டீச்சர்கள் கொடுத்த அசைண்மெட் - மாணவரின் உயிரை வாங்கிய லேப் கிளீனிங்....

Posted by Unknown - -


படிக்க அனுப்பப்படும் பிள்ளைகளை ஆசிரியர்கள் தங்களது சுய வேலைக்கு பயன்படுத்தப்படும் கொடுமை தமிழகத்தின் பல்வேறு கல்விக்கூடங்களில்  இன்னமும் சத்தமில்லாமல் நடந்துகொண்டே இருக்கிறது...

உதாரணமாக  தான் பயன்படுத்திய டாய்லெட்டை கழுவசொல்லுவது, கல் தூக்க சொல்லுவது, கிரவுண்ட் சுத்தம் செய்வது, டீச்சர்ஸ் சாப்பிட்ட பாத்திரங்களை கழுவ சொல்லுவது, காய்கரிகளை வாங்கிவரச்சொல்லுவது போன்ற வேலைகளை செய்ய சொல்லுவதும் மாணவர்களோ! டீச்சர்ருக்கு பிடித்த பையனாக இருக்க வேண்டும் என்பதற்காக நம்மை செய்ய சொல்லமாட்டாங்களா என அறியாமையில் கிடப்பதும் இங்குதான் நடக்கிறத்கு.... அந்தவகையில்  ஆசிரியர் சொன்ன வேலையை செய்து கொண்டிருந்த மாணவன் இறந்து போன கொடுமையும் பட்டியலில் சேர்ந்துள்ளது....

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர் பேட்டைக்கு அடுத்துள்ள  அருகே உள்ள சேப்பாக்கம் கிராமத்து  பள்ளி மாணவர்கள் எல்லாம் பள்ளிக்கு போகாமல் தேசிய நெடுஞ்சாலையை மறியலில் ஈடுபட  சுமார்  நான்கு மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது..
போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட நாம் நிலைமை விசாரிக்க போனோம்.. மாணவர் பிரச்சனை என்றதும் விசாரித்தோம்…

நம்மிடம் பேசிய மாணவர்கள்
எங்க ஊர்  வெல்பர் ஸ்கூல்ல (ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப் பள்ளி ஆனாலும் எல்லா சமூகத்து மாணவர்களும் படிக்கிறார்கள் ), பிளஸ் 2 படிக்கிற ராஜதுரைக்கு நேற்று கொமிஸ்ட்ரி லேப், லேப் முடிச்சிட்டு போன ராஜ துரையை கூப்பிட்ட டீச்சர் பாண்டியன் லேப் முழவதையும்  கிளீன்பண்ணிட்டு  பூட்டிட்டு வந்துவிடு என சொல்லிவிட்டு போனார்,  அவர் போன கொஞ்ச நேரத்துல  ராஜதுரை அலறுகிற சத்தம் கேட்டுச்சு நாங்க ஓடி போய் பார்த்தோம்  அறுந்து கிடந்த ஒயரை அப்புற படுத்தும் போது காரண்ட்  பிடிச்சி உயிருக்கு போராடினான் கொஞ்ச நேரத்துல மெல்ல மெல்ல லேசா உயிர் போறத நாங்க பார்த்தோம்  என சொல்லும் போது உயிரின் வழியை பார்க்க முடிந்தது...

சாலையில் மகனின் சாவுக்காக போராடும் பிள்ளைகளை  பார்த்து கதறிக்கொண்டிருந்தார் ராஜதுரையின் தாயும் தந்தை முருகேசனும்..

நாம் ராஜதுரையின் தந்தையான முருகேசனிடம் பேசினோம்... படிக்க அனுப்பினேன் சாமி இவங்க பாடையில அனுப்பியிருக்காங்களே இனி நான் என்ன செய்வேன் என தொடர்ந்து  பேசமுடியாதவராய் மூச்சிரைத்து போனார்..

உறவுக்காரரான கட்டிமுத்துவிடம் பேசினோம்
உடலை போஸ்மாடம் செய்ய பெற்றவர்களிடம் தகவல் சொல்லாமலே விருத்தாசலம் கொண்டு போனாங்க.. ரோட்டை மறிக்கவே விருத்தாசலம் ஆர்.டி.ஓ., ஆனந்தகுமார், தாசில்தார் (பொறுப்பு) காமராஜ், டி.எஸ்.பி.,க்கள் விருத்தாசலம் அறிவழகன், திட்டக்குடி வனிதா  ஆகியோர் பேச்சு நடத்தினர். மாணவன் ராஜதுரை குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்; மாணவன் சாவுக்கு காரணமான தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை கைது செய்து, பணி நீக்கம் செய்ய வேண்டும்; நிர்வாகத்தை முற்றிலுமாக மாற்றி அமைக்க வேண்டும்; இதுகுறித்து உறுதி அளிக்க கலெக்டர் மற்றும் எஸ்.பி., நேரில் வர வேண்டும் என்று கூறினோம் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், தலைமை ஆசிரியர் ராஜராஜன், ஆசிரியர் பாண்டியன் ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பதாகவும், மற்ற ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாகவும், இறந்த மாணவர் ராஜதுரை குடும்பத்திற்கு அரசின் நிவாரண உதவித்தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதி அளிச்சாங்க..என்றார் கட்டிமுத்து...

நிவாரணங்கள்  மட்டும்  போன உயிரை திருப்பிகொடுக்காது...
லட்சங்களை கொட்டி கொடுக்கலாம், கோடிகளில் கொட்டி கொடுக்கலாம்  பிள்ளையோடு இருந்த ஒரு பொழுதை இவர்களால் மீண்டும் கொடுக்க முடியுமா?

நீதி உங்கள் கைகளில் இணைவோம்.....Velicham Application 

.
வெளிச்சம் தீபா..

2 Responses so far.

  1. praveen says:

    educational system should be changed

Leave a Reply