Showing posts with label காஞ்சனா. Show all posts


காஞ்சனா  என்றால் பேய்  என்று தமிழகத்தின் பல்வேறு மூளைமுடுக்கெல்லாம் பேசிக்கொண்டிருக்கிற  பரபரப்பபான சூழலில்  காஞ்சனா திரைப்படத்தை பார்த்து ஒன்பதாம் வகுப்பு மாணவன் தீக்குளித்து ஈரோடு  அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருக்கிறான் என்ற தகவல் நமக்கு கிடைக்க  அதிர்ந்து போனோம்..


ஈரோடு நகரத்திற்குட்பட்ட  ராஜாஜிபுரம், மாகாளியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் தண்டபாணியின் மகன் இளவரசன்   அரசுப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான்.

இரண்டு நாளைக்கு முன்   இளவரசன் அவனது  நண்பர்களுடன்  ராகவா லாரன்ஸ் நடித்து சின்னத்திரை தமிழகத்தின்  20 வருடங்களுக்கு பின் பெண்கள் கூட்டம் என அலம்பரை செய்யும்  காஞ்சனா  திரைப்படத்தை  பார்த்துவிட்டு வந்தனர்

படம்பார்த்த  அன்று முதல் இளவரசன்  பேய் பயத்தில் தூக்கதை தொலைத்துள்ளான்   இரவில் தூங்கும் போது எழுந்து பல தடவை பயத்தில் சத்தம் போட்டு இருக்கிறான்.  எதை எதையோ சொல்லி இளவரசனை  அமைதிப்படுத்திய பெற்றோர்கள் தொடர்ந்து அவனது பயத்தை போக்குவதற்கான நடவடிக்கையாக கோவிலுக்கு சென்று திருநீர் கொண்டுவந்து இளவரசனுக்கு பூசியுள்ளனர். (காஞ்சனா திரைப்படத்தில்  சொல்லுவது போல)  ஆனாலும் இளவரசனுக்கு பிடித்த பயப்பேய்  விடவே இல்லை.. இதில்தான் இறுதியாக  கடந்த 4ம் தேதி நடந்த நிகழ்வு இளவரசனுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும்  அதிர்ச்சியை கொடுத்துள்ளது..

இரவில் தூங்கிக்கொண்டிருந்த இளவரசன்  எழுந்து வீட்டின் சமையலறையில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தன்னுடைய உடலில் ஊற்றி தீ வைத்துக்கொள்ள  தீக்காயத்துடன்  இளவரசனை தூக்கிக்கொண்டு  ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவர்கள் கொடுத்த சிகிச்சை பலனளிக்காமல்  நேற்று (06.09.2011) காலை  பரிதாபமாக உயிரிழந்தான் இளவரசன் .

இளவரசனின் தற்கொலை குறித்து இளவரசனின் அப்பா தண்டபாணியிடம் பேசியபோது  படத்தை தியேட்டரில் பார்த்த  பசங்க  அதன்பின் சி.டி.யை வாங்கிக்கிட்டு  வந்து வீட்டில டிவியில  பலதடவை பார்த்தான். அதன் பிறகு  கண்முன்னாடி ஒரு உருவம்  வந்து நிற்ப்பதா உலறினான், ஸ்கூலுக்கு போனப்பகூட யார்க்கிட்டயும் பேசாம  பைத்தியம் பிடிச்சது போல இருந்திருக்கான் டீச்சர்ங்க  அப்பாவையோ, அம்மாவையோ  நாளைக்கு கூட்டிக்கிட்டு வான்னு சொல்லியானுப்பிருக்காங்க..

ஆனால்  என் புள்ளையோ என்னை கொன்னுடுங்க எனக்கு பயமா இருக்கு பயமா இருக்குன்னு சொன்னான்  ஆனால் நாங்க அவனுக்கு தைரியம் சொல்லிக்கிட்டு இருந்தோம், சம்பவத்தன்று நானும் என் மனைவியும் வெளியில் படுத்திருந்தோம், நடுராத்திரி  அலரல் சத்தம் கேட்டுது பதறி அடிச்சி  எழுந்து பார்த்தால் உள்ள படுத்திருந்த இளவரசன்  எழுந்து மண்ணெண்ணையை ஊற்றி நெருப்பு வைத்துகொண்டு வாசலுக்கு வந்து விட்டான். அதன்பிறகு  சாக்கை போட்டு மூடி  தீயை அனைத்தோம் என்று சொன்னார்.

ஆனால்  தொலைக்காட்சிகளில் இன்னமும்
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த முனி பாகம் இரண்டு கலக்கலாகத்தான் இருக்கிறது. அவரது நடிப்பும், ஆக்ரோஷமும், திருநங்கையாக மாறியபின் அவர் காட்டும் நளினமும் பளிச். நடனத்தில் மனிதரைக் கேட்கவே வேண்டாம் பின்னி எடுத்துவிடுகிறார்.

சில காட்சிகளே வந்தாலும் நம்ம சரத்குமாரா இது என்று வாய் பிளக்க வைக்கிறார். இமேஜிற்குள் சிக்காமல் திருநங்கை வேடத்தை துணிச்சலாக ஏற்றது மட்டுமின்றி, தத்ரூபமாக நடித்தமைக்கு அவருக்கு தாராளமாக கைதட்டல் போடலாம். என சொல்லிக்கொண்டே இருக்கிறார்களே.....

நமக்கென்ன கேள்வி எனில்  காஞ்சனா திரைப்படத்திற்கு  தணிக்கைகுழு  என்ன சான்றிதழ் கொடுத்து  வெளியிட அனுமதித்தது ஏன்  எல்லா திரைப்படங்களில் போடப்படமும் U/A  என குறியீடு போடாதது ஏன்?
 U  சான்றிதழ் கொடுக்கப்படும் திரைப்படத்தில் இவ்வளவு வண்மம் தேவைதான் அதை பார்க்கும்  லட்சோப லட்சப குழந்தைகளின் எதிர்காலம்  என்ன செய்யும்…

A  சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தால்  குழந்தைகளை பார்க்க அனுமதிக்கப்பட்டது  எப்படி..  

இளவரசனை போன்ற  குழந்தைகளின்  பாதிப்பிற்கு  யார் பதில் சொல்லுவது  ?
ஆம் சினிமா  = சமூக சீர்குழைவு ..

-வெளிச்சம் ஆனந்தி         


சமூக அவலங்களுக்காக  எதிராக துடிப்பவரா நீங்கள் ?    ----------------------------------------