எழுத்தறிவில்லாதவர்கள் ஏற்றிய தேசிய கொடி.... வெளிச்சத்தால் வந்த மாற்றம்

Posted by Velicham Students - - கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் வடகராம்பூண்டி கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலிருந்து எங்க பள்ளிகூட ஆசிரியர்கள் இன்னும் யாரும் வரவில்லை நீங்களாவது வாங்க என  வெளிச்சத்திற்கு அந்த கிராம இளைஞர்களிடமிருந்து அழைப்பு வந்தது என வெளிச்சம் மாணவர்களின் சார்பாக நாமும் சென்றோம். சுமார் 55 பிள்ளைகள் படிக்கும் அந்த பள்ளியில் வழக்கம்போலவே சார் வரவில்லை என்றார்கள் மாணவர்கள்...  நமக்கு பெயரளவில் மிட்டாய்க்காக மட்டும் சுதந்திர தினம் கொண்டாடுவதில் துளியளவும் விருப்பமில்லை ஆனாலும்  மாணவர்களின் ஆர்வத்தை புரிந்து கொண்டு நாம் இவர்களை வழிகாட்டதவறினால் யார் வழிகாட்டுவது என எண்ணினோம்.... நிகழ்ச்சியினை வெளிச்சம் மாணவர்கள் கொஞ்சம் மாற்றி தேசிய கொடியேற்றினோம் அந்த்  மாற்றம் என்ன வெனில் தேசிய கொடியை ஏற்றுவதை வேடிக்கை மட்டுமே பார்த்திருந்த எழுத படிக்க தெரியாத சட்டைப்போடாத பொதுஜனங்கள் தான் ..... விழாவில் ஏன் இன்னும் இந்த தேசத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது அதிலும் குறிப்பாக ஏழைகளுக்கு கல்வி கனவாக இருக்கிறது என வெளிச்சம் மாணவர்களின் மாநில அமைப்பாளர் பேசினார்..

மாற்றம் நம்மிலுருந்துதான் ஆரம்பம் ஆகவேண்டும் என்பது வெளிச்சத்தின் கொள்கைகளில் ஒன்று.. ஆம் இந்த சுதந்திர தினவிழாவில் சட்டை போடாதவர்கள் தேசிய கொடியேற்றியதும் மாற்றம் தானே...

களப்பணியில்
வெளிச்ச்ம் மாணவர்கள்


Leave a Reply