அம்மா அப்பாவ பிடிக்கலையே ஏன்.. காதல் தப்புண்ணாலும் காதலிக்க தோணூதே ஏன் ?

Posted by Velicham Students - -


உங்கள் வீடுகளில் பிள்ளைகள் இருக்கலாம். அவர்கள் உங்கள் பேட்சை கேட்பதில்லையா, படிக்கிற வயசுல பெத்தவங்க பேச்சை கேட்க மாட்டங்குறாங்கண்ணு, அது அது பட்டா திருந்தும்ணும், வயசு கோளாறுண்ணு சொல்லிட்டு போகபோறீங்களா, இல்லைஎன்ன பண்ணனும்னு தோணலையா, உங்கள் மகன் மகள் தானே நீங்கள் சொல்லி கேட்கலைண்ணா யாரு சொல்லி கேட்க போறாங்க..


அவங்களுக்கு மன்னிக்கனும் உங்க பையனோ பொண்ணோ பெத்தவங்களை யாருக்கும் பிடிக்காதாம்,  உங்கள் பிள்ளைகளுக்கு, கேட்டதும்  அதிர்ந்து போனோம்..

இதுவரை நாம் பல்லாயிரகணக்கான மாணவர்களை சந்தித்திருக்கிறோம் அவர்கள் சொன்ன வரிகள் தான் நீங்கள் மேலே படித்தவை…. இதை போக்க நாம் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு உளவியல் பயிற்சி கொடுத்து வருகிறோம்.. கடந்த மாதம் வந்தவாசி பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு போயிருந்தோம் இந்தமுறை 800 க்கும் மேற்ப்பட்ட மாணவிகள் பங்குபெற்றார்கள், உச்சி வெயிலில் 2.35 மணி துளிகள் நம்மை அசர வைத்தனர் மாணவியர்… போன முறை நாம் பயிற்சியில் மாணவர்கள் பேசியதை பெண்ணாய் ஏண்டா பிறந்தோம்னு எத்தனையோ நாள் அழுததுண்டு என்கிற தலைப்பில் வெளியிட்டிருந்தோம். இன்று சில மாணவிகள் அம்மா அப்பான்னு சொன்னாலே பிடிக்க மாட்டங்கது, எங்க மேல பாசமா இருக்கிற அவங்களை விட்டுட்டு ஏன் காதலிக்க தோணுது என்றெல்லாம் கேட்க எல்லாவற்றிற்கும் பதிலளித்தோம் தாய்மையோடு. இது உங்கள் வீட்டு மகாலட்சுமியான உங்கள் வலியாக கூட இருக்கலாம்… இந்த மாணவியர் வலியை அப்படியே பதிவு செய்கிறோம் காட்சியாக கூர்ந்து பாருங்கள்..


(இக்கட்டுரை மாணவர்களின் நலன் கருதி பதிவு செய்கிறோம்…. மாணவர்களை குறை சொல்ல அல்ல..)சமூக அக்கறை உள்ளவரா நீங்கள்
ஏழை மாணவர்களின் கல்விக்காக இணைவோம் வாரீர்…

Leave a Reply