படிக்க வைக்காத அப்பா மீது கேஸ் போட்ட 11 வயது மகன்..

Posted by Velicham Students - -


 தனது படிப்புக்காக செலவிடாத தந்தை மேல்  குடும்ப வன்முறை சட்டத்தின் மூலம்  வழக்கு போட்டு 18 வயது வரையிலான படிப்பு செலவுக்கான தொகையை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுள்ளார்  11 வயது மகன் ..

பூனே  நீதிமன்றத்தில்  சிறுவன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்படுவதாவது,
“ எனது பெற்றோர்களுக்கு இடையிளான  உறவு  2002 வாக்கிலேயே கசந்து. பரஸ்பர  ஒப்புதலின் பேரில்  2005 விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பின் இருவரும் வெவ்வேறு நபர்களுடன் மறுமணம் செய்து கொண்டனர், ஆனால், நான் என் தாயோடு தங்கியிருந்தேன்.” என் படிப்பிற்க்காக மென்பொருள்(Software) துறையில் பணி புரிந்து கொண்டிருக்கும்   தந்தை  எனது கல்வியின் மீது அக்கரை கொள்ளவில்லை  எனவும் இருவரும் பிரிந்துவைட்ட நிலையில் என் கல்விக்கு ஆகும் செலவைஎன்னை பெற்ற தந்தை தரவேண்டும் என  தன்  தாயின் மூலமாக மாஜிஸ்திரேட்டிடம் பிப்ரவரி 4, 2010 அன்று வழக்கு தொடுத்த அந்த சிறுவனின் மனு மீதான தீர்ப்பு திசம்பர் 18,2010 அன்று வழங்கப்பட்டது. அந்த வழக்கின் மீதான தீர்ப்பு என்ன வெனில்..
     அந்த சிறுவனின் தந்தைக்கு மாஜிஸ்திரேட் உமேஷ்சந்த்ரா, சிறுவன் 18 வயதை அடையும் வரை கல்வி மற்றும் நாளாந்த செலவுக்கான பணத்தொகையை வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.  சிறுவனின் தந்தை ஒவ்வொரு ஆண்டும் ரூ.12,000-த்தை ஒற்றை தவணையாக சிறுவனின் பெயரிலான வங்கி கணக்கில் கட்ட வேண்டும் எனவும். இந்த பணம் நோட்டு, புத்தகங்கள் வாங்கவும், பள்ளிக்கு பேருந்தில் செல்லவும்,  சிறப்பு வகுப்புகளுக்கு கட்டணம் செலுத்தவும், சீறுடை வாங்கவும் பயன்படுத்தப்படும். அதேவேளையில், 2010-11 க்கான ஆண்டிற்கான தொகை ரூ.23,800 என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான சிறப்பு வகுப்புகளுக்கு சேர்த்தே கட்டணம் செலுத்துவிடுவதாக அவனது தந்தை நீதிமனறத்தில் ஒப்பு கொண்டுள்ளதாக  நீதிபதி கூறியிள்ளார்.

இதுகுறித்து சிறுவனுக்காக வாதாடிய வழக்கறிஞர்  ஆசிம் சரோடே கூறியதாவது,

         “குடும்ப வன்முறை சட்டம்-2005 க்கு என்பதை பெண்களுக்கானது மட்டுமல்ல, மைனர் ( இளம் சிறார்) குழந்தைகளுக்கு  எதிரான வன்முறையும், உரிமை மீறலையும் உள்ளடிக்கியதுதான்.

விவாகரத்து குறித்தான வழக்கு நடந்து வரும் வேளையில், சிறுவனின் தந்தை சிறுவனுக்கு மாதம் ரூ, ஐநூறு தரவேண்டியது என தீர்மானிக்கப்பட்டது. ஆனால், கணவன் செலவுக்கு சரியா பணமே தருவதில்லை என்று மனைவி மீண்டும் புகார் கூற…..…

மேற்ப்படி குடிம்ப வன்முறை சட்டம் பிரிவு 2 பி ன் படி“ குழந்தை என்ற பதம் பாலின வேறுபாடின்று பயன்படுத்தப்படுகிறது, மனுதாரராகிய அந்த சிறுவன் குடும்ப கட்டுப்பாட்டிற்குள்ளோ, உறவு முறைக்குள்ளோ வாழ்ந்து வந்திருக்கிறார். ஆகையால், தனக்கான உதவி தொகையை மனுதார் தன் தந்தையிடம்  பெற்றுக் கொள்ளும் உரிமைகள்  அனைத்தும் உண்டு.” கூறினார்”.An 11-year-old boy has successfully sued his father for educational and general day-to-day expenses till the time he turns 18, by using the Protection of Women Against Domestic Violence Act of 2005.சமூக அக்கறை உள்ளவரா நீங்கள்
ஏழை மாணவர்களின் கல்விக்காக இணைவோம் வாரீர்

One Response so far.

  1. தந்தை - தாய் இருவருமே தப்பானவர்கள். ஆனால், இந்தச்சிறுவன் தாயுடன் இருக்கிறாராம். இவரது தந்தையைவிட இப்போதுள்ளவர் நல்லவர் என்றுதானே இவரைவிட்டு அவரைப்பிடித்தார்?அந்தப் புதிய நல்ல கணவரிடமே வாங்கித் தனது முண்னாள் கணவரின் மகனைப் படிப்பிக்கவேண்டியதுதானே!மறுமணம் செய்யாமல் , தனது மகனுக்காகவே வாழ்ந்தால் வேறுவிடயம். அதுக்கொருவர் இதுக்கொருவரா?நல்ல நியாயம்தான். புதியகணவ்ருடன் வாழ , மகனைக்காட்டி , பழைய கணவரிடம் பணம் வசூலிக்கிறார். துஷ்பிரயோகம்.

Leave a Reply