பள்ளிப்படிப்பு கடினமாக இருக்கக் கூடாது. புரிந்து படிக்க வேண்டும். கற்பிக்கும் முறையில் இது போன்ற எளிமையை கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய, கடந்த 1986ம் ஆண்டு பேராசிரியர் யஷ்பால் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப �சுமையற்ற கற்றல்� முறை ஏற்கப்பட்டது. இதையொட்டி தேசிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டது.
அதற்கு பிறகு 2005ம் ஆண்டு தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு வெளியிடப்பட்டது. மேலும் தரமான கல்விக்காக பல்வேறு கல்விக் குழுக்கள் படிப்படியாக அமைக்கப்பட்டன. இவற்றின் வழிகாட்டுதல்கள், பரிந்துரைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இப்போது �தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை�(சிசிஇ) தமிழக பள்ளிகளில் நுழைந்துள்ளது. மனப்பாடம் செய்யும் முறை மெல்ல மெல்ல மறைந்து மாணவர்கள் தாங்களே பகுத்தாய்வு செய்து கொள்ள தயாராகி வருகின்றனர்.
ஒவ்வொரு குழந்தையின் உள்ளார்ந்த ஆற்றலை வெளியில் கொண்டு வருவது, அவர்களை முழுமையான ஆளுமை உள்ளவர்களாக மாற்றுவது ஆகியவற்றுக்கு இந்த மதிப்பீட்டு முறை துணையாக இருக்கும். இந்த ஆண்டில் (2012&2013) 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு இந்த முறை அமலாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் மன அழுத்தம் இதனால் குறையும். தேர்வு பயம் நீங்கும். தொடர் மதிப்பீட்டு முறையில், கல்வி சார்ந்த மற்றும் அதனுடன் இணைந்த செயல்பாடுகள் அனைத்தும் மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
ஏ1 முதல் இ1 வரை

இந்த கிரேடு வழங்கும் முறை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே சிபிஎஸ்இ பள்ளிகளில் கொண்டு வரப்பட்டது. முதலில் 1 முதல் 9ம் வகுப்பு வரை கொண்டு வரப்பட்டது. பிறகு உயர் வகுப்புகளுக்கும் இந்த முறை கொண்டு வரப்பட்டது. இது மாணவர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது தமிழக மாநில கல்வி முறையிலும் இது கொண்டு வரப்பட்டிருக்கிறது.
மாணவர்களுக்கு மகிழ்ச்சி

படிப்பு திறன் அதிகரிப்பு
தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி மாணவர்களின் புத்தகச் சுமை அவர்களின் எடையில் 10 முதல் 15 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது. இதை கருத்தில் கொண்டு இந்த கல்வி ஆண்டில் 1&5 வகுப்புகளுக்கு ஒரே புத்தகமாகவும், 6&8 வகுப்புகளுக்கு இரண்டு புத்தகமாக அதாவது தமிழ், ஆங்கிலம் அடங்கியது ஒரு புத்தகமாகவும், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகியவை சேர்த்து ஒரு புத்தகமாகவும் அச்சிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உடல் ரீதியான உபாதைகளான தசை மற்றும் எலும்பு சார்ந்த நோய்களில் இருந்து குழந்தைகள் பாதுகாக்கப்படுவார்கள்.

தமிழகத்தை பாருங்க! சொல்கிறார் கபில்சிபல்
டெல்லியில் கடந்த மாதம் 29 மற்றும் 30ம் தேதிகளில் இந்தியாவில் அனைவருக்கும் கல்வி தொடர்பாக கருத்தரங்கு நடந்தது. அதில் ஆசிரியர்கள் கல்வி கற்பித்தல் தொடர்பான கொள்கைகளை வகுத்தல் குறித்து பல்வேறு கருத்தாளர்கள் பேசினர். அதில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் கலந்து கொண்டார். அவர் அந்த கருத்தரங்கில்பேசும் போது, தமிழகத்தில் தற்போது அறிமுகம் செய்துள்ள சமச்சீர் கல்வி முறை சிறப்பாக உள்ளது என்று குறிப்பிட்டு, தமிழகத்தை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இது தவிர முன்னாள் என்சிஇஆர்டி இயக்குநர் குப்தா, தமிழகத்தில் தற்போதுள்ள சமச்சீர் கல்விக்கான அனைத்து பாடப்புத்தகங்களையும் படித்து ஆய்வு செய்தார். ஆய்வின் முடிவில் தமிழகத்தின் பாடப்புத்தகங்கள் அனைத்தும் பிரமாதம் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 10ம் வகுப்பு கணக்கு பாடங்களை மிகவும் புகழ்ந்து தள்ளியுள்ளார். மேலும், இந்த பாடங்களை படிக்கின்ற தமிழக மாணவர்களின் திறமை மற்ற மாநிலத்தைவிட நன்றாக உள்ளதாவும் தெரிவித்துள்ளார். இதுவே நமது தமிழக கல்வி முறைக்கும், மாணவர்களின் திறமைக்கும் சான்றாக எடுத்துக் கொள்ளலாம்
-வே.புகழேந்தி
நன்றி: தினகரன்.17.6.12