அன்பு இல்லம்... (அனாதைகள் இல்லாமல் செய்ய ஓர் கூடு)

Posted by Velicham Students - -

மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்
மனச பாத்துதான் வாழ்வ மாத்துவான் 
ஏ மனமே கலங்காதே வீனாக வருந்தாதே 
பாரங்கள் எல்லாமே படைத்தவன் எவனோ 
அவனே சுமப்பான்..
                       என பாடல் வரிகள் ஒலித்து கொண்டிருந்தது.. தஞ்சை மாவட்டம் 4 கிலோமீட்டரில்  மாதா கோட்டை கிராமத்தில் உள்ளது அன்னை தெரசா அன்பு இல்லம்…  இல்லத்தை நோக்கி நாம் நடக்கையில்…   அன்பு இல்லத்தில் பெற்றோரை இழந்த 40  பிள்ளைகள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர். பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்காக படித்து கொண்டிருந்த பாஸ்கர்.  நம்மை பாசமுடன் வரவேற்றான்.. டாடி உள்ள இருக்கார், கொஞ்சம் இருங்கண்ணா! டாடிய கூப்பிடுரேன்னு  ஆர்வமாக ஓடினான் பாஸ்கர்.  (அன்பு இல்லத்தின் தாளாளர் சவரி முத்து அவர்களைத்தான் பிள்ளைகள் எல்லோரும்  டாடி என்கின்றனர் பாசத்துடன்)…


அன்பு இல்லம் உருவான விதம்
               
              அன்னை தெரஸா அவர்களின் வாழ்க்கையை படித்த நான். தொழு நோயாளிகளுக்காக அவர் பட்டபாடுகள் என்னை ஏதாவது செய்யனும் என உந்தி தள்ளியது..  நீண்ட நாட்கள் என்னை  ஆட்டிபடைத்த ஆர்வம் கொஞ்சம் செயல்பாடாக  மாறியது.. அப்பா அம்மா இல்லாத பிள்ளைகளை எடுத்து  அவர்களை  படிக்க வைக்கனும்  இந்த செயலுக்காக யார்கிட்டயும் பணம் வாங்க கூடாதுண்ணு நினைச்சி.. பிஸ்னஸ் பண்ண ஆரமிச்சேன். இப்போ அதுல வர்ற பணத்துலதான்  இவர்களை படிக்க வைக்கிறேன்.. எனக்கு யாருமில்லைன்னு இங்க இருக்கிற யாரும் நினைச்சிட கூடாது அதனால  டாடி, அண்ணா, அக்காண்ணு கூப்பிடுவாங்க, எங்க பிள்ளைங்க யாரையும் “சார்” கூப்பிட மாட்டாங்க என்றார் பாசமாக… வெளிச்சம் மாணவர்களின் கல்விக்காக வெளிச்சம் செரின் தனது சொந்த வாழ்க்கையை தியாகம் செய்தது போலவே இ ந்த பிள்ளைகளின் வாழ்க்கைக்காக தனது மனைவியை பிரிந்து வாழ்கிறார் சவரிமுத்து..
கொஞ்சம் நகர்ந்தோம்..

            பள்ளிகூடம் முடித்து பேக்கை தூக்கி போட்ட பசங்க நேரா அன்பு இல்லத்துக்கு முன்னாடியே உள்ள இடத்தில் கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட நாமும் பிள்ளைகளோடு விளையாடினோம்.. அவ்வளவு மகிழ்ச்சி அவர்களுக்குள்.. கொஞ்ச நேரம் விளையாட்டுக்கு பின் அவர்களாகவே குளிச்சிட்டு  படிக்க போனார்கள்.. மாலை நேர வகுப்புக்காக ஆசிரியர்கள் இருவர் பணியமர்த்தப்பட்டிருக்கார்கள். அண்ணா  பள்ளிகூடத்துல நடத்துறது நிறைய புரிய மாட்டங்குது அதான் டாடிக்கிட்ட சொன்னோம் இவங்கள சேர்த்திருக்காங்க என்றான் பாரத். போன வருசம் அன்பு இல்லத்து மாணவன் பத்தாம் வகுப்பில்  486 மதிப்பெண் பெற்றார் என்பது சிறப்பு தகவல்..

மாணவர்களுடன்  பேசியபோது


            நாம் படிக்கணும் பட்டம் வாங்கணும், என நாம் பேசியபோது எங்கள மாதிரி கஸ்ட்டப்படுறங்களுக்கு அன்பு இல்லம் இருக்குற மாதிரி, நாங்களும் பெரியாளா வந்து  என்ன மாதிர் அப்பா அம்மா இல்லாதவங்களுக்கு உதவுவேண்ணா என்றான் ஆர்வமாக…
  நிறைய பேர் அம்மா, அப்பா இருந்தும் அவங்களை மதிக்க மாட்டங்குறாங்க. நாங்க மதிக்கறோம் ஏண்ணா எங்களுக்கு யாருமே இல்லை என  நம்மை கேட்க என்ன சொல்ல என அறியாமல் தவித்தபோது வெளிச்சம் மாணவர்களின்  தாய் வெளிச்சம் செரின் மாணவர்களிடம் பேசினார்.. எல்லாவற்றையும் உணர்ந்தவராக பேசினார். இனி வெளிச்சம் மாணவர்கள் மாதம் இருமுறை அல்லது நேரம் வாய்க்கும் போதெல்லாம் பிள்ளைகளோடு நாங்கள் இருப்போம் என சொல்ல எல்லோருக்கும் வானளாவிய சந்தோசம்…

மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான், படைத்தவன் எவனோ அவனே சுமப்பான் என்றால் அன்பு இல்லத்தின் உள்ளங்களை போன்ற ஆதரவற்றவர்களை (மன்னிக்கவும்) யார் காப்பது….

அன்பு இல்லத்தின் தாய்மடி சவரி முத்து அவர்களை வணங்கி விடை பெற்றோம்….

Anbu illam (Orphanege)
கல்விப்பணியில் இணைவோம்


வெளிச்சம் மாணவர்களின் வங்கி கணக்கு விபரம்: 

ACCOUNT NAME:               " VELICHAM STUDENTS EDUCATIONAL AND WELFARE TRUST "
ACCOUNT NO:                   31654850476,
Branch Name:                     STATE BANK OF IINDIA, PERAMBUR, CHENNAI,
IFSC Code:                          SBIN 0002256
SWIFT Code:                       SBININBB458

One Response so far.

  1. அருமையான தகவல் என்று சொல்ல மாட்டேன்... வேதனையான தகவல்தான் இது... உங்களுக்கு ஒரு வேண்டுகோள்... இவர் போன்றவர்களைக் குறிப்பிடும்போது ஆதரவற்றவர்கள், அல்லது கைவிடப்பட்டவர்கள் என்ற வார்த்தையால் குறிப்பிடுங்கள்... மிக்க நன்றி...

    மாதாக் கோட்டையில் இப்படி ஒரு இல்லம் இருப்பது இப்போதுதான் எனக்கே தெரிகின்றது...

Leave a Reply