"ஏழைகளின் கல்விக்கு உதவியவன் இறைவனாவான்" என்பது வெளிச்சம் மாணவர்களுக்குள் எப்போதும் தாரக மந்திரமாக சொல்லி கொள்வதுண்டு... கடந்த ஆண்டு கல்லுரிக்கட்டணம் செலுத்த முடியாமல் கல்லூரியை விட்டு வெளியே வந்த 36 கல்லூரி மாணவர்களுக்காக நாற்பது வெளிச்சம் மாணவர்கள் சென்னை நகரமெங்கும் உண்டியல் ஏந்தி கல்லூரிக்கட்டணம் செலுத்தியதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். ஆனால் அப்போது பிச்சையெடுக்குறீங்களே, உங்களுக்கு வெக்கமா இல்லையா? என்றனர் நம்மை நோக்கி. கல்லூரியை விட்டு வெளியே வந்த மாணவர்களின் வலியை யார் அறிவர்.. நாம் உண்டியல் ஏந்தியதன் விளைவாக முதல் தலைமுறை மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தினை அரசே ஏற்கும் என்கிற அரசாணையினை தமிழக அரசு வெளியிட்டதை தாங்களும் அறிவீர்கள்…
இந்த ஆண்டும் அதே பிரச்சனையில் கல்லூரியில் இருந்து துரத்தப்பட்ட மாணவர்களை அழைத்து கொண்டு பல்வேறு இடங்களுக்கு வெளிச்சம் மாணவர்கள் அலைந்தோம்.. அதில் 38 நாட்களாக கல்லூரிக்கு போகாத நிலையில் படிப்பை இழக்கும் சூழலில் இணையத்தின் வாயிலாகவும் கோரிக்கை வைத்தோம்... ஒரு சில மாணவிகளுக்கு இணைய நண்பர்கள் உதவி செய்தார்கள்.. மேலும் இக்கட்டான சூழலில் மாணவர்களிடம் உதவும் எண்ணத்திணை உருவாக்க வேண்டும்.. உயர்கல்வி என்பது ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்தால் அது இந்த தேசத்தின் சாபம் எல்லோருக்கும் கிடைக்க செய்வோம் என்ற எண்ணத்தின்படி சென்னையில் உள்ள பாரதி மகளீர் கல்லூரி, தியாகராயர் கல்லூரி போன்ற கல்லூரிகளில் மாணவர்களிடம், சக ஏழை மாணவர்களின் சூழலை சொல்லி வெளிச்சம் மாணவர்கள் உண்டியல் ஏந்தினார்கள். கல்லூரியை விட்டு வெளியே அனுப்பட்ட மாணவர்களின் பெரும்பாலான மாணவர்கள் உதவினார்கள், அதில் கிடைத்த பணத்தை St.Pal’s Nursing College ஐ சார்ந்த ஐந்து கல்லூரி மாணவிகளுக்கு அந்த பணத்தினையும் வழங்கியதோடில்லாமல் மேற்கொண்டு அந்த மாணவிகளின் கட்டண தேவை கருதி நிலைமையினை திரைப்பட தயாரிப்பாளர் ராஜன் அவர்களிடம் வெளிச்சம் செரின் அவர்கள் விளக்கி
நன்றி: தினத் தந்தி |
கூறியதன் விளைவாக ராஜன் அவர்கள் தலா ஐந்தாயிரம் ஒவ்வொரு மாணவிகளுக்கும் என ஐந்து பேருக்கு அவர்கள் கல்லூரியின் பெயரில் டி.டி எடுத்து கொடுக்கப்பட்டது. கையிருப்பில் இருந்த பணத்தோடு வெளிச்சம் மாணவர் வேல்முருகன் சகிதம் அந்த மாணவிகளை கல்லூரிக்கு அனுப்பினோம், கல்லூரியில் நிர்வாகிகள் மாணவிகளை தற்காலிகமாக அனுமதித்தனர், அதோடு மீத பணத்தினை கட்டினால் தான் கல்லூரி தேர்வுக்கு அனுப்படுவார்கள் என நம்மை எச்சரித்து அனுப்பினார்கள். மீதம் கட்ட வேண்டிய பணத்தை கல்வியாண்டின் முடிவிற்குள் ஏற்பாடு செய்ய வேண்டிய பொறுப்போடு, உதவிக்காக காத்திருக்கும் மீதமுள்ள மாணவர்களுக்கு பொருளாதார உதவி செய்ய வேண்டியதன் தேவையை உணர்ந்த நாம் மீண்டும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தோம்.
ஆனந்த் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் சார் |
|
சிவாவின் நிலையினை, “மாணவர்களே! நீங்கள் படித்து பட்டம் பெறும் இந்த சூழலில்
நிறைய மதிப்பெண்கள் எடுத்தபோதும் கல்வியை கனவாக கொண்டு மேற்கொண்டு தொடர முடியாமல் காத்து நிற்கும் சிவாவுக்கு உதவுங்கள்” என கோரிக்கை வைத்தார். உண்மையாகவே மாணவர்கள் மனிதாபமுள்ளவர்கள் தான் என்பதை நிரூபித்தார்கள். மொத்தமாக உண்டியல் மூலம் கிடைத்த தொகை ரூ 12074. அந்த பணத்தை சிவாவிடம் வெளிச்சம் மாணவர்கள் கொடுப்பதை விட ஒரு கல்லூரி மாணவர்களே கொடுக்க வேண்டும் என எண்ணினோம்.. அதற்கு ஏற்றார் போல் தஞ்சாவூர் பான் செக்காஸ் மகளிர் கல்லூரி விடுதியில் இளைஞர்கள் விழாவில் வெளிச்சம் மாணவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக சென்றிருந்தோம்.
தகுதியுள்ள பாண் செகுயர்ஸ் கல்லூரி மாணவிகள் |
(இந்த விழாவின் சிறப்பை பின்னர் இணைக்கிறோம்) கல்லூரி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சிவாவிற்கு, “ மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் உதவியோடு திரட்டப்பட்ட நிதியினை தருவதற்கு யாருக்கு தகுதியுள்ளது என எண்ணுகிறீர்கள்” என நாம் கேட்டோம்…ஒரு பெண் வந்தார் உங்களை பற்றி சொல்லுங்கள் என்ற போது நான் இந்த கல்லூரியில் நண்பர்கள் மூலம் காசு சேர்த்து ஒரு பொண்ணை படிக்க வைக்கிறேன்.” என சொல்ல சிவாவின் கண்களீல் கண்ணீர் வடிய அந்த தொகையை பெற்றுக்கொண்டான்... கல்லூரிக்கு வெளியே அனுபப்பட்ட சிவாவின் வலியை நிகழ்ச்சியின் ஊடே தொலைப்பேசி வழியாக கேட்டுகொண்டார் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள். கல்லூரியில் இந்த தொகையை கட்டிவிட்டு இப்போதைக்கு கல்லூரிக்குள் அனுப்பிவிட்டோம்.. மாணவர்களிடமிருந்து மாணவர்களால் சேர்க்கப்பட்ட நிதியை மாணவர்களால் கொடுத்து ஒரு மாணவனின் உயர்கல்வியை மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் நல்ல உள்ளத்தின் உதவியோடு இப்போதைக்கு காப்பாற்றியிருக்கிறோம்.. தொடர்கிறது மீண்டும் நம் பயணம்.
எவ்வளவு காலம் இப்படி உண்டியல் ஏந்த போகிறீர்கள் எனலாம்.. பேசுவதை விட முயற்சி செய்தோம் பிறர் வாழ்வில் கல்வி வெளிச்சம் கொடுக்க நம்பிக்கையோடு பயணமாகிறோம் மீதமிருக்கும் மாணவர்களின் வாழ்க்கைகாக… கேள்வி கேட்கும் அன்பர்கள், ஐயமுள்ள அன்பர்கள், அக்கறையுள்ள தோழர்கள் ஆலோசனைகளை கூட்டு செயல்திட்டத்தை முன்வைக்குமாறு தாழ்மையோடு வெளிச்சம் மாணவர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்
உண்டியல் ஏந்தும் வெளிச்சம் மாணவி |
சமூக அக்கறை உள்ளவரா நீங்கள் ஏழை மாணவர்களின் கல்விக்காக இணைவோம் வாரீர்… கல்விக்கு உதவிட : ACCOUNT NAME: " VELICHAM STUDENTS EDUCATIONAL AND WELFARE TRUST " ACCOUNT NO: 31654850476, Branch Name: STATE BANK OF IINDIA, PERAMBUR, CHENNAI, IFSC Code: SBIN 0002256 SWIFT Code: SBININBB458 |
Veraivil etharku mudivu undu. Coming 2020 no corruption in India and well educated people help for education only. No help for one time need, their vision permanent solution for people.
இப்புனித சேவையில் எங்களையும் இணைத்து கொள்ள ஆசைப்படுகிறோம்...
intha navina kalathil government eppadi oru katchiyai kandu vetka pada vendum eppadi oru nilamaiku poor people vara karanamana muthalaigalai thookil eda vendum. ethanai mata ungaludan sernthu nanum inpadupada virumbukiran
உங்களை போன்றோரின் ஊக்க வரிகள் எம்மை இன்னும் வேகமாக பயணிக்க செய்கிறது
Great Effort. We will stand with you....