சாராயம் விற்ற பள்ளிக்கூட மாணவர்கள் கைது

Posted by Unknown - -


சேலம் ஆத்தூருக்கு அருகிலுள்ள  தலைவாசலுக்கு பக்கத்திலுள்ள  சதாசிவபுரம், சாத்தாப்பாடி  கிராமத்துக்குள் மப்டி வேசத்தில் நுழைந்த போலீஸார் ஊரை விட்டு திரும்பும் போது, போலீஸார் அதிர்ச்சியில் கிளம்பியுள்ளனர். நூறு மில்லி, ஐம்பது மில்லி என்ற அளவுகளில் பாலிதீன் பைகளில் கட்டப்பட்ட ஐந்து லிட்டர் அளவுள்ள கள்ளச் சாராயத்தோடு பள்ளிக்கூட்ட மாணவர்களையும்  அள்ளிச்சென்றதுதான்  அதிர்ச்சியான செய்தி..
சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் காவல் நிலைய எல்லையிலுள்ள கிராமங்கள் மிகவும் பிந்தங்கிய பகுதியாகவே காணப்படுகிறது. இங்குள்ள பல கிராமங்கள் நகரங்களில் இருந்து வெகு தூரத்திலிருப்பதால், பலகிராமங்களில் கள்ள சாராயம் சாதரணமாக விற்கப்படுவது வழக்கம்.

அவ்வபோது மதுவிலக்கு ஒழிப்பு பிரிவு காவலர்கள், சாதாரண உடையில் சென்று கிராமங்களில் சோதனை நடத்தி சாராயம் விற்பவர்களை கைது செய்துவருவது வழக்கம்.

நேற்று ஞாயிற்று கிழமை காலை, அப்படிதான் மப்டி போலீஸார் தலைவாசல் பகுதியிலுள்ள சதாசிவபுரம், சாத்தாப்பாடி ரோந்து சென்றபோது. போலீஸாரை பார்த்து சதாசிவபுரம் கிராமத்தின் எல்லையிலிருக்கும் முள் புதரில் இருந்து இரண்டு மாணவர்கள் எழுந்து ஓடியபோது போலீஸார் சந்தேகத்துடன் அவர்களை துரத்தி பிடித்தபோது, அவர்களிடம் நூறு மில்லி, ஐம்பது மில்லி என்ற அளவுகளில் பாலிதீன் பைகளில் கட்டப்பட்ட ஐந்து லிட்டர் அளவுள்ள கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்ததோடு அவர்களிடம் விசாரணை செய்தபோது, பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி ரிசல்டுக்குகாக காத்திருக்கும் ராஜவேல் என்பவரின் மகன் ராஜசேகரும், ஆறாம் வகுப்பு முடித்து ஏழாம் வகுப்பிற்கு செல்லும் மாணவன் தனபாலும் சதாசிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இந்த இருவருக்கும் தினமும் நூறு ரூபாய் பணம் கொடுப்பதாக ஆசைகாட்டி, மாணவர்களை சாராயம் விற்க ஏற்பாடு செய்த 22 வயதான அருள் என்கிற கள்ளச்சாராய வியாபாரி என்பாது தெரிந்தது.
ஊரெல்லாம் டாஸ்மார்க் கடையை திறந்து வைத்து அப்பனை எல்லாம் குடிகாரர்களாக்கிய அரசாங்கம்..
எங்களை இன்னும் என்ன செய்ய போகிறது
-வெளிச்சம் அகஸ்தியா.

Leave a Reply