Showing posts with label கல்விக்கடன். Show all posts
இன்றைய தி ஹிந்து நாளிதல் தமிழகத்தில் அதிகமாக மதிப்பெண் பெற்றும் படிக்க முடியாத சூழலை விளக்கி செய்தி வெளியிட்டுள்ளது அதில் சிறப்பு செய்தி.. இம்மாணவர்கள் வெளிச்சம் மாணவர்களின் வாழ்க்கைதான்..படிங்க..
: R. Bharathi, a first-generation learner, scored 1089/1200 in his Class XII exam and made it through the engineering counselling to a city college last year. But he could not afford the initial deposit demanded by the college and had to forgo the seat.
“Last year, after deducting the Rs.20,000 scholarship available for first-generation learners, I was asked to pay around 80,000 in one instalment. I hope this year I can avail myself of a loan or seek the support of NGOs to fund my education,” says Bharathi, a vocational stream student who has got a seat in Sri Venkateswara College of Engineering.
There are many other students like him. R. Narendran and S. Arjun are waiting for their turn in counselling in the hope that education loans offered by the banks will fund their college education. “I have scored 1132. I approached the bank to fund my education, and they have said that after I get the fee quotation from the college, I can apply for the loan,” says S. Arjun.
To assist students who wish to pursue higher education, banks are providing loans for students up to Rs.4 lakh without demanding any security. Banks insist on a third-party guarantee from a reliable person for disbursing the loan. An interest subsidy of six per cent is available on loans for students who hail from families with an income below Rs.4.5 lakh per annum. Another benefit available for girl students is a concession of 0.5 per cent in the interest rates.
“Students can obtain the loan without difficulty. As per rules, students with arrears cannot be denied the loan instalment in the second year,” says a bank official.
But students face some obstacles in taking the loan. For colleges under the Anna University, July 25 has been announced as the last date for payment of fee and for self-financing colleges, it is July 29.
The delay in processing loans by banks might require that the student has to pay the first-year deposit on his own. “I am not sure how my parents can pay the huge amount the college might ask for, unless I receive the loan amount immediately,” says Narendran.
But D.Sherin, coordinator, Velicham, an NGO, cites instances of students with backlogs being denied loans in the second or third year of education. “As a result of this, some students are forced to discontinue the course. The managers are held responsible for the loan, and many students have been denied loan as the managers do not want to take a risk,” she says.
“Education is a State responsibility whereas loans are under the control of the Central government. That causes disparities while disbursing the loans,” adds Sherin.
Students are given up to six months after the competition of the course or once they get a job, whichever comes early, to start repaying the loan. Banks come across many student defaulters who finish their course and move to a new location without any contact details. “This is the reason many managers lose faith and are forced to deny some students loans in the future,” says the manager of a city bank.
Delay in processing loans might require that student has to pay first-year deposit on his own
Students are given up to six months to start repaying the loan
பிளஸ் டூ ரிசல்ட் வந்தாச்சு... அடுத்து காலேஜில் சேர வேண்டும். கல்லூரிகள்
பக்கம் போனால் அவர்கள் கேட்கும் கட்டணமோ
சாதாரணமானவர்களால் கட்டக்கூடிய அளவுக்கு இல்லை... இந்நிலையில் இருக்கும்
ஒரே வழி கல்விக்கடன் வாங்குவதுதான். ஆனால் அதிலும் ஆயிரத்தெட்டு சந்தேகங்கள்...
எந்த படிப்புக்கெல்லாம் கடன் கிடைக்கும், எவ்வளவு தொகை கிடைக்கும், வட்டி எவ்வளவு?
அதற்கான தகுதி என்ன என
ஏராளமான சந்தேகங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனதில் இருக்கும். அதற்கான
விடைகளைப் பார்ப்போம்.
எந்தெந்த படிப்புகளுக்கு கிடைக்கும்?
கல்விக் கடன் என்பது உயர்கல்வி படிக்க கிடைக்கும் கடன். மருத்துவம், பொறியியல், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., போன்ற படிப்பு
களுக்கு கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில்
உள்ள அனைத்து படிப்புகளுக்கும் கடன் வாங்கிக் கொள்ளலாம். சில வங்கிகளில் கலைப்
படிப்புகளுக்கு கல்விக் கடன் இல்லை என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது. அவர்கள்
இதுபோன்ற படிப்புகளுக்கு எளிதாக வேலை கிடைக்காது என்பதால் கடன் கொடுக்க மறுக்கும்
நிலை இருக்கிறது. அதுபோன்ற நிலையில் சற்று போராடினால் மட்டுமே கடன் வாங்க
முடியும். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ படிப்பவர்களுக்கும் கல்விக்
கடன் உண்டு.
எவ்வளவு கடன் கிடைக்கும்?
நான்கு லட்சம் ரூபாய் வரை உத்தரவாதம் எதுவும் இல்லாமல் கடன் கிடைக்கும். 4 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை பெற்றோரில் ஒருவர் தனிநபர்
உத்தரவாதம் கொடுக்க வேண்டிவரும். 7.5 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் என்றால் சொத்து ஜாமீன் கொடுக்க வேண்டும். இது
உள்நாடு மற்றும் வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களுக்கு என அனைத்துக்கும்
பொருந்தும்.
எப்படி வாங்குவது?
பெற்றோருக்கு எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கி யில் கல்விக் கடன் பெறலாம். சில
நகரங்களில் ஏதாவது ஒரு வங்கி, கல்விக் கடன்
தருவதற்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் அதில் கணக்கு
ஆரம்பித்து, கல்விக் கடன்
வாங்கிக் கொள்ளலாம்.
எந்த செலவுக்கு எல்லாம் கிடைக்கும்?
கல்விக் கட்டணம், விடுதி வாடகை மற்றும்
சாப்பாட்டுச் செலவு, சீருடை, புத்தகங்கள், கல்விச் சுற்றுலா, மாணவருக்கு இன்ஷூரன்ஸ் பிரீமியம், கம்ப்யூட்டர்/லேப்டாப் உள்ளிட்டவைகளுக்கு
கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.
எப்படி கடன் வாங்குவது?
கல்லூரியில் இருந்து கல்விக் கட்டணம், விடுதி வாடகை, உணவுக் கட்டணம்,
சீருடைகளுக்கு எனத்
தனித்தனியாக எவ்வளவு ஆகும் என்று போனஃபைட் சான்றிதழில் குறிப்பிட்டு வாங்கிக்
கொள்ள வேண்டும். அதன்பிறகு வங்கியை அணுகி விண்ணப்பிக்க வேண்டும். அதற்குரிய காசோலை
கல்லூரி பெயரில் கொடுக்கப்படும். புத்தகங்கள், கம்ப்யூட்டர் போன்றவற்றை வாங்கிவிட்டு
அதற்குரிய ரசீதை வங்கியில் கொடுத்தால் அந்த பணம் கிடைத்துவிடும். இது மாணவரின்
கடன் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும்.
எப்போது கடனை திரும்பக் கட்டுவது?
படிப்பு முடிந்து ஒரு வருடத் துக்குப் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்த
ஆரம்பிக்கலாம். ஆனால், வேலை
கிடைத்துவிட்டால் உடனே கடனைக் கட்ட ஆரம்பித்துவிட வேண்டும். முன்பு படிக்கிற
காலத்தில் கடனுக்கான வட்டி கணக்கிடப்பட்டு, வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், 2009-க்குப் பிறகு கொடுக்கப்படும் கல்விக் கடனுக்கு,
பெற்றோரின் ஆண்டு
வருமானம் 4.5 லட்சம்
ரூபாய்க்குள் இருந்தால் படிக்கிற காலத்திற்கான வட்டியை மத்திய அரசே வங்கிகளுக்குக்
கொடுத்து விடுகிறது. வெளிநாடுகளில் படிக்கிற மாணவர்களுக்கு இந்தச் சலுகையை
வங்கிகள் தருவதில்லை. ஆனால், வெளிநாட்டுப்
படிப்புக்கும், உள்நாட்டுப்
படிப்புக்கும் ஒரே வட்டி விகிதம்தான்.
விரைவாக கடனைத் திருப்பிச் செலுத்தும் மாணவர்களுக்கு 1% வட்டி குறைக்கப்படுகிறது. மாணவிகளுக்கு
வட்டியில் சுமார் 0.5% சலுகை
அளிக்கப்படுகிறது. கடனை மாதத் தவணையாகக் கட்ட வேண்டும் என்பதில்லை. மாதத் தவணை
காலம்போக எப்போதெல்லாம் பணம் கிடைக்கிறதோ, அப்போ தெல்லாம் அந்த தொகையைக் கட்டி கடன் பளுவை குறைத்துக் கொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள்!
1. கல்லூரி போனோஃபைட் சான்றிதழ்.
2. கட்டணம் குறித்த தெளிவான தகவல்கள்.
3. பெற்றோரின் வருமானச் சான்றிதழ்.
4. இருப்பிடச் சான்றிதழ்.
5. பள்ளி மாற்று சான்றிதழ்.
10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.
பொறியியல், மருத்துவம்
உள்ளிட்ட தொழிற்கல்வி என்றால் கவுன்சிலிங் அழைப்புக் கடிதம், சேர்க்கைக் கடிதம் உள்ளிட்டவை தேவைப்படும்.
வெளிநாட்டு படிப்பு என்றால் கூடுதலாக விசா, எந்த கல்லூரியில் படிக்க இருக்கிறார், கல்லூரி மற்றும் படிப்புக்கான அங்கீகார விவரம்
போன்றவற்றையும் கொடுக்க வேண்டும்.
கவனத்தில் கொள்ள வேண்டியவை!
எக்காரணம் கொண்டும் மாணவர்கள் ஏதாவது ஒரு பாடத்தில்கூட ஃபெயிலாகி விடக்கூடாது.
ஏதாவது ஒரு பாடத்தில் ஃபெயிலானால்கூட சில வங்கிகள் அடுத்த ஆண்டுக் கான கடன் தருவதை
நிறுத்திவிடும் அபாயம் இருக்கிறது. அதன்பின் அந்த பாடத்தை மீண்டும் எழுதி பாஸான
பிறகுதான் கடன் கிடைக்கும்.
ஏதாவது ஒரு காரணத்துக்காக படிப்பை பாதியில் நிறுத்தினாலும் தொடர்ந்து கடன்
கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. அதுவரையில் வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச்
செலுத்த வேண்டிவரும்.
வரிச் சலுகை!
திரும்பச் செலுத்தும் கல்விக் கடனில் 80-இ பிரிவின் கீழ் வட்டிக்கு மட்டுமே வரிச் சலுகை
உண்டு. திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரிச்சலுகை இல்லை. யார் படிப்புக்காக
கல்விக் கடன் பெறப்பட்டுள்ளதோ, அவருக்குதான்
வரிச் சலுகை உண்டு. கல்விக் கடனைக் திரும்பச் செலுத்த ஆரம்பித்து, எட்டு வருடங்கள் வரை மட்டுமே வருமான வரி
விலக்கு கிடைக்கும்.
கடன் தர தயக்கம்
கல்விக் கடன் கொடுப்பதும், கொடுக்காமல்
இருப்பதும் பொதுவாக அந்தந்த வங்கியின் மேலாளரைப் பொறுத்த விஷயமாக இருக்கிறது.
குறைவாக மதிப்பெண் எடுத்திருப்பவர்களுக்கு கடன் வழங்க வங்கிகள் அதிக ஆர்வம்
காட்டுவதில்லை. ஆனால், சட்டப்படி
மாணவருக்கு உயர் கல்வி படிக்க கல்லூரியில் அனுமதி கிடைத்துவிட்டாலே அவருக்கு கடன்
வழங்க வேண்டும் என்பதுதான் அரசு விதி. இருப்பினும் இந்த விதியை பெரும்பாலான
வங்கிகள் சட்டை செய்வதில்லை. அதேபோல் சில படிப்புகளுக்கு எதிர்காலத்தில்
வேலைவாய்ப்பு அவ்வளவு பிரகாசமாக இருக்காது என வங்கிகள் நினைக்கலாம். அது போன்ற
படிப்புகளுக்கு கடன் கிடைப்பது சற்று கடினம்தான்.
'மாணவர்கள் கடனை சரியாக திருப்பிச் செலுத்துவது இல்லை. இதனால், வாராக்
கடன் அதிகரிக்கும்’ என்கிற
பயத்தாலும் வங்கிகள் கடன் கொடுப்பதில் தயக்கம் காட்டுகின்றன. என்றாலும், முன்புபோல இல்லாமல் இப்போது நிறைய வங்கிகள்
கல்விக் கடனை அதிக அளவிலேயே கொடுத்து வருகின்றன. இந்தியன் வங்கி அடுத்த ஓராண்டில் 1.5 லட்சம் மாணவர்களுக்கு 900 கோடி ரூபாய் கடன் கொடுக்கப் போவதாக
அறிவித்துள்ளது. மற்ற வங்கிகளும் கல்விக் கடனை போட்டி போட்டுக் கொண்டு கொடுத்து
வருகின்றன.
கொடுக்கும் கடன் மீண்டும் நல்லபடியாக திரும்ப வந்து சேரும் என்கிற நம்பிக்கை
மட்டும் வந்துவிட்டால் போதும்; வங்கிகள் கல்விக்
கடன் கொடுக்கத் தயங்காது. படித்துவிட்டு வேலைக்கு செல்லும் மாணவர்களும்
ஒத்துழைத்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்'' என்கிறார் முன்னணி பொதுத் துறை வங்கியின்
மேலாளர் ஒருவர்.
- செ.திருக்குறள் அரசி
நன்றி: விகடன் 23.6.2011

எந்தெந்த படிப்புகளுக்கு கிடைக்கும்?
கல்விக் கடன் என்பது உயர்கல்வி படிக்க கிடைக்கும் கடன். மருத்துவம், பொறியியல், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., போன்ற படிப்பு களுக்கு கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள அனைத்து படிப்புகளுக்கும் கடன் வாங்கிக் கொள்ளலாம். சில வங்கிகளில் கலைப் படிப்புகளுக்கு கல்விக் கடன் இல்லை என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் இதுபோன்ற படிப்புகளுக்கு எளிதாக வேலை கிடைக்காது என்பதால் கடன் கொடுக்க மறுக்கும் நிலை இருக்கிறது. அதுபோன்ற நிலையில் சற்று போராடினால் மட்டுமே கடன் வாங்க முடியும். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ படிப்பவர்களுக்கும் கல்விக் கடன் உண்டு.
எவ்வளவு கடன் கிடைக்கும்?
நான்கு லட்சம் ரூபாய் வரை உத்தரவாதம் எதுவும் இல்லாமல் கடன் கிடைக்கும். 4 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை பெற்றோரில் ஒருவர் தனிநபர் உத்தரவாதம் கொடுக்க வேண்டிவரும். 7.5 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் என்றால் சொத்து ஜாமீன் கொடுக்க வேண்டும். இது உள்நாடு மற்றும் வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களுக்கு என அனைத்துக்கும் பொருந்தும்.
எப்படி வாங்குவது?
பெற்றோருக்கு எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கி யில் கல்விக் கடன் பெறலாம். சில நகரங்களில் ஏதாவது ஒரு வங்கி, கல்விக் கடன் தருவதற்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் அதில் கணக்கு ஆரம்பித்து, கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.

கல்விக் கட்டணம், விடுதி வாடகை மற்றும் சாப்பாட்டுச் செலவு, சீருடை, புத்தகங்கள், கல்விச் சுற்றுலா, மாணவருக்கு இன்ஷூரன்ஸ் பிரீமியம், கம்ப்யூட்டர்/லேப்டாப் உள்ளிட்டவைகளுக்கு கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.
எப்படி கடன் வாங்குவது?

கல்லூரியில் இருந்து கல்விக் கட்டணம், விடுதி வாடகை, உணவுக் கட்டணம், சீருடைகளுக்கு எனத் தனித்தனியாக எவ்வளவு ஆகும் என்று போனஃபைட் சான்றிதழில் குறிப்பிட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு வங்கியை அணுகி விண்ணப்பிக்க வேண்டும். அதற்குரிய காசோலை கல்லூரி பெயரில் கொடுக்கப்படும். புத்தகங்கள், கம்ப்யூட்டர் போன்றவற்றை வாங்கிவிட்டு அதற்குரிய ரசீதை வங்கியில் கொடுத்தால் அந்த பணம் கிடைத்துவிடும். இது மாணவரின் கடன் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும்.
எப்போது கடனை திரும்பக் கட்டுவது?
படிப்பு முடிந்து ஒரு வருடத் துக்குப் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்த ஆரம்பிக்கலாம். ஆனால், வேலை கிடைத்துவிட்டால் உடனே கடனைக் கட்ட ஆரம்பித்துவிட வேண்டும். முன்பு படிக்கிற காலத்தில் கடனுக்கான வட்டி கணக்கிடப்பட்டு, வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், 2009-க்குப் பிறகு கொடுக்கப்படும் கல்விக் கடனுக்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் 4.5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் படிக்கிற காலத்திற்கான வட்டியை மத்திய அரசே வங்கிகளுக்குக் கொடுத்து விடுகிறது. வெளிநாடுகளில் படிக்கிற மாணவர்களுக்கு இந்தச் சலுகையை வங்கிகள் தருவதில்லை. ஆனால், வெளிநாட்டுப் படிப்புக்கும், உள்நாட்டுப் படிப்புக்கும் ஒரே வட்டி விகிதம்தான்.
விரைவாக கடனைத் திருப்பிச் செலுத்தும் மாணவர்களுக்கு 1% வட்டி குறைக்கப்படுகிறது. மாணவிகளுக்கு வட்டியில் சுமார் 0.5% சலுகை அளிக்கப்படுகிறது. கடனை மாதத் தவணையாகக் கட்ட வேண்டும் என்பதில்லை. மாதத் தவணை காலம்போக எப்போதெல்லாம் பணம் கிடைக்கிறதோ, அப்போ தெல்லாம் அந்த தொகையைக் கட்டி கடன் பளுவை குறைத்துக் கொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள்!
- கல்லூரி போனோஃபைட் சான்றிதழ்.
- கட்டணம் குறித்த தெளிவான தகவல்கள்.
- பெற்றோரின் வருமானச் சான்றிதழ்.
- இருப்பிடச் சான்றிதழ்.
- பள்ளி மாற்று சான்றிதழ்.
- 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.
பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி என்றால் கவுன்சிலிங் அழைப்புக் கடிதம், சேர்க்கைக் கடிதம் உள்ளிட்டவை தேவைப்படும்.
வெளிநாட்டு படிப்பு என்றால் கூடுதலாக விசா, எந்த கல்லூரியில் படிக்க இருக்கிறார், கல்லூரி மற்றும் படிப்புக்கான அங்கீகார விவரம் போன்றவற்றையும் கொடுக்க வேண்டும்.



வரிச் சலுகை!
திரும்பச் செலுத்தும் கல்விக் கடனில் 80-இ பிரிவின் கீழ் வட்டிக்கு மட்டுமே வரிச் சலுகை உண்டு. திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரிச்சலுகை இல்லை. யார் படிப்புக்காக கல்விக் கடன் பெறப்பட்டுள்ளதோ, அவருக்குதான் வரிச் சலுகை உண்டு. கல்விக் கடனைக் திரும்பச் செலுத்த ஆரம்பித்து, எட்டு வருடங்கள் வரை மட்டுமே வருமான வரி விலக்கு கிடைக்கும்.

கல்விக் கடன் கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் பொதுவாக அந்தந்த வங்கியின் மேலாளரைப் பொறுத்த விஷயமாக இருக்கிறது. குறைவாக மதிப்பெண் எடுத்திருப்பவர்களுக்கு கடன் வழங்க வங்கிகள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், சட்டப்படி மாணவருக்கு உயர் கல்வி படிக்க கல்லூரியில் அனுமதி கிடைத்துவிட்டாலே அவருக்கு கடன் வழங்க வேண்டும் என்பதுதான் அரசு விதி. இருப்பினும் இந்த விதியை பெரும்பாலான வங்கிகள் சட்டை செய்வதில்லை. அதேபோல் சில படிப்புகளுக்கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு அவ்வளவு பிரகாசமாக இருக்காது என வங்கிகள் நினைக்கலாம். அது போன்ற படிப்புகளுக்கு கடன் கிடைப்பது சற்று கடினம்தான்.
'மாணவர்கள் கடனை சரியாக திருப்பிச் செலுத்துவது இல்லை. இதனால், வாராக் கடன் அதிகரிக்கும்’ என்கிற பயத்தாலும் வங்கிகள் கடன் கொடுப்பதில் தயக்கம் காட்டுகின்றன. என்றாலும், முன்புபோல இல்லாமல் இப்போது நிறைய வங்கிகள் கல்விக் கடனை அதிக அளவிலேயே கொடுத்து வருகின்றன. இந்தியன் வங்கி அடுத்த ஓராண்டில் 1.5 லட்சம் மாணவர்களுக்கு 900 கோடி ரூபாய் கடன் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. மற்ற வங்கிகளும் கல்விக் கடனை போட்டி போட்டுக் கொண்டு கொடுத்து வருகின்றன.
கொடுக்கும் கடன் மீண்டும் நல்லபடியாக திரும்ப வந்து சேரும் என்கிற நம்பிக்கை மட்டும் வந்துவிட்டால் போதும்; வங்கிகள் கல்விக் கடன் கொடுக்கத் தயங்காது. படித்துவிட்டு வேலைக்கு செல்லும் மாணவர்களும் ஒத்துழைத்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்'' என்கிறார் முன்னணி பொதுத் துறை வங்கியின் மேலாளர் ஒருவர்.
- செ.திருக்குறள் அரசி
'''இன்ஜினீயரிங் படிப்புக்கு எதிர்காலம் கிடையாதா?' என்றெல்லாம் அக்கறையாக ஆராய்ச்சி செய்பவர்கள், என் போன்ற பி.எட் மாணவிகளின் கண்ணீரையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும்..''
- தமிழகத்தின் கடைக்கோடியில் இருந்து ஒரு கிராமத்து மாணவி நமக்கு எழுதியிருந்த கடிதம் இது. கடிதம் படித் ததும் அவரை தொலைபேசியில் தொடர்பு
கொண்டோம். நெஞ்சை உருக்கி யது அந்த ஏழைப் பெண்ணின் பேச்சு.

''எங்க ஊருலயே நான்தானுங்க நல்லா படிக்கிற பொண்ணு. ஆனா, இன்ஜினீயரிங் மாதிரி பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்கிற நிலைமையில எங்க வீடு இல்லைங்க. அப்பா சின்ன வயசுலயே இறந்துட்டார். அம்மாவும் நானும் மட்டும்தான். பி.எட் படிச்சு டீச்சரானா போதும்னு நான் ப்ளஸ் டூ படிக்கும்போதே அம்மா முடிவெடுத்துட்டாங்க. நானும் டீச்சர் ஆகி, அம்மாவை சந்தோஷப்படுத்தணும்னு உறுதி எடுத்துக்கிட்டு பி.எஸ்சி படிச்சேன். பி.எட் ஸீட்டுக்காக ஒரு காலேஜ்ல 70 ஆயிரம் கேட்டாங்க. எங்க அம்மாவும் டீச்சர் வேலை கிடைச்சுடும்ங்கிற நம்பிக்கையில கொஞ்ச நஞ்சம் இருந்த நகைகளை வித்து பணத்தைக் கட்டினாங்க.
இப்போ, கிளாசுக்குள்ள நுழைஞ்ச பிறகுதான் எனக்கு உலகமே தெரியுது.. தமிழ்நாடு முழுக்க நூத்துக்கணக்குல தனியார் பி.எட் காலேஜுங்க இருக்காம். அதுல இருந்து வருஷத்துக்கு கிட்டத்தட்ட அறுபதாயிரம் பேரு வெளிய வருவாங்களாம். அவங்கள்ல அஞ்சு சதவிகிதம் பேருக்குக் கூட கவர்மென்ட்டால வேலை கொடுக்க முடியாதாம். சரி, கவர்மென்ட் உத்தியோகம் வேண்டாம்.. தனியார் ஸ்கூல்லயே டீச்சரா போகலாம்னா, அங்கல்லாம் ஆயிரம் ரூபாய்க்கு மேல தர்றதில்லையாம். இதுக்காகவா நான் நாலு வருஷம் காத்துட்டிருந்தேன்? இதுக்காகவா எங்க அம்மா தாலியை வித்தாங்க?'' - அந்தப் பெண் பேசப் பேச, நமக்குள் என்னவோ செய்தது.
பி.எட் காலேஜ் பற்றி அந்தப் பெண் சொல்வது உண்மையா? - சில அனுபவசாலிகளிடம் விசாரித்தோம்.
''எல்லாமே உண்மைதாங்க..'' என்று ஆரம்பித்தார், சென்னையைச் சேர்ந்த பி.எட் மாணவி ஒருவர். இவர் ஏற்கெனவே தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கான 'டீச்சர் டிரெய்னிங்' படிப்பை முடித்துவிட்டு, அதில் பலன் ஏதும் இல்லாததால் டிகிரியையும் முடித்து, தற்போது பி.எட் படித்துக் கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
'''நான் நிறையவே அனுபவப்பட்டுட்டேங்க.. முன்னேயெல்லாம் அரசுக் கல்லூரிகள்லயும் அரசு உதவி பெறுற கல்லூரிகள்லயும்தான் பி.எட் இருக்கும். தமிழ்நாடு முழுக்க மொத்தமே 1,000 ஸீட்தான் இருக்கும். அதுல ஒருத்தரா செலக்ட் ஆகுறது பெரிய விஷயமா இருந்தது. ஆனா, ஸீட் கிடைச்சுப் படிச்சுட்டா, ரெண்டு மூணு வருஷத்துக்குள்ள கண்டிப்பா வேலை கிடைச்சுடும்னு ஒரு நிச்சயம் இருந்துச்சு. 'பொண்ணை பி.எட் மட்டும் படிக்க வச்சுடுங்க.. நகை, பணமெல்லாம் கூட வேண்டாம்'னு அப்போ சம்பந்தமே பேசுவாங்கன்னா பார்த்துக்கங்களேன்..
ஒரு பி.எட் ஸீட்டுக்கு எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்லைனு சில பேர் குறுக்கு வழியில ஸீட் வாங்குற கூத்தும் அப்போ நடந்தது. ஆனா, 2003-ம் வருஷத்துக்கு அப்புறம் யாரு வேணும்னாலும் பி.எட் காலேஜ் ஆரம்பிச்சுக்கலாம்னு ஆயிடுச்சு. அவ்வளவுதான்.. 'லட்சக்கணக்குல தர வேண்டாம். அறுபதாயிரம், எழுவதாயிரம் தந்தா போதும். நாங்க உனக்கு பி.எட் டிகிரியைத் தர்றோம்'னு தனியார் காலேஜ்காரங்க வியாபாரம் பேச ஆரம்பிச்சுட்டாங்க.
சரி, இப்படி தனியார்கிட்ட வாங்குற டிகிரிக்கும் கவர்மென்ட் டிகிரிக்கும் என்ன வித்தியாசம்னு கேட்டா, ஒண்ணுமேயில்ல.. வேலை வாய்ப்பு அலுவலகத்துல பதிவு செஞ்சு வச்ச சீனியாரிட்டி அடிப்படையிலதான் வேலை கிடைக்கும்னு கவர்மென்ட் சொல்லிடுச்சு. முன்னே ஒரு வருஷத்துக்கு 1000 பி.எட் மாணவர்கள் படிப்பை முடிச்சுட்டு வெளிய வந்தாங்கன்னா, இப்போ கிட்டத்தட்ட அறுபதாயிரம் மாணவர்கள் வர்றாங்க. ஆனா, அரசாங்க வேலை என்னவோ வருஷத்துக்கு 3,000 பேருக்குக் கூட கிடைக்கிறதில்ல..பெரும்பாலும் பொண்ணுங்கதான் பி.எட்-ஐ விரும்பிப் படிக்கிறாங்க. அதனால இதுல அதிகம் பாதிக்கப்படுறதும் அவங்கதான். எனக்குத் தெரிஞ்ச ஒரு அக்கா
2004-ம் வருஷம் பி.எட் முடிச்சாங்க. இப்ப வரைக்கும் அவங்களுக்கு வேலை கிடைக்கலை. அவங்களுக்கு அப்புறம் நூத்துக்கணக்கான தனியார் காலேஜ்ல பி.எட் முடிச்சவங்களே கிட்டத்தட்ட மூணு லட்சம் பேர் இருப்பாங்க. அவங்களுக்கெல்லாம் வேலை கிடைச்சு, எனக்கு எப்போ வேலை கிடைக்கும் நினைச்சாலே தலையை சுத்துது. வேலை கிடைக்காதுங்கறது கூட பெரிய விஷயமா தெரியல.. இப்படிப்பட்ட ஒரு நிச்சயமில்லாத படிப்பை கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கு வித்துடறாங்க பாருங்க.. அதுதான் தனியார் கல்லூரிகளோட திறமை'' என்று காட்டமாகவே பேசி முடித்தார் அவர்.

தனியார் கல்லூரிகள் பற்றிப் பேசினாலே கொதித்துப் போகிறார்கள் முன்னாள் மற்றும் இன்னாள் பி.எட் மாணவ- மாணவிகள். ஆனால், பெயரையோ புகைப்படத்தையோ வெளியிட யாருமே முன்வரவில்லை. அந்த அளவுக்குப் பெரிய இடத்துப் பொல்லாப்பு இதில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
தமிழ்நாடு பி.எட் பட்டதாரிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் பாஸ்கரனிடம் இதைப் பற்றி விவாதித்தோம். ''கடந்த நாலு வருஷமா நிறைய தனியார் நிறுவனங்கள் இந்த பி.எட் 'பிஸினசு'க்குள்ள வந்துடுச்சு. இன்ஜினீயரிங் மாதிரி பி.எட்-ம் வேலை கொடுக்கும்னு அவங்க விளம்பரம் பண்றாங்க. அதையெல்லாம் மக்கள் நம்பக் கூடாது. ஏற்கெனவே லட்சக்கணக்கான பி.எட் பட்டதாரிகள் க்யூவுல நிக்கிறாங்க. இதுல அரசாங்கப் பள்ளிகள்ல 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்ங்கற விகிதாசாரம் மாறி, இப்போ 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் போதும்னு முடிவெடுத்துட்டாங்க. இந்த உண்மைகளை மக்கள் புரிஞ்சுக்கணும்'' என்றார்.
''சரி, இத்தனை பி.எட் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்தது ஏன்?'' தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியிடமே கேட்டோம்.. ''கல்லூரிகளுக்கு அனுமதியை தமிழக அரசு மட்டுமே கொடுப்பதில்லை. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்(என்.சி.டி.இ)தான் அனுமதி கொடுக்கிறது. தமிழக அரசு மட்டுமே அதைத் தடுத்து நிறுத்தி விட முடியாது'' என்றார் அவர்.
பெங்களூருவில் உள்ள தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலைத் தொடர்பு கொள்ள முயன்றோம். பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் சிலர் மட்டுமே வெகு ஜாக்கிரதையாகப் பேசினர்.. ''ஏற்கெனவே புதுவை, மகாராஷ்ட்ரா, குஜராத், ஆந்திரா, அரியானா, கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்துவிட்டதால் நெருக்கடி முற்றி,
பிரதமர் வரை புகார்கள் பறந்து விட்டன. அதனால், அந்த ஏழு மாநிலங்களில் இனி புதிய கல்லூரிகளுக்கு அனுமதி தருவதில்லை என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலே அறிவித்திருக்கிறது. மற்ற மாநிலங்களிலும் அந்த நெருக்கடி ஏற்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை'' என்றார்கள் அவர்கள்.

இதற்கெல்லாம் தனியார் கல்லூரிகள் என்ன பதில் சொல்கின்றன என்பதை அறிய செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி ரங்கபூபதி பி.எட். கல்லூரி சேர்மன், பூபதியிடம் பேசினோம்.. ''முறைகேடுகள் கல்லூரிகளில் மட்டுமல்ல.. சமூகத்தில் எல்லா தளத்திலும் நடக்கிறது. அதைப் பற்றி என்னிடம் கருத்து ஏதுமில்லை'' என்றவர், தொடர்ந்தார்..
''பி.எட் கல்லூரி நடத்த தனியாருக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று ஏற்கெனவே சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. அப்போது வழங்கப்பட்ட தீர்ப்பில், பி.எட் படித்தவர்கள் தமிழக அரசு வேலையை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதில்லை.. அவர்கள் டுடோரியல் கல்லூரி நடத்தலாம், டியூஷன் எடுக்கலாம், வெளி மாநிலத்திலும் வெளி நாட்டிலும் ஆசிரியர்களாக வேலை பார்க்கலாம்.. அதனால் தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி தருவது தவறில்லை' என்றுதான் சொல்லப்பட்டது. எனவே, பி.எட். பயின்றாலே, ஆசிரியராக அதிலும் அரசுப் பள்ளிகளில்தான் வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தவிர்க்கப்பட வேண்டும். இப்போதெல்லாம் சில தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளே திறமையான பி.எட் ஆசிரியர்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்குகின்றன'' என்றார்.
பி.எட் முடித்துவிட்டு கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக இருக்கும் ஜெயந்தியிடம் இதைச் சொன்னபோது விரக்தியான புன்னகைதான் முதல் பதிலாக வந்தது. ''தனியார் கல்வி நிறுவனங்கள்ல இன்னிக்கு என்ன சம்பளம்னு நினைக்கிறீங்க? வெளிய ஆயிரக்கணக்கான பேர் அதே வேலைக்காகக் காத்திருக்கும்போது, ரொம்ப குறைவான சம்பளத்தைத்தான் தனியார் எல்லாரும் தருவாங்க. நாம அதுக்கு சம்மதிக்கலைன்னா, வேற ஒருத்தவங்க அங்கே வர ரெடியா இருப்பாங்க. டியூஷன் எடுக்குறதெல்லாம் நிலையான வருமானமா? டுடோரியல் நடத்த யார் லோன் தருவா? இந்த பிராக்டிகல் கஷ்டமெல்லாம் அனுபவிக்கிறவங்களுக்குத்தான் தெரியும்!'' என்று பெருமூச்சோடு முடித்தார் அவர்.
சென்னை மாணவி சொன்ன அந்த முத்தான வாக்கியங்கள்தான் மீண்டும் நம் நெஞ்சில் ரீங்காரமிட்டன.. ''இப்படிப்பட்ட ஒரு நிச்சயமில்லாத படிப்பை கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கு வித்துடறாங்க பாருங்க.. அதுதான் தனியார் கல்லூரிகளோட திறமை!''
![]() ![]() ![]() ![]() |
நன்றி: அவள் விகடன்