Archive for October 2010


velicham Students

‘தனியார் தொழில்நுட்ப கல்லூரிகள், முதுகலைப் பட்டப்படிப்பு படித்தவர்களை மட்டுமே ஆசிரிய பணிக்கு நியமிக்க வேண்டும்’ என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது.

ஆனால், பல தனியார் பொறியியல் கல்லூரிகள், பிறவிச் செவிடனைப் போல, பிறவிக் குருடனைப் போல, இவ்விஷயத்தில் நடந்து கொள்கின்றன. நர்சிங் ஹோம்களில், விசிட்டிங் மருத்துவர்களாக சிலரை ஒப்பந்தம் செய்து இருப்பர். நோய்க்கு தக்கபடி, நோயாளி எண்ணிக்கைக்கு தக்கபடி அவர்களுக்கு சன்மானம் வழங்குவர்.

பல தனியார் பொறியியல் கல்லூரிகள், முதுகலைப் பட்டம் படித்த பொறியியல் வல்லுனர்களை நிரந்தர பணி நியமனம் செய்யாமல், அனுமதி பெறுவதற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்கின்றன. ஒரு முதுகலை பொறியியல் பட்டம் படித்த நபர், தன் பட்டத்தை பல கல்லூரிகளுக்கு வாடகைக்கு விட்டு, உழைக்காமலே சம்பாதிக்கும் நிலை உள்ளது.

பார்மசி பட்டம் பெற்றவர்கள், தங்கள் கல்விச் சான்றிதழை பெருந்தனக்காரர்களிடம் அடமானம் வைத்து விடுவதால், பல தரமற்ற மருந்துக் கடைகள் நாட்டில் உள்ளன.
அதைப் போல, முதுகலை பொறியியல் படிப்பு படித்தவர்களும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் தங்கள் சான்றிதழை மட்டும் அடமானத்துக்கு தந்து விடுவதால், பொறியியல் கல்வித் தரமற்று போய் விட்டன.

‘ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், அதன் உள்ளே இருக்குமாம் ஈரும், பேனும்’ என்பது போல, பல தனியார் பொறியியல் கல்லூரிகளின் தரம் உள்ளது. அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் முன் அறிவிப்பு ஏதும் இன்றி, திடீர் விஜயங்களை தனியார் கல்லூரிகளுக்கு செய்தால், உண்மையான ஆசிரியர் நிலவரம் புரிய வரும்.

அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சிலின் அறிவுரைகளை செவிமடுப்பதே இல்லை என்பது தெரிய வரும். ஏ.ஐ.சி.இ.டி.,யை, ஒரு துரும்புக்கு ஈடாகக் கூட மதிப்பதில்லை என்பது தெரிய வரும். ஈயம் பூசப்படாத பித்தளை பாத்திரங்களில் செய்த சமையல், நஞ்சாகிப் போகும்; முதுகலைப் பட்டம் பெற்றவர்களால் நிரப்பப்படாத தனியார் கல்லூரிகளில் கல்வியும் பாஷாணமாகிப் போகும்.

வெறும் அறிக்கையோடு, ஏ.ஐ.சி.இ.டி., யை நிறுத்தாமல், நடவடிக்கை அளவிலும் கடுமையாக களம் இறங்க வேண்டும்.
-பா.ப்ரியன், காஞ்சிபுரம் 
கல்வி மலர் தினமலர்.கம். வாசகர்


குழந்தைகள் படிப்பில் தந்தையை விட தாயின் வழியை பின்பற்றுகின்றன என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.இதுபற்றி இங்கிலாந்தில் பேராசிரியர் அயன் வாக்கர் தலைமையில் நடந்த ஆய்வில் வெளியான தகவல்கள்:

Velicham students
                         பொதுவாக குழந்தைகள் அம்மாவின் நிழலில் வளர்வதால் அவரிடம் ஈர்ப்பு அதிகமாகிவிடுகிறது. அப்பாக்கள் கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்வதாலும், பெரும்பாலும் வீட்டில் இல்லாமல் போவதும் தாயின் தயவை தேடி குழந்தைகள் செல்ல காரணம். சிறு வயதில் ஏற்படும் இதுபோன்ற தாக்கங்கள் பெரியவர்களானாலும் மனதில் பதிந்து விடுகின்றன.

அம்மாவை தங்களது ‘ரோல் மாடல்’ ஆக குழந்தைகள் பார்க்கின்றனர். அம்மா செய்யும் ஒவ்வொரு செயல்களும் அவர்களை கவர்கிறது. இது படிப்பிலும் பிரதிபலிக்கிறது. இதோ, லண்டனில் 13 ஆண்டுகள் 43,000 இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் இதுதான் வெளிப்பட்டுள்ளது.

‘குழந்தைகள் பள்ளியில், கல்லூரியில் படிக்கும்போது, குடும்பத்துக்குள் தங்களது சந்தோஷங்களை பகிர்ந்து கொள்வது உட்பட எல்லாவற்றிலும் அம்மாவின் பிரதிபலிப்பு வெளிப்படுகிறது. இந்த விஷயத்தில் தாய், மகள் உறவு மிகவும் வலிமையாக உள்ளது.

ஆனால், தாய், மகன் உறவில் கொஞ்சம் வேறுபாடு இருக்கிறது. அம்மாவை விட அப்பா அதிகமாக படித்திருந்து, அதிகமாக சம்பாதித்தாலும் அம்மாவின் படிப்பும், செயல்களும்தான் குழந்தைகளுக்கு பிடித்து விடுகின்றன. குறிப்பாக பெண் குழந்தைகள் அம்மாவை பின்பற்ற பாலின சமத்துவமும் ஒரு காரணம்’ என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
 நன்றி: தினகரன் 23.9.10

புதிய தலைமுறைகல்வி இதழில் மாணவர்களுக்கு வழிகாட்டும் வெளிச்சம எனும் தலைப்பில் வெளியான கட்டுரையை உங்கள் பார்வைக்காக சமர்ப்பிக்கிறோம்....

நாளு பேருக்கு
நாமும் நல்லது செய்ய இணைவோம்..



ஏழை மாணவர்கள் கல்லூரி படிப்பை வங்கிக்கடனை நம்பி தொடர்ந்த ,மாணவர்களின் கல்விக்காக உண்டியல் ஏந்திய வெளிச்சம் அம்பலபடுத்திய கல்விக்கடன் பற்றிய மோசடி அவள் விகடனில் வெளியானது ... உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்...






  

பிச்சை எடுத்தாலும் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவாங்க என நம் தோழி மாத இதழில் வெளியான கட்டுரையை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்..

படித்த பிறகு யோசிங்க..
நாளு பேருக்கு நாமும் உதவுவோம்..(விண்ணப்ப படிவம்)

நன்றியுடன்

வெளிச்சம் மாணவர்கள்




உறவுகளே!
       குமுதம் பத்திரிக்கையில் வெளிச்சம் மாணவர்கள் பற்றிய கட்டுரை முடிந்தால் படிச்சி பாருங்க:
நாளு பேருக்கு நல்லது செய்ய இணைவோம்..
வெளிச்சம் விண்ணப்ப படிவம்




ஏழைகளுக்கு எட்டா தூரத்தில் மேல்படிப்பு...
'மார்க் இருக்கு... ஸீட் இருக்கு!' 
ஸ்திரேலியாவில் உயர்கல்வி பயிலப் பறப்பவர் களுக்கு, அரசாங்கம் கடனும் கொடுத்து, அவர்கள் கஷ்டப்பட்டால்... வெளியுறவு அமைச்சரையே அனுப்பி ஆறுதலும் தருகிறது. ஆனால்... ஆடு மாடு மேய்க்கிற வசதியில்லாத கிராமத்துப் பிள்ளைகளுக்கோ... ஆஸ்திரேலியா என்ன... அடுத்த ஊரில் உயர்கல்வி படிப்பதுகூட அரிதாகிவிடும் போலிருக்கிறது! ஆஸ்திரே லியாவில் நிறம் மட்டும்தான் பிரச்னை. ஆனால், இங்கே பல கல்வித் தந்தைகளின் செழுமை, பெற்றோர்களின் வறுமை எனப் பல கொடுமைகள் இருக்கிறதே!
பன்னிரண்டாம் வகுப்பில் ஆயிரம் எடுத்தால் என்ன? அதற்கு மேலும் எடுத்தாலென்ன? 'பலப்பல ஆயிரங்கள்'இல்லாமல் எந்த ஒரு தனியார் கல்வி நிலையத்திலும் நுழைய முடியாது! 'கல்விக்கடன்தான் இருக்கிறதே?'என்று யாராவது கேள்வி கேட்டால், ஸாரி! என்னவோ... கேட்டதுமே நமக்குக் கடன் கொடுத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பது போல் ஒரு தப்பான நினைப்பில் நீங்கள் இருக்கிறீர்கள்!



அதே நேரம், தமிழகத்தில் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் சுமார் முப்பத்தைந்தாயிரம் இடங்கள் காலியாகிக் கிடப்பதாக நாளிதழ் செய்திகள் தெரிவிக் கின்றன.
ஆயிரத்துக்கும் மேல் மதிப்பெண் எடுத்துவிட்டு எத்தனையோ பேர் பொறியியல் கல்விக்காகப் போராடிக் கொண்டிருக்க... இத்தனை இடங்கள் காலியாகக் கிடப்பது எப்படி?
'வெளிச்சம்'அறக்கட்டளை மூலம் எந்த வசதியுமற்ற முதல் தலைமுறை மாணவர்களின் உயர்கல்விக்கு கடந்த ஐந்து வருடங்களாக உதவிதரும் அந்த அறக்கட்டளையின் நிர்வாகியான ஷெரின் கூறுகிறார்,
''எங்களிடம் இந்த வருஷம் வசதியற்ற 300 மாணவர்கள் விண்ணப்பிச்சுருக்காங்க. அவர்கள்ல பாதிப்பேர் 1,000-க்கும் மேலே மார்க் எடுத்தவங்க. மத்த எல்லாரும் 900 மார்க்கை தாண்டினவங்க. நாங்களும் பல நன்கொடையாளர்களைத் தொடர்பு கொண்டு நேரடியாக அவர்களே இந்த மாணவர்களுக்கு உதவி செய்ய ஏற்பாடு செய்றோம்...'' என்ற ஷெரீனிடம்...
''ஏன் இந்த நிலைமை?'' எனக் கேட்டோம்.
''பொறியியல் கலந்தாய்வுக்குப் போகிற கிராமத்தைச் சேர்ந்த படிக்காத பெற்றோர்களுக்குக் கல்விக் கட்டணம் குறித்து எந்த ஒரு விழிப்பு உணர்வும் கிடையாது. அரசு நிர்ணயித்திருக்கும் தொகை மட்டும்தான்னு நினைச்சுக்கிட்டு அதையும் கல்விக்கடன் வாங்கிச் செலுத்திடலாம்னு போறவங்கதான் ஜாஸ்தி. அரசு கொடுத்திருக்கும் செலானில் உள்ள தொகையையும் தாண்டி விடுதி, ஃபீஸ், புக்ஃபீஸ்னு அரை லட்சம் கூடுதலா கட்ட வேண்டுமென்பதே அவர்களுக்கு முதல் அதிர்ச்சி. அது மட்டுமில்லாம அந்தத் தொகையையும் குறிப்பிட்ட நாளைக்குள் கட்ட வேண்டுமென்பது இரண்டாவது அதிர்ச்சி. 'நாமதான் படிக்கல... புள்ளையையாவது படிக்க வச்சுடணும்'னு நகை, சொத்துனு இருக்கறதையெல்லாம் விற்று வருகிறவர்களிடம் இரண்டாயிரம், மூவாயிரம் குறைஞ்சாக்கூட மறுக்கிறாங்க. கடன் வாங்கலாம் என வங்கிகளுக்குப் போனால்... பணம் கட்டிய ஆவணங்களை எடுத்து வந்தாதான் கல்விக்கடன் தருவோம்ங்கிறாங்க. இது எப்படி ஏழைகளால் முடியும்? இந்தக் காரணத்தாலேயே போன வருடம் பல மாணவர்கள் படிப்பை நிறுத்தற நிலைமை வந்துடுச்சு. கல்விக் கட்டணத்தில் பாதித் தொகையை முதலில் கட்டிவிட்டு, பின் பாதியைக் கல்விக்கடன் வந்தவுடன் செலுத்தினால் போதுங்கிற நிலையை அரசு உருவாக்கணும்!'' என அவர் நம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நம்மை சந்தித்தார் மதுரையை சேர்ந்த ராஜேஷ்கண்ணா.
''நான் 1,004 மார்க் எடுத்ததனால அழகர் கோயில்ல இருக்கற 'எம்.ஏ.வி.எம்.எம். பொறியியல் கல்லூரியில'ஸீட் கிடைச்சுருக் குங்க. எல்லா ஃபீஸையும் சேர்த்து நாற்பத்துரெண்டாயிரம் வருது. அதையும் பத்தாம் தேதிக்குள்ள [10.8.09] கட்டணும்னு சொல்லிட்டாங்க. ஸ்வீட் ஸ்டால்ல வேலை பார்க்கிற எங்கப்பாவுக்கு இப்பத்தான் கண் ஆபரேஷன் பண்ணினோம். அவரால அவ்வளவு பெரிய தொகையை புரட்ட முடியல. வங்கியில கல்விக் கடன் வாங்கலாம்னு போனா, கல்லூரியிலிருந்து போனஃபைட் சர்டிஃபிகேட் வாங்கிட்டு வந்தாதான் விண்ணப்பமே தருவாங்களாம். அதாவது எல்லாக் கட்டணத்தையும் செலுத்திமுடித்த பின், கல்லூரி தரும் சர்டிஃபிகேட் அது. கல்லூரியில மொத்தத் தொகையையும் கட்டுற வசதி இருந்தா... நான் ஏங்க கடன் வாங்கப் போறேன்?'' என்று ஆயிரம் மதிப்பெண் எடுத்த ஆற்றல் இருந்தும் ஆற்றாமையுடன் பேசுகிறார் ராஜேஷ்கண்ணா.
இதே போல் ஆயிரம் இருந்தும்... ஆயிரங்கள் இல்லாததால் உயர்கல்வியை உயரத்தில் பார்க்கும் நிலைக்கு ஆளாகிப் போன சில மாணவர்களோடு பேசினோம்.
திமிர்ந்த ஞானம் மரியமதனாவுக்கு! ப்ளஸ்-டூவில் 1,082 மதிப்பெண்கள் எடுத்தவர் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் உள்ள தன்னுடைய வீட்டில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருக்கிறார்.
''175.75 கட் ஆஃப் வாங்கி இன்ஜினீயரிங் கவுன்சிலிங்கில 'ஆசான் மெமோரியல் காலேஜ்'ல ஸீட் கிடைச்சது. இந்த தேதிக்குள்ள 90,000 ரூபாய் கட்டணும்னு சொல்லிட்டாங்க. எங்க குடும்பச் சூழ்நிலையில அவ்ளோ பணத்தை திடீர்னு கட்ட முடியலை. இன்ஜினீயரிங் ஸீட்தான் கிடைக்குமேங்குற தைரியத்துல... ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் காலேஜ்லயும் எந்த அப்ளிகேஷனும் வாங்கல. அதனால, இப்ப அதுலயும் சேர முடியாம போச்சுங்க...'' என்று முடித்த மரியமதனாவின் வறுமையை அவருடைய கண்ணீரே காட்டிக் கொடுத்தது.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பழனிவேலுவோ, ''திருநாவுக்கரசு என்னோட மைத்துனர் பையன். ப்ளஸ்-டூ-வுல 997 எடுத்துருக்கான். எப்படியாவது அவனுக்கு ஸீட் கிடைச்ச 'தனலெஷ்மி ஸ்ரீனிவாசன் பொறியியல்'கல்லூரியிலேயே சேர்த்துடணும்னு, இருந்த அரை காணி நிலத்தையும் ஈடு கொடுத்து சேர்த்துட்டோம். ஆனா, ஹாஸ்டலுக்கு கட்டவேண்டிய 30,000 எங்ககிட்ட இல்லங்க. அதனால இப்ப படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டுருக்குங்க...'' என்கிறார்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா வடகண்டத்தைச் சேர்ந்தவர் விவசாயியான கே.கோபிராஜ். தன் மகள் அருணாவுக்கு பெரம்பூர் கற்பகம் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தும்... பத்து நாட்களுக்குள் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக் கிறார்.
''எந்த வருஷமும் இல்லாம இந்த வருஷம் அரசே பொறியியல் கல்லூரிகளுக்கு கட்ட வேண்டிய தொகையையும், தேதியையும் ஒரு செலான்ல எல்லா மாணவர்களுக்கும் போட்டுக் கொடுத்துருக்காங்க. கிட்டத்தட்ட 40,000 ரூபாய் கல்விக் கட்டணம், அப்புறம் விடுதிக்கு ஒரு 30,000 மற்ற ஃபீஸ் ஒரு 20,000 எல்லாம் சேர்த்து ஒரு லட்சம் வந்துடுது. என்னைப் போல ஏழை விவசாயிகளுக்கெல்லாம் இது ரொம்பப் பெரிய தொகைங்க. கல்விக்கடன் கேட்டு வங்கிக்குப் போனா, அட்மிஷன் போட்டதுக்கு அப்புறம்தான் லோன் அப்ளிகேஷனே தருவாங்களாம். அந்த அப்ளிகேஷன் கொடுக்கறதுக்கே ஆயிரத்தெட்டு கேள்வி வேற. இந்த மாதிரி நிலைமை இருக்கறதுனால... அறக்கட்டளைகளையும், தொண்டு நிறுவனங்களையும் தேடிப் போகிற நிலைமை வருது. அதுக்குக்கூட கால அவகாசமும் கிடையாது. இப்படியே போனா, எங்கள மாதிரி ஏழை விவசாயிங்களோட பிள்ளைங்களோட உயர் கல்விங்கறது கேள்விக்குறிதாங்க!'' என்று முடித்தார்.
திருச்சி உடையார்பாளையத்தில் வசிக்கும் உமாவின் நிலையும் இதுதான். ப்ளஸ்-டூ-வில் 975 மதிப்பெண் எடுத்தி ருக்கும் உமாவின் அம்மா இந்திரா நம்மிடம், ''உமா என் இரண்டாவது பொண்ணுங்க. அவரு போனதுக்கப்புறம் களைவெட்டித்தான் என் புள்ளைங்கள வளர்க்குறேன். 'தனலெஷ்மி ஸ்ரீனிவாசன் பொறியியல் கல்லூரி'யில இடம்
கிடைச்சது. ஆனா, ரொம்ப செலவாகும்,
தூரமாகவும் இருக்குன்னுட்டு திருச்சி பாவேந்தர் பாரதிதாசன் பொறியியல் கல்லூரியில சேர முடிவு செஞ்சா. இங்கேயும் 90 ஆயிரம் ஆகுது. எப்படி கட்டப் போறேன்னு எனக்கே தெரியல. நானும் அவளும் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கிட்டு அழுதுக்கிட்டிருக்கோம்...'' என்றார் கம்மிய குரலுடன்.
வெளிச்சம் அறக்கட்டளை மூலம் தங்கள் இருட்டை நம்மிடம் பகிர்ந்துகொண்டவர்கள் ஒரு சிலர்தான். இன்னும் நூற்றுக்கணக்கானோர் இவர்களைப் போல், உயர்கல்வியை எட்டிப் பிடிக்க முடியாமல் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்!
சமூக ஆர்வலர்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் ஏழை மாணவர்களின் மீது இருக்கும் அக்கறையைப் பார்த்தாவது அரசே உயர்கல்வியினை ஏற்று நடத்தினால் தான் இதற்கு ஒரு முடிவு வரும்!

'பிச்சைபுகினும் கற்கை நன்றே!'என்று மன்னராட்சியில் இருந்திருக்கலாம். ஆனால், மக்களாட்சியில் உதவி கேட்டுப் படிப்பதை விடவும், உரிமையாகக் கேட்டு பெறும் சூழலை உருவாக்கித் தருவதுதான் ஒரு நல்ல அரசின் கடமை!
- செ.மனோ 

படங்கள்: செ.தன்யராஜு, தமிழ்க்குமரன், மாரியப்பன்





ஏழை மாணவர்களின் கல்வி குறித்த ஆய்வினை வெளியிட்ட ஜூனியர் விகடன் கட்டுரையை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்...
படிச்சி பாருங்க:
நாளு பேருக்கு நல்லது செய்ய இணைவோம்..


"கல்வி இல்லை என்பது ஊனம்தான்!"
                               -நன்றி: அவள் விகடன். 16.1.09


''அன்ன சத்திரங்கள் ஆயிரம் வைப்பதை விடவும் பத்தாயிரம் கோயில் கட்டுவதை விடவும் ஓர் ஏழைக்குக் கல்வி தருவதுதான் உயர்ந்தது'' என்று சொன்னார் மகாகவி பாரதியார்.
அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார் அரியலூரைச் சேர்ந்த செரீன்.
எந்த பள்ளிக் குழந்தையாவது தனது தலைமுறையிலேயே முதன்முதலாகப் பள்ளிக்கு வந்து, நல்ல மதிப்பெண்ணும் எடுத்து, வறுமையால் அந்தப் படிப்பை விட்டுவிடும் நிலையில் இருக்கிறதா? ஆபத்பாந்தவன் போல் அந்தக் குழந்தையின் அத்தனை படிப்புச் செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறது செரீன் நடத்திவரும் 'வெளிச்சம்' அறக்கட்டளை!
கருத்த தேகம்.. தோற்றத்தின் மீது அக்கறையே இன்றி அணியப்பட்ட ஷார்ட் குர்தா.. பேதங்களை உடைத்தெறியும் 'பாய் கட்'.. தாராளமான பேச்சு.. சரளமான ஆங்கிலம்.. இதுதான் செரீன்.
தனது அறக்கட்டளை அலுவலகத்தில் மாணவர்களோடு சேர்ந்து நம்மை கோரஸாக வரவேற்று உபசரித்தவர், மெள்ள தன்னைப் பற்றிப் பேசத் தொடங்கினார்..
''பல தலைமுறையா நாங்க கேரளாவுல செட்டில் ஆன தமிழ்க் குடும்பம். 40 ஏக்கர் டீ எஸ்டேட், பிரமாண்டமான வீடுனு சொத்துக்குக் குறையில்லை. அம்மா ஸ்கூல் டீச்சர். சொத்துக்களை கவனிச்சுக்குறதுலயே அப்பா பிஸியா இருப்பார். அதனால நாலு வயசுல இருந்தே மதுரையில உள்ள ஹாஸ்டல்ல தங்கி ஸ்கூல் படிக்க வேண்டிய நிலைமை. அப்போ அது கஷ்டமாத்தான் இருந்துச்சு. ஆனா, அந்த ஹாஸ்டல் வாழ்க்கைதான் எனக்கு உலகத்தையே கத்துக் கொடுத்தது.


பணக்கார பசங்க படிக்கிற ஸ்கூல் அது. கறுப்பான பொண்ணுனு அப்பவே எல்லாரும் என்னை ஒதுக்கித் தள்ளுவாங்க. மனசுக்குள்ள ஒரு தாழ்வு மனப்பான்மையோட குறுகிப் போய்த்தான் ப்ளஸ் டூ வரைக்கும் அங்க படிச்சேன். அதுக்கப்புறம் காலேஜ் போகக் கூட மனசில்ல. கரஸ்பாண்டன்ஸ்ல பி.ஏ போட்டேன். ஆனாலும் வீட்டுக்குப் போய் சும்மா உக்காரப் பிடிக்கல. மதுரையில ரெண்டு வருஷமா மார்க்கெட்டிங் வேலை பார்த்தேன். வெயில்ல அலைஞ்சு திரிஞ்சு கஷ்டப்படும்போது, 'இதனால சமூகத்துக்கு நாம என்ன செய்யப் போறோம்..'னு தோணும். அதனால மெதுவா மார்க்கெட்டிங் துறையில இருந்து விலகி, சமூக சேவை செய்யிற தொண்டு நிறுவனங்கள்ல வேலை பார்க்க ஆரம்பிச்சேன்.
அப்படி ஒரு தொண்டு நிறுவனத்துல வேலை பார்த்தப்போதான், தமிழ்நாட்டுல உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளைப் பத்தி ஆராய்ச்சி பண்ற வாய்ப்பு கிடைச்சுது. தீண்டாமை, வறுமைனு பல பிரச்னைகள்ல சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்குற ஆயிரக்கணக்கான குழந்தைகளை அப்போ நான் சந்திச்சேன். சக மனுஷனை மனுஷனா பார்க்காத கலாசாரத்தை நேர்ல பார்த்து மிரண்டு போனேன். ஒரு பள்ளிக்கூட ஆசிரியரே தன்கிட்ட படிக்கிற தாழ்த்தப்பட்ட மாணவியைத் தப்பான வார்த்தையில கூப்பிட்டதை காதால கேட்டேன். அதையும் கேட்டுக்கிட்டு இயலாமையோட நின்ன அந்தப் பொண்ணைப் பார்த்தேன். நெஞ்சு கொதிச்சுது.

இதைக் கூட எதிர்க்க துணிச்சல் இல்லாமப் போறதுக்கு படிப்பறிவில்லாததுதான் காரணம்னு தோணிச்சு. 'ஊமை என்றால் ஒருவகை அமைதி.. ஏழை என்றால் அதிலொரு அமைதி'னு பாட்டு வருமே.. அப்படிதாங்க படிப்பில்லைன்னாலும் ஊமை மாதிரிதான். அதுவும் ஊனம்தான். அந்த ஊனத்தைப் போக்கணும்னா படிப்பு வேணும். காசு இல்லைங்கற காரணத்துக்காக கிராமத்துப் பிள்ளைங்க படிப்பை இழந்துடக் கூடாது.. அப்படி இழக்க நான் விடக்கூடாதுனு அன்னிக்கு முடிவெடுத்தேன்'' என்கிற செரீன், இதற்காக தன் சொந்த வீட்டை ஒதுக்கிவிட்டு, தமிழகத்திலேயே தங்கிவிட்டிருக்கிறார்.
''என் உணர்வுகளைப் புரிஞ்சுக்குற ஒருத்தர்.. என்னை மாதிரியே சமூக சேவை நிறுவனங்கள்ல ஆர்வத்தோட பங்கெடுத்துக்குற ஒருத்தரைப் பார்த்தேன். நேசிச்சேன். அவரும் என்னை நேசிச்சார். அம்மாவோட ஆசீர்வாதத்தோட கல்யாணம் பண்ணிக்கிட்டு அவரோட சொந்த ஊரான அரியலூருக்கு வந்தேன். இங்க பருக்கல்ங்கற கிராமம்தான் அவருக்குப் பூர்வீகம். அடிப்படை வசதிகள் கூட இல்லாத அந்த எட்டுக்குப் பத்து வீட்டுல சந்தோஷமா குடித்தனம் நடத்தினேன். ஒரு மகனும் பிறந்தான். இன்னும் சந்தோஷமானேன். ஆனா, கிராமத்துக் குழந்தைகளோட கல்விக்காக ஏதாவது பண்ணணும்ங்கற என்னோட ஏக்கம் குறையல. அதுக்காக ரொம்ப முயற்சிகள் எடுத்து, நான் உருவாக்கின அமைப்புதான் வெளிச்சம்.
என் அமைப்புக்கு ஜாதி கிடையாது.. மதம் கிடையாது.. தன் குடும்பத்துல இருந்து முதன் முறையா படிக்க வர்ற குழந்தைகள் படிக்கணும்.. தங்களால படிக்க முடியிற வரை படிக்கணும். அதுக்கு காசு ஒரு தடையா இருக்கக் கூடாது. இதுதான் என் லட்சியம்னு நினைச்சேன். அதுக்காக எத்தனையோ பேர் கால்ல விழுந்து நன்கொடைகள் வாங்கியிருக்கேன். கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளின அவமானங்களையும் தாங்கியிருக்கேன். அதெல்லாம் எனக்கு வருத்தமே தரலை.
அப்பாவை இழந்து பதினோராம் வகுப்போட படிப்பை நிறுத்திட்டு, முந்திரிக்கொட்டை பொறுக்கிக்கிட்டு இருந்த செந்தில்ங்கற மாணவனுக்கும் எங்க அமைப்பு முதன் முதலா உதவி செஞ்சுது. இன்னிக்கு அவன் கெமிக்கல் இன்ஜினீயரிங் ஃபைனல் இயர் படிச்சிக்கிட்டு இருக்கான். இந்த சந்தோஷமே எனக்குப் போதும்'' என்கிறவர், இந்த சுகத்துக்காக தன் தனிப்பட்ட வாழ்க்கையையே தியாகம் செய்திருக்கிறார்.

''என் கணவர் ஆரம்பத்துல என்னோட எல்லா செய்கைகளையும் ஆதரிச்சார்தான். ஆனா, போகப் போக சமூக சேவையில நான் காட்டின தீவிரம் அவருக்குப் பிடிக்கலை. அதுகூட எனக்குப் பெருசா தெரியலை. சொந்தப் பிள்ளையே அவங்க அப்பாவோட சேர்ந்து என்மேல குறை சொல்ல ஆரம்பிச்சான். ஒரு கட்டத்துல 'வீடா.. சமூகசேவையா?'னு ஒரு கேள்வி வந்திச்சு. 'ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும்'னு ஒரு பழமொழி சொல்லுவாங்கள்ல.. அதை நம்பி மனசைக் கல்லாக்கிக்கிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தேன். இதுவரைக்கும் 'வெளிச்சம்' மூலமா 150 பிள்ளைங்க பயனடைஞ்சிருக்காங்க. அவங்களாவது என்னைப் புரிஞ்சுக்குறாங்களேனு ஆறுதல்பட்டுக்கறேன். என்னிக்காவது என் மகனும் என்னைப் புரிஞ்சுக்குவான். எனக்கப்புறம் என் கனவுகளை சுமப்பான்னு நம்புறேன்'' - மனசைத் தொட்டு முடிக்கிறார் செரீன்.
அந்த வார்த்தைகளின் வெளிச்சம் கண்ணைப் பறிக்கிறது!

-சி.ஆனந்த குமார்



இந்த கட்டுரை அவள் விகடனில் வெளியான கட்டுரை உங்கள் மனக்கதவை திறக்கும் என்கிற நம்பிக்கையில் உங்கள் பார்வைக்காக சமர்ப்பித்தோம்..


 இணைவோம் ..
 விண்ணப்ப படிவம்

சென்னை, அக். 21:

velicham manavar thar kolai
                              தற்கொலை செய்துகொள்பவர்களில் ஆண்களே அதிகம் என உலக சுகாதார அமைப்பின் மனநலத் துறை இயக்குநர் சேகர் சக்úஸனா கூறினார். தற்கொலை தடுப்பு அமைப்பான ஸ்நேகா-வின் வெள்ளி விழா சென்னையில் வியாழக்கிழமை  கொண்டாடப்பட்டது. இதில் சேகர் சக்úஸனா பேசியது:
உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களே அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். நான்கு குடும்பங்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் மனநலம் பாதிக்கப்படுகின்றனர்.
இவர்களில் ஆண்களே அதிகம் என்றும் தெரியவந்துள்ளது. வாழ்க்கையை முழுதாக புரிந்துகொள்ளாத 25 வயதுக்கும் குறைவானவர்களே, இதில் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். 75 சதவீத தற்கொலைகள் மன நலத்துக்கு முக்கியத்துவம் அளிக்காத குறைந்த வருவாய் நாடுகளிலேயே நடைபெறுகின்றன.
இந்தியா, சீனா போன்ற நாடுகளில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்பவர்களே அதிகம். ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதை எளிதில் தடுத்து விட முடியும். இதற்கு அரசு துறைகளும் சமூக அமைப்புகளும் இணைந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.இதற்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் தொடர்பான கொள்கையை மேம்படுத்துவது, மன நலம் தொடர்பான மருத்துவ நிர்வாகத்தை மேம்படுத்துவது, டாக்டர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் தற்கொலை தடுப்பு பயிற்சிகளை அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது என்றார்.இந்திய மனநல சமூகத் தலைவர் எம். திருநாவுக்கரசு: மருத்துவக் கல்வியில் தற்கொலை தடுப்பு குறித்த பாடமே இதுவரை இடம்பெறவில்லை. தற்கொலைகளை தடுக்க முதலில் அதுதொடர்பான பாடம் மருத்துவக் கல்வியில் இடம்பெறவேண்டும் என்றார்.
ஸ்நேகா நிறுவனர் லட்சுமி விஜயகுமார்:
இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை 68 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். இதில் 75 சதவீதம் பேர் 40 வயதுக்கும் குறைவானவர்கள்.உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 14 வயதுக்கு குறைவான 2,500 குழந்தைகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதைத் தடுக்க போதிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். தற்கொலை முயற்சியை தடுப்பது ஒவ்வொருவருடைய கடமை.தற்கொலை முயற்சியில் ஈடுபடுவர்களிடையே, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்கொலை முயற்சி சட்டப்படி தண்டனைக்கு உரியது என்பதை நீக்குவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
நன்றி  தினமணி

அக்டோபர்ப் 21:
மெட்ரிக் பள்ளிகளுக்கு கோவிந்த ராஜன் கமிட்டி நிர்ணயித்த இந்த கல்விக்கடணத்திற்க்கு  நடந்த மக்கள் போராட்டங்களில் வெளிச்சம் மாணவர்களுக்கும் பங்கு இருக்கிறது  அதன் பின்னனியில் வெளியிடப்பட்டுள்ள கட்டணவிபரங்களை மக்களிடம் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது வெளிச்சம்.அதற்க்காக  வெளிச்சம் மாணவர் உதவி எண் 9698151515 மேலும் முனைப்புடன் செயல் படும்.
தட்டுங்கள்: Metriculation School fees list(கோவிந்த ராஜன் கமிட்டி விதித்த கட்டண பட்டியல்)
தனியார் நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக் கட்டணம் தமிழக அரசின் இணையதளத்தில் 21.10.2010 அன்று வெளியிடப்பட்டது. தமிழக அரசின் www.tn.gov.in  என்ற இணையதளத்தில் கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
நீதிபதி கோவிந்தராஜன் குழு தனியார் பள்ளிகளுக்கு கடந்த மே மாதம் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்தது. ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இந்தக் கட்டண விவரங்களை பள்ளி நிர்வாகங்களோ, அரசோ வெளியிடவில்லை.
இதையடுத்து, தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை வெளியிட  வேண்டும் என்று கோரி மாநிலம் முழுவதும் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
உயர் நீதிமன்ற உத்தரவின் படி, நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்தக் கட்டணத்தை வெளியிட வேண்டும் என்று கோரி பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு சார்பில் அரசுக்கு நோட்டீஸýம் அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக் கட்டண விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ரூபாய் 10 முதல்  கட்டணம்
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டண விவரங்களின் அடிப்படையில், தனியார் பள்ளிகளில் 10 முதல் 11 ஆயிரம் வரை ஆண்டுக் கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் உள்ள இந்து நாடார் உறவின்முறை நடுநிலைப் பள்ளிக்கு ஆண்டுக் கட்டணமாக 10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அவர்கள் சமர்ப்பித்த லாப, நஷ்ட கணக்கு விவரங்களின் அடிப்படையிலேயே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்தப் பள்ளிக்கு மேல்முறையீட்டில் கட்டணத்தை மறுசீரமைக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்
532 பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது
அதேபோல், கல்விக் கட்டணம் தொடர்பான விவரத்தை தெரிவிக்காத 532 பள்ளிகளும் நீதிபதி குழுவின் அனுமதியின்றி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளுக்கான கட்டண விவரங்கள் ஏதும் அறிவிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளின் பட்டியலும் தனியாக வெளியிடப்பட்டுள்ளது.
கல்விக் கட்டண விவரங்களை தெரிவிக்காத பள்ளிகள் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை எனத் தெரிகிறது. எனவே, இந்தப் பள்ளிகள் நீதிபதி குழுவின் அனுமதியின்றி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் அளிக்கலாம்
நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்தக் கட்டணத்தை விட அதிகமான கட்டணத்தை பள்ளிகள் வசூலித்திருந்தால், அதை தனி வைப்புத் தொகையாக வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி குழுவின் இறுதி முடிவுக்கு இது கட்டுப்பட்டது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 10,934 தனியார் பள்ளிகளில் 6,400 பள்ளிகள் இந்தக் கட்டண நிர்ணயத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளன. இந்த மேல்முறையீட்டு மனுக்களின் மீது 4 மாதங்களுக்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி குழுவிடம் மேல்முறையீடு செய்யாத 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்க உரிமை கிடையாது என உயர் நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகத் தெரியவந்தால், பெற்றோர்கள் இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கலாம்.

நன்றி: தினமணி

சத்துணவுக்கு பணமில்லையெனில்
பிச்சையெடுப்போம் என்றார் கர்மவீரர்...
அதிலிருந்து தொடங்கி...
வாரம் ஒன்றாயிருந்த
முட்டை ஐந்தானது...
கலைஞராட்சியில்..
வாரம் முட்டையில்லாமல்
உருளை கிழங்கு சுண்டல்
அம்மா ஆட்சியில்...
மாண்வர்களொடு சாப்பிடுற
போஸ் இல்லாத போஸ்டரும்..
சத்துணவு இடம்பெறாத
தேர்தல் அறிக்கைகள் உண்டா
சொல்லுங்கள்....
இவர்களின்
இலவசங்களின் வரிசையில்
இப்போதைக்கு
செல்போனும் முட்டையும் தான்
ஹாட் டாபிக்...
என்னதானாலும்..
எட்டாத கனிதானாங்க
ஏழைகளுக்கு தரமான கல்வி...

கடந்த வாரம் வெளியான புதிய தலை முறை கல்வி இதழில் மாணவர்களுக்கு வழிகாட்டும் வெளிச்சம் என்கிற கட்டுரை வெளியானது.சமூகத்தின் மீது  அக்கறை கொண்ட  அனைவரும் அந்த கட்டுரையை பாராட்டினர். மேலும் அதன் தொடர்ச்சியாக யாருமே எதிர்பார்க்காத வண்ணம் வெளிச்சம் மாணவியான ஆனந்தி அவர்கள் பனிரெண்டாம் வகுப்பு முடித்த பள்ளியில் இருந்து மாணவர் உதவி எண்ணை அழைத்து எங்களின் சந்தோசத்தையும், எங்கள் மாணவி மற்றவர்களுக்கு உதவுவதை நாங்கள் பாராட்டியாக வேண்டும் என்றார் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய மேரி அவர்கள்.

வெளிச்சம் மாணவர்களும் ஆனந்தி மற்றும் ஆனந்தி அவர்களுடன் அவரின் தாய் சுகந்தி அவர்களும் மாணவர்களாலும், அவர் படித்த பள்ளி இப்போதைய ஆசிரியர்களாலும் மனித நேய விருது வழங்கப்பட்டது. பாத்திமா பெண்கள் மேல் நிலை பள்ளி இதுவரை எத்தனையே சாதனையாளர்களுக்கும்,அறிவாளிகளுக்கும் மரியாதை செலுத்தியிருக்கிறது.ஆனால் சமூகத்துக்கு பணியாற்றும் தங்களது மாணவிக்கு பாராட்டி விருதளித்தது இதுவே முதல் முறையாம்..

ஆயிரம் விருதுகள் வாங்கலாம் ஆனால் தாயின் கையால் ஊட்டப்ப்படும் ஒரு பிடி சோறும்..படித்த பள்ளியில் கிடைத்த பாராட்டுக்களும் வார்த்தையால் சொல்லமுடியாத வசந்தம்..

நன்றி: புதிய தலைமுறை கல்வி.... 


School Entrance



velicham Anandhi


Humanity Award




Award received by Anandhi Mother Mrs.Suganthi












Anandhi with Teachers






Anandhi with Teachers


Anandhi with Teachers



Velicaham Anandhi received Humanity award  her old school.

Dear friends

On October 4th 2010 an article published in Puthiya Thalaimurai Kalvi magazine about velicham. After reading the article we have received one invitation from Fatima Higher secondary School Jayankondam that they want to invite Ananthi since she is the old student from that same school 2006 Batch. Now she is working as a volunteer in Velicham. They want to honor her since they have given award to many Educationalist from the same school and officials but this is the first time  they are inviting a social worker.. She and her mother were honored by the principal of that school and she received Humanity Award since she is working for the betterment of poor students. Velicaham Anandh also delivered motivating speech to those students.

புதிய தலைமுறை கல்வி கட்டுரை. உங்கள் பார்வைக்காக:



Dear Greeting from Velicham. 
                           you know we have conducted campaign across the state to prevent students comiting suicide and give awareness about Higher education, we have larunch students Help line 9698151515 still now we 26000 students reached us in the helpline to get guidance. As continuity process After the campaign velicaham received a phone call from a good hearted man called Mr.Rathinavel.Rtd Sub Collector, who is an old student of that school. That he want us to share our experience and a motivation speech for their school students. The Headmaster organized all the students from 9th to 12th. First velicham students shared their experience how are were before velicham and after velicham. First half really it was very very hard after that we explained them we are here for you, for your life. They started listening and after the session we got good feed back more than 7 girls told us that they tried to commit suicide for various reason but now after your speech


School Head moster Mr.Panner selvam 
Velicham DEEPA


Add caption


velicham Anandhi





School Teacher and Head Master


School Teachers


School Teachers

School Teachers


velicham D.Sherin





Feed Back


Students Feed Back







Spot Counseling 




Student Fathers Meet


Spot Counselling 















மாணவர்கள் தன்னம்ம்பிக்கை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலை அதிகரித்து கொண்டிருக்கிறது என 55 நாள் பிரச்சாரப்பயணத்தினை முடித்த வெளிச்சம் மாணவர்கள் மாணவர்கள்.. வருடத்திற்க்கு 5000 மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்கிற அறிக்கைகளை மக்களிடம் சம்ர்ப்பித்து, வெளிச்சம் மாணவர்களின் students help line ல் இதுவரை 26000 அழைப்புகளின் தொடர்ச்சியாக மாணவர்களின் தற்கொலைகளை எண்ணிகொண்டிருக்க நாம் கல் நெஞ்சகாரர்களல்ல..
              
அதனால் பள்ளி மாணவர்களுக்கு மாண்வர்களின் தன்னம்பிக்கை,மற்றும் திறமைகள் அவரவர்களுக்குள் இருக்கிறது அதை உணர்த்தி அவர்ரவர் சார்ந்ததுறைகளீல் அவரவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் மாணவர்களே உனக்குள்?  என்கிற தலைப்பை உருவாக்கினோம்..வெளிச்சம் மாணவர்களின் தன்னம்பிக்கைக்கு தன்னம்பிக்கையினை உறுதுணையாக காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சி-வந்தவாசி சாலையில் 20 கிமீ உள்ளது பெருநகர் அரசு மேல் நிலைப்பள்ளி..அந்த பள்ளியின் முன்னால் மாணவரும் ஓய்வுபெற்ற திரு.ரத்தின வேலு அய்யா அவர்களின் ஆர்வம் நம்மை அந்த பள்ளியில் மாணவர்களிடம் 7.10.10 அன்று மாணவர்களே உனக்குள் நிகச்சிக்கு உயிர்கொடுத்தோம். னம்மை மாண்வர்களிடம் பேச வைத்தது...மற்றவைகளை படங்கள் பேசும்...இந்த நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த புதிய தலைமுறை காஞ்சி வாசகர் வட்ட நண்பர்.ரவி அவர்களுக்கும்,தலைமையாசிரியர் பன்னீர்செல்வம்,மற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கும் நன்றி..