருவிழாவாக அமைந்தது பொங்கல் விழா.. மொத்தத்தில் விழா ஒருங்கிணைத இளைஞர்களுக்கு நன்றியை உரிதாக்குகிறோம்..

 இரண்டு கிராம விளையாட்டு விழா படங்கள்…….
 உங்கள் பார்வைக்காக

திருவாளந்துறை கிராமத்தில் 



















 வ.களத்தூர் கிராமத்தின் பாரதியார் தெருவில் நடைப்பெற்ற விளையாட்டு போட்டியில் பரிசளிப்பு விழாவில்