வணக்கம், 2004 ம் ஆண்டு முதல் வெளிச்சம் அமைப்பானது சென்னையை மையமாக கொண்டு, ஏழை மாணவர்கள் பணமில்லை என்கிற ஒரே காரணத்திற்காக தங்கள் வாழ்கையையும், படிப்பையும் இழந்து விடக்கூடாது என்கிற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு, உதவும் உள்ளங்களின் உதவியால் வெளிச்சம் இன்றுவரை தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கண்டறியப்பட்ட 515 முதல்தலைமுறை ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெற உதவி செய்ததால், வெளிச்சத்தின் மாணவர்கள் பல்வேறு துறைகளில், பல்வேறு கல்லூரிகளில் படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.. இந்த வருடம் மட்டும் 51 மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்துள்ளனர். வெளிச்சத்தின் முதல் மாணவர் செந்தில் என்பவர் இப்போது ஜூனியர் சயிண்டிஸ்டாக பணிபுரிகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்..
பிரச்சாரத்திற்கான காரணங்களும் சிறு நம்பிக்கையும்:
முகம் தெரியாத நபர்களின் உதவியில் படித்தோம். பணமில்லாமல் கல்லூரிக்கட்டணம் செலுத்த முடியாமல் ‘சீட்’ கிடைத்த போதும், பணம் செலுத்த முடியாமல், வீதியில் நாதியற்று நின்ற பொழுதுதான் எங்களுக்கு வெளிச்சம் தெரிந்தது, வெளிச்சம் எங்களை கல்லூரிகளில் படிக்க வைத்ததோடு, பெற்றோரையும் சமூகத்தையும் நேசிக்க சொல்லிகொடுத்ததன் விளைவாக, எங்களை போன்ற மாணவர்கள் படிப்பதற்கு சிரமபடக்கூடாது என கல்விக்கான பணியை செய்து கொண்டிருந்தபோது, உலகம் முழுவதிலும் வருடந்தோறும் 10 லட்சம் பேர்தற்கொலை செய்துகொள்கின்றனர். 1 லட்சம் பேர் இந்தியாவில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஒவ்வொரு 15 நிமித்திற்க்கு ஒரு முறை 15-29 வயதிற்குட்பட்ட ஒருவர் இறக்கிறார் என்பதும், இந்தியாவில் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் 5வதுஇடத்தில் உள்ளதாகவும் ஆண்டுதோறும் தமிழகத்தில் 11,000 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் . இவர்களில் 5,000 பேர் மாணவர்கள். சென்னையில் மட்டும் 1,100 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பது அச்சுறுத்தும் உண்மையை படித்து போது பதறிப்போனோம்.
இந்தியன் எக்ஸ்பிரசஸில் நமது ஆய்வு |
அது மட்டுமில்லாது பள்ளிக்கு போகும் குழந்தைகளின் எண்ணிக்கையே படிப்படியாக குறைவதால் பிளஸ் 2விற்குப் பிறகு, 18 வயதில் இருந்து 24 வயது வரை உடையவர்களில் உயர்கல்வி பயில்பவர்கள் எண்ணிக்கை, தேசிய அளவில் 11 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. 1 வகுப்பில் 100 பேர் சேர்ந்தால் கடைசியில் இடையில் நின்றவர்கள், கடைசியாக 7 பேர் மட்டுமே கல்லூரிக்கு செல்வதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சம் சொல்கிறது. மேலும்” மும்பை ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த ரங்கன் பானர்ஜி, வினாயக் புருஷோத்தம் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் இந்தியாவில் பத்து லட்சம் பேரில், 214 பேர் இன்ஜினியரிங் படித்தவர்களாக உள்ளனர்.இந்த எண்ணிக்கை தென் கொரியாவில் தான் அதிகம். அங்கு பத்து லட்சம் பேரில், 1,435 பேர் இன்ஜினியரிங் படித்தவர்கள். ஆனாலும், இது தொடர்பான இன்னும் உறுதியான புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை.
அப்படியானால் தமிழகத்தின் நிலையை பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக முதல் தலைமுறை மாணவர்களின் வாழ்வின் அவலங்களையும் , வேதனைகளையும் நம்மால் நினைத்து கூட பார்க்க முடிவதில்லை, சுதந்திரம் அடந்த இவ்வளவு காலங்களில் கல்லூரி பக்கம் தலைவைத்து பார்க்காத மக்கள் இருக்கிறார்கள் என்பது எவ்வளவு கொடூரமானது என்பதை தடுத்தாக வேண்டும் என்று உணர்ந்தோம். குறிப்பாக மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க மாணவர்களே முன்வரவேண்டும் என எண்ணினோம், மானவர்களான நாங்கள் எங்களை போன்று எந்த மாணவர்களும் எந்த காரணத்திற்காகவும் படிப்பை இழக்கும் சூழலுக்கு ஆளாகி விடக்கூடாது. பெருகி வரும் மாணவர்களின் தற்கொலைகளை தடுப்பதற்காக மாணவர்கள் ஆலோசனை மையம் (Students Help Line) 9698151515 ஆரமித்து. தமிழகம் முழுவதும் மாநில அளவிலான பிரச்சாரப் பயணத்தினை கடந்த 15.07.2010 முதல் 8.09.2010 வரை ’55′ நாட்களாக மேற்கொண்டு, தெரு நாடகம், நோட்டீஸ், போஸ்டர் போன்றவற்றின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.. இதுநாள் வரை 21000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளை மாணவர்களாகிய நாங்கள் சந்தித்து இருக்கிறோம். அதில் மாணவர்களின் கல்வியையும், அவர்களின் மனதையும் பாதிக்க கூடிய விசயங்களை அவர்கள் Students Help Line தொடர்பு கொண்டு சொல்லும் போது இதுநாள் வரை அவர்களின் மனவேதனைக்கு ஆறுதல் சொல்ல ஆட்கள் இல்லை என்பதுதான் எதார்த்த உண்மை..
கல்விக்கான திட்டங்கள் கிடைக்காமல் அவதிப்படும் மாணவர்கள்:
கல்விக்கடன் கொடுப்பது “லோன் மேளா”க்களாக அரசியலாளர்களால் ஆக்கப்பட்டாலும்,ஏழை மாணவர்களுக்கு கல்வி கடனுதவி, மாணவர்களுக்கு 35 ஆயிரத்து 946 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் வங்கிக்கடனுக்கான அடைப்படை தகவல்கள் மற்றும் விதிகள் ஏழை மக்களுக்கு தெரியாததால் இங்கே பேங்குக்கும் வீட்டுக்கும் நடக்கின்ற பெற்றவர்கள் அதிகமாகத்தான் இருக்கிறார்கள். கல்விக்கடனுக்கான வட்டி ரத்து என்கிற அறிவிப்புகள் வந்து 8 மாதங்களில் அந்த ஆணைகள் வங்கிகளுக்கு வரவில்லை என்றும், வட்டிக்கட்டினால் தான் அடுத்த வருட லோன் கொடுப்போம் என அலைக்கழிக்கபடுகிறார்கள். வங்கிக்கடன் கொடுக்கும் அதிகாரத்தினை கிளை மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டதால் அவர்கள் ஈவிரக்கமில்லாமல் நடக்கிறார்கள், .வட்டிகட்ட சொல்லுவதோடு மட்டுமல்லாமல் இப்போது புதுசா இன்சூரன்ஸ் எடுத்தால் தான் என தட்டிக்கழிக்க படுகிறார்கள். மேலும் ஏழை மாணவர்களுக்கு மட்டும் ரிசர்வு பேங்க் ஆப் இண்டியா கொடுத்துள்ள எந்த வரையரையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்பதுதான் உண்மை. மேலும் வங்கிக்கடன் மட்டுமில்லாமல் முதல்தலைமுறை பட்டதாரிகளின் இலவச உயர்கல்வி திட்டத்தின் குலறுபடிகளாலும் மாணவர்கள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். பி.இ. படிப்புகளில் சேருவதற்கு ஆண்டுதோறும் விண்ணப்பிக்கும் மாணவர்களில் சுமார் 5,000 பேர்தான் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் ஆனால் பி.இ. உள்ளிட்ட தொழில் படிப்புகளில் 2010-11-ம் கல்வி ஆண்டு முதல் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது இதைத் தொடர்ந்தே 2010-11-ம் ஆண்டில் முதல் தலைமுறையைச் சேர்ந்த 78,086 மாணவர்கள் பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர் என்று அரசு பெருமையுடன் கூறியது ஆனால் ராணி மேரிகல்லூரி விழாவில் துணை முதல்வர் இத்திட்டதின்கீழ் சுமார் 48000 மாணவர்கள் மட்டும் தான் கல்லூரிகளில் சேர்ந்துள்ளார்கள் என்பது கவனிக்க பட வேண்டிய விசயம்..
மாணவர்கள் சந்திக்கும் உளவியல் மற்றும் பிற பிரச்சனைகள்:
வெளிச்சம் மாணவர்கள் ஆய்வில் கண்டறிந்தபடி பெறும்பான்மையான மாணவர்கள் 54% காதல் தோல்வி,3%சக மாணவர்களால் புறக்கணிக்கப் படுவது, 15%ஆங்கிலம் தெரியாமல் தாழ்வு மனப்பான்மை,26%மனதுக்குள் இனம் தெரியாத வேதனை, மற்றும் 2% ரேகிங் உட்பட்ட பிரச்சனைகளால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.. குறிப்பாக நான் பேசுவதை கவனிக்க கூட ஆள் இல்லை,என்னை புரிந்து கொள்ள ஆள் இல்லையே என ஏங்கித்தவிக்கும் மாணவர்கள் அதிகமாக காணப்படுகிறார்கள்.தோளுக்கு உயர்ந்த பிள்ளைக்கிட்ட நாம் என்ன பேசுவதுன்னு பெற்றவர்கள் நினைப்பதாலும் இங்கே தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நமது மானவர்கள் ஆலோசனை எண்ணில் வந்த அழைப்புகளில் நான் காதலால் கல்வி இழக்க போகிறேன் என்று புலம்பிய மாணவர்கள் அதிகம்.மேலும் வெளிச்சம் மாணவர்கள் பிரச்சாரப்பயண 55 நாட்களில் பல்வேறு காரணங்களுக்காக 12 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என எண்ணும் போது வேதனையாக இருக்கிறது..கடைசியாக தற்கொலை செய்து கொண்டவர் வரிசையில். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்,முள்ளுக்குறிச்சி சென்னை அண்ணா பல்கலைகழக முதலாமாண்டு மாணவி ஜோதி …கல்லூரிகளுக்கு செல்லப்படும் மாணவர்கள் விகிதம் குறைவாக இருந்தாலும் கல்லூரிக்கு போகிற மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தமுடியாத பல காரணங்கள் மாணவர்களின் படிப்பையும்,உயிரையும் பறிபோகிறது என்பது தான் உண்மை.
- கல்விக்கடன் வட்டி விகிதம் ரத்து ஆணை மக்களுக்கும்-வங்கிகளுக்கும் கிடைக்க செய்ய வேண்டும்!
- கல்விக்கடனுக்கான தனி பிரிவுகள் வங்கிகளில் துவங்க வேண்டும்.!
- வங்கிக்கடன் குறித்த அனைத்து விதிகள் மற்றும்.நடை முறைகளை பனிரெண்டாம் வகுப்பிலேயே தெரியப்படுத்த வேண்டும் அல்லது வங்கி கடன் பெறுவதற்க்கான நடை முறையை பாடதிட்டமாக்க பட வேண்டும்..!
- செக்ஸ் கல்வியை பள்ளி கல்லூரிகளில் முறையாக அமல்படுத்த வேண்டும்..!
- கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களை கால அவகாசமே கொடுக்காமல் கல்லூரியை விட்டு வெளியேற்றும்,கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..!
- கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்த போதும் அவர்களுக்கு அவர்களின் சான்றிதல்களை கொடுக்காத கல்லூரிகள் மீதும். கட்டவேண்டிய பணத்திற்க்கு பிணை கூலிகளாக்கப்படும் அவலத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்!
- மாணவர்களின் தற்கொலைகளை தடுப்பதற்கு,மாணவர்களின் உளவியல் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முறையான ஆற்றுபடுத்துபவர்களை (Counselor) நியமிக்க வேண்டும்!
இவைகள் மாணவர்களின் பிரச்சனைகளை இந்திய தேசத்தின் பிரச்சனையாக கொண்டு உடனடியான நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என மாணவர்களின் பிரச்சனையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்..
good post
நல்ல விழிப்புணர்வு பதிவு
http://tamilmanam.net/இங்கு உங்கள் பதிவை இணையுங்கள்
அருமையான பதிவுகள் உங்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்ய முயல்கின்றேன். வாழ்த்துக்கள். நல்ல முயற்சி.
மிகவும் சிறப்பான இடுகை இன்றைய மாணவர்களின் உள்ள நிலையை கனாடிபோல படம் பிடித்து கட்டப் பட்டு இருந்தது சிறப்பான ஆய்வு இந்த ஆய்வை முறையாக பெற்றோர்களும் மாணவர்களும் முறையாக உள்வாங்கி இந்த சமூகத்திற்கு வழிகாட்டவேண்டும்