வங்கிகளில் திவாலான மனிதாபிமானம்

Posted by Velicham Students - -

பாலகுமாரன்

அன்னைத்தமிழகத்தில் தமிழில் படித்தவனுக்கு முன்னுரிமை அரசாணை சொல்கிறது. தமிழில் படித்தால் கடன் கிடையாது வங்கி சொல்கிறது...வாழ்க் தமிழகம்..வாழ்க தமிழ்...

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே பி.கீரந்தையைச் சேர்ந்தவர் பாலமுருகன்(18). தந்தை கைவிட்ட நிலையில், தாய், தம்பியுடன் வசித்து வருகிறார். பிளஸ் 2 தேர்வில் 819 மதிப்பெண் எடுத்து, கவுன்சிலிங் முறையில் பட்டுக்கோட்டை ராஜா மடம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ., மெக்கானிக்கல் பயின்று வந்தார். இதற்கு தமிழ் மொழியை தேர்வு செய்தார். படிப்பு செலவுக்காக, முதுகுளத்தூரில் உள்ள வங்கி ஒன்றில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தார். வங்கியில் முறையான தகவல் இல்லை. காலம் கடந்த நிலையில், பண நெருக்கடி ஏற்பட்டதால், உதவி கேட்டு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தார்.அங்கு நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், முன்னோடி வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார். "தமிழைத் தேர்வு செய்ததால் கண்டிப்பாக வேலை கிடைக்கப் போவதில்லை. இதற்கு எப்படி கடன் தர முடியும்?' என, அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.

விரக்தி அடைந்த பாலமுருகன் கூறியதாவது:தமிழ் செம்மொழி மாநாடு நடத்திய தமிழகத்தில், தமிழைத் தேர்வு செய்ததற்காக கடன் உதவி தர மறுக்கின்றனர்; வேலை கிடைக்காது என பேசுகின்றனர். அதிகாரிகளே இப்படி இருந்தால் எப்படி முறையிட முடியும்? எனக்கு பணம் கிடைக்காத பட்சத்தில், படிப்பை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.இவ்வாறு பாலமுருகன் கூறினார்.
நன்றி: தினமலர்


வணக்கம், வெளிச்சம் மாணவர்கள் நேற்றில் இரு ந்து அந்த மாணவரின் விபரம் தெரிந்து கொள்ள முயலுகிறோம். கல்லூரி நிர்வாகம் சொல்ல மறுக்கிறது.. பத்திக்கையாளர்கள் இடம் பேசினோம் தினமலரில் செய்தியாக்கியிருக்கிறோம் என்றார்கள். அவருக்கு தற்போது கடன் தருவதா வங்கியிலிருந்து இசைந்துள்ளதாக சொன்னார்கள்...ஆனால், மாணவரின் தொடர்பு எண் தர மறுத்துவிட்டனர். மாணவருடைய தொலைபேசி எண் இருந்தால் தாருங்கள்....

மேலும் பார்க்க:
                                                             https://lh5.googleusercontent.com

Leave a Reply