"தற்கொலை செய்து கொள்பவர்களில் ஆண்களே அதிகம்'

Posted by Velicham Students - -

சென்னை, அக். 21:

velicham manavar thar kolai
                              தற்கொலை செய்துகொள்பவர்களில் ஆண்களே அதிகம் என உலக சுகாதார அமைப்பின் மனநலத் துறை இயக்குநர் சேகர் சக்úஸனா கூறினார். தற்கொலை தடுப்பு அமைப்பான ஸ்நேகா-வின் வெள்ளி விழா சென்னையில் வியாழக்கிழமை  கொண்டாடப்பட்டது. இதில் சேகர் சக்úஸனா பேசியது:
உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களே அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். நான்கு குடும்பங்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் மனநலம் பாதிக்கப்படுகின்றனர்.
இவர்களில் ஆண்களே அதிகம் என்றும் தெரியவந்துள்ளது. வாழ்க்கையை முழுதாக புரிந்துகொள்ளாத 25 வயதுக்கும் குறைவானவர்களே, இதில் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். 75 சதவீத தற்கொலைகள் மன நலத்துக்கு முக்கியத்துவம் அளிக்காத குறைந்த வருவாய் நாடுகளிலேயே நடைபெறுகின்றன.
இந்தியா, சீனா போன்ற நாடுகளில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்பவர்களே அதிகம். ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதை எளிதில் தடுத்து விட முடியும். இதற்கு அரசு துறைகளும் சமூக அமைப்புகளும் இணைந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.இதற்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் தொடர்பான கொள்கையை மேம்படுத்துவது, மன நலம் தொடர்பான மருத்துவ நிர்வாகத்தை மேம்படுத்துவது, டாக்டர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் தற்கொலை தடுப்பு பயிற்சிகளை அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது என்றார்.இந்திய மனநல சமூகத் தலைவர் எம். திருநாவுக்கரசு: மருத்துவக் கல்வியில் தற்கொலை தடுப்பு குறித்த பாடமே இதுவரை இடம்பெறவில்லை. தற்கொலைகளை தடுக்க முதலில் அதுதொடர்பான பாடம் மருத்துவக் கல்வியில் இடம்பெறவேண்டும் என்றார்.
ஸ்நேகா நிறுவனர் லட்சுமி விஜயகுமார்:
இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை 68 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். இதில் 75 சதவீதம் பேர் 40 வயதுக்கும் குறைவானவர்கள்.உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 14 வயதுக்கு குறைவான 2,500 குழந்தைகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதைத் தடுக்க போதிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். தற்கொலை முயற்சியை தடுப்பது ஒவ்வொருவருடைய கடமை.தற்கொலை முயற்சியில் ஈடுபடுவர்களிடையே, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்கொலை முயற்சி சட்டப்படி தண்டனைக்கு உரியது என்பதை நீக்குவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
நன்றி  தினமணி

One Response so far.

  1. Nel says:

    The blog is very good! Congratulations!
    http://nelsonsouzza.blogspot.com

Leave a Reply