மாக்கோலமல்ல... கனவு |
வழக்கமாக மக்களோடு மாணவர்களோடு பேசி அதில் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் பலருக்கு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காக உங்களோடு எங்கள் நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வதுண்டு.. இது அப்படிப்பட்ட நிகழ்வல்ல..
தஞ்சாவூர் பான் சேக்கர்ஸ் பெண்கள் அறிவியல் கல்லூரியில் இருந்து நம்மை தங்கள் கல்லூரியில் நடைபெற இருக்கும் இளைஞர் விழாவிற்கு வரும்படி அழைக்க நாம் ஒத்துக்கொண்டோம்..
நமது சென்னை - தஞ்சை பயணத்தில் பாபநாசத்தில் நடந்த பேருந்துக்கடியில் சிக்கி மோட்டார்சைக்கிள்காரர் இறந்து போன விபத்தினை கண்டு அங்கிருந்து நம்மால் போக முடியாமல் சிரமப்பட்டு பாதியில் நிற்க, அதனால் கல்லூரி விடுதிக்கு போக காலதாமதமானதால் பதட்டத்தோடு தொடர்ந்து விடுதி நிர்வாகத்தினர் நம்மை அழைத்தபடியே இருந்தார்கள்…
உரையாற்றிய போது |
நமக்கு முன்னதாகவே நிகழ்ச்சி தொடங்க கேட்டுகொண்டோம்… அதன்படி நான் காணும் நாளைய இந்தியா என்கிற தலைப்பில் நடந்து முடிந்திருந்த கோலப்போட்டியில் மாணவிகள் வரைந்த அழகான கோலங்கள் நம்மை வரவேற்றன… என்ன அழகு? கோலங்களில் புரட்சி செய்ய முடியும் என்ற எண்ணங்களை வெளிப்படுத்த முடியும் என காண்பித்திருந்தனர்.. நாம் உள்ளே நுழைந்தோம் எல்லா கல்லூரி மாணவிகளை போல பயங்கர அலும்பல் பார்டிகளாக " ஓ" போட்டார்கள் உள்ளே நுழைந்தோம்…
உள்ளே நுழைந்ததும் அதிர்ச்சி காத்திருந்தது நமக்கு வெளிச்சம் மாணவர்கள் மட்டும் தான் சிறப்பு அழைப்பாளர்கள் என்றதும்.. வெளிச்சம் செரின் அவர்களை தவிர எல்லோரும் மாணவர்கள் என்பதால் நமக்குள்ளும் படபடப்பு… வரவேற்புரை, பாடல்கள், பேச்சுப்போட்டி, ஊமை நாடகம் என நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தது.
பட்டிமன்ற நடுவராக |
இன்றைய இளைய தலைமுறையினரின் வெற்றிக்கு வித்திடுபவர்கள் நண்பர்களா? பெற்றோர்களா? என்கிற பட்டிமன்றத்தின் நடுவராக வெளிச்சம் செரின் அவர்களை திடீரென அறிவித்தார்கள்.. மேடைகளில் மட்டுமே பேசிய வெளிச்சம் நிறுவனரை முதல் முறையாக பட்டிமன்ற நடுவராக அறிவிக்கையில் தீர்ப்பு தப்பா ஆகிவிட்டால்,
நாட்டாமை தீர்ப்பை மாத்துன்னு சொல்லுவாங்களே என பதட்டப்பட்டோம்..
நாட்டாமை தீர்ப்பை மாத்துன்னு சொல்லுவாங்களே என பதட்டப்பட்டோம்..
நண்பர்கள் தரப்பில் …
விழாவில் வெளிச்சம் |
பெற்றோர்களே தரப்பில்!
கருப்பாக இருந்ததற்கு கலங்கியிருக்கிறேன் |
தீர்ப்பு சொல்லும் மாணவிகள் |
நாட்டாமை தீர்ப்பை சொல்லுங்க என்றார்கள்… மாணவர்களை நோக்கி நண்பர்களா என கேட்க ஒரு சிலர் கரங்களை தூக்கினார்கள். பெற்றவர்களா என கேட்க கூடுதலாக உயர்த்தினர்.. பெற்றவர்களும் நண்பர்களும் என சொல்ல எல்லோரும் கரங்களை உயர்த்தினர்.. சரியான தீர்ப்பை நீங்களே சொல்லிவிட்டீர்கள் என முடித்தார் செரின்..
கருப்பாய் பிறந்த்தற்காக, கல்யாணம் செய்துகொண்டு கல்லூரி படிக்கும் மாணவி என மாணவிகளின் வலிகள் பல கோணங்களில் வெளிப்பட்டது. நான் இனி யாரையும் ஏமாற்ற மாட்டேன்… என மாணவிகள் சொல்ல நிகழ்ச்சி முடிந்தது.. மாணவிகள் எழுதிய கடிதத்தை படிக்கும் போது நமக்கு அவர்களின் வலிகள் புரிந்தது…
( கடிதங்களை பிறகு உங்கள் பார்வைக்கு இணைக்கிறோம்..)
(திருச்சி எம்.ஏ.எம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியர் மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை வழங்கிய கட்டுரை இணைக்கிறோம்)
தீர்ப்புகள் தவறென்றால் நீங்களும் சொல்லலாம்