ஆசிரியர்களுக்கு சமூக அக்கறை இருக்கிறதா?

Posted by Unknown - -



 சமூகத்தை பக்குவப்படுத்துகிற பொறுப்பும் கடமையும் உள்ளவர்கள் தானே ஆசிரியர்கள், அந்த ஆசிரியர்களுக்காக தத்துவார்த்தமான புனிதத்தை  தற்போதைய ஆசிரியர்கள் மறந்து போனதற்கான காரணங்களை தேடினால் விடை தெரியா கணக்காகி கிடைக்கிறது...

ஒரு பக்கம் கல்வி காசாகிப்போன சூழல் இன்னொரு பக்கம் சமச்சீர்கல்விக்கு காத்து கிடந்தது போக காயங்களுக்கு ஒட்டு போடலாம் ஆனால் புத்தகங்களுக்கு பேண்டேஞ்  போட்ட அவலமும் இங்குதான் நடக்கிறது..

எந்தவிதமான லாப நோக்கமில்லாமல் சொல்லி கொடுத்த எங்கள் ஆசிரியர்களே எங்களுக்கு கடவுளாக காட்சியளித்தாகள்... அவர்கள் எங்களுக்கு ஒழுக்கத்தை ஒழுக்கமாய் சொல்லி கொடுத்ததார்கள் அதனால் எங்களை  பலருக்கு ஆசிரியர்களே ரோல் மாடலாக இருந்தார்கள் அது ஒரு கனாக்காலம்...


இப்ப எங்க உண்மையான ஆசிரியர்கள் இருக்கா...

இந்த கேள்வி எல்லோருடைய மனதிலும் எழவே செய்கிறது அதற்கு சில காரணங்கள் இருக்கச்  செய்கிறது...

கும்பகோணம் பள்ளி  தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகியபோது எத்தனை ஆசிரியர்கள் காயம் பட்டார்கள்... என  சொல்ல முடியுமா?  நீங்க சொல்லலாம் வேதாரண்யம் பள்ளி வேன் விபத்தில் 11 குழந்தைகளை மீட்ட பின்னர் உயிரிழந்த ஆசிரியை சுகந்தி யை இத்தனை வருடங்களாக சுகந்தி மட்டும் தான் விதிவிலக்கு  அதன்பிறகு எத்தனை வேன் விபத்துக்கள் எத்தனை பலிகள் தமிழகம் முழுக்க இவை யெல்லாம் கல்வி பிசினஸ் ஆனதன் அடையாளம்  ...

பள்ளிக்கூட பொண்ணுங்களை சில்மிசம் செய்த ஆசிரியர்கள், பிராக்டிக்கள் மார்க் போட முத்தம் கேட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் பிவிசி பைப்பால் அடிச்சதால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவனென படிக்க அனுப்பிய பிள்ளைகளை பாடையில் அனுப்பிய கொடுமைகள் இங்கேதான் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.....

 இதுமட்டுமல்லாமல்  ஆசிரியர்கள் அழககழகான விதவிதமான காஸ்டியூம்களில் புடவைகளில் காட்டும் அக்கறையை ஒரு மாணவனின் உண்மையான வளர்ச்சியில் காட்டியதுண்டா? அப்படி காட்டியிருந்தால் இளம்குற்றவாளிகள் குறைந்திருக்க கூடும்..ஆனால் இவர்கள் பாடத்தை மட்டுமே எடுக்கிறார்கள் நமக்கொன்ன ஒரு கேள்வி என்றால் வெறும் படிப்பாளிக்ள் இந்த நாட்டுக்கு தேவையா? அப்படி வெறும் படிப்பாளிகளை உருவாக்க இவங்க பள்ளிக்கூடம் நடத்துறாங்களா இல்லை தொழிற்சாலையா நடத்துறாங்களா......

மீண்டும் சொல்லுகிறோம் சமூகத்திற்கு நல்ல படிப்பாளிகளை அல்லாமல் படைப்பாளிகளை உருவாக்கிய ஆசிரியர்கள் இருந்ததால் தான் இந்த தேசம் இன்னும் இருக்கிறது...

நாம் விரும்புவது ஆரோக்கியமான தேசத்தை நல்ல எதிர்காலத்தை கட்டமைக்கிற ஆசிரியர்களைத்தான் .....

ஒவ்வொரு  நாளும் கிடைக்கும் படிப்பினைகளில்  நீங்களும்  எமக்கு ஆசிரியர்களே..

எம்மை வளர்த்தெடுக்க .
உழைக்கும் நீங்களும் எமக்கு ஆசிரியர்களே!
உங்களுக்கு 
எம் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

நன்றியுடன்
வெளிச்சம் மாணவர்கள்







Leave a Reply