Showing posts with label முதல் தலைமுறை. Show all posts


 தமிழகத்தின் நம்பர் ஒன் கல்வி நிலையம் என்று பெருமைப்படக்கூடிய அண்ணா பல்கலைக்கழகத்தில்,  கிராமபுற வரும்  மாணவர்களின்  தொடர் தற்கொலைகளும், தற்கொலைகளின் காரணம் கண்டுபிடிக்காமல் மாணவர்களின் சாவை கொச்சைபடுத்தும் போக்கை தொடர்ந்து செய்கிறது காவல்துறையும்,அண்ணா பல்கலைகழகமும்..



இந்த பல்கலைக்கழகத்தில் படித்த மணிவண்ணன் என்கிற மாணவர் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்ட  அதிர்ச்சியிலிருந்த நமக்கு அடுத்த சில நாட்களில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த மடப்பட்டுக்கு அருகேயுள்ள  கருவேப்பிலைபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தைரியலட்சுமி தற்கொலை செய்துகொண்டார் எனும் தகவல் கிடைத்த நிலையில் தைரியலெட்சுமி, மணிவண்ணன் ஆகியோரின் வாழ்க்கைஅ பார்ப்பதற்கு முன்னால் ..! அண்ணா பல்கலைகழகத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் செத்தபிறகு கொச்சைபடுத்தபட்டதை பார்ப்போம்..

நாமக்கல் மாவட்டத்திலுள்ள  முள்ளுக்குறிச்சியை சேர்ந்த  ஜோதி (வயது 18).. 10-ம் வகுப்பு தேர்வில் 475 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1105 மதிப்பெண்கள் பெற்று  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி இ.சி.இ. படித்து வந்தவர். கடந்த 2010 செப்டம்பர் மாதம்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்போதைய பத்திரிக்கைகள்,தொலைக்காட்சிகள், எல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது... ஆனால் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னால் ஜோதி தனது அண்ணன் தீபக்கிடம், தன்னை மாணவர்கள் கேலி கிண்டல் செய்து மிரட்டுகிறார்கள் அதனால் என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை, இனி சென்னைக்கு படிக்க செல்லமாட்டேன் என்று கூறி கதறி அழுதுள்ளார். அப்போது  தீபக் சொன்ன வார்த்தைகளில் ஆறுதல் அடையாமல் அவசரப்பட்டு தூக்கில் தொங்கிவிட, ஜோதியின் மரணத்திற்கு காவல்துறையும் பல்கலைக்கழக நிர்வாகமும் சொன்ன காரணம் கேவலமானது .

ஜோதி மரணம் நிகழ்ந்த  அன்று எவ்வித விசாரணை நடத்தாமலேயே துணைவேந்தர் மன்னர்ஜவகர், பல்கலைகழகத்தில் ராகிங் நடக்கவேயில்லை என்றதும், அப்போதைய மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி.சிவனாண்டி, ஜோதியின் செல்போனிலிருந்து, சக மாணவருக்கு, உன்னை ஏற்றுக்கொள்வதாக, எஸ்.எம்.எஸ். அனுப்பியதாகவும், அதை அந்த மாணவன் சக நண்பர்களிடம் சொல்லிவி, சகமாணவர்கள்  கேலி செய்யும்போது, ஜோதி தனது செல்போன் ஹாஸ்டலில் இருப்பதாக கூறியிருக்கிறார்.  ஆனாலும் எஸ்.எம்.எஸ் மேட்டர் வெளியே தெரிந்துவிட்டதால் ஜோதி தற்கொலை செய்து கொண்டதாக சிவணாண்டி பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

ஆனால் கல்லூரி வகுப்பில் இருக்கும் ஜோதி, ஹாஸ்டலில் இருக்கும் செல்போனில் எப்படி எஸ்.எம்.எஸ்.அனுப்பி இருக்க முடியும்? அப்படியானால் அவரின் செல்போனிலிருந்து எஸ்.எம்.எஸ் அனுப்பியது யார்? ராகிங் கொடுமையால் மற்ற மாணவர்கள் ஜோதியின் செல்போனை எடுத்து எஸ்.எம்.எஸ். ஏன் அனுப்பி இருக்க கூடாது? இதுபோன்று, எவ்வித விசாரணையும் நடத்தாமல் ஒரே நாளில் இறந்து போன ஜோதி இனி உயிருடன் வர மாட்டார் என்ற தைரியத்தில், ஜோதி  காதலால் தற்கொலை செய்துகொண்டார் என பைலை மூடிவிட்டனர்.

ஜோதியின் தற்கொலையை மனதில் வைத்துகொண்டு, தைரிய லட்சுமி, மணிவண்னன்  தற்கொலைக்கொலைகளை படியுங்கள்…

பலரின் வாழ்க்கையை காப்பாற்றிய மாணவன் மணிவண்ணன் தற்கொலை:


கடந்த 2000-ம் ஆண்டு தர்மபுரி மாவட்ட ஆட்சியராக இருந்த அபூர்வா, குழந்தைத் தொழிலாளிகளை மீட்டெடுக்கும் போது, மணிவண்ணனையும் மீட்டுப் பள்ளியில் சேர்த்துவிட்டார். பொ.மல்லாபுரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு சேர்ந்த மணிவண்ணன் நன்றாகப் படிக்கத் தொடங்கினார். வறுமை விரட்டிக்கொண்டே இருந்தாலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 461 மதிப்பெண்களும் 2 தேர்வில் 1,159 மதிப்பெண்களும் எடுத்தார்.                                                         

குழந்தைத் தொழிலாளியாக இருந்த என்னை மீட்டெடுத்த அபூர்வா கலெக்டரைப் போலவே, நானும் ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும்என்று  அரசு மற்றும் பல தனியார்களிடம் கல்வி உதவித் தொகை பெற்று, அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் பிரிவில் சேர்ந்தார். தனக்கு வரும் கல்வி உதவித் தொகையைக் கொண்டு, சேலத்தில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்த கனிஷ்கா, சக்திவேல், சிவகுமார் மூவரையும் தத்து எடுத்துப் படிக்க வைத்திருக்கிறார். வறுமை காரணமாக யாரும் படிக்காமல் இருக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு ஆக்கபூர்வமான முயற்சிகள் செய்துவந்த மணிவண்ணன்தான், கடந்த 27-ம் தேதி அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். என்பதுதான் பரிதாபமாக இருக்கிறது.


'அபூர்வா செந்தமிழன்என்ற புனைப்பெயரில் 'தாய்ப்பால் வாசம்என்ற கவிதைத் தொகுப்பை ஏப்ரல் 4-ம் தேதி வெளியிட இருந்தவர்.. 'கருவறை விதைகள்என்ற அமைப்பின் மூலம் ரத்ததானம், கண்தானம் குறித்து கல்லூரியில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியவர் மணிவண்ணன். யாருக்கு எப்போது ரத்தம் தேவைப்பட்டாலும்...   தகவல் தெரிந்தால் உடனே ஓடிச்சென்று உதவுவார். தன்னுடன் படிக்கும்  கல்லூரி மாணவர்கள் கட்டணம் செலுத்தக் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக, 'சிறு துளிகள்என்ற அமைப்பை ஏற்படுத்தி, கல்லூரி வளாகத்தில் உண்டியல் ஏந்தினார். மூன்று மாதங்களில் 85 ஆயிரம் ரூபாய் சேகரித்து 14 மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைத்தார்.

படிப்பது இன்ஜினீயரிங் என்றாலும் மணிவண்ணன் முழுக்கமுழுக்க தமிழ் மாணவனாகத்தான் இருந்தவருக்கு, ஆங்கிலம் தடுமாற்றத்தைத் தறவே, இன்ஜினீயரிங் பாடம் படிக்க விருப்பம் இல்லாமல் இருந்த மணிவண்ணன் 26 பேப்பர்கள் அரியர்ஸ் வைத்திருந்ததால் தற்கொலை செய்துகொண்டதாக சொல்கிறார்கள்..

ஜோதியை போல் சாவுக்கு பின் கொச்சைபடுத்தப்படும் தைரிய லெட்சுமி:

                                               


தைரிய லெட்சுமியின் அம்மா உமா சில வருடங்களுக்கு முன்னால் இறந்துவிட,  மூன்று பெண்பிள்ளைகளையும் கூலி வேலை செய்து காப்பாற்றி வருகிறார் அப்பா சக்திவேல், குடும்ப கஸ்டத்தை உணர்ந்த லெட்சுமி,10-ம் வகுப்பில் 465 மதிப்பெண்களும், 2 தேர்வில் 1012 மதிப்பெண்கள் பெற்று அண்ணா பல்கலைக் கழகத்தில் சிவில் இன்ஜினீயரிங் தமிழ்வழிக் கல்வியில் சேர்ந்துள்ளார். இரண்டு செமஸ்டர்கள் கூட முடியாத நிலையில்  சுத்துப்பட்டு கிராமத்துலயே அண்ணா யூனிவர்சிட்டியில படிக்கிற ஒரே பொண்ணு, லெட்சுமியை முன்னுதாரணமா காட்டி ஊர்க் குழந்தைகளைப் படிக்கச் சொல்லும் ஊர்காரர்களுக்கு தைரிய லெட்சுமி தூக்கில் தொங்கி விட்டார் என்பது பேரதிர்ச்சிதான்.


''சிவில், மெக்கானிக்கல் இரண்டையும் தமிழ்வழிக் கல்வியில் கொண்டுவந்துவிட்டாலும்,  புத்தகங்கள் சரியான மொழியாக்கத்தில் இல்லை. மிகக்கடினமான மொழி நடையிலும், நிறைய வார்த்தைகள் தமிழ்ப்படுத்தாமல் ஆங்கிலத்தில் இருந்த நிலையில், தமிழ் அல்லது இரண்டும் கலந்து பரிட்சை எழுதலாம்னு சொல்றாங்க. ஒரு சிலர் தூய தமிழில்தான் எழுதணும்னு சொல்றாங்க.மாணவர்கள் குழம்பி கிடக்கிறார்கள் இதில்தான் தைரியலட்சுமி தோற்றுப்போனாள்''.

ஜோதியின் சாவை போல தைரிய லெட்சுமியின் சாவையும் கொச்சைபடுத்த நினைத்த நிர்வாகம் மீண்டும் ஓர் வதந்தியை பரப்பியிள்ளது..

ஏழ்மையில் கல்லூரிக்கு வந்த மணிவண்ணனின் குடும்பசூழலும், தைரியலட்சுமியின் குடும்பச்சூழலும் ஒத்துபோக இருவரும் அண்ணன் தங்கையாக பழகினார்கள். மணிவண்ணனின்  'தாய்ப்பால் வாசம்கவிதைத் தொகுப்புக்குப் பிழை திருத்திய தைரியலட்சுமியையும், மணிவன்னன் தற்கொலைக்கு காதல் தான் காரணமென கொச்சைப்படுத்துகிறது...


கிராமப்புறங்களில் நன்கு படித்து, நகரங்களிலுள்ள கல்லூரிகளுக்கு படிக்கச் செல்லும், மாணவர்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள். இந்த பிரச்சனைகளை களைய அரசு கவனம் செலுத்த வேண்டும். அதுபோலவே ஜோதி, மணிவண்ணன், தைரியபிரியா ஆகிய மரணத்திற்கான காரணங்களை கண்டறிய, விருப்பு வெறுப்பில்லாமல் முழுமையான விசாரணை மேற்கொண்டு மாணவ-மாணவியர் தற்கொலைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...

லேப்டாப்புகளை வழங்குவதிலேயே கவனம் செலுத்தும் தமிழக அரசு, என்ன செய்ய போகிறது பார்ப்போம்............

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்
மாணவர்கள் தற்கொலையைப் தடுப்போம்
தன்னம்பிக்கையுள்ள சமூகம் படைப்போம்
STUDENTS HELP LINE 9698151515


இணைப்புகள்:  

வருடா வருடம் அதிகரிக்கும் மாணவ தற்கொலைகள் - வெளிச்சம் மாணவர்கள் ஆய்வறிக்கை : http://velichamstudents.blogspot.in/2011/02/55.html 



வெளிச்சத்தோடு இணைய: http://goo.gl/DNFqx 







உறவுகளே!
வணக்கம், வெளிச்சம் பற்றிய கட்டுரை ஒன்று தற்போதைய புதியதலைமுறை இதழில் வெளியாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொண்டு கட்டுரை இணைப்பை தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்..
நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்


மற்றவருக்கு ஏதேனும் வகையில் உதவ/வழிகாட்ட நினைப்பவரா... சமூக

 மாற்றத்தில் அக்கறையுள்ளவரா..... நாமெல்லாம் ஒன்றாக இணையலாமா? 

...   ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக கரம் கோர்ப்போம் 

Members Application  …



Dear  Sir/Madam,
                  Greeting from Velicham.. We would like to let you
know that Velicham Actives and Students’ Help Line 9698151515 for
prevention of student suicide. The details were published in Current The Puthiya
Thalai Murai Magazine.

Thank you for your Continue Support
With Regards
Velicham students

பல லட்சம் மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற ஒரு போராட்டம் நடத்தி அந்த போராட்டம் வெற்றி பெற்றால் எவ்வளவு சந்தோசமிருக்குமோ அவ்வளவு சந்தோசத்தில் சிக்கித்தவிக்கிறது வெளிச்சம்உறவுகளே! எங்களின் சந்தோசங்களை உங்களுக்கும் சமர்ப்பிக்கிறோம்.



 வெளிச்சம்  அமைப்பின் 7 ஆண்டுகால ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கான களப்பணியில் வெளிச்சம் மாணவர்களின்  ஏராளமான  அவமானங்களை சந்தித்திருக்கிறது ஆனால் இந்த பணியை விட்டுவிடவில்லை..

 மூன்று வருடங்களுக்கு முன் வெளிச்சம்  மானவர்கள் உண்டியல்  ஏந்தியபோது அப்போதைய  திமுக அரசுக்கு வைத்த கோரிக்கையை பரிசீலனை செய்து முதல்தலைமுறை மாணவர்களின் கல்விகட்டணத்தை அரசே ஏற்றது.. அதோடு நமது வேலை முடிந்துவிட்டது என்று நாம் முடங்கிவிடாமல் இனியும் பணம் எந்த மாணவர்களின் கல்வியையும்  பாதிக்ககூடாது  என  கழுகு பார்வையோடு கண்காணித்த வெளிச்சம் ஏழைகளின் உயர்கல்விக்காக தொடர்ந்து போராடி வருகிறதுஇந்த தொடர்பயணத்தில்  1000 க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற  பல மாணவர்கள்  பணமில்லாமல் தவித்ததை வெளிச்சம் ஆய்வு செய்து கீழ்கண்ட விசயங்களை முன் வைத்து 21.07.11 அன்று சென்னை பத்திர்க்கையாளர்கள் மன்றத்தில்  1000 த்திற்கும் மேல் மதிப்பெண் பெற்று கல்லூரிக்கட்டணம் செலுத்த முடியாமல் இருந்த  25  மாணவர்களை   கொண்டு வெளிச்சம்  பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தியது வெளிச்சம்.. மேலும் இதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வர்  மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்கள்  கவனத்திற்கு எமது கோரிக்கையை கொண்டு சென்றோம். எமது கோரிக்கையை உயர்கல்வித்துறை அமைச்சர் திரு பழனியப்பன் அவர்களிடம் நேரடியாக எடுத்துரைத்தோம். எமது கோரிக்கையின் நியாயத்தை புரிந்துகொண்ட அமைச்சர் பரிரீலனை செய்வதாக  உறுதி அளித்தார்…( முதல்வருக்கும், உயர்கல்வி அமைச்சருக்கு வெளிச்சம் அனுப்பிய மனுவின் நகல்கள்… )

அமைச்சரின் சந்திப்பிற்கு  அவரின்  மேல்நடவடிக்கைகளுக்காக காத்திருந்தோம்ஒரு நல்ல விசயங்களுக்காக காத்திருந்தால் எல்லாம் நல்லதே நடக்கும் என்பது போல் நமக்கு நல்ல செய்து  உயர்கல்வித்துறையிலிருந்து கிடைத்தது அது என்ன வெனில் ஆகஸ்ட் 9 தேதியான நேற்று தமிழகத்தின் பல்கலைகழக துணை வேந்தர்கள்,கல்லூரி முதல்வர்கள்,வங்கி மேலாளர்கள், உட்பட்ட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டதாகவும் தமிழகத்தின் ஏழை மாணவர்களின் கல்விக்காக உத்தரவு பிறப்பிக்கப்படும் என வெளிச்சத்திற்கு தகவல் கிடைத்ததுஅதன் பின் நமக்கு கிடைத்த தகவல்கள் என்ன வெனில் வெளிச்சத்தின் அனைத்து  கோரிக்கைகளின் அம்சங்களும் அப்படியே விவாதிக்கப்பட்டதாகவும் அவை அனைத்தும் அமல்படுத்தப்படபோவதாகவும் தகவல் சொன்னார்கள்  இப்போ சொல்லுங்க உங்களுக்கும் சந்தோசம் தானேநமக்கு கிடைத்த செய்தியை உறுதி செய்தது  இன்றைய தினமல்ர் (9.8.11) செய்தி.. (அரசின் உத்தரவாக  தினமலர் செய்தி) தமிழகத்தின் பல்லாயிரங்கணக்கான ஏழை மாணவர்களின் வாழ்க்கையை காப்பாற்ற வெளிச்சம் முன்வைத்த வெளிச்சம் அமைப்பின்  கோரிக்கை ஏற்ற அமைச்சருக்கும், தமிழக முதல்வருக்கும் ஒட்டுமொத்த மாணவர்களின்  உறவுகளாக வெளிச்சம் நன்றியை முன் வைத்து இந்த அறிவிப்பை அரசு உத்தரவாக்கிட வேண்டுமென இன்னொரு கோரிக்கையை முன் வைக்கிறது வெளிச்சம்இது போன்ற நியாயமான கோரிக்கைகள் வெல்ல துணை நின்ற பத்திரிக்கையாளர்களின் போனாக்களின்  எழுத்துக்களை வெளிச்சம் வணங்குவதோடு…..  எம் நியாயமான கோரிக்கைகளுக்கு துணை நிற்கும் உறவுகளே உமக்கும்                நன்றி நன்றி நன்றி……


நன்றியுடன்
ஏழைகளின் கல்விக்கன களப்பணியில்
வெளிச்சம் மாணவர்கள்



                    
நமது கோரிக்கை மனு:
                                                            Demand  Petition..........................................Link 
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்  படங்கள்
                                                              Press Meet Photos ......................................Link
பத்திரிக்கை செய்திகள்
                                                        Press Meet Press Clippings ..............................Link




வெளிச்சம் மாணவர்கள் உதவி செய்யும் மாணவர்களின் பட்டியல் இதோ..உங்கள் முன் பதுவு செய்கிறோம்..

முடிந்தால் உதவி செயுங்கள்
தொடர்புகொள்ளுங்கள்: 9698151515



 முதல் தலைமுறை மாணவர்கள் கட்டணம் 
  செலுத்த முடியாமல் தவிப்பு

சென்னை : முதல்தலைமுறை மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட குறுகிய நாட்களில் பி.இ சேர்க்கை கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். அரசு வழங்கும் 
ணி 20,000 உதவித் தொகையை அரசு உத்தரவாதமாக கருதிகட்டணம் வசூலிக்காமல் கல்லூரிகளில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வெளிச்சம் அமைப்பின் தலைவர் டி.செரின் கூறியதாவது: தமிழக அரசு தொழிற்கல்வி பயிலும் முதல் தலைமுறை ஏழை மாணவர் களுக்கு கல்வி உதவித்தொகையாக ணி 20,000 தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த தொகையானது கல்லூரிகளில் சேர்ந்த பின்னரேபல மாதங்கள் கழித்துதான் வழங்கப்படுகிறது.
இதனால் முதல் தலைமுறை மாணவர்கள் கல்லூரிகளில் சேர்க்கை கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

அதாவதுகவுன்சலிங் மூலம் கல்லூரிகளில் அட்மிஷன் கிடைத்தவுடனே முன்பணமாக ணி 5000 மற்றும் அடுத்த 10 அல்லது 20 நாட்களில் அந்த ஆண்டுக்கான முழு கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கின்றனர். அப்படி குறிப்பிட்ட நாளில் கட்டணம் செலுத்தாவிட்டால் அவர்கள் கல்லூரிகளில் பயில அனுமதிப்பதில்லை.
இதேபோல் தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பிளஸ் 2 தேர்வில் 1000க்கும் மேல் மார்க் எடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நொந்துபோன மாணவர்கள் 8க்கும் மேற்பட்டோர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

எனவே தொழில் கல்லூரிகளில் கவுன்சலிங் மூலம் அட்மிஷன் பெறும் முதல் தலைமுறை ஏழை மாணவர்களுக்கு அரசு வழங்கும் ணி 20,000 உதவித் தொகையை அரசின் உத்திரவாதமாக கருதிமாணவர்களிடம் கட்டணம் வசூலிக்காமல் கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் கல்வி கடன் பெறுவதற்கு ஏதுவாக போனபைடு (நம்பக) சான்றிதழ் உடனே வழங்க அரசு உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆர்.ராஜா (தலைவாசல்) கூறுகையில், ÔÔஎன் பெற்றோர் கூலி வேலை செய்யும் தொழிலாளிகள். எனது தாயாருக்கு இருதய கோளாறு உள்ளது. தற்போது தந்தை மட்டுமே கூலி வேலை செய்து வருகிறார். டாக்டர் ஒருவரின் உதவி மூலமே நான் பிளஸ் 2 வரை படித்து முடித்தேன். தற்போது திடீரென 10 நாட்களில் ணி 20 ஆயிரம் கல்வி கட்டணமும்விடுதி கட்டணம் ணி 30,000 கேட்டால் நான் எங்கு செல்வது. கடனை சுமந்துகல்லூரி படிக்க நினைத்தாலும் அதற்கு வங்கிகள் உடனே கல்வி கடனை தர மறுக்கின்றன. இதற்கு அரசு தான் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால்எங்களை போன்ற மாணவர்களின் வாழ்க்கை கேள்வி குறிதான்ÕÕ என்றார்.

பி.ராஜாகோபால் (தலைவாசல்) கூறுகையில், ÔÔகவுன்சலிங் வரும்போதுணி 5000 முன்பணமாக கொண்டு வர வேண்டுமென தெரிவித்துள்ளனர். அவ்வளவு தொகைக்கு நான் எங்கு போவது. இதுவரையில் என் தாய் கூலி வேலை செய்து காப்பாற்றி வருகிறார். அவரும் தற்போது உடல்நலக்குறைவால் வீட்டிலேயே உள்ளார். நல்லா படித்து 1025 மார்க் எடுத்தும் மேல் படிப்பு படிக்க முடியவில்லையே என்ற மனவேதனையுடன் இருக்கிறேன். நான் கவுன்சலிங் கலந்து கொள்ள வெளிச்சம் அமைப்பு தான் செலவு செய்ததுÕÕ என்றார்.

 நன்றி: தினகரன்


ஏழை மாணவர்கள் கல்லூரி படிப்பை வங்கிக்கடனை நம்பி தொடர்ந்த ,மாணவர்களின் கல்விக்காக உண்டியல் ஏந்திய வெளிச்சம் அம்பலபடுத்திய கல்விக்கடன் பற்றிய மோசடி அவள் விகடனில் வெளியானது ... உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்...






  


           முதல் தலைமுறை ஏழை மாணவர்களுக்கான கல்வி திட்டம் வருவதற்க்கு காரணமான வெளிச்சம் மாணவர்கள்.. அதன் அரசாணையை சமர்ப்பிக்கிறோம்...