Showing posts with label செல்போன். Show all posts

தேசிய நெடுஞ்சாலையில் பெண்களை நிறுத்திவைத்து, ஜொள்ளர்களிடம் இருந்து பணத்தையும் நகையையும் அபேஸ் செய்யும் வழிப்பறிக் கொள்ளையர்களைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதே வழியில்தான் இப்போது பணம் பறிக்கின்றன, சில செல்போன் நிறுவனங்கள்! 
புதுப்புது ஐடியாக்களில் காசைக் கறப்பதில் செல்போன் நிறுவனங்களுக்கு இடையே பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. ஒரு நிறுவனம் ஏதாவது ஒரு புதிய திட்டத்தை அறிவித்தால், அடுத்த சில நாட்களிலே மற்ற நிறுவனங்களும் அதே திட்டத்தை, வேறு பெயரில் அறிமுகம் செய்துவிடும். அந்த வகையில் இப்போது இளைஞர்களைக் குறிவைத்துக் காசைக் கறக்கும் புதிய திட்டத்தின் பெயர், 'நட்பு வட்டம்.’

இந்தக் கட்டுரையைப் படிக்கும் உங்களுக்கு, இந்த நட்பு வட்டம் குறித்து ஏற்கெனவே எஸ்.எம்.எஸ். வந்து இருக்கலாம். அல்லது விரைவில் வரும். உங்களுக்கு அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து சம்பந்தமே இல்லாமல் எஸ்.எம்.எஸ். வரும். அந்தக் குறுந்தகவலை நீங்கள் கண்டுகொள்ளவில்லை என்றாலும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். என்றாவது ஒரு நாள் ஆர்வக்கோளாறில் பதில் அனுப்பிவிட்டால், உடனே உங்களுக்கு 13 இலக்கங்கள்கொண்ட ஓர் அடையாள எண் வழங்குவார்கள். இந்த நேரத்தில் உங்கள் பில்லில் 30 ரூபாய் ஏறி இருக்கும். அதன்பிறகு, உங்களுக்கு ஏராளமான மிஸ்டு கால்கள் வரத் தொடங்கும். அந்த எண்களுக்கு நிச்சயமாக நீங்கள் டயல் செய்வீர்கள். அப்போது எதிர்முனையில் ஸ்வீட் வாய்ஸில் ஒரு பெண் கொஞ்சுவார்.
நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும், உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டுவதுமாதிரி மென்மையாகப் பதில் சொல்வார். நீங்கள் நாகரிகம் மறந்து ஆபாசமாகப் பேசினாலும் அவர் கண்டுகொள்ள மாட்டார். எதற்காகவும் கோபப்பட மாட்டார். நீங்கள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் செக்ஸியாகப் பதில் வந்துகொண்டே இருக்கும். நீங்கள் உடனே சுதாரித்து உங்கள் செல்போன் இணைப்பைத் துண்டிக்கவில்லை என்றால், உங்கள் கணக்கில் பணம் எகிறிக்கொண்டே இருக்கும்.

வழக்கமாக ஏதாவது ஓர் எண்ணுக்கு நீங்கள் அழைத்தால், எதிர்முனையில் இணைப்பு கிடைத்த பிறகுதான் மீட்டர் ஓடும். ஆனால் இந்தத் திட்டத்தில் மட்டும், நீங்கள் டயல் செய்த உடனே மீட்டர் ஓடத் தொடங்கும். ஒரு நிமிடத்துக்கு இரண்டு ரூபாய் கட்டணம். எஸ்.எம்.எஸ். கொடுப் பதற்குக் கட்டணம் ஒரு ரூபாய். வெவ்வேறு எண்களில் இருந்து மிஸ்டு கால் வரும். எடுக்கவும் முடியாது, எடுக்காமல் இருக்கவும் முடியாது என்று தடுமாறி ஏமாறுபவர்கள் அதிகம்.

இந்த நட்பு வட்டார சீட்டிங் குறித்து ஏராளமான நபர்கள் ஏகப்பட்ட பணத்தைத் தொலைத்து, நமக்குப் புகார் அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். களம் இறங்கினோம்.
வெளிநாடுகளில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த 'செக்ஸ் கால்’ என்பதைத்தான் 'நட்பு வட்டம்’ என்ற பெயரில் செல்போன் நிறுவனங்கள் இங்கு களம் இறக்கி உள்ளனவாம். நட்பு வட்டப் பெண்கள் பேசும் அத்தனையும் அதிர்ச்சி ரகம்!

காலர் 1 - மேலூர் அமுதா:

ஆரம்பத்தில் சாதாரணமாகப் பேசியவர், தனது பெயர் சசிகலா, வயது 22 என்று முதல் தூண்டிலைப் போட்டார். அடுத்தடுத்து இரண்டு நாட்கள் பேசியபோது, கொஞ்சம் கொஞ்சமாகப் புதுப்புதுத் தகவல்களைச் சொல்லி ஆர்வத்தைத் தூண்டினார். அதன் பிறகு நம்மைப் பற்றி அறிமுகம் செய்து உண்மையைக் கேட்டோம். மிகவும் தயக்கத்துக்குப் பிறகு பேசினார். ''என் நிஜப் பேர் அமுதா. எனக்கு 38 வயசாச்சு சார். ஏற்கெனவே கல்யாணம் ஆன ஒருத்தனுக்கு விஷயம் தெரியாமக் கழுத்தை நீட்டிட்டேன். ஒரு புள்ளையக் குடுத்துட்டுப் போயிட்டான். கிடைச்ச வேலைகளுக்குப் போய் என் புள்ளையையும், என்னோட அம்மாவையும் காப்பாத்திட்டு வந்தேன். அப்போ எனக்குத் தெரிஞ்சவங்கதான் இந்த ஸ்கீம்ல சேர்த்துவிட்டாங்க. தினமும் நெறைய போன் வருது. சின்னச் சின்னப் பசங்கல்லாம் நேரம் காலம் பாக்காமக் கூப்பிடுறாங்க. நேத்து ராத்திரி எட்டாம் வகுப்பு படிக்கிறேன்னு சொன்ன ஒரு பையன், 'ஏய்... எங்கிட்ட வர்றியா? அஞ்சாயிரம் ரூபா தர்றேன்’னு சொல்றான். இதெல்லாம் எம் புள்ளைங்க மாதிரி இருப்பாங்க. ஆனா ஏதேதோ பேசுறாங்க.....'' என்று கதறினார்.

''எங்களுக்கு மாசத்துக்கு 500 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்றாங்க. நிஜப் பேரையும் எங்க செல்போன் நம்பரையும் யாருகிட்டேயும் கொடுக்கக் கூடாது. எப்படிப் பேசுறதுன்னு சொல்லிக் கொடுப்பாங்க. மாசத்துக்கு 3,500 ரூபா சம்பளம் குடுக்குறாங்க. தமிழ்நாடு மட்டும் இல்லே சார்... பாம்பே, டெல்லியில இருந்து எல்லாம் பேசுறாங்க. நெறையப் பேரு பணம் அனுப்புறேன்னு அட்ரஸ் வாங்குறாங்க, ஆனா அதோட அவ்வளவுதான். எனக்கு இந்த நம்பர் குடுத்த மேடம்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னேன். 'கம்பெனி ரூல்ஸ் படி உன் அட்ரஸை யாருகிட்டயும் கொடுக்கக் கூடாது. இந்தத் தடவை மன்னிச்சுடுறேன்’னு சொல்லிட்டாங்க.  இப்போதான் பேங்க்ல அக்கவுன்ட் ஆரம்பிச்சிருக்கேன். இனிமே, மாசாமாசம் அதுல சம்பளம் போடுவாங்களாம்'' என்றார் அப்பாவியாக!

காலர் 2 - ஸ்ரீரங்கம் பிரியா:

தொடர்ந்து 10 நாட்கள் பேசிய பிறகும், இவரிடம் இருந்து உண்மையைப் பெற முடியவில்லை. அதன் பிறகு செல்போன் நிறுவனத்தில் இருந்து நாம் பேசுவதாகவும், செக் செய்வதற்காகத்தான் இத்தனை நாட்கள் பேசியதாகவும், மிகத் திறமையாக வாடிக்கையாளர்களைச் சமாளிப்பதாகச் சொல்லிப் பாராட்டினோம். ''மாதச் சம்பளம் 5,000 சரியாகக் கிடைக்கிறதா?'' என்று கேட்டதும், ''அய்யய்யோ... 3,500தான் தர்றாங்க'' என்று அலறினார். இரண்டு குழந்தைகளையும் சென்னையில் இருக்கும் அம்மா வீட்டில் விட்டுவிட்டு, கணவனுடன் ஸ்ரீரங்கத்தில் இருக்கிறார். கணவனுக்குத் தெரிந்தேதான் இந்த நட்பு வட்டத்தில் பேசுகிறாராம் பிரியா. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் மட்டும் படுசெக்ஸியாகப் பேசுவாராம். பணம் கிடைப்பதைவிட, இப்படிப் பேசுவது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு என்கிறார் பிரியா!

காலர் 3 - ரம்யா, கல்லூரி மாணவி:

முதலில் தன் பெயரை ரேவதி என்று கூறியவர், நீண்ட முயற்சிக்குப் பிறகு உண்மையைச் சொல்ல ஆரம்பித்தார். இவரது பேர் நட்பு வட்டத்தில் மிகப் பிரபலமாம். எந்த நேரமும் செல்போனும் கையுமாகவே அலைவதால் வீட்டிலும் ஏக அர்ச்சனை. இந்த வட்டத்தில் சேர்ந்ததில் இருந்து கல்லூரி வகுப்புகளை அதிகமாகப் புறக்கணித்து வருகிறாராம்.  ''காலர்ஸ்கிட்ட நான் சொல்றது எல்லாமே பொய்தாங்க. உங்ககிட்ட மட்டும்தான் என் பேரையும், மதுரையில இருக்கேன்னு உண்மையும் சொல்லி இருக்கேன். செக்ஸியாப் பேசுற துக்கு ஆரம்பத்துல ரொம்பத் தயக்கமா இருந்துச்சு. என் ஃபிரண்ட்தான் ட்ரெய்னிங் குடுத்தா. அவ ரொம்ப நல்லாப் பேசுவா. இப்போ அவளையே மிஞ்சுற அளவுக்கு நான் பேசப் பழகிட்டேன். இப்போ இது எனக்கு ஒரு போதை மாதிரி ஆயிடுச்சு'' என்று அப்பாவியாகச் சொல்கிறார்.
நட்பு வட்ட எண்களில் தொடர்பு கொண்டு இன்னும் நிறையப் பெண்களிடம் பேசினோம். அதில், பலர் பேசியதை அச்சில் ஏற்றவே முடியாது. அந்த அளவுக்கு படுக்கையறைப் பேச்சு. பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள்தான் அதிக அளவில் இந்த நட்பு வட்டத்துக்குள் வருகிறார்கள்.

இதுபோன்ற ஆபாசப் பேச்சு வியாபாரத்துக்குத் தடை விதிக்க முடியாதா? சென்னை சைபர் கிரைம் கூடுதல் உதவி கமிஷனர் சுதாகரைச் சந்தித்தோம். ''வேல்யூ ஆடட் சர்வீஸ் என்ற பெயரில் செல்போன் நிறுவனங்கள் இதுபோன்ற பல சேவைகளைச் செய்துவருகின்றன. ஆனால், இந்த சேவை அதிர்ச்சியாக இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால், உடனே நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்'' என்றார்.

சட்டப்படி இதைத் தடுக்க என்ன வழி? பதில் சொல்கிறார் வழக்கறிஞர் சுந்தர்ராஜன்.  ''இந்த சேவை குறித்து பலர் எங்களிடம் முறையிட்டு உள்ளனர். நிச்சயமாக இது தடை செய்யப்பட வேண்டிய சேவை. ஆனால், செல்போன் நிறுவனங்கள் எந்த மாதிரியான சேவைகள் எல்லாம் வழங்கலாம் என்று 'டிராய்’ விதிமுறை எதுவும் வகுக்கவில்லை. அதனால், இந்த சேவையில் பணத்தைத் தொலைத்தவர்கள் டிராய் மற்றும் போலீஸில் புகார் செய்ய வேண்டும். இதுபோலத்தான், மார்க்கெட்டிங் எஸ்.எம்.எஸ். சேவையும் இருந்தது. தொடர்ந்து ஏராளமான புகார்கள் வந்த பிறகுதான், டிராய் தனது சாட்டையைச் சொடுக்கியது. ஒரு காலத்தில் வெளிநாட்டு தொலைபேசி எண்ணைக் கொடுத்து, 'செக்ஸ் கால்’ என்று நாளிதழ்களில் ஏராளமான விளம்பரங்கள் வரும். அதைப்போலத்தான், இந்த சேவையை செல்போன் நிறுவனங்கள் தொடங்கிவிட்டன. பாதிக்கப்பட்டவர்கள் டிராய்க்கு இ-மெயிலில் புகார் அனுப்பிக்கொண்டே இருக்க வேண்டும்'' என்றார்.

கோடிகளில் கொழிக்கும் செல்போன் நிறுவனங் கள், சில கோடி ரூபாய் லாபத்துக்காக இப்படி இளைய தலைமுறையைச் சீரழிப்பது நியாயமா?

- தேவதத்தன்

""டாக்டர்! நாங்க நாலு பேரும், கொஞ்ச நாளைக்கு முன்னால, கேரளா போய் "ஜாலியா' இருந்துட்டு வந்தோம்; இப்போ, எங்களுக்குப் பயமா இருக்கு சார், எங்களுக்கு எச்.ஐ.வி., டெஸ்ட் பண்ணணும்...'' வார்த்தையை முடிப்பதற்குள் சொன்னவனை ஓங்கி அறைந்தார் அந்த டாக்டர்; மற்ற மூன்று பேரும் ஓரடி பின் வாங்கினர். காரணம், அவர்கள் நால்வரும் கோவையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். நகரின் முக்கிய மருத்துவமனையில் பணியாற்றும் பாலியல் மருத்துவரின் அறையில் நடந்தது இந்த நிகழ்வு. இதற்கு மேல்தான் காத்திருக்கிறது அதிர்ச்சி.

மாணவர்கள் ஏதோ பயத்தில் வந்திருக்கின்றனர் என்று நினைத்து, அவர்களை பரிசோதித்துப் பார்த்த போது, அவர்களில் ஒரு மாணவனுக்கு எச்.ஐ.வி., பாசிட்டிவ் என்று தெரியவந்தது." "எத்தனையோ எச்.ஐ.வி., பேஷன்ட்களுக்கு நான் "ட்ரீட்மென்ட்' கொடுத்திருக்கேன்.  இந்த வயசுல, இப்பிடி வந்து நின்ன பசங்க இவங்க மட்டும்தான். நம்ம கலாச்சாரமும், வாழ்க்கை முறையும் எங்கே போகுதுன்னு நினைச்சப்ப, எனக்கு நாலு நாளா தூக்கமே வரலை,'' என்று முடித்தார் அந்த டாக்டர்.


கோவையிலுள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மேல் தட்டு மாணவர்கள் பலரிடம், அதி நவீன மொபைல் போன்கள் சர்வ சாதாரணமாகப் புழங்குகின்றன. அவற்றில், அதிவேக இன்டர்நெட் இணைப்பும் கிடைக்கிறது. இல்லாவிட்டால், இன்டர்நெட்டில் இருந்து அவர்களே, இறக்கி வைத்துக்கொள்கின்றனர். காசைக் கொட்டுவதற்கு, இவர்களின் பெற்றோர் தயங்குவதே இல்லை.இந்த வாழ்க்கை முறைதான், இந்த மாணவர்களை மரணத்தின் விளிம்பு வரைக்கும் கொண்டு சென்றிருக்கிறது.


கலாசாரத்தின் ஆணிவேர்களில் அமிலத்தை ஊற்றும் இந்த தகவல் தொடர்பு சாதனங்கள், தேசத்தின் வளர்ச்சிக்கு உதவுவதற்குப் பதிலாக, இந்த தேசத்தின் நாளைய மன்னர்களுக்கு சவக்குழிகளை வெட்டிக் கொண்டிருக்கின்றன. பல மாதங்களாக ஆபாச படங்களை காட்சிகளாகப் பார்த்துப் பழகி, அதற்கு அடிமையாகி விட்ட நிலையில்தான், இந்த மாணவர்கள் அடுத்த கட்ட முயற்சிக்குப் போயிருக்கின்றனர். இவர்களைப் போலவே, இன்றைக்கு ஏராளமான மாணவர்கள் பிரவுசிங் சென்டர்களுக்குள் புகுந்து, வாழ்வுக்கான அழிவைத் தேடிக் கொள்கின்றனர்.


விளையாட்டாக "வீடியோ கேம்ஸ்'களை மட்டுமே ரசித்த பள்ளி மாணவர்கள், ஆபாச வலைதளங்களையும் அடிக்கடி நலம் விசாரிக்கின்றனர். சர்வதேச அளவில் மென்பொருள் உருவாக்கத்தில் சாதனை படைத்து இந்திய இளைய சமுதாயம்தான், மற்றொரு புறத்தில் இப்படி ஆபாசங்களில் அழிந்து போவது வேதனைக்குரிய விஷயம்.மும்பை, டில்லி, சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள மாணவர்களுடன், கல்வி, விளையாட்டு, பொது அறிவு போன்ற விஷயங்களில் போட்டி போட வேண்டிய மாணவ சமுதாயம், இத்தகைய விஷயங்களில் பெருநகரத்து மாணவர்களுக்குப் போட்டியாக வளர்வதற்கு முழு முதற்காரணம், பெற்றோர்கள்; அடுத்ததாக, பள்ளி வளாகம்; இறுதியாக வெளிச்சூழல்.பெற்றோர் தரும் அதீத சுதந்திரம், பள்ளி நிர்வாகங்களின் பண வேட்டை, "டிவி' போன்ற ஊடகங்களின் தாக்கம் ஆகியவற்றுடன், சமுதாய ரீதியான கட்டுப்பாடுகளும் தளர்ந்து போயிருப்பதும் ஒரு காரணம்.


குறிப்பாக, பிரவுசிங் சென்டர்களுக்கு எந்தவித கண்காணிப்பும் இல்லை. விபசாரத்தில் பள்ளி மாணவர்கள் கூட பாதிக்கப்படும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை.
ஆபாசமான வலைதளங்களுக்குள் ஒரு சிறுவன், சிறுமி கூட உள்ளே புகுந்து விட முடியும் என்பது சர்வதேசத்துக்குமான சவால் என்றாலும், நம்முடைய இந்திய கலாசாரத்துக்கு எதிராக நடத்தப்படும் மாபெரும் யுத்தம் என்பதை மறுக்கவே முடியாது.ஆபாச படங்களை அடிக்கடி பார்க்கும்போது, அதற்கு அடிமையாவதுடன் ஆண், பெண் நட்புக்கு இடையே எல்லை மீறவும், தூண்டுதலாக இருக்கும்.


இந்நிலையில், இலவச லேப்-டாப்களை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. அப்போது, நிலைமை இன்னமும் விபரீதமாகிவிடும். எனவே, மாணவர்கள் தேவையில்லாத வலைத்தளங்களுக்குள் நுழையும்போது, இணைப்பு கிடைக்காதவாறு செய்ய வேண்டும்; மெமரி கார்டு, பென்டிரைவ் கூடாது. வளர் இளம் பருவத்திலுள்ள குழந்தைகள் லேப்-டாப், மொபைல் போனுடன் அதிக நேரம் செலவிடுகிறார்களா என கண்காணித்து மாற்றம் கொண்டு வர பெற்றோர் முயற்சிக்க வேண்டும்.ஆபாச படங்களை மெமரி கார்டுகளில் டவுன்லோடு செய்து தர தடை விதிக்க வேண்டும். அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும். குறிப்பிட்ட வலைத்தளங்களையும் கண்காணித்து தடை விதிக்க வேண்டும் என்பது உளவியல் நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.


பிஞ்சிலே பழுக்கும் அவலம் :பெயர் வெளியிடவிரும்பாத பால்வினை நோய் சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறுகையில், "தற்போது 12 வயது நிரம்பாத மாணவர்கள் கூட, ஆபாச படங்களை பார்ப்பது மட்டுமின்றி செயல்ரீதியாகவும் முயற்சிக்கும் அவலம் உள்ளது. பலரும் ஆபாசபடங்களுக்கு அடிமையாகிவிட்டு தவறு செய்வது அதிகரித்து வருகிறது; பயம் மற்றும் சந்தேகம் காரணமாக எச்.ஐ.வி., பாதிப்பு உள்ளதா என பரிசோதிக்க வருகின்றனர். மாதந்தோறும் 30 வயதுக்குள் உள்ள இளைஞர்கள் குறைந்தபட்சமாக 15 பேராவது என்னிடம் பரிசோதனைக்கு வருகின்றனர். இதேநிலை நீடித்தால், ஆரோக்கியமான இளைஞர்களை பார்க்கவே முடியாது' என்றார்.


கோவையை சேர்ந்த மனநல டாக்டர் சீனிவாசன் கூறுகையில், ""முன்பு குறிப்பிட்ட காட்சிகள் எழுத்து, போட்டோ வடிவில் மட்டுமே பார்க்க முடிந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நேரிடையாக பார்க்கும் நிலை தற்போதுள்ளது. ஊடகங்களால் ஆபாச காட்சிகள் சாதாரணமாகி விட்டன; இது தவறானது, கூடாது என்ற மனநிலை மாறிவிட்டது. படிக்கும் வயதிலேயே ஆண் - பெண் உறவு எல்லை தாண்டி, கலாசார சீர்கேடு தலைதூக்குகிறது. கிரைம் சம்பவங்களுக்கும் வழிவகுக்கிறது. தொழில்நுட்பம் என்பது கத்தி போன்றது. ஆபரேஷனுக்கும் உதவும்; உயிரை கொல்லவும் உதவும். ஆபாச படங்களுக்கு அடிமையான பலரும், பிரச்னை நம்மை கை மீறி போய்விட்டது; ஆபத்தான நிலையில் உள்ளோம் என்பதை புரிந்து கொள்வதில்லை. ஒரு சிலர் மட்டுமே பிரச்னையை கூறி தீர்வு காண முன்வருகின்றனர்,'' என்றார்..


 நன்றி: தினமலர்








              ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக மட்டும் பாடுபடுவதுதான் வெளிச்சம் மாணவர்களின்   நோக்கம் மட்டுமல்ல. குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என  பல பகுதிகளான சமூகத்தின் உறவுகளோடு இணைந்து சமூக மாற்றத்திற்கு பாடுபடவேண்டும் என்பதுதான்  நமது  லட்சியம். விழுப்புரம் மாவட்டத்தில்  வெளிச்சம் மாணவர்கள்  பல்வேறு கல்லூரி மாணவர்களை சந்திக்கும்  வாய்ப்பு விழுப்புரம் நகராட்சி வாயிலாக கிடைத்து  50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட நிகழ்வி கலந்துரையாடல் 


பெயர்களை மாணவர்கள் நலன் கருதி குறிப்பிடாமல் பதிவு செய்கிறோம்…


           மணவர்களை நோக்கி,  நீங்க உங்க வாழ்க்கை லட்சியமென்ன என வெளிச்சம் செரின் அவர்கள் கேட்க: அழகான பொண்ணை  பார்க்கனும் காதலிக்கணும், சந்தோசமா இருக்கணும் வாழ்க்கை பூரா என்ஜாய் பண்ணனும் அவ்வளவுதான் வாழ்க்கை என்றனர் மாணவர்கள்..

மீண்டும் செரின் அவர்கள் நீ கல்யாணம் பண்ணிக்க போற பெண்ணு எப்படி இருக்கனும் என்ற கேள்வியை முன்வைத்தார்,

                              கண்ணு அழகா இருக்கணும், அவளை பார்த்துக்கிட்டே இருக்கணும், சும்மா கலரா நச்சுன்னு இருக்கணும் என்றார் ஒரு மாணவர். அவனை மடக்கி  நீங்க  காதலிக்கிறீங்களா என்றார் செரின் விடாது. ஆமாம் அக்கா  நான் 8 ம் வகுப்பு படிக்கும் போதுதான் காதலிக்கணும்னு தோணுச்சி, அப்ப ஒரு பிகரை பார்த்தேன் பிடிச்சிருந்துச்சி காதல சொன்னேன், காதலிச்சோம் வீட்டுல பிரச்சனையாச்சி அவ பெத்தவங்க பேச்சை கேட்டுட்டு என்னை மறந்துட்டு போயிட்டா, கொஞ்ச நாள் அவளோட நினைப்பா சுத்திக்கிட்டு திரிஞ்சேன், இதை பார்த்துட்டு  வேற ஒரு பொண்ணு என்னை காதலிக்கிறன்னு, அவளா! வந்து சொன்னா, நானும் முதல்ல  வேணாம்னு சொன்னேன் பிறகு ஒரு  பொம்பல புள்ளையே நம்மல பிடிக்கும் சொல்லும் போது நாம வேணாம்னு சொன்னா நம்மல அந்த பொண்ணு என்ன நினைக்கும் சரி விடு,விட்டுடு போனவள விட்டுத்தள்ளு, வர்றது வரவுன்னு நானும் ஒத்துக்கிட்டேன்.. காதலிச்சோம் சந்தோசமா இருந்தோம்.  நாம கல்யாணம் பண்ணிக்கிலாமான்னு கேட்டேன், அவ என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது நான் உன்னை காதலிச்சேன் அவ்வளவு தான்னு சொல்லிட்டாள்  அப்புறமென்னக்கா இப்போ இன்னொரு பொண்ணுக்கு ரூட் போடுறேன் பிக்கப் ஆக மாட்டங்குது.. எத்தனை முறை தோற்றாலும் காதல் ஒரு வகையான சுகம் அதனால தான் காடஹ்லிச்சி கல்யாணம் பண்ணனும்  விரும்புறேன்… பிகரோட கண்ணப்பாத்து பேசுற சுகமிருக்கே அது தனி சுகம் அதுக்காக தான்என்ன மாதிரி  எல்லா பசங்களும் ஏங்குறாணுங்க என்றான்..


அடுத்ததாக பேசிய மாணவர்கள் தனக்கு வர்ற மனைவி அல்லது காதலி எப்படி இருக்கனும் என்கிற கேள்விக்கு  மீனா மாதிரி கண்ணு இருக்கணும், அழகா இருக்கனும்.  நச்சினு இருக்கனும்,  நாட்டு கட்டையா இருக்கணும் என்றார்கள் வாலிப வயசு கனவுகளோடு….  
                                                                          
இதே கேள்வியை  மாணவிகளிடம் (தங்களுக்கு வரபோகிற  கணவர் அல்லது காதலன் எப்படி இருக்கனும்) கேள்விக்கு கேட்டோம்…
                        நல்லவரா இருக்கணும், நல்ல கேரக்டரா இருக்கணும், சந்தோசமா வச்சிருக்கரவரா இருக்கணும் என்றார்கள் மிக பொறுப்புடன், மைக்கை வாங்கிய அந்த பொண்ணு, அக்கா நாளுனாள் நம்ம பின்னாடி சுத்துறாங்க   நாங்க பிடிக்களைன்னா அவ நல்லவ இல்லைண்ணு சொல்லுறது எந்த விதத்துல நியாயம் அக்கா?, பொண்ணுங்க நாளுபசங்கள்கிட்ட பேசினா பல் இழிக்கிறாங்கண்ண்னு சொல்லுறதும் ஏன்னு தெரியல, நாளு நாள்  நல்லா பேசினா அஞ்சாவது நாள் ஐ லவ் யூ சொல்லுறீங்களே ஏன்..எங்களுக்கு பிடிச்சா பிடிச்சிருக்குண்ணு சொல்லுவோம் இல்லைன்னா பிடிக்கலைண்ணு தானே சொல்ல முடியும்,கம்பல் பண்ணுனா காதல் வராது...வெறுப்புதான் வரும் என்றார் தன்னை கம்பல்பண்ணியவர் கூட்டத்தில் இருந்தவருக்கு பதிலளித்தவராக…

இதற்கு பதிலளித்த வெளிச்சம் செரின்:
காதலிக்ககூடாதுண்ணு சொல்லலை அப்பா, அம்மா காசுல காதலிக்ககூடாதுண்ணுதான் சொல்லுறேன். பிள்ளை படிக்கிதுண்ணு  கனவுகாணுகிற அம்மா, அப்பாவுக்கு என்ன தர போறீங்க… கண்ணீரையா?  தெரியாம கேட்குறேன் கண்ணு பிடிச்சிருக்கு வாய்பிடிச்சிருக்கு,அது பெருசா இருக்குன்னு சொல்லுறீங்களே.. கொஞ்சம்  கண்ணமூடி மீனா மாதிரி கண்ணை இன்னும் உற்று பாருங்க.. வெறும் சதையா,ரத்தமா இருக்கும். நீங்க சதைக்க்கு ஆசை படுறீங்களா...இல்ல?  என்று பேசி முடித்தார்..

இறுதியாக:



அனைவரின் பேச்சை உன்னிப்பாக கவனித்த ஒரு மாணவன் நிகழ்ச்சி எப்படி இருந்து என பேசுவதற்காக மைக்கை வாங்கினான், வார்த்தைகளை மீறி கண்ணீர்   தழும்பி வெளியேறியது..  அனைவரும் கூர்மையாக கவனிக்க ஆரமித்தனர் கூட படித்தவரின் குரலை கேட்க, நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதிருந்தே ஒரு பொண்ணை காதலிச்சேன், நான் தொட்டது கூட இல்லை, நான் பன்னிரெண்டாம் வகுப்புல கம்மியான மார்க்கு எடுத்தேன், அவ பாண்டிச்சேரியில காலேஜ் படிக்கிறா, அவ என்னை பாக்குறதில்லை, அப்ப தான் என்னோட பிரண்ட்ஸ் சொன்னாங்க,  நான் இத்தனை வருசமா காதலிச்சும் அவளை ஒரு முறை கூட தொடலையாம் அதனால நான் ஆம்பளையே இல்லைன்னு சொன்னாளாம்.. பிரட்ண்ஸ் காதலிக்கும் போது தொட்டு பேசரது பேசனா இருக்கலாம், ஆனா அது நாகரீகமில்ல பிரண்ட்ஸ், அவளுக்காக நான் வீணடிச்ச காலத்த நினைச்சாதான் தானா அழுகைவருது, நான் சந்திச்ச சம்பவத்தை நான் சொல்லனுமுனு தோணுது பிரண்ட்ஸ்.. நாளுவருசத்துக்கு முன்ன வளவனூர்க்கு போர வழியிலயே இருக்குற சவுக்கு காட்டுல இருந்து என்னோட பிரண்ட் போன்பண்ணி அவரசரமா சொன்னான்.. பதறிபோய்  பைக்ல போனேன்.. அங்க போனதும் தான் தெரிஞ்சது அவன் அவன் லவ்பண்ணுற பொண்ணோட அங்க போயிருக்கான், அவங்க  இரு ந்த இடத்துக்கு  வந்த  ஆறு பேர் அவனையும், உதவிக்கு போன என்னையும் பிடிச்சிக்கிட்டாங்க, அந்த பொண்னையும் எங்களோட கண்ணுமுன்னாலயே கெடுத்தாங்க,எவ்வளவே கதறினோம் விடலை, இப்ப அவங்க எங்க இருக்காங்கண்ணே தெரியல ஆனா நிச்சயமா உயிரோட இருக்கமாட்டாங்க, ஏன்னா சம்பவத்தை நேர்ல பாத்ததுனால  சொல்லுறேன்.. காதலிக்கும் போது தெரிஞ்சோ தெரியாமலோ தப்புமட்டும் பண்ணிடாதீங்க என கையெடுத்து கும்பிட்டான் அந்த  மாணவன்..

ஒரு பையன் எத்தனை பொண்னை காதலிச்சோம் என்பதும், ஒரு பொண்ணு எத்தனை பையன்கள தன் பின்னால சுத்தவிட்டிருக்கு என்பதும் பந்தாவா இருக்கலாம்.. ஆனால் உருப்படியா பெற்றோரின் கண்ணீரை துடைக்க என்ன செய்தோம்  என்பது தான் மாணவர்களின் தலையாய கடமை…