பொது தேர்விற்கு தொல்லையா பொது தேர்தல்

Posted by Velicham Students - -


 தமிழக சட்டசபை தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், பொதுத் தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கும் என, பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


பொது தேர்வெழுதும் மாணவர்கள்

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நேற்று துவங்கி, வரும் 25ம் தேதி முடிகிறது. மெட்ரிக் தேர்வு, 22ம் தேதி துவங்கி, ஏப்ரல் 11ம் தேதி முடிகிறது. எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு, மார்ச் 28ம் தேதி துவங்கி, ஏப்ரல் 11ம் தேதி முடிகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் உயர்கல்விக்குச் செல்லவும், மாணவ, மாணவியரின் எதிர்காலம் மற்றும் தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடியதாகும்.இதனால், பெற்றோர் தங்கள் பிள்ளைகள் கவனத்துடன் படிக்கவும், அதிக மார்க்குகள் வாங்கவும் பல்வேறு தியாகங்களை செய்து வருகின்றனர்.

உதாரணமாக வீட்டில் கேபிள், "டிவி' கட் செய்வது. பல்வேறு சுப காரியங்களை செல்வதைத் தள்ளிப்போடுவது என, மாணவர்களின் கவனம் சிதறாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றனர்.ஆனால், தற்போது தேர்வு நெருங்கும் வேளையில், சட்டசபை பொதுத் தேர்தல், ஏப்ரல் 13ம் தேதி நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அரசியல் கட்சிகள், வாக்காளர்களை தம் பக்கம் இழுக்க ஏற்கனவே பிரசாரத்தைத் துவக்கியுள்ளன. வரும் 15ம் தேதி முதல், ஒலிப்பெருக்கி மூலம் பிரசாரம் செய்வது தவிர்க்க முடியாததாகி விடும். ஒலிப்பெருக்கி சத்தம், ஓட்டு சேகரிப்பு என, மாணவர்கள் படிப்பிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது .சமூக அக்கறை உள்ளவரா நீங்கள்
ஏழை மாணவர்களின் கல்விக்காக இணைவோம் வாரீர்…

One Response so far.

  1. Anonymous says:

    stupid election commission and stupid corrupted elected government they can do any thing that will affect anybodies life and they don!t care WELL WISHER OF STUDENT

Leave a Reply