Archive for July 2011




பி.இ. இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த இயலாமல் திண்டாடும் மாணவர்கள்


வெளிச்சம் அமைப்பின் தலைவர் டி.ஷெரின் (இடமிருந்து 3-வது). உடன் (இடமிருந்து) மாணவிகள் அனுசுயா, விஜயலட்சுமி, மாணவர்கள் ராஜகோபால், ராஜா.


சென்னை, ஜூலை 21: பொறியியல் படிப்புகளில் சேர இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த இயலாமல் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திண்டாடி வருகின்றனர்.
 கலந்தாய்வு மூலம் அரசு ஒதுக்கீட்டிலான பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு கட்டணமாக ரூ.32,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய அங்கீகாரம் பெற்ற படிப்புகளுக்கு முதலாம் ஆண்டு கட்டணம் ரூ.40,000.
 இதில் முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. கல்விக் கட்டணத்தைக் (டியூஷன் ஃபீஸ்) கழித்துவிட்டு, மீதித் தொகையை இவர்கள் செலுத்தவேண்டும். அதுவும் கலந்தாய்வில் கல்லூரியில் சேருவதற்கான அனுமதிக் கடிதம் பெற்ற 10 முதல் 20 நாள்களுக்குள் செலுத்த வேண்டும்.
 அரசு பொறியியல் கல்லூரியில் கல்விக் கட்டணம், சேர்க்கைக் கட்டணம், பாடத் திட்ட புத்தகம் உள்ளிட்ட பல்வேறு கட்டணமாக ரூ.10,820 வசூலிக்கப்படுகிறது. தங்கும் விடுதி சேர்க்கைக் கட்டணம், மின் கட்டணம், குடிநீர், உணவுவிடுதி கட்டணம், பராமரிப்புக் கட்டணம் என கூடுதலாக ரூ.8,450 வசூலிக்கப்படுகிறது. இதுதவிர தங்கும் விடுதி மாதக் கட்டணம் என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 செலுத்த வேண்டும்.
 இதன்படி, அரசு பொறியியல் கல்லூரியில் பி.இ. சேருகிற மாணவர் ரூ.20,770 கட்டணம் செலுத்த வேண்டும். முதல் தலைமுறை மாணவராக இருந்தால் கல்விக் கட்டணமான ரூ.2 ஆயிரத்தைக் கழித்துவிட்டு, மீதமுள்ள ரூ.18,770-ஐ செலுத்த வேண்டும்.
 இந்தக் கட்டணம் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கும் மாறுபடுகிறது.
 சுயநிதிக் கல்லூரிகளில்...: இது ஒருபுறமிருக்க சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான இடத்தில் சேரும் மாணவர்கள், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைப்போல் பல மடங்கு கட்டணத்தை செலுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
 சென்னையில் உள்ள தனியார் கல்லூரி கல்விக் கட்டணம், விளையாட்டுக் கட்டணம், நூலகம், இணைய தள வசதி, தங்கும் விடுதி, விடுதி வாடகை என அரசு ஒதுக்கீட்டிலான இடத்தில் சேரும் மாணவர்களுக்கான கட்டணம் ரூ.1,48,000 என நிர்ணயித்துள்ளது.
 இதில் முதல் தலைமுறை மாணவராக இருந்தால் கல்விக் கட்டணமான ரூ.20 ஆயிரத்தைக் கழித்துவிட்டு ரூ.1,28,000 செலுத்த வேண்டும்.
 இந்த முதலாம் ஆண்டு கட்டணத்தை கலந்தாய்வு மூலம் கல்லூரியில் சேருவதற்கான அனுமதிக் கடிதம் பெற்ற 10 முதல் 20 நாள்களுக்கு கட்ட வேண்டும் என்பது நிபந்தனை. இந்த குறுகிய நாள்களுக்குள் இவ்வளவு தொகையை செலுத்த முடியாமல் ஏழை மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
 கட்டணத்தை செலுத்திய பிறகுதான் கல்லூரி அத்தாட்சி சான்றிதழ் (போனஃபைடு) கிடைக்கும் என்பதால், கல்விக் கடனுக்கும் விண்ணப்பிக்க இயலாத நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
 2011-12 கல்வியாண்டில் 100-க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் இதுபோன்ற பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு உதவுவதற்கான முயற்சியை "வெளிச்சம்' என்ற அமைப்பு மேற்கொண்டு வருகிறது. பல மாணவர்களுக்கு கலந்தாய்வின்போது செலுத்த வேண்டிய முன் தொகையை இந்த அமைப்பு அளித்துள்ளது.
 முதல் தலைமுறை மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்விக் கட்டணமான ரூ.20 ஆயிரத்தையே உத்தரவாதமாக எடுத்துக்கொண்டு, கல்விக் கடனை மாணவர்கள் உடனடியாகப் பெறும் வகையில் அத்தாட்சி சான்றிதழை உடனடியாக சுயநிதிக் கல்லூரிகள் வழங்க அரசு வழி செய்யவேண்டும் என்பதே இந்த அமைப்பின் முக்கிய கோரிக்கை.

 இதுகுறித்து சேலம் மாவட்டம் தலைவாசலைச் சேர்ந்த மாணவர் ராஜகோபால் கூறியதாவது:
 முதல் தலைமுறை பட்டதாரி மாணவரான நான் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 1,075 மதிப்பெண் பெற்றேன். பி.இ. கலந்தாய்வில் பண்ருட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. கல்லூரியில் வரும் 29-ம் தேதிக்குள் முதலாம் ஆண்டு கட்டணத்தை கட்டச் சொல்கின்றனர்.
 அத்தாட்சி சான்றிதழ் இல்லாததால் கல்விக் கடனுக்கும் விண்ணப்பிக்க முடியவில்லை. அவ்வாறு விண்ணப்பித்தாலும் பல மாதங்களுக்குப் பிறகுதான் வங்கிக் கடன் கிடைக்கும்.
 உரிய கால அவகாசத்துக்குள் கட்டணத்தை செலுத்தவில்லையென்றால், எனக்கு கிடைத்த இடம் வேறு நபருக்கு கொடுக்கப்பட்டு விடும். இதனால் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றார்.
 இவரைப்போல் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1,160 மதிப்பெண் பெற்ற வீ.விஜயலட்சுமி (திருச்சி), 1,151 மதிப்பெண் பெற்ற நாகமாணிக்கம் (திருப்பூர்), 1135 மதிப்பெண் பெற்ற எல்.சி.பரணிகுமார், நரேந்திரன் (ஈரோடு), அர்ஜுன் (கோவை), நந்தினி (சேலம்) கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். இவற்றை வெளிச்சம் அமைப்பின் தலைவர் டி.ஷெரின் விவரித்தார்.

  நன்றி: தினமணி


 முதல் தலைமுறை மாணவர்கள் கட்டணம் 
  செலுத்த முடியாமல் தவிப்பு

சென்னை : முதல்தலைமுறை மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட குறுகிய நாட்களில் பி.இ சேர்க்கை கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். அரசு வழங்கும் 
ணி 20,000 உதவித் தொகையை அரசு உத்தரவாதமாக கருதிகட்டணம் வசூலிக்காமல் கல்லூரிகளில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வெளிச்சம் அமைப்பின் தலைவர் டி.செரின் கூறியதாவது: தமிழக அரசு தொழிற்கல்வி பயிலும் முதல் தலைமுறை ஏழை மாணவர் களுக்கு கல்வி உதவித்தொகையாக ணி 20,000 தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த தொகையானது கல்லூரிகளில் சேர்ந்த பின்னரேபல மாதங்கள் கழித்துதான் வழங்கப்படுகிறது.
இதனால் முதல் தலைமுறை மாணவர்கள் கல்லூரிகளில் சேர்க்கை கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

அதாவதுகவுன்சலிங் மூலம் கல்லூரிகளில் அட்மிஷன் கிடைத்தவுடனே முன்பணமாக ணி 5000 மற்றும் அடுத்த 10 அல்லது 20 நாட்களில் அந்த ஆண்டுக்கான முழு கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கின்றனர். அப்படி குறிப்பிட்ட நாளில் கட்டணம் செலுத்தாவிட்டால் அவர்கள் கல்லூரிகளில் பயில அனுமதிப்பதில்லை.
இதேபோல் தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பிளஸ் 2 தேர்வில் 1000க்கும் மேல் மார்க் எடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நொந்துபோன மாணவர்கள் 8க்கும் மேற்பட்டோர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

எனவே தொழில் கல்லூரிகளில் கவுன்சலிங் மூலம் அட்மிஷன் பெறும் முதல் தலைமுறை ஏழை மாணவர்களுக்கு அரசு வழங்கும் ணி 20,000 உதவித் தொகையை அரசின் உத்திரவாதமாக கருதிமாணவர்களிடம் கட்டணம் வசூலிக்காமல் கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் கல்வி கடன் பெறுவதற்கு ஏதுவாக போனபைடு (நம்பக) சான்றிதழ் உடனே வழங்க அரசு உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆர்.ராஜா (தலைவாசல்) கூறுகையில், ÔÔஎன் பெற்றோர் கூலி வேலை செய்யும் தொழிலாளிகள். எனது தாயாருக்கு இருதய கோளாறு உள்ளது. தற்போது தந்தை மட்டுமே கூலி வேலை செய்து வருகிறார். டாக்டர் ஒருவரின் உதவி மூலமே நான் பிளஸ் 2 வரை படித்து முடித்தேன். தற்போது திடீரென 10 நாட்களில் ணி 20 ஆயிரம் கல்வி கட்டணமும்விடுதி கட்டணம் ணி 30,000 கேட்டால் நான் எங்கு செல்வது. கடனை சுமந்துகல்லூரி படிக்க நினைத்தாலும் அதற்கு வங்கிகள் உடனே கல்வி கடனை தர மறுக்கின்றன. இதற்கு அரசு தான் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால்எங்களை போன்ற மாணவர்களின் வாழ்க்கை கேள்வி குறிதான்ÕÕ என்றார்.

பி.ராஜாகோபால் (தலைவாசல்) கூறுகையில், ÔÔகவுன்சலிங் வரும்போதுணி 5000 முன்பணமாக கொண்டு வர வேண்டுமென தெரிவித்துள்ளனர். அவ்வளவு தொகைக்கு நான் எங்கு போவது. இதுவரையில் என் தாய் கூலி வேலை செய்து காப்பாற்றி வருகிறார். அவரும் தற்போது உடல்நலக்குறைவால் வீட்டிலேயே உள்ளார். நல்லா படித்து 1025 மார்க் எடுத்தும் மேல் படிப்பு படிக்க முடியவில்லையே என்ற மனவேதனையுடன் இருக்கிறேன். நான் கவுன்சலிங் கலந்து கொள்ள வெளிச்சம் அமைப்பு தான் செலவு செய்ததுÕÕ என்றார்.

 நன்றி: தினகரன்



மரணதண்டனையை ஒழிக்கவேண்டும் என்பது நாகரீகமடைந்த மனிதர்களின் கோரிக்கையாக உள்ளது  இதில்  ராஜீவ் கொலை வழக்கில் மரணதண்டனை பெற்ற மூவரின் உயிரை காப்பாற்ற தமிழகமே திறண்டது.. அந்த வகையில் வெளிச்சமும் பயணத்தை  இணைத்தது.. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தோழர் செங்கொடியின்  வீர  முழக்கம் மூவரின் தூக்கையும் தடுத்து நிறுத்தியது…

தோழர் செங்கொடியின் இறுதி ஊர்வலத்தில்  வீர உடலை சுமந்த பெண்மணிகளில் எtட்டு பெண்மணிகளில் வெளிச்சம் செரின் அவர்களும் ஒருவராய் இருந்தார் என்பதும்..


புகைப்படங்கள்: 


































உறவே!

வெளிச்சம் மாணவர்களின் வணக்கங்கள்,ஆனந்த விகடன் வார இதழின் இணைப்பு புத்தகமான திருச்சி மண்டல என் விகடனில்அட்டைப்பட கட்டுரையாக வெளிச்சம் காட்டும் கல்வித்தாய் எனும் தலைப்பில் வெளியான கட்டுரையை உங்கள் பார்வைக்கு சமர்பிக்கிறோம்..

நன்றிடன்
வெளிச்சம் மாணவர்கள்




உறவுகளே! இன்று காலை 11.30 மணியளவில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் 1000க்கும் மேல் மதிப்பெண் பெற்றும் கல்லூரிகளில் பொருளாதர சூழலால் சேர முடியாத 25 முதல் தலைமுறை ஏழை மாணவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்கள்.... 


காசு கல்லூரி கனவை தகர்ப்பதை தடுப்போம்.... தடுப்போம்... 


நன்றியுடன் வெளிச்சம் மாணவர்கள் 


Dear Sir/Madam,

VELICHAM - A movement striving for the education of the first generation poor students is addressing a Press Meet in Chennai Press Club on 21.07.2011 (Thursday) on the issue of - "lack of ample financial support for first generation students to pay their engineering and medical college fees within a period of 10-20 days from the date of seat allotment during counseling, and increasing suicidal plight among such students".

We kindly request you to send your reporters to cover this burning issue which is affecting the life of thousands of students all over Tamil Nadu. We believe PEN IS MIGHTIER THAN THE SWORD and this major issue can be taken to the notice of the government and the general public only through the media.

with anticipation and hope,
VELICHAM Sherin



உறவுகளே

 வணக்கம்.. வெளிச்சம் மாணவர்களின் சமூக பணிக்கு  இன்னொரு அங்கிகாரம் கிடைத்துள்ளது. ஆம் கல்விக்கான களப்பணியில் இணைய தளத்தில் நாளைய தலைமுறை காப்பாற்றுவதற்கான பயணத்தில் நமது வலைபூ  பற்றிய தகவல் இந்தவார ஆனந்த விகடன் பத்திரிக்கையில்  விகடன் வரவேற்பறையில் துளி வெளிச்சம் எனும் தலைப்பில்  குறிப்பு வெளியாகியுள்ளது…. இதோ உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்..
தொடர்ந்து இணைந்தே இருப்போம்….
நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்


   நன்றி: ஆனந்தவிகடன்


பொறியியல் படிக்க கொள்ளை ஆசையுடன் விண்ணப்பித்தபோதும், படிப்பிற்கான கட்டணம் செலுத்த முடியாத அளவுக்கு வறுமை வாட்டுவதால், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்களின் பொறியியல் படிப்பு, எட்டாக்கனியாக மாறியுள்ளது. எஸ்.சி., பிரிவில், 18 ஆயிரம் பேர், எஸ்.டி., பிரிவில், 481 பேர் விண்ணப்பித்த போதும், கவுன்சிலிங், 50 சதவீதம் நிறைவடையும் நிலையில், இதுவரை, எஸ்.சி., பிரிவில், 271 மாணவர்களும், எஸ்.டி., பிரிவில், வெறும் இரண்டு மாணவர்களும், எஸ்.சி., அருந்ததியர் பிரிவில், 22 மாணவர்களும் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். பொறியியல் படிப்பில் சேர, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த மாணவர்களே அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். கவுன்சிலிங்கில், இதுவரை இந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களே அதிகளவில் சேர்ந்து வருகின்றனர். மற்ற பிரிவைச் சேர்ந்த மாணவர்களைப்போல், சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக அடி மட்டத்தில் உள்ள எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கும், உயர்கல்வி படிக்க வேண்டும் என்று அதிக ஆர்வம் இருக்கிறது. பொறியியல் படிப்பதற்கு அதிகளவில் இந்த பிரிவு மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதன் மூலம், அதை உணர முடிகிறது. இந்த ஆண்டு எஸ்.சி., அருந்ததியர் பிரிவில், 2,106 மாணவர்கள், எஸ்.சி., பிரிவில், 17 ஆயிரத்து, 928 மாணவர்களும், எஸ்.டி., பிரிவில், 481 மாணவர்களும் விண்ணப்பித்தனர். கடந்த மாதம் 30ம் தேதி முதல், அண்ணா பல்கலையில் நடந்து வரும் கவுன்சிலிங்கில், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் எஸ்.சி., அருந்ததியர் ஆகிய மூன்று பிரிவைச் சேர்ந்த மாணவர்களைத் தவிர, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த மாணவர்களும், கவுன்சிலிங்கில் பங்கேற்று, "சீட்' பெற்று வருகின்றனர்.

50
சதவீத கவுன்சிலிங் விரைவில் முடிய உள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதியுடன் கவுன்சிலிங் முடிந்துவிடும் என, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. இதுவரை நடந்த கவுன்சிலிங்கில், 12ம் தேதி வரை, 11 ஆயிரத்து 10 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதில், ஓ.சி.,- 5,397 பி.சி., முஸ்லிம்- 277, பி.சி.,- 3,354, எம்.பி.சி.,-1,657, எஸ்.சி., அருந்ததியர்-22, எஸ்.சி.,- 271, எஸ்.டி.,-2, முற்பட்ட வகுப்பினர்-30 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மற்ற பிரிவினரை விட, எஸ்.சி.,-எஸ்.சி., அருந்ததியர் மற்றும் எஸ்.டி., பிரிவு மாணவர்கள் மிகக் குறைந்த அளவில் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். விண்ணப்பித்த மாணவர்களில், இதுவரை, 2 சதவீத மாணவர்கள் கூட சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொறியியல் படிக்க, இந்த பிரிவு மாணவர்கள் ஆர்வமாக உள்ளபோதும், வறுமை மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது. அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்தால் கூட, அரசு நிர்ணயித்துள்ள குறைந்த கட்டணத்தைக் கூட கட்ட முடியாத நிலையில், இந்த பிரிவு மாணவர்கள் உள்ளனர். இதனால், இந்த பிரிவு மாணவர்களின் பொறியியல் கனவு, கானல் நீராகவே உள்ளது.

முதல்வர் மனது வைத்தால்... :


 கடந்த, 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை, 6 கோடியே, 24 லட்சத்து, 5,679ஆக உள்ளது. இதில், எஸ்.சி., சமுதாயத்தின் மக்கள் தொகை, 19 சதவீதமாகவும் (1,18,57,079), எஸ்.டி., சமுதாய மக்கள் தொகை, 1.04 சதவீதமாகவும் (8,73,679) உள்ளது.

இந்த சமுதாய மக்கள், சமூக, பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு, தமிழக அரசு காலம், காலமாக பல்வேறு சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. எனினும், இந்த சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள், கல்வியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டாதவர்களாகவே உள்ளனர். பள்ளிக் கல்வியை முடித்து, உயர்கல்வி படிக்கட்டில் காலடி எடுத்து வைக்கும் சொற்ப மாணவர்களும், வறுமையின் காரணமாக கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கின்றனர். எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் எஸ்.சி., அருந்ததியர் பிரிவு மாணவர்களின் பொறியியல் கனவு நனவாவதற்கு, முதல்வர் ஜெயலலிதா மனது வைத்தால் நடக்கும் என்று, இந்த சமுதாய மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். 

 நன்றி: தினமலர்

Summary: it's only  a dream for sc students to pursue higher education


பொறியியல் படிக்க கொள்ளை ஆசையுடன் விண்ணப்பித்தபோதும், படிப்பிற்கான கட்டணம் செலுத்த முடியாத அளவுக்கு வறுமை வாட்டுவதால், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர்களின் பொறியியல் படிப்பு, எட்டாக்கனியாக மாறியுள்ளது.

எஸ்.சி., பிரிவில், 18 ஆயிரம் பேர், எஸ்.டி., பிரிவில், 481 பேர் விண்ணப்பித்த போதும், கவுன்சிலிங், 50 சதவீதம் நிறைவடையும் நிலையில், இதுவரை, எஸ்.சி., பிரிவில், 271 மாணவர்களும், எஸ்.டி., பிரிவில், வெறும் இரண்டு மாணவர்களும், எஸ்.சி., அருந்ததியர் பிரிவில், 22 மாணவர்களும் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

பொறியியல் படிப்பில் சேர, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த மாணவர்களே அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். கவுன்சிலிங்கில், இதுவரை இந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களே அதிகளவில் சேர்ந்து வருகின்றனர். மற்ற பிரிவைச் சேர்ந்த மாணவர்களைப்போல், சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக அடி மட்டத்தில் உள்ள எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கும், உயர்கல்வி படிக்க வேண்டும் என்று அதிக ஆர்வம் இருக்கிறது.

பொறியியல் படிப்பதற்கு அதிகளவில் இந்த பிரிவு மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதன் மூலம், அதை உணர முடிகிறது. இந்த ஆண்டு எஸ்.சி., அருந்ததியர் பிரிவில், 2,106 மாணவர்கள், எஸ்.சி., பிரிவில், 17 ஆயிரத்து, 928 மாணவர்களும், எஸ்.டி., பிரிவில், 481 மாணவர்களும் விண்ணப்பித்தனர். கடந்த மாதம் 30ம் தேதி முதல், அண்ணா பல்கலையில் நடந்து வரும் கவுன்சிலிங்கில், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் எஸ்.சி., அருந்ததியர் ஆகிய மூன்று பிரிவைச் சேர்ந்த மாணவர்களைத் தவிர, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த மாணவர்களும், கவுன்சிலிங்கில் பங்கேற்று, "சீட்' பெற்று வருகின்றனர்.

50 சதவீத கவுன்சிலிங் விரைவில் முடிய உள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதியுடன் கவுன்சிலிங் முடிந்துவிடும் என, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. இதுவரை நடந்த கவுன்சிலிங்கில், 12ம் தேதி வரை, 11 ஆயிரத்து 10 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதில், ஓ.சி.,- 5,397 பி.சி., முஸ்லிம்- 277, பி.சி.,- 3,354, எம்.பி.சி.,-1,657, எஸ்.சி., அருந்ததியர்-22, எஸ்.சி.,- 271, எஸ்.டி.,-2, முற்பட்ட வகுப்பினர்-30 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மற்ற பிரிவினரை விட, எஸ்.சி.,-எஸ்.சி., அருந்ததியர் மற்றும் எஸ்.டி., பிரிவு மாணவர்கள் மிகக் குறைந்த அளவில் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். விண்ணப்பித்த மாணவர்களில், இதுவரை, 2 சதவீத மாணவர்கள் கூட சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொறியியல் படிக்க, இந்த பிரிவு மாணவர்கள் ஆர்வமாக உள்ளபோதும், வறுமை மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளது. அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்தால் கூட, அரசு நிர்ணயித்துள்ள குறைந்த கட்டணத்தைக் கூட கட்ட முடியாத நிலையில், இந்த பிரிவு மாணவர்கள் உள்ளனர். இதனால், இந்த பிரிவு மாணவர்களின் பொறியியல் கனவு, கானல் நீராகவே உள்ளது.

முதல்வர் மனது வைத்தால்... : கடந்த, 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை, 6 கோடியே, 24 லட்சத்து, 5,679ஆக உள்ளது. இதில், எஸ்.சி., சமுதாயத்தின் மக்கள் தொகை, 19 சதவீதமாகவும் (1,18,57,079), எஸ்.டி., சமுதாய மக்கள் தொகை, 1.04 சதவீதமாகவும் (8,73,679) உள்ளது.

இந்த சமுதாய மக்கள், சமூக, பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு, தமிழக அரசு காலம், காலமாக பல்வேறு சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. எனினும், இந்த சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள், கல்வியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டாதவர்களாகவே உள்ளனர். பள்ளிக் கல்வியை முடித்து, உயர்கல்வி படிக்கட்டில் காலடி எடுத்து வைக்கும் சொற்ப மாணவர்களும், வறுமையின் காரணமாக கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கின்றனர். எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் எஸ்.சி., அருந்ததியர் பிரிவு மாணவர்களின் பொறியியல் கனவு நனவாவதற்கு, முதல்வர் ஜெயலலிதா மனது வைத்தால் நடக்கும் என்று, இந்த சமுதாய மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். 

நன்றி தினமலர்: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=274907