பெற்றவர்களின் கண்ணீரை துடைப்பதற்காக நாங்கள் படிப்போம்

Posted by Unknown - -


பள்ளிக்கூடம்  பக்கம் போனால்  புள்ள கொட்டு போயிடும்.. 
விழாவில் செரின்
பொம்பள புள்ளை அதிகம் படிச்சா வரதட்சனை அதிகமா தரணும் அதனால பொண்ணோட படிப்பை பாதியிலயே நிறுத்திட்டோம்.    வறுமை தாளாம  பண்ணன்டாம் கிளாஸ் முடிச்சி ஒரு வருசம் மெடிக்கலுக்கு  வேலைக்கனுப்பினோம். அங்கேயிருந்து வந்த எம்பொண்ணு..  படிச்சாதான் வாழ்க்கைண்ணு எனக்கு புரியவச்சது.. புரிஞ்சி என்ன புண்ணியம் பணங்காசு இல்லையே என புலம்பிய வரிகளுக்கு சொந்தக்காரர் அரியலூர் மாவட்டம்  அமிர்தராயன் கோட்டை கிராமத்தை சேர்ந்த விமலாவின் அப்பா தான் (இரண்டு வருடங்களுக்கு முன்).,
இப்போது விமலா இரண்டாம் ஆண்டு B.Sc நர்ஸிங் (விழுப்புரம் பால்ஸ் நர்ஸிங் கல்லூரி)  மாணவி

நாம் நடந்ததை பற்றி பேசலாம்.
             வெளிச்சம் அமைப்பின் கல்விப்பணியில் பல்வேறு விதமான  இன்னல்களுக்கு மத்தியில் உதவும் உள்ளங்கள் கருணையோடு கூலியாக இருந்த பலரின் வாழ்க்கை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது என்பதனை நீங்கள் அறிவீர்கள். வெளிச்சம் மாணவர்களின் கல்விக்காக கடந்த ஐந்து வருடமாக  உதவிவரும் முத்தையா குமரவேல் அவர்களும் அவரின் நண்பர்களும் உதவி வருகிறார்கள். இதனை அடுத்து இந்தவருடம் வெளிச்சம் மாணவர்களின் கல்விக்காக திரு.முத்தையா குமரவேல் அவர்கள் நண்பர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து  ஒரு லட்சத்திற்கான காசோலைகளை  கல்லூரிகள் பெயரில்  அனுப்பினார்கள். உதவி செய்தவர்களின் முகங்கள் நாம் பார்த்த்தில்லை ஆனால் அவர்கள் எம்மை ஊக்கப்படுத்தும் விதமாக விளங்குவதால் நாங்கள் பட்ட  கஸ்ட்டம் எனக்கு கீழே உள்ள மாணவர்கள் படக்கூடாது என்பதால் மாணவர்களை ஊக்குவிக்கும்  நிகழ்வாக  அமைய வேண்டும் என எண்ணினோம்.  
கண்ணீருடன் மாணவர்கள்
 நாம் காசோலைகளை கொடுக்க எண்ணிய தருணத்தில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  மாணவர்களின் உளவியல் எதை நோக்கி என்கிற  நிகழ்ச்சி மாவட்ட கல்வி அலுவலகம்  ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கு  வெளிச்சம் மாணவர்களையும், ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஏஸ்.சிவசங்கர் அவர்களையும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மாணவர்களுக்கு ஊக்கப்படுத்த அழைத்திருந்தனர்..
 
மாணவர்களை சந்திப்பதும் அவர்களிடம் பேசுவதும், அவர்களை நல்வழி படுத்த வேண்டும் என்பதும்  நாம் எடுத்துக்கொண்ட பணி அதனால் நாம் மகிழ்ச்சியுடன் பயணித்தோம்..

பெற்றவர்களின் கண்ணீரை  நீங்கள் தான் துடைக்க வேண்டும், என் மகள் படிப்பா என்னோட கவலையை தீர்ப்பாண்ணுதான் உங்கப்பா அம்மாஎல்லோரும் கஸ்ட்டப்பட்டு படிக்க அனுப்புறாங்க ஆனா நாம அவங்களோட கனவை நிறைவேற்ற படிக்கிறோமா உங்கள் மனசை தொட்டு சொல்லுங்கள் என வழக்கமான மனித எதார்த்த வலிகளை பதிவு செய்த வெளிச்சம் செரின் அவர்களின் பேச்சினை கேட்ட மாணவர்களின் கண்ணீர் கரைந்தோடியது.  
 
மனித நேயர்.குமரவேல் அவர்களும், நண்பர்கள் மூலம் சேர்க்கப்ப்பட்ட ஒரு லட்ச ரூபாவும்  .

பள்ளி மாணவியிடம் 
      வெளிச்சம் மாணவர்களின் கல்லூரிகள்  பெயருக்கே எடுக்கப்பட்ட ஒரு லட்சத்திற்கான காசோலைகளை  மாணவர்களால் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் நிகழ்வின் துவக்கமாக விமலா அவர்களுக்கு  சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.ஏஸ்.சிவசங்கர் அவர்கள் வழங்கினார். அதனை தொடர்ந்து  மற்ற மாணவர்களுக்கு அந்த பள்ளி மாணவர்களில்  யார் இவருக்கு கொடுக்க தகுதி இருக்கு என வெளிச்சம் கேட்க இந்த அண்ணனை போல நானும் படிக்கணும்ணு எனக்குள்ள கனவு இருக்கு, நான் படிச்சி நாளு பேருக்கு நல்லது பண்ணனும் அதனால நான் கொடுக்கிறேன் என்றாள் அந்த பள்ளி மாணவி, கனவு காணுங்கள் என்கிற வரிகளோடு பள்ளி மாணவிகளின் திருக்கரங்களால் காசோலைகள் வழங்கப்பட்டது.

காசோலைகள் பெற்ற மாணவர்கள்
 முகம் தெரியாத உள்ளங்கள் வழங்கிய காசோலைகளை"  வெளிச்சம் மாணவர்கள் தாங்கள் வழங்காமல் மற்ற கல்லூரி, பள்ளி மாணவர்களால் வழங்குவது என்பது நம்மை போன்று மற்ற மாணவர்கள் சக மாணவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்பதை  ஊக்கவிக்கப்பதே வெளிச்சம் மாணவர்களின் நோக்கம்..   

 நமது நல்ல நோக்கங்கள் உங்களை போன்ற நல்ல உள்ளங்களினால் தொடர்கிறதுஉங்களின் உயர்ந்த உள்ளங்களுக்கு நன்றி

  
                                                                                           வெளிச்சம் மாணவர்கள் 


கல்விக்கு உதவிட: 

ACCOUNT NAME:               " VELICHAM STUDENTS EDUCATIONAL AND WELFARE TRUST "
ACCOUNT NO:                   31654850476,
Branch Name:                     STATE BANK OF IINDIA, PERAMBUR, CHENNAI,
IFSC Code:                          SBIN 0002256
SWIFT Code:                       SBININBB458







காசோலைகள் வழங்கப்பட் மாணவர்கள் விபரம்: கீழே இணைக்கப்பட்டுள்ளது



விழாவில் சட்டமன்ற உறுப்பினர்



மாணவிகளுடன்


முத்தமிடும் மாணவி

காசோலைகள் வழங்கப்பட் மாணவர்கள் விபரம்: 




1.        திருச்சி எம்.ஏ.எம் கல்லூரி மாணவர் சிவா அவர்களுக்கு  9,000 ரூபாய்கான காசோலை வழங்கப்பட்டது. அதனை  தொடர்ந்து   
2.          திருச்சி ஸ்ரீ அங்காளம்மன் பொறியியல் கல்லூரி மாணவி  அபிதா அவர்களுக்கு 10.000 ரூபாய்கான காசோலை,
3.      மதுராந்தகம் கற்பக விநாயகா பல் மருத்துவ கல்லூரி மாணவி கீர்த்திகா அவர்களுக்கு  9,000 ரூபாய்கான காசோலை,
4.            தஞ்சாவூர் அரசு பொறியியல் கல்லூரி  மாணவி  ராசாத்தி  அவர்களுக்கு  15.000 ரூபாய்கான காசோலை,
5.             மீனாட்சி ராமசாமி தொழில் நுட்பக் கல்லூரியில் பயிலும் கடலூரை சேர்ந்த ராமமூர்த்தி அவர்களுக்கு  15,000 ரூபாய்கான காசோலை


கல்லூரி கட்டணம் செலுத்தாதால் கல்லூரியை விட்டு கல்லூரி  நிர்வாகத்தால்  38 நாட்கள் பல்வேறு கல்லூரிகளில் நம்மோடு உண்டியல் ஏந்திய  பால்ஸ் நர்சிங் கல்லூரி மாணவிகளான 

6.          விழுப்புரம் பால்ஸ் நர்ஸிங் கல்லூரி)  மாணவி  விமாலா அவர்களுக்கு  15,000 ரூபாய்கான காசோலை,
7.        விழுப்புரம் பால்ஸ் நர்ஸிங் கல்லூரி)  மாணவி,    விஜி அவர்களுக்கு 15,000 ரூபாய்கான காசோலை,
 8.            பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசனில் பயிலும் பாலஜி அவர்களுக்கு  12,000 ரூபாய்கான காசோலை
 
காசோலைகள் பள்ளி மாணவர்களால் வழங்கப்பட்டது.






3 Responses so far.

  1. Unknown says:

    உங்கள் பணிக்கும், அதில் பங்களித்த நல்லுள்ளங்களுக்கும் வணக்கங்கள், வாழ்த்துக்கள்!!

  2. அருமை தொடரட்டும் சேவை

  3. alagarsamy says:

    Good Service By Prof.A.Alagarsamy,Head,Department of Social Work,Sri Krishna Arts and Science College,Coimbatore-8,Tamilnadu,India

Leave a Reply