வழிகாட்ட யாருமில்லை- பள்ளி மாணவர்கள் புலம்பல்...

Posted by Unknown - -


                 
        
                   மாணவர்களின் கவனம் படிப்பிலிருந்து சிதறினால் வருங்காலம் எல்லோருக்கு பாழாய் போகுமென உணர்ந்த வெளிச்சம் மாணவர்கள் கடந்த 7 வருடமாக பல்வேறு கல்லூரிகள்  மற்றும் பள்ளிகளில்  மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு பலவிதமான பயிற்சிகளை வழங்கி வருவதை தாங்கள் அறிவீர்கள். குறிப்பாக மற்றவர்களுக்கு வழிக்காட்டும் நபர்களை உருவாக்குவதுதான்  வெளிச்சத்தின் நோக்கம், இந்த பணியில் நேற்று திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பக்கம் உள்ள திருவத்திபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில்  மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பினை எடுக்க SJSRY  திட்டத்தின் கீழ் இசைவளித்தோம்

வழக்கமாக  நடைபெறும் அர்ச்சனையோடு நிகழ்ச்சியை தொடங்கினார்கள் சிறப்பு விருந்தினர்கள், முதல்கட்டமாக வெளிச்சம் தீபா அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு என்கிற பாடலை பாடி நமக்காக எல்லா பாரங்களையும் சுமக்கும் தாயின் வலிகளை பதிவு செய்தார். அதனை தொடர்ந்து வெளிச்சம் மாணவர்களின்  நாடகத்தினை பார்த்து குதூகலித்தார்கள். நாடகம் மிகச்சிறப்பாக முடிவுற்ற நிலையில் மெல்ல வெளிச்சம் செரின் அவர்கள் என்னப்பா நாடகம் நல்லா இருந்திச்சா? என்றார் மாணவர்களை நோக்கி நல்லா இருந்துதுக்கா.. என்ற ஒரு மாணவர்  அவர்களுக்குள்ளாக பேசிக்கிட்டு இருந்த சந்தேகத்தினை கேட்டார்கள் அக்கா நீங்க ஆணா பொண்ணா! என்றான் அப்படியே அதிலிருந்து மெல்ல ஆரம்பமானது பேச்சு, நீயென்ன நினைக்கிறணு அவனிடம் மறுகேள்வி வைக்க பெண்ணு தானக்கா என்றான்   பலமாக சிறித்த செரின் அவர்கள், மெல்ல காமெடியாக  பொண்ணுனா எப்படி இருக்கணும் என்றார் மாணவர்களை நோக்கி, "அடக்க ஒடுக்கமா, சேலைக்கட்டிக்கிட்டு சொல்லுறதை அப்படியே கேக்கணும் என்றார்கள். இன்னும் ஒரு படி மேல போய் பொம்பலைன்னா அழகா இருக்காணும் என்றான் ஆர்வமாக, அப்படின்னா அழகா இல்லையின்னா  அவங்க பொம்பலை இல்லையாடா என கேட்டார்  செரின். கொஞ்சமாக அழகா இருக்கணும்லக்கா என்றனர் மாணவர்கள் உடனடியாகஆண்கள் எப்படி இருக்கணும் என பெண்கள் பக்கம் கேட்கப்பட எங்கப்பாவை போல எங்கம்மா கிட்ட எப்பவும் சண்டை போடக்கூடாது, சாயாரம் குடிக்க கூடாது. பாசாமா இருக்கணும் என்றார்கள் என்றார்கள் எதிபார்ப்போடு.... இப்படியான கூட்டத்தில் எல்லோருடைய அசையாமல் செரின் அவர்களையே கவனித்தனர், பெற்றவர்கள் தான் நம்மலோட கடவுள் ஏன்னா எல்லா தேவைகளையும் பூர்த்திகிறவர்கள் நம்மலோட பெற்றவர்கள் தானே என்றதும் உணமைதான் அக்கா என்றனர், அவங்க சாப்பாடிறதுல இருந்து  நாம போட்டுக்கிற சட்டை வரைக்கும் அவங்கள் உழைப்புல வந்ததுதான்.. எந்தம்மா அப்பாவது எனக்கு போகதான் எங்க பிள்ளைக்கு தான் சொன்னதுண்டா என செரின் அவர்கள் கேட்க இல்லைக்கா எங்களுக்கு போகதான் அவங்க எடுத்துக்குவாங்க என்றனர் சத்தமாக ஒட்டுமொத்த மாணவர்களும், அப்படிப்பட்ட அம்மா அப்பாவுக்கு நீங்க உண்மையா இருக்கோமா. அவங்க நம்மல படிக்க தானே அனுப்பிறாங்க நாம படிச்சோமா, இல்லை ஆசிரியரை மதிக்கிறோமா.. என கேட்டபடியே காதல் சார்ந்த பிரச்சனைகளையும் தொட்டார் வெளிச்சம் செரின், மொத்ததில்   மாணவர்களின் எண்ணம் எதை நோக்கி நடத்தப்பட்ட நிகழ்வு மாணவர்களின் எல்லா  கேள்விக்கும் பதிலளிக்கும் வண்ணமிருந்தது. பொத்தவங்களுக்கு உண்மையாயில்லைணா  நீங்க நல்லாவே வாழமுடியாது..  தயவு செய்து படிங்கப்பா.. யாரையும் ஏமாத்திராதீங்க! யார்கிட்டயும் ஏமாந்திராதிங்க! நீ அழுதிட்டு வீதியில நிற்கும்போது உங்கூட இருக்க போறது உங்கப்பாம்மா  தான் என சொல்லி  முடிக்கும் போது பல மாணவர்களின் கண்கள் அவர்களை மீறி வழிந்தோடியதை நம்மால் காண முடிந்தது..  கடைசியாக மாணவர்கள் தரப்பில் இருந்து பேச வந்தவர்கள் நான் இங்க வர்றதுக்கு சும்மா கிளாஸ் கூப்பிடுறாங்கச்சேன்னு கோவமா வ ந்தேன் ஆனா வாழ்க்கைய சொல்லி கொடுத்திருக்கீங்க என்றார் அந்த மாணவி



அம்மா அப்பா படுற கஸ்டத்தை அவங்க கூட சொல்லலையேக்கா-பாரதி

                மாணவர்கள் தரப்பில் யாருமே வரவே இல்லை மாணவிகளுக்கு முன்னால் வந்து சொல்ல வெட்கப்பட்டனர்..  பல மாணவர்கள் சிரிச்சாங்க, ஆனால் ஒரு மாணவன் மட்டும் எதையும் பேசாம மொவுனமாக இருந்தான்.. மொல்ல பேச எழுந்தான் பாரதிமெல்ல மவுனம் கலைத்து அவன் பேச, நம் கண்களிலும் நீர் வழிந்தது.. இந்த பள்ளிகூடத்திலேயே நான் தான் வால்பையன், கிளாஸ்ல எங்க பிரச்சனை நடந்தாலும் நான் தான் காரணமா இருப்பேன், இங்க வர்றதுக்கு முன்னால விளையாட்டு பீரியடாச்சே என்னடா பேசறாங்களாம், அதுள்லாம காலையில எங்க கிளாஸ்ல காலையில பிரச்சனை விசாரிச்ச ஹெட்மாஸ்டர் என்னைய திட்டினார் (தலைமை ஆசிரியரும் கூட்டத்தில் இருந்தார்) "கட்" அடிச்சிடலானு நினைச்சேன் என்றவன் படிப்பதற்கு அவன் படும்பாடுகளை விவரித்தான்.. எனக்கு தெரியாத சரக்கு (டாஸ்மார்க் அயிட்டம் தாங்க) பேரே இல்லை.. ஏன்னா எங்கப்பா அம்மா சென்னையில வேலை செய்யிறாங்க  நான் பாட்டி வீட்டுல இருக்கிறேன் எங்க மாமாஎன்ன சரக்கு வாங்கிட்டு வரசொல்லுவார் போகலைன்னா  அடிப்பார்.. அதனாலேயே நான் படிக்காமல் சுத்திக்கிட்டு இருந்தேன்.. இன்னைக்கு தான் எங்கம்மா அப்பா படுற கஸ்டங்களை உணர்ந்திருக்கேன் என்றவன்..  அவங்க கஸ்டங்களை  இதுவரை எங்களுக்கு யாரு சொன்னதில்லையேக்கா என்றான் கண்ணீருடன்…   இந்த நிகழ்ச்சிக்கு  மொத்த்தில் மாணவர்களின் மனசாட்சியை கேள்வி கேட்கும் நிகழ்ச்சியாக இருந்தது.

குறிப்பு: மாணவர்களின் பெயர், இந்த கட்டுரைகள் பல மாணவர்களின் நலன் கருதி வெளியிடப்படுகிறது..  தவறுகளை சுட்டிகாட்டுங்கள்


நிகழ்ச்சியின் தொகுப்பை பார்க்க:


From seyyaar meeting




சமூக அக்கறை உள்ளவரா நீங்கள்
ஏழை மாணவர்களின் கல்விக்காக இணைவோம் வாரீர்…

One Response so far.

  1. meens says:

    நன்று .. அன்பும் பொறுமையும் தான் மிக முக்கியம் இன்றைய இளைய தலை முறைக்கு .. பின் பேசுதல் .. பேசுதல் என்பதில் பெரும் பங்கு ஆசிரியருக்கும் பிறருக்கும் ...பெற்றோர் கூறுவதை விட பிறர் கூறும் போது கேட்பார்கள் .. காலை முதல் மாலை வரை பெரும்பாணமி நேரம் செலவு செய்வது பள்ளியில் அங்கு ஆசிரியர் அன்புடன் பொறுமையாக கூறினால் கண்டிப்பாக கேட்பார். வீட்டில் கூட போம்மா என சொல்லி கடைக்கு போக மறுக்கும் பிள்ளை அடுத்த வீடு அக்கா ஆன்டி சொன்ன உடனே ஓடி போய் உதவி செய்வாங்க .. பிறர் பாராட்டுதல் பிறரிடம் நல பெயர் வாங்குதல் என்பது இயல்பாகவே அமைந்து விட்ட குணம் .. இது போன்ற நிகழ்சிகளில் எடுத்து சொல்லும் போது புரிய வாய்ப்பு அதிகம் .. வாழ்த்துகள் வளரட்டும் உங்கள் பணி..

Leave a Reply