மாணவர்களால் தான் மாற்றம் வரும்.....

Posted by Velicham Students - -


புது சட்டை எடுக்கலைன்னா
எனக்கும் தங்கச்சிக்குமான சண்டையில

 பள்ளிகூடத்து போகும் போது 
வாங்கி திண்ண காசு கொடுக்கலைன்னா..

பிடிச்சது கூட கொஞ்சம் அதிகமா கிடைக்க...
சும்மா படம் காட்டுவேன் பெத்தவங்ககிட்ட...
சின்ன வயசுல
நாங்கதான் தான் அப்படின்னா....

 நீங்க மூணாவது அணி 
அமைக்கமாட்டீங்கலான்னு
காத்து கிடந்தோமே..
அப்ப எல்லாம் 
சேராத கரங்கள் இப்ப துடிக்கிது...
ஓ நீங்க அரசியல்வாதிக்கள் தானே!


என்னயா 
வெறும் சீட்டுக்கு
தனியா போறீங்க..
ஆளாளுக்கு கூட்டம் போடுறதும்...
என்னையா நினைச்சிக்கிட்டு இருக்கீங்க...

 அட! நாங்க தானய்யா
தீர்மானிக்கனும் 
நீங்க என்னயா
நாட்டாம பண்றீங்க...

யம்மாடி!
என்னமா சூப்பரா 
அடம் பிடிக்கிற
வேசம் போடிறீங்க....


கண்டவனெல்லாம் 
பிடிச்சி பாக்க..
நாங்க களிமண்ணுல்ல..

 காலம் வரும்
மாணவர்களால் தான் மாற்றம் வரும்...
அன்னைக்கு இருக்கு...

                                               - சிய

 (மாணவர் எழுதியது.. வரிகள் எதையாவது மாற்றனும்னா சொல்லுங்கள்... அவரின் வளர்ச்சிக்காக)
One Response so far.

Leave a Reply