கல்விக்கட்டண விபரத்தை மக்களிடம் கொண்டு செல்லுவோம்..வெளிச்சம் மாணவர்கள்

Posted by Velicham Students - -

அக்டோபர்ப் 21:
மெட்ரிக் பள்ளிகளுக்கு கோவிந்த ராஜன் கமிட்டி நிர்ணயித்த இந்த கல்விக்கடணத்திற்க்கு  நடந்த மக்கள் போராட்டங்களில் வெளிச்சம் மாணவர்களுக்கும் பங்கு இருக்கிறது  அதன் பின்னனியில் வெளியிடப்பட்டுள்ள கட்டணவிபரங்களை மக்களிடம் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது வெளிச்சம்.அதற்க்காக  வெளிச்சம் மாணவர் உதவி எண் 9698151515 மேலும் முனைப்புடன் செயல் படும்.
தட்டுங்கள்: Metriculation School fees list(கோவிந்த ராஜன் கமிட்டி விதித்த கட்டண பட்டியல்)
தனியார் நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக் கட்டணம் தமிழக அரசின் இணையதளத்தில் 21.10.2010 அன்று வெளியிடப்பட்டது. தமிழக அரசின் www.tn.gov.in  என்ற இணையதளத்தில் கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
நீதிபதி கோவிந்தராஜன் குழு தனியார் பள்ளிகளுக்கு கடந்த மே மாதம் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்தது. ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இந்தக் கட்டண விவரங்களை பள்ளி நிர்வாகங்களோ, அரசோ வெளியிடவில்லை.
இதையடுத்து, தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை வெளியிட  வேண்டும் என்று கோரி மாநிலம் முழுவதும் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
உயர் நீதிமன்ற உத்தரவின் படி, நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்தக் கட்டணத்தை வெளியிட வேண்டும் என்று கோரி பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு சார்பில் அரசுக்கு நோட்டீஸýம் அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக் கட்டண விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ரூபாய் 10 முதல்  கட்டணம்
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டண விவரங்களின் அடிப்படையில், தனியார் பள்ளிகளில் 10 முதல் 11 ஆயிரம் வரை ஆண்டுக் கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் உள்ள இந்து நாடார் உறவின்முறை நடுநிலைப் பள்ளிக்கு ஆண்டுக் கட்டணமாக 10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அவர்கள் சமர்ப்பித்த லாப, நஷ்ட கணக்கு விவரங்களின் அடிப்படையிலேயே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்தப் பள்ளிக்கு மேல்முறையீட்டில் கட்டணத்தை மறுசீரமைக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்
532 பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது
அதேபோல், கல்விக் கட்டணம் தொடர்பான விவரத்தை தெரிவிக்காத 532 பள்ளிகளும் நீதிபதி குழுவின் அனுமதியின்றி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளுக்கான கட்டண விவரங்கள் ஏதும் அறிவிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளின் பட்டியலும் தனியாக வெளியிடப்பட்டுள்ளது.
கல்விக் கட்டண விவரங்களை தெரிவிக்காத பள்ளிகள் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை எனத் தெரிகிறது. எனவே, இந்தப் பள்ளிகள் நீதிபதி குழுவின் அனுமதியின்றி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் அளிக்கலாம்
நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்தக் கட்டணத்தை விட அதிகமான கட்டணத்தை பள்ளிகள் வசூலித்திருந்தால், அதை தனி வைப்புத் தொகையாக வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி குழுவின் இறுதி முடிவுக்கு இது கட்டுப்பட்டது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 10,934 தனியார் பள்ளிகளில் 6,400 பள்ளிகள் இந்தக் கட்டண நிர்ணயத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளன. இந்த மேல்முறையீட்டு மனுக்களின் மீது 4 மாதங்களுக்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி குழுவிடம் மேல்முறையீடு செய்யாத 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்க உரிமை கிடையாது என உயர் நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகத் தெரியவந்தால், பெற்றோர்கள் இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கலாம்.

நன்றி: தினமணி

Leave a Reply